சமாதி என்பது என்ன? எத்தனை வகை?எல்லோருக்கும் சாத்தியமா?
திருவருட் பிரகாச வள்ளல் பெருமானின் வாக்குப்படி தமிழர்களின் ஆன்மீக நெறியில் சாவு என்ற வார்த்தையே கிடையாது. உடம்பை வடிவமைத்து பூமிக்கு வருதல்...புறப்படும் போது உடம்பை விரித்து வெட்டவெளியாக்கி ஆதி நிலையுடன் சமமாகி,"சமாதி" என்பதை அடைவது என்பதுதான் உண்டு. வள்ளல் பெருமான் உபதேசம் செய்ததோடு அவரே உதாரணமாகி மறைந்து காட்டினார்.
ஆதி காலம் முதல் தமிழ்நாட்டில் அவதரித்த ஏகப்பட்ட மகான்கள்...
63 நாயன்மார்கள் எனும் சிவனடியார்கள் உள்ளிட்டோர் அவ்வாறே சமாதி நிலையில் இறை ஐக்கியம் அடைந்தனர்.
அன்னை அவ்வைத்தாய்,மகான் ஆதிசங்கரர்,மகா அவதார பாபாஜி, ஸ்ரீகாகபுஜண்டர்,ஸ்ரீஆஞ்சநேயர்,
அகத்திய மாமுனிவர் என இந்த பட்டியல் பல்லாயிரக்கணக்கில் நீளும். சிவத்துடன் வருவது...
சிவத்துடன் வாழ்வது...
சிவத்துடன் மறைவது என்பதே இந்த தத்துவம்.
பிற்காலத்தில் ஆரியர்கள்,அரேபியர்கள்,ஐரோப்பியர்கள், மங்கோலியர்கள் போன்ற இனத்தாருடன் கலக்க ஆரம்பித்தவுடன் தமிழர்களின் ஆதி ஆன்மீக நெறியில் சறுக்கல்...குழப்பம்...மாற்றங்கள்...என நிகழ்ந்தது. அதன் காரணமாக சிவலயம் என்ற தமிழர்களின் சிறப்பு ஆன்மீகம் மறைந்தது.கண்ட தெய்வங்களுடனும் தேவதைகளுடனும் லயப்பட்டுத் தானும் கெட்டுத் தன்னை நம்பிவரும் சீடர்களையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கும் இரண்டாம் தர ஆன்மீகம் பிறந்தது.
இதனால் சிவம் பிரிந்தது...சவம் பிறந்தது.புவி வாழ்வின் நிறைவு 'சாவு,சமாதி ' என இரண்டாக மாறியது. சகஜமாய் சமாதி நிலையில் வாழும் வாழ்க்கை நிலை மாறி, சமாதி என்பதைத் தனியாகப் பழகும் சூழ்நிலை உருவானது. இதனால் உடலைக் கெடாமல் வைத்து விட்டு செல்வது 'சமாதி' எனவும், கெட்டுப் புதைப்பது அல்லது எரிப்பது என்பது 'சாவு ' எனவும் ஆனது. இன்றைய நடைமுறை இதுதான்.
உடலுடன் மறையும் சமாதி என்பதை வள்ளல் பெருமான் போல் கோடியில் ஒருவர் சாதிக்கின்றனர். ஏனையோர் உடலைக் கெடாமல் வைத்து விட்டுச் சாமாதிநிலை காண்கின்றனர். இப்போதைக்கு இதுவே பெரிய அதிசயமாய் இருக்கின்றது. மகாசமாதி என அழைக்கப் பெறுகிறது.
எடுத்துக்காட்டாக மகா அவதார பாபாஜியின் சீடர் பரமஹம்ச யோகானந்தர் அமெரிக்காவில் உள்ள போஸ்டன் நகரில் 700 பேர் முன்னிலையில் மகாசமாதி அடைந்து காட்டினார்.தன் உடலை விடுமுன்னே,
" நான் உடலை விடப்போகிறேன்" என்று அவர் அறிவித்திருந்ததால் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் எனப் பலரும் அங்கே குழுமியிருந்தார்கள். வந்தவர்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு ' இப்போது என் உடலை நான் விடப்போகிறேன் ' என்று கூறியவண்ணம் பத்மாசனத்தில் அமர்ந்து தன் உடலை நீத்தார்.
மருத்துவர்களைப் பொறுத்தவரை உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்பதே அவர்களின் மருத்துவ அறிவியல் சார்ந்த நம்பிக்கை, நன்றாக ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், 'இப்போது நான் போகப் போகிறேன்' என்று சொல்லிவிட்டுத் தன் உடலை விட்டு நீங்குவதை அவர்கள் எங்கும் பார்த்ததில்லை.
அது மட்டுமல்லாமல் உடலை விடும்போது, " 33 நாட்களுக்கு பிறகு தான் இவ்வுடலை அடக்கம் செய்ய வேண்டும். அழிந்து போகாத இவ்வுடலை அப்படியே வைத்திருக்கவும் செய்யலாம் " என்று கூறிவிட்டே உடலை நீத்தார்.
அவரது உடல் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்றும் அழிவில்லாமல் அப்படியே உள்ளது.
இன்றைய நிலையில் இந்தச் சமாதி கிடைத்தாலே பெரிய விஷயம். வள்ளலார் போன்ற ஆதிகுருமார்கள் இதைச் சமாதியாக ஏற்றுக் கொள்வது இல்லை.
எனவேதான், " சமாதிப்பழக்கம் பழக்கமன்று; சகஜப் பழக்கமே பழக்கம் " என்று வள்ளலார் உரைநடைப் பகுதியில் உபதேசித்துள்ளார்.
இப்போதைக்கு நாம் நடைமுறை சமாதியைப் பழகிக் கொள்வோம். வள்ளல் பெருமான் கூறும் ஆதித் தமிழரின் சமாதி நிலை கிடைத்தால் யோகமாக எண்ணி ஏற்றுக் கொள்வோம்.
நன்றி; கவனகர் முழக்கம்
ஆதிக்கு சமமாக ஆகுதல்
ReplyDeleteசமாதி. .
சாலை ஜெய சுந்தரம்
வாட்ஸ் அப் : 7010678724
ஒளி சமாதி
ReplyDelete