Wednesday, August 31, 2016

பித்தத்திலிருந்து விடுதலை பெற....!

பித்தத்திலிருந்து விடுதலை பெற....!

விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா எதுக்கிக்கெண்டே இருக்குமா இதுபேன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம். இந்த பித்தம் தெடர்பான பிரச்சினைகளையும், அதனை பேக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் இப்போது பார்ப்பேம்...

* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

* எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

* ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

* கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

* நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

* அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

http://www.koodal.com/health/paati_vaidyam.asp?id=724&title=natural-remedies-for-bile-reflux

Monday, August 22, 2016

.பெண்ணல்ல நீ எனக்கு

தயவு செய்து பொறுமையா படிங்க நண்பர்களே!
என்னை கவர்ந்த கவிதை.........................
"..பெண்ணல்ல நீ எனக்கு.."
..
நாள் தவறி போனதே என
நீ வெட்கத்தோடு உரைத்ததும்..
மார்பில் முகம் புதைத்ததும்
மேடிட்ட வயிறு கண்டு
முத்தமிட்டு சிரித்ததும்..
புளிப்பு மாங்காய் வேண்டுமென
காதோரம் சொன்னதும்
கண்ணுக்குள் ஆடுதடி..
மூன்றாம் மாதம் முதல்
நீர் இறைக்க தடை போட்டேன்..
ஐந்தாம் மாதம் முதல்
கனம் தூக்க தடை போட்டேன்..
ஏழாம் மாதம் தனில்
சீமந்தம் செய்தார்கள்..
மஞ்சள் பூசி, வளவி இட்டு
திருஷ்டி சுற்றி போட்டாலும்
போய்விடுமா உன் அழகு தாய்மையில்..
ஆண்டவன் இருந்திருந்தால்
அப்பொழுதே கேட்டிருப்பேன்
ஏன் படைத்தாய்
ஆண் எனவே மண்ணில் என்னை?
தினமும் மாலை கை கோர்த்து
நடை பயின்று..
இரவெல்லாம்
கண் விழித்து மடி மீது
உறங்க வைத்தேன் தாயென்றே உனை..
நாட்கள் நெருங்க, நெருங்க
கலவரம் கண் மறைத்து
நம்பிக்கை கை பற்றி
மார்பனைப்பேன் என் உயிரே..!
இறுதியாய் பல் கடித்து
வலியென நீ புலம்புகையில்
ஊர்தி கொண்டு அவசரமாய் மருத்துவமனை
வரும் முன்னே
வியர்த்தொழுகும் முகமெல்லாம்..
சில நொடி பொழுதுகளில்
வந்தனரே உன் தாயும், என் தாயும்
உறவினரும் நண்பருமாய்..
தனியறைக்குள் நீ செல்ல
கதறும் ஒலி கேட்டு தாங்கவும்
முடியாமல் தனியிடம்
அமர்ந்திருந்தேன், கண்ணீரும் இல்லாமல்
நினைவெல்லாம் உன் பிம்பம்..
அவசரமாய் தாதி பெண் எனை அழைக்க
ஓடி வந்தேன்
உள் வர சொன்னாயாம்..
சொல்லி விட்டு போய் விட்டால் மின்னல் கீற்று போல..
பல் கடித்து வேதனையில்
பக்கத்தில் வாவெனவே முககுறி தனில் எனை
அழைத்து கைபற்றி கொண்டாய்..
இறுக்கும் கைகளில் உன் வேதனை நான் உணர்ந்தேன்
இருந்தும் என்ன செய்ய இயலவில்லை
உன் வலி நான் பெறவே,
ஆர்ப்பரித்து அடங்கியதும்
அரை நினைவில் நீ சிரித்தாய்
பிஞ்சு முகம் காணும் முன்னே
நெற்றி ஒதுக்கி முத்தமிட்டேன்
ம்ம்ம்.. நீ எனக்கு உயிரடி..!!
பெண் குழந்தை நீ பெற்றாய்
பேரின்பம் நான் பெற்றென்..
முகமெல்லாம் உன் வடிவம்
நிறம் மட்டும் பொன் எழிலாய்
நீ கொஞ்சம் கண்ணயர்ந்த வேளையில்
வெளியே வந்தேன்..
அதுவரை கட்டி வைத்த
கண்ணீர் எல்லாம் கரை தாண்டும்
காரணம் நான் அறியேன்
புரியவில்லை அக்கணம்..
வாரி எடுக்க வந்தார்கள்
உன் தாயும் என் தாயும்
யாரிடம் கொடுக்க?
யாரிடமும் வேண்டாம்
முதல் சொந்தம் அவளுக்கே
சொல்லி விட்டேன் என் முடிவை..
30 வினாடிகள்
கண் விழித்து தேடினாய்
மகளை அல்ல என்னை
கை பற்றி மூத்த மிட்டாய்
பின் ஏந்தினாய் பெண் பூவை..
பெருமையாய் பார்த்தாள் என் தாய்
பொறாமையாய் பார்த்தாள் உன் தாய்..
இருவரும் பெற்றதில்லை
இந்த பாக்கியம் என..
அவனைவரும் இனிப்பு கேட்டு
வாங்கி கொடுத்த பின்
கலைந்தது கூட்டம்..
தனியே நீயும், நானும்
எனக்கு எங்கே இனிப்பென்று
நான் கேட்க .. இறுக கரம் பற்றி
இதழோடு இதழ் பொருத்தினாய்..
ம்ம்ம்.. இதை விட பேரின்பம்
பெறுவேனோ சொர்க்கமதில்..???
"..பெண்ணல்ல நீ எனக்கு.."
குல தெய்வம் அல்லவோ..!!

                                                              RAJAJI JS

மஞ்சள் காமாலைக்கு மருந்து

மஞ்சள் காமாலைக்கு மருந்து
--------------------------------------------
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள பொதிகை மலையில் கட்டப்பட்டுள்ள பாவநாசம் அணையின் கீழே காரையார் என்ற இடத்தில் வசித்து வந்த 100 வயது நிரம்பிய அன்னம்மா என்ற பாட்டி மஞ்சள் காமாலைக்கு மூலிகை கசாயம் கொடுத்து வந்தார். இவரிடம் மூலிகை கசாயம் வாங்கி சாப்பிட்டவர்களுக்கு ஒரிரு நாட்களில் நோய் குணமாகிவிடும். இதற்காக இவர் பெரிய கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. தற்பொழுது பாட்டி உயிருடன் இல்லை. தற்பொழுது பொதிகை மலை அடிவாரத்தில் பாவநாசம் பேருந்து நிலையத்திற்கு அருகில் வசித்து வரும் பாட்டியின் உறவினர்கள் மஞ்சள் காமாலைக்கு மூலிகை கசாயம் தருகிறார்கள். இவர்களும் பெரிய அளவில் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. சில வருடங்களுக்கு முன்பு என் தந்தையாருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தது ஆங்கில மருத்துவர்கள் இரண்டு மாதம் மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சை எடுக்கவேண்டும் என்று சொன்னார்கள். என் தந்தை இதற்கு சம்மதிக்க வில்லை. பாவநாசத்திற்கு சென்று கசாயம் வாங்கி சாப்பிட்டார். இரு நாட்களிலேயே நோய் குணமாகிவிட்டது.

கண் திருஷ்டி பில்லி சூன்யம் விலக்கும் ஆகாச கருடன் கிழங்கு

------------------------------------------------------------------------
கண் திருஷ்டி பில்லி சூன்யம் விலக்கும் ஆகாச கருடன் கிழங்கு
------------------------------------------------------------------------

வீட்டில் ஆகாச கருடன் கிழங்கை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே, கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு இருக்கும் இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும அளவுக்கு,  சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு.

கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது. இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும்.(மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்). இந்தக் கிழங்கு நஞ்சு முறிவிற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

நீர்க்கொழுப்புக்கட்டி கரைய , இந்த கிழங்குடன் மல்லிகை மொட்டு சம அளவு கலந்து அரைத்து , காலையில் பசும் பாலில் கலந்து குடித்து வர , விரைவில் கட்டி கரையும்.

காய கற்பம் -1 நூற்றாண்டு வேம்பு காய கற்பம்

----------------------------------------------------------
காய கற்பம் -1 நூற்றாண்டு வேம்பு காய கற்பம்
----------------------------------------------------------

உடலை பிணி,மூப்பு,பசி இவைகள் அண்டாது , நீண்ட ஆயுளுடனும், இளமையுடனும் வைத்திருக்க சித்தர் பெருமக்கள் அருளிய , சாகாக்கலைகளில் சிறப்பான காய கற்ப வைத்திய முறையின் அறிமுகத்தை , சென்ற பதிவில் பார்த்தோம்.

இன்றைய பதிவில் ,சட்டை முனி மகா சித்தர் அருளிய ஒரு எளிய  கற்ப மருந்தை , நூற்றாண்டு வேம்பு கற்பம் எனும்  மருந்தை தயார் செய்யும் விதம் பற்றி பார்ப்போம்.

நூறாண்டு கடந்த வேப்ப மரத்தின் பட்டையை , சேகரித்து , அதன் மேல் பகுதியை நீக்கி விட்டு , உள் பகுதியை சூரணமாக்கி அதனுடன்  , சம அளவு கருங்குன்றி சாறு சேர்த்து , வெயிலில் உலர்த்த வேண்டும் , இது போல 6 அல்லது 7 முறை செய்து சூரணமாக்கி , தினமும் காலை , மாலை வேளைகளில் ..........

மேலும் படிக்க கீழே அழுத்தவும்
http://blog.sathuragiriherbals.com/2013/06/1.html

கண் பார்வைக்கோளாறுகள் , சைனஸ் போக்கும் நேத்திரப்பூண்டு மூலிகைத் தைலம்!

கண் பார்வைக்கோளாறுகள் , சைனஸ் போக்கும் நேத்திரப்பூண்டு மூலிகைத் தைலம்!
-----------------------------------------------------------------------------------

     குழந்தைகள் புத்தகப்பையை சுமப்பது, ஒரு பெரிய சுமை என்றால் அதைவிட கொடிய சுமை, அவர்கள் கண்ணாடி அணிந்து கொண்டு, அதைக் கவனமாகக் சரிசெய்து கொண்டு, புத்தகப்பையையும் சுமந்து செல்வதுதான்.

    இன்றைக்கு, மிகச்சிறிய வயதிலேயே, கண் நோய் காரணமாக, குழந்தைகள் கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது, உணவிலிருந்து, அனைத்து வகையான வாழ்வியல் காரணிகளின்  தலைகீழ் மாற்றத்தால் ஏற்பட்டது தான் இன்றைய இந்த நிலை.

  நடுத்தர வயதில் இருப்போர், அதிகம் பேர் வாகனங்களில் செல்லும்போது, எதிரே வரும் வாகனத்தின் அதிக ஒளி வெள்ளத்தாலும், கண் பார்வைத்திறன் கோளாறாலும் தடுமாறும் நிலை, மற்றும் செய்தித்தாள் வாசிக்க சிரமப்படுதல்,எந்த ஒரு சிறு விசயத்துக்கும்கூட , கண்ணாடியைத் தேடும் நிலை.

.........

மிகவும் அரிதான ஒரு மூலிகை வகை தான், நேத்திரப்பூண்டு. இந்த மூலிகையை , சாப நிவர்த்தி*  செய்து , பறித்து வந்து, சுத்தம் செய்து அத்துடன்,  நாட்டுச்செக்கில் ஆட்டிய தூய நல்லெண்ணெய் கலந்து, ஒரு மண் பாண்டத்தில் இட்டு , அதன் வாயைத் துணியால் சுற்றி, வெயிலில் 10 முதல் 15 நாட்கள் வரை புடம் போட வேண்டும்,

       இடையில் அந்தக் கலவையை எடுத்து , நல்ல துணியில் வடிகட்டி, மீண்டும் வெயில் புடம் இட வேண்டும், இப்படி 6 முறை வடிகட்டிய பிறகு கிடைப்பது

மேலும் படிக்க கீழே அழுத்தவும்
http://blog.sathuragiriherbals.com/2013/06/blog-post_28.html

வயிற்றுக்கோளாறுகள் போக்கும் கடுக்காய்ப்பூ பொடி

----------------------------------------------------------------------
வயிற்றுக்கோளாறுகள் போக்கும் கடுக்காய்ப்பூ பொடி
----------------------------------------------------------------------

அல்சர், வாயு, பசியின்மை போன்ற வயிற்றுக்கோளாறுகளுக்கு கடுக்காய்ப்பூ,அதிமதுரம்,மணத்தக்காளி,சீத்தாபழம் போன்ற மூலிகைகள் கலந்த சூரணப்பொடியை காலை மாலை இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு பசும் பாலில் கலந்து சாப்பிட்டு வர, விரைவில் , வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

மேலும் படிக்க கீழே அழுத்தவும்
http://blog.sathuragiriherbals.com/2013/05/blog-post_9551.html

இதய நோய் நீக்கும் அற்புத மூலிகை - மருத மரம் --------------------------------------------

-------------------------------------------------------------------
இதய நோய் நீக்கும் அற்புத மூலிகை - மருத மரம்
-------------------------------------------------------------------

மருத மரம் மிக அரிதாகக் காணக்கிடைக்கும் முழுவதும் பயன் தரக்கூடிய , மனிதர் நோய்கள் அனைத்தும் குறிப்பாக இதயம்சம்பந்தமான அனைத்து நோய்களையும் நீக்கும் வல்லமை உள்ள, சிறந்த மரம்.

மருத மரம் , இலை,பட்டை இப்படி அனைத்தும் உடல் நலம் சீராக்க மிக வல்லது.

மருதம் பட்டையின் பலன்கள்:

1. இதய நோய் குணமாக!

              இதய இரத்த குழாய்களில் உண்டாகும் அடைப்பு,இதய பலவீனம்,இதய வலி போன்ற அனைத்து இதயம் சார்ந்த நோய்களுக்கும் மருதம் பட்டை நிரந்தர தீர்வளிக்கும் மருந்து. 

மருதம் பட்டை, வெண் தாமரைப் பூ 100 கிராம் , ஏலம் , இலவங்கம் மற்றும் திரிகடுகம் 10 கிராம் அளவில் கலந்து , பொடியாகி வைத்துகொண்டு , காலை மற்றும் மாலை வேளைகளில், 6 கிராம் அளவு பொடியை கொதிக்க வைத்து கஷாயமாக அருந்தி வர ,இதய நோய் , விரைவில் குணமடையும்.

2. மன உளைச்சல் தீர!
                 
                இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு நாம் கொடுத்த விலை மிக அதிகம், அதிலொன்றுதான், இன்று இளைஞர் முதல் முதியவர் வரை அனைவரையும் , அவரவர் வாழ்வியல் சூழ்நிலைகளால் வதைக்கும்
.....
மேலும் படிக்க கீழே அழுத்தவும்
http://blog.sathuragiriherbals.com/2013/06/blog-post_3721.html

மருத மரத்தினால் பித்த , சரும மற்றும் உஷ்ண நோய்கள் தீரும்.

எல்லாவற்றையும் விட சிறப்பு , வாய்ப்பு கிடைக்கும் போது, மகா மருத்துவ குணம் கொண்ட மருத மர அடியினில்,சற்று நேரம் நின்றாலே இதயம் பலப்படும், உடல் நலன் சீராகும்!.

அதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம் ( obesity )

--------------------------------------------------------------------------
அதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம் ( obesity )
--------------------------------------------------------------------------

நீர்முள்ளி லேகியத்தின் சிறப்பு பக்க விளைவுகள் இல்லாமலும்,
டயட் இல்லாமலும், 1, மாதத்திற்கு  2 TO 3 கிலோ எடை குறைகிறது,

அதிக உடல் எடை காரணமாக பலருக்க உடல்  ரீதியாகவும்,
மனரீதியாகவும், பாதிப்பு ஏற்படுகிறது. சிலரோ தன் உடல் எடை
தோற்றம் அதிகரிப்பை குறைக்க டயட் என்ற பெயரில் சாப்பிடாமல்
பட்டினி இருந்தும், உடல் நலனை கெடுத்துக்கொண்டு உடல் தெம்பை
இழந்து குடல் புண் ( அல்சர் ) போன்ற வியாதிகளினால் அவதிபடுகின்றன

உடல் எடை அதிகமாதலுக்கு பல காரணங்கள் உள்ளன. அவை
எண்ணெய் பண்டங்கள் சாப்பிடுவதாலும்,பிராய்லர் கோழி அடிக்கடி
அதிக அளவில் உண்பதினாலும், சாப்பிட்ட உடனே குளிர்பாணங்கள்
குடிப்பதினால் உணவிலுள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேறாமல் தேக்கமடைவதாலும்,உடல் உழைப்பு குறைவதினாலும்
அதிக நேரம் தூங்குவதாலும், கொழுப்பு சத்து உள்ள தின்பண்டங்களை
ஓய்வு விடாமல் உண்பதாலும்,தசை இறுக்கம் இல்லாமல்  துர்நீர், வாதநீர்
போன்ற வியாதிகள் சேர்ந்து  உடல் அதிக தோற்றத்தை வெளிப் படுத்துகிறது.

சிலருக்கு அறுவைசிகிச்சைக்கு பின் அதிக உடல் எடைக் கோளாறு
ஏற்பட்டு இரத்த சோகையாலும்,அதிக அளவில் உடலில் செலுத்தப்படும்
ஆண்டி பயாடிக் மருந்துகாளாலும்,விட்டமின் மாத்திரைகளாலும் தேவை
இல்லா உடல் தோற்றம் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனைகளால்
அல்லல்படும் அனைவருக்கும் பக்க விளைவுகள் இல்லாத ஒரு நிரந்தர தீர்வாக நீர்முள்ளி லேகியம் பயன்படுகிறது.

இந்த நீர்முள்ளி லேகியத்தின் பயன்கலும் இதில் சேர்ந்துள்ள
மூலிகைகளின் விவரமும்,

1, சர்க்கரை விலவம்
        இரத்தத்தை சுத்தம் செய்து, பிரஷரையும்,  கொழுப் பையும் குறைக்கிறது. இது  ஒரு காய கற்ப மூலிகையாகும்.

2, கடுக்காய் பூ
         மலச்சிக்கலை போக்கும், குடல் புண்னை ஆற்றும் உடல் தசையை இறுகச்செய்யும்.

3, நெல்லிதோடு
        நம் உடலுக்கு தேவையான அறுசுவை கொடுத்து இரத்ததின் அளவை சமநிலை செய்கிறது.

4, ஆவாரம் பூ
       உடல் எடை குறையும் போது தோல் சுருக்கு விலாமல் தடுக்கவும், உடலில் உள்ள  வெப்பத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது.

5,நீர்முள்ளி  ....

6, நத்தைச்சூரி ...

7, சிறுபீளை  ....

8,நெருஞ்சிள்   ...

மேலும் விரிவாக படிக்க  கீழே அழுத்தவும்
http://blog.sathuragiriherbals.com/2014/07/obesity.html

இதுபோன்ற மூலிகைகள் அடங்கிய லேகியம் சாப்பிட்டுவர கிட்னியில் தேங்கி இருக்கும் அழுக்கை வெளியேற்றுவதினால் பக்க விளைவுகள் இல்லாமல்                                                      அதிக உடல் எடையை  குறைக்கிறது.

கை கூப்பி வணங்குவது ஏன்? 

கை கூப்பி வணங்குவது ஏன்?                                   ==========================                              பாரத நாட்டில் பல்வேறு மொழி, இனம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதுகைகுவித்து வணங்குகின்றனர்.கோயில்களில் ஆண், பெண் வணங்கும் முறையில் வேறுபாடுகள் உண்டு. பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்வர். இல்லையெனில் இரு கைகளையும் குவித்து வணங்குவர். ஆண்கள் தலைமேல் கைகுவித்து வணங்கும் பழக்கம் நம் நாட்டில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள பழக்கம்.உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் பஞ்ச பூதங்களின் கலப்பால் ஆனது. அளவுகள் வேறுபடலாம். அதை பஞ்சகோசங்கள் என்று கூறுவர். 5 விரல்கள் 5 கோசங்களை காட்டுகிறது. மனிதன் உருவாக காரணமாக உள்ள 5 கோசங்களாக அன்னமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்பன.மனித உடல் அன்னத்தால் ஆனது. இதை குறிப்பது அன்னமய கோசம். எனவேதான் "உண்டிதற்றே உணவின் பிண்டம்" என்பார்கள். உண்ணும் உணவு மனிதனின் உடம்பை மட்டுமல்ல நம் சிந்தனையையும் நிச்சயிக்கிறது.காற்றை சுவாசிப்பதால் உடம்பு வளர்கிறது. இது பிராணமய கோசம். அதை எப்படி சுவாசிப்பது அதனால் எந்த வகையான ஆற்றலை பெறுவதுஎன யோக நூல்கள் சொல்கின்றன.மூன்றாவது மனோமய கோசம். மன எண்ணங்களால் உருவாவது. தர்மசாஸ்திரம் 'மனநலனுக்கு' முக்கியத்துவம் தருகிறது. மனிதன் எதுவாக நினைக்கிறானோ அதுவாகிறான் என்கிறது நூல்கள். விஞ்ஞானமும் இதைதான் கூறுகிறது. புத்தியால் அமைவது விஞ்ஞானமயகோசம்.எண்ணில்லாத சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பதே புத்தியாகும்.இந்த கோசங்களால் மனிதன் பெறும் மாறாத மகிழ்ச்சி - நிலைத்த இன்பம் ஆனந்தமயகோசம் ஆகும்.மனிதனுக்கு மனிதன் 5 கோசங்களில் மாறுபடலாம். ஆனால் எல்லோரிடமும் உள்ளது 'ஆத்மா' என்ற ஒன்றுதான் என்பதைதான் கைகுவித்துஉணர்த்துகிறார்கள். ஒரு கை தன் 5 கோசங்கள்; மற்றொரு கை அடுத்தவரது 5 கோசங்கள் இரண்டையும் இணைப்பது ஆத்மா ஒன்றே என்று காட்டுகிறது. இறைவன் முன்னிலையில் இந்த உண்மையை பக்திப்பூர்வமாகஒப்புக்கொண்டு உணர்ந்து செயல்படுவேன் என்று உணர்த்தவே கைகுவித்து வணங்குகிறார்கள். கை குளுக்கிக் கொள்ளும் இந்த காலத்தில், இனி நம்மவருள் எவரையேனும் சந்திக்க நேரிடில்,கைக்குவித்து வணங்குவது நமது பண்பாட்டின் வெளிப்பாடு. தமிழ் கலாச்சரத்தின் பெருமை.

ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள

_*ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன???*_

_*ஆயில் புல்லிங் எனப்படும் 10மில்லி நல்லெண்ணையை வாயில் விட்டு கொப்பளிப்பதால் ஏற்படும் நன்மைகள்*_ ....

_*அதனை 15 நிமிடங்கள் கொப்பளித்த பிறகு உமிழ்ந்து விடலாம்*_ ....

_*அப்போது, உமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது, மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும்*_ .…..

_*மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்துவிட்டு உமிழ்ந்ததும் வாயைக்கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்*_  ....

_*இதனால் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப்படுகின்றன*

_*இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது*_ ...

_*எண்ணெய் கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம்*_ ...

_*இதற்கு எந்தவித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது*_ ...

_*ஏதாவது நோய்க்கான மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை*_ ...

_*நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம்*_ ....

_*நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக்கொள்ளலாம்*_ ....

_*இதைச்செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும், பயப்பட வேண்டாம்*_ ....

_*வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது*_ ....

_*விரைவில் நிவாரணம் வேண்டுவோர் நாள் ஒன்றுக்கு மூன்று முறை செய்யலாம்*_ ....

_*ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதை செய்ய வேண்டுமென்பது விதி*_ .....

_*இதன் மூலம், மூட்டு வலி, முழங்கால்வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற நோய்கள் குறைந்து விடும்*_ .....

_*இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும் சிலருக்கு நோயின்தன்மை சற்று அதிகரித்து, பின்னர் குறையும்*_ ...

_*இது நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப்போகிறது என்பதின் அறிகுறி*_ ....

_*இந்த எளிய வைத்திய முறையை பின்பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்*_ ...

_*அன்புடன் அனு*_

உனது உழைப்பை பிறர் வாய் தின்னும்போத

உனது உழைப்பை பிறர் வாய் தின்னும்போதும்,உன் உழைப்பின் பலனை பிறர் அனுபவிக்கும்போதும் வருத்தப்படாதே. அவர்கள் உன் கர்மாக்களை, உனது பாவங்களை உண்டும், அனுபவித்தும் உன்னை விடுதலை செய்கிறார்கள்.நீ இழந்து போனதையும், தொலைத்துவிட்டத்தையும் நான் அறிந்திருக்கிறேன். என் கண்கள் காணாமல் எதுவும் நடக்க முடியுமா? இருந்தும் நான் மவுனமாக இருப்பதற்குக் காரணம், அவை உனக்கு நன்மை விளைவிக்கும். பிற்காலத்தில் பெரும் பலனோடும், வட்டியோடும், ஆசீர்வாதத்தோடும் மீண்டும் உன்னிடமே வந்துசேரும் என்பதை தீர்க்கமாக அறிந்திருப்பதால்தான்!என் குழந்தாய்! உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. நீ எனக்காகப் பொறுமையாக காத்திரு. என் அருள் உன்னை அணுகுவதற்கு மனதை என்னிடம் திறந்துகொடு. ஸ்ரீ சீரடி சாயியின் குரல்.

சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!!

சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!!

1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள்.

2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

3. பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள்.

4. விலை மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காக, வேண்டாத ஒன்றை வாங்காதீர்கள்.

5. பசி, தாகத்தை விட சுயமரியாதை பெரிது என்பதை மறவாதீர்கள்.

6. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் சாப்பிடுங்கள்.

7. விரும்பிச் செய்யும் எதற்காகவும் பின்னால் வருத்தப்படாதீர்கள்.

8. கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள்.

9. மென்மையாக அணுகுங்கள், மேன்மையாக முடிவெடுங்கள்.

10. கோபமாயிருக்கும் போது, பேசுவதற்கு முன்னால் பத்து வரை எண்ணுங்கள். இன்னும் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணுங்கள்.