Wednesday, December 5, 2018

Silence

குருவே சரணம்.🙏

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு தெளிவான அர்த்தம் உண்டு.

ஆனால் மௌனம் மட்டும் ஆயிரம் அர்த்தங்களை புதைத்து வைத்திருக்கும்.
அதனால் தான் மௌனத்தை பலர் தங்களுக்கு சாதகமான சூழலுக்கான சம்மதமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
உங்கள் மௌனத்தின் அர்த்தம் பல இடங்களில் பலரின் தவறான புரிதலுக்கே வழிவகை செய்கிறது.

பல இடங்களில் உங்களின் குணத்தை காட்ட வார்த்தைகளே சிறந்தது. அதுவே உங்களை பிறருக்கு அடையாளம் காட்டும்.

அதேநேரம் ஞானத்திற்கு மௌனமே சிறந்தது. ஏனெனில் ஞானம் பிறரின் விமர்சனங்களில் புரிதல்களில் மயங்காது. ஞானம் உள்முக மௌனத்தில் தான் பிறக்கும்.

நல்லதே நடக்கும்.

போகர் வசீகரன்
போகர் சித்தாந்தசபை
பழநி.
9488008816

No comments:

Post a Comment