Sunday, July 15, 2018

சித்தர் பாடல்

நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே !
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்!
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ? -திருமந்திரம்
விளக்கம் :
ஒரு கல்லை நட்டுவைத்து அக்கல்லுக்கு பூமாலை போட்டு; அதற்கு தெய்வமென்று பெயரிட்டு அதை சுற்றி வந்து முணமுணவென்று மந்திரங்கள் என்கிற பெயரில் எதோ சொல்லுகிறீர் .நீர் செய்வது எப்படி இருக்கிறதென்றால் ,சமையல் செய்யும் பாத்திரம் உணவின் சுவையை அறிவது போல் இருக்கிறது . எவ்வளவு ருசியாக சமைத்தாலும் அந்த பாத்திரத்துக்கு சுவை தெரிவது இல்லை அதே போல நீர் நட்டு வைத்த கல்லானது உம்மிடம் பேசுமோ உன்னுள்ளே இறைவன் இருக்கும் போது.

2 comments: