வணக்கம் ...
2019 புத்தாண்டில் ஈர்ப்புவிதியின் தீர்மானங்களாக எடுப்போம்..
# புகார் சொல்வதை நிறுத்துவேன் ..பொறுப்பு எடுத்துக்கொள்வேன் ..
தவறு கண்டுபிடிப்பது ,அடுத்தவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எனது நேரத்தை விரயமாக்கும் மேலும் என் மனநிலையையே மாற்றும் என்பதை நான் அறிவேன்..
# பெரும்பான்மையாக இல்லை, முடியாது, செய்யாதே என்ற எதிர்மறை வார்த்தைகளை சொல்ல மாட்டேன்.அதுவல்லாமல் மாற்று வார்த்தைகளை பயன்படுத்துவேன்..
# தினசரி பழக்கமாக தியானம் செய்வதை வழக்கமாக்கிக்கொள்வேன். என் மனஅழுத்தத்தையும் எதிர்மறை எண்ணங்களையும் போக்கும் அருமருந்து என்பதை நான் நன்கு அறிவேன்,
#தினசரி நன்றியுணர்வு பயிற்சியை செய்வேன்..நன்றியுணர்வு ஆசீர்வாதங்களை அள்ளிக்கொடுக்கும் அற்புதமான பொற்களஞ்சியம் என்பதை நான் நன்கு அறிவேன்.
# இதுவும் கடந்து போகும் என்று சில விஷயங்களை போக விட்டுவிடுவேன்..அதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து என்னை துன்புறுத்த மாட்டேன்.
# தினசரி மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் , நகைச்சுவையுடன் இருப்பதற்கும் முன்னுரிமை தருவேன்..உற்சாகத்துடன் இருப்பதே உண்மையான வாழ்வாகும் என்பதை நான் நன்கு அறிவேன் ..
# என்னிடம் நானே கருணையுடனும் ,நட்புடனும், அக்கறையுடனும் இருப்பேன்..அவ்வாறு இருக்கும்பொழுது அனைவருடனும் அதையே கடைபிடிக்க எளிதாக இருக்கும்..
வாழ்க வையகம் ... வாழ்க வளமுடன்...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,,
அன்புடனும் நன்றியுடனும் YOCOIN NATARAJAN & YOCOIN SAKTHIVEL
No comments:
Post a Comment