மஞ்சள் காமாலைக்கு மருந்து
--------------------------------------------
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள பொதிகை மலையில் கட்டப்பட்டுள்ள பாவநாசம் அணையின் கீழே காரையார் என்ற இடத்தில் வசித்து வந்த 100 வயது நிரம்பிய அன்னம்மா என்ற பாட்டி மஞ்சள் காமாலைக்கு மூலிகை கசாயம் கொடுத்து வந்தார். இவரிடம் மூலிகை கசாயம் வாங்கி சாப்பிட்டவர்களுக்கு ஒரிரு நாட்களில் நோய் குணமாகிவிடும். இதற்காக இவர் பெரிய கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. தற்பொழுது பாட்டி உயிருடன் இல்லை. தற்பொழுது பொதிகை மலை அடிவாரத்தில் பாவநாசம் பேருந்து நிலையத்திற்கு அருகில் வசித்து வரும் பாட்டியின் உறவினர்கள் மஞ்சள் காமாலைக்கு மூலிகை கசாயம் தருகிறார்கள். இவர்களும் பெரிய அளவில் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. சில வருடங்களுக்கு முன்பு என் தந்தையாருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தது ஆங்கில மருத்துவர்கள் இரண்டு மாதம் மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சை எடுக்கவேண்டும் என்று சொன்னார்கள். என் தந்தை இதற்கு சம்மதிக்க வில்லை. பாவநாசத்திற்கு சென்று கசாயம் வாங்கி சாப்பிட்டார். இரு நாட்களிலேயே நோய் குணமாகிவிட்டது.
Monday, August 22, 2016
மஞ்சள் காமாலைக்கு மருந்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment