பெண்கள் பற்றிய சில பெருமைகள்....
எதற்கு வெளியே போகும் போது இவ்வளவு மேக்கப்?
தான் திருப்தியாக வாழ்கிறேன். மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என்று ஊர் உலகத்துக்குக் சொல்ல வேண்டாமா? அழுது வடியும் முகத்தோடு வெளியே போனால், யார் அவளை மதிப்பார்கள்? மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என்ற செய்தியை அழகின் மூலம் தானே சொல்ல முடியும்!.
பெண்ணுக்கு அரசியலில் ஆர்வம் இல்லையா?
யார் சொன்னது? அவர்களுடைய அதிகாரம் தான் வீட்டில் தூள் பறக்கிறதே. அப்படியானால் அவர்களுக்குள் ஒர் அரசியல் குட்டிப் பிசாசு ஒளிந்து கொண்டு இருக்கிறது என்று தானே அர்த்தம்.
பெண் எதற்காக அழுகிறாள்?
அழுகை அவளுக்கு ஆயுதம். மற்றவர்கள் ஒரு விஷயம் குறித்துக் கவனத்தை குவிக்க வேண்டுமென்பதற்காக அழுகையை அவள் பயன்படுத்துகிறாள். அப்படி கவனத்தைக் குவிக்காததால், தனக்கு வலி ஏற்படுகிறது என்பதைச் சொல்லாமல் சொல்கிறாள்
பெண்கள் ஏன் அதிக சென்டிமெண்ட்டாக இருக்கிறார்கள்?
சென்டிமெண்ட் இல்லாமல் அவர்கள் இருக்கட்டும். நீங்கள் (Gents) நாய்படாத பாடு படுவீர்கள். போனால் போகிறது என்று இறைவன் அவளுக்கு ஒரு சிட்டிகை தாய்மையையும் தயையையும் கூடுதலாகக் கொடுத்து இருக்கிறான்.
கடையில் உடையைத் தேர்வு செய்ய ஏன் இவ்வளவு தாமதமாகிறது?
பெண்ணுக்கு எப்போதும் இன்னும் பெட்டரான விஷயம், பெட்டரான ஆடை, பெட்டரான வாழ்க்கை காத்திருக்கிறது என்ற உணர்வு உண்டு. அவள் எப்போதும் தேடுவது தி பெஸ்ட்.
வாழ்க்கை முழுவதும் பெண்கள் போற்றும் விஷயம் என்ன?
நினைவுகள். இனிய மற்றும் துக்க நினைவுகள். அவர்களுக்கு எந்த ஒரு விஷயமும் மறந்து போகாது.தேதி, நாள், இடம் எல்லாம் கூட ஞாபகம் இருக்கும். அது அவர்கள் அடி மனதில் சித்திரமாகப் பதிந்து இருக்கும். எப்போது வேண்டுமானாலும் அந்த நினைவுகளை அவர்கள் மீட்டலாம்.
அவள் பாதுகாப்பாக உணரும் இடம்?
தன் சொந்தவீடு...
ஒரு பெண் அடுத்த பெண்ணின் அழகை கவனிப்பாளா?
கண்டிப்பாக கவனிப்பாள். ஆனால் வாயைத் திறந்து பாராட்டுவாள் என்றால் அது சாத்தியமில்லை.
பெண்களின் மிகப்பெரிய குறை என்ன?
தன் எண்ணங்களை வெளிப்படையாகபேசாமல் இருப்பது. பல குழப்பங்களுக்கு இதுவே வழிவகுக்கும். தனக்கு இது பிடிக்கும். இது பிடிக்காது என்று தேங்காய் உடைக்கிறார் போல் பேசிவிட்டால் பாதிப்பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
இழப்புகளில் பெண் அதிகம் துவளுவது இல்லையே?
வலி அவள் கூட பிறந்தது. 12 வயதில் தொடங்கும் இந்த வலி அவளை மனரீதியாக உறுதியானவளாகவும் ஆக்கி விடுகிறது. அதனால்வேறு எந்த வலி வந்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் மனத்திண்மை அவளுக்கு வாய்த்து விடுகிறது.
பெண்கள் ஏன் தங்களை ஒல்லியாக வைத்துக் கொள்ள விரும்புகிறாள்?
பெண்ணின் கற்பனைச் சித்திரம் பதினெட்டு வயதோடு நின்று விடுகிறது. அது தான் அவள் மனதில் வாங்கிக் கொண்ட கடைசி சித்திரம். அதில் அவள் ஒல்லியாக கொடி போல, பளபள சருமத்தோடும் இருக்கிறாள். திருமணம் ஆன பின்பும் குழந்தைகள் பெற்ற பின்பும் பழைய சித்திரத்தையே அவள் மீண்டும் பார்க்க விரும்புகிறாள்.
பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்ப்பட்ட காதல் உண்டா?
கண்டிப்பாக உண்டு. இது என்ன தமிழ் சினிமா, ஒருவனை நினைத்து அவனோடு வாழ்க்கை இல்லையென்றால், தன் வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்கு? இது வாழ்க்கை. முதல் காதல் தோற்றுபோய் விட்டது என்று முழுமையாக அவள் நம்பும் வரை அடுத்த காதலுக்குபோக மாட்டாள். அது மட்டும் நிச்சயம். அடுத்த காதலுக்கு போகும்போது இன்னும் கவனமாக இருப்பாள்.
பெண்களுக்கு ஏன் குழந்தைகள் மேல் இவ்வளவு அக்கறை?
தன்னிடமிருந்து வந்திருந்தாலும் தன்னைப்போல் ஆகிவிடக்கூடாது என்ற பயம் பெண்ணுக்கு. தான் அடைந்த தூரம் குறைவு, பெற்ற பெருமைகள் குறைவு, வளர்ச்சி குறைவு என்ற எண்ணம் எப்போதும் அவள் மனதில் ஒடிக்கொண்டு இருக்கும். தன்னை விட தன் குழந்தைகள் ஒரு பிடி மேலே இருக்க வேண்டும் என்ற எண்ணமே இந்தக் அக்கறைக்கு காரணம்.
பெண்கள் போக விரும்பும் ஹாலிடே ஸ்பாட் எது?
அம்மா வீடு இத்தனை இடர்களுக்கு மத்தியிலும் தான் நீந்தி வந்திருக்கிறேன். என் துன்பங்களின் வலிபொறுக்க முடியவில்லை. கொஞ்சம் நான்ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன். எனக்கு உன் மடியைக்காட்டு என்று படுத்துக் கொள்ளத் துவங்கி விடுவாள் பெண்.
No comments:
Post a Comment