Wednesday, December 5, 2018

சாகாக்கல்வியின் தத்துவம்*

குருவே சரணம்.🙏🙏

🌷 *சாகாக்கல்வியின் தத்துவம்*

உடலில் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை நல்தீயாய் இருந்து உயிரை இயக்குவதும் உள்ளதினுள்ளே ஞானச்சுடராய் விளங்குவதும் பரஞ்சோதியே.!!

அந்த பரம்பொருளே மண்ணில் மணமாகவும் தீயில் ஒளியாகவும் ஜீவன்களில் உயிராகவும் இருக்கிறது. அதுவே அழிவில்லாத பிரம்மமுமாகி நிற்கிறது.

இந்திரியங்கள் இல்லாதது. ஆனால் இந்திரியங்களை இயக்குவது. பொருள்களாக விவரிக்க முடியாது. ஆனால் பொருளை தாங்குவது படைப்பது விழுங்குவது என அனைத்தும் அதுவே.!

அத்தகைய பரம்பொருளில் நாட்டம் கொண்டு உள்முகமாக பூரணமாக உணரத்தெரிந்து விட்டால் அப்போது இதயத்திலும் , கீழிருந்து இதயம் வரையிலும் உள்ள முடிச்சுகள் அவிழத்தொடங்கும். அவ்வாறு முடிச்சுகள் அவிழ்ந்து விட்டால் இயல்பான மரண வாழ்வை பெற்றவன் கூட சாகாவரம் பெறுகிறான். பிறவியை அறுக்கிறான்.

சித் அம் பரம் பொருளே சரணம்.!

நல்லதே நடக்கும்.!

போகர் வசீகரன்
போகர் சித்தாந்தசபை
பழநி.
9488008816

No comments:

Post a Comment