Thursday, July 26, 2018

ஊக்கம் தரும் வாக்கியங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம்

**ஊக்கம் தரும் வாக்கியங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் ஆழ்மனம் அதனை நம்ப ஆரம்பித்து பின் good நம்பிக்கையை மெய்ப்பிக்கும் **

வெற்றியை விரும்பாத மனிதர்கள் எவரேனும் உண்டா? வெற்றியைத் தேடிப் போகாத மனிதர்கள் இருக்கலாம். ஆனால் வரும் வெற்றியை வேண்டாம் என்று சொல்பவர்கள் இருக்க வாய்ப்பில்லை.

Affirmations கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். ஊக்கம் தரும் வாக்கியங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் ஆழ்மனம் அதனை நம்ப ஆரம்பித்து பின் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வழிகளைக் கண்டுபிடிக்கிறது

வெற்றியைத் தேடித் தரும் வாக்கியங்கள் :

**நான் வெற்றிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்

**என் தனிப்பட்ட சக்தி மகத்தானது.

**நான்  எனது வாழ்க்கையில் ஒரு அதிசயம்

**நான் சாதரணங்களக்கு அப்பாற்பட்டவன், அபரிமிதத்தில் வாழ்கிறேன்.
.
**நான் என்னை நம்புகிறேன்

**நான்  என்னுடைய உயர்ந்த செல்வம் இதனை நான்  நம்புகிறேன்.

**நான் மகிழ்ச்சி, சாதனை மற்றும் முழுமையான நிறைவேற்றத்திற்கான பகைக்கப்பட்டுள்ளேன்.

மேற்கண்ட வாக்கியங்களை கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம்:

1) ஒரு முறை வாய்விட்டு வாசிக்க வேண்டும்

அல்லது

2) ஒரு நாளில் மூன்று முறை வாசிக்க வேண்டும்

அல்லது

3) மும்மூன்று முறையாக ஒரு நாளில் 4 முறை வாசிக்க வேண்டும்.

எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் வாசிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு விரைவில் வெற்றியை அடைவீர்கள்

காசா பணமா? உற்சாகமூட்டும் வார்த்தைகள்தானே! முயன்று பாருங்கள்!

No comments:

Post a Comment