Monday, June 6, 2016

குழந்தை மருத்துவம் - குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல்...!!!

               ஒவ்வொரு தாய்மார்களும் கருவில் குழந்தையை எப்படி பாதுகாத்தனரோ அதுபோல் வளர்ப்பதிலும் பாதுகாப்பான நடவடிக்கை அவசியத் தேவையாகும்.  ஏனெனில் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும், ஒருதாய் சரியாக அறிந்து வைத்திருந்தால்தான் ஒரு குழந்தையை அவள் ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க முடியும்.

பொதுவாக குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் வர மலச்சிக்கலும் ஒரு காரணம். 

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் அடிக்கடி உண்டாகிறது.  அதுவும் மத்திய தர குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு மலச்சிக்கல் அதிகம் உண்டாவதாக குழந்தைகள் நல ஆய்வு தெரிவிக்கிறது.  யூனிசெப் (Unicef) நிறுவனம் வளரும் நாடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு 62 சதவீதம் மலச்சிக்கல்தான் காரணம் எனக் கூறுகிறது.  மேலும் உணவு முறையே இதற்கு முக்கிய காரணம் எனவும் கூறுகிறது.

குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கல் எதனால் ஏற்படுகிறது என்பதை அறிவது கடினமான செயலாகும்.  ஏனெனில் குழந்தைகளுக்கு மலம் கட்டிப்படுவதும், வயிற்றுப்போக்கு உண்டாவதும் சகஜம்தான். 

குழந்தை ஏதாவது வேண்டாத பொருளை  விழுங்கிவிட்டாலும், விரல் சூப்பும் போது அல்லது கைகளை வாயில் வைக்கும்போது கிருமிகள் உட்சென்று மேற்கண்ட வற்றை ஏற்படுத்துகிறது.

குழந்தைகள் அதிகபட்சம் ஒரு வயது வரைதான் படுக்கையிலேயே சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதுண்டு.  அதன் பின்  தாய் காலையில் குழந்தை எழுந்தவுடன் பால் கொடுத்து தரையில் அமர்ந்து தன் கால்களை நீட்டி குழந்தையின் கால்களை தன் கால்களின்மேல் அகட்டி உட்காரவைத்து மலம் கழிக்கச் செய்வதுண்டு.

இதனால் நாளடைவில் குழந்தை காலை எழுந்தவுடன் பால் அருந்தி பின் மலம் கழிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக்கொள்ளும்.

இன்றைய காலகட்டத்தில் டயபர் துணி வகைகள் வந்துவிட்டதால் அவை அணிவித்தவுடன் மலம், சிறுநீர் கழிப்பது முறையாக இல்லாமல் போய்விடுகிறது.  இதனால் குழந்தை சில சூழ்நிலைகளில் மலத்தை அடக்குவதால்  மலச்சிக்கல் ஏற்படுகிறது.

மேலும் உணவுமுறை மாற்றத்தாலும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் உண்டாகிறது.

குழந்தைகளுக்கு எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளைக் கொடுக்க வேண்டும்.   கொதிக்கவைத்து ஆறவைத்த வெந்நீர் அதிகம் அருந்தச் செய்ய வேண்டும்.  உணவில் மாற்றமோ, உணவு கொடுக்கும் முறையில் மாற்றமோ உண்டானால், அது குழந்தைக்கு மலச்சிக்கலை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அவசியம் தேவையாகும்.  இது குறைந்தால் குழந்தைக்கு மலச்சிக்கல் உண்டாகும். எனவே நார்ச்சத்து மிகுந்த நீர்ச்சத்து நிறைந்த கீரை வகைகள், பழங்கள், காய்ககளை நன்றாக வேகவைத்து கொடுக்க வேண்டும்.  அதுபோல் நீராவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்றவை எளிதில் ஜீரணமாகி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

உணவை அவசர அவசரமாக கொடுக்காமல் நிதானமாக அமைதியாக ஊட்டவேண்டும். 

குழந்தைகள் உணவை மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்கும். எனவே, உணவை நன்றாக மசித்துக் கொடுக்க வேண்டும்.  இதனால் உணவு எளிதில் சீரணமாகும். 

அதுபோல் அதிகளவு சாக்லேட், மற்றும் நொறுக்குத் தீனிகளை அடிக்கடி கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.  இவை உணவை செரிமானமாகாமல்  தடுத்து மலச்சிக்கலை உண்டாக்கும். 

சில சமயங்களில் குழந்தைக்கு சளி, இருமலுக்கு மருந்துகொடுத்தால் அது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.  இச்சமயங்களில் நல்ல நார்ச்சத்து மிகுந்த உணவுகளைக் கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும்.

அதுபோல் குழந்தைகளுக்கு 2 வயதுக்கு மேல் அருந்தக் கொடுக்கும் பாலில் அதிகம் நீர் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் பொதுவாக உணவை சில நிமிடங்கள் வரை வாயிலேயே வைத்துக்கொண்டு விளையாடும்.  பின்தான் அதனை விழுங்கும்.  இதனால் உணவை அதிகமாக குழந்தை வாயில் வைக்கக்கூடாது.  வாயில் உள்ள உணவை விழுங்கிய பிறகே உணவை வாயில் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு மனதில் பயம் இருந்தால் கூட மலச்சிக்கல் உருவாகும்.  எனவே, பயத்தை வருவிக்கும் தொலைக்காட்சி மற்றும் தேவையற்ற வெளிக்காட்சிகள் என குழந்தைகளை பார்க்கச் செய்யக்கூடாது.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!

!!

மகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதன் என்பவனை,சூரிய அஸ்தமனத்துக்குள் கொன்று விடுவேன் அல்லது தீக்குளிப்பேன் என சபதம் செய்தான் அர்ஜுனன்.
அன்று காலையிலிருந்தே மறைவாகவே இருந்தான் ஜயத்ரதன்.
துரியோதனன்,கர்ணன் போன்றோர் அவனுக்கு பாதுகாவலாக இருந்தனர்். அர்ஜுனனால் அவனை நெருங்கவும் முடியவில்லை.அவனிருக்கும் இடமும் தெரிய வில்லை.மாலை நேரமும் நெருங்கியது.
" என்ன கிருஷ்ணா...சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே.!...
ஜயத்ரதனை எப்படிக் கொல்வது,"
என்றான் அர்ஜுனன்.
சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் ,பகவான்.இருள் சூழ ஆரம்பித்தது.இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான்.

"சூரியன் அஸ்தமித்து விட்டான்.இனி அர்ஜுனன் தீக்குளித்து விடுவான்"என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான்.
உடன் அர்ஜுனனைப் பார்த்து,
" அதோ ஜயத்ரதன் தலை தெரிகிறது
ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து,தலை கீழே விழாமல் ,அருகில் சமந்த பஞ்சகத்திலுள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு." எனறார் கிருஷ்ணர்.
ஜயத்ரதனுடைய தகப்பனார் தான் விருத்தட்சரன்.
தனது கோரமான தவப்பயனால்,ஜயத்ரதனைப் பெற்றார். அவன் பிறக்கும் போது ஒரு அசரீரி ஒலித்தது."உன் புத்திரன் மகாவீரனாக எல்லோராலும் கொண்டாடப் படுவான். மிக்க கோபமும்,பராக்ரமும் உள்ள வீரன் ஒருவனால்,அவன் தலை அறுபட்டு மாள்வான்." என்றது.
இதைக்கேட்ட விருத்தட்சரன்,தன் தவ வலிமையால்
"யுத்தகளத்தில் எவன் தன் பிள்ளையின் தலையை கீழே தள்ளுகிறானோ,அவன் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும்" எனறு சாபமிட்டிருந்தான்.
இந்த விபரத்தை அர்ஜுனனுக்கு சொல்லி
" உன்னால் அறுபட்டு இந்தத்தலை கீழே விழுந்தால்,உன் தலை வெடித்து விடும்.அதனால் அருகிலுள்ள அவன் தகப்பனார் விருத்தட்சரன் மடியில் அந்தத் தலையைத் தள்ளு ,"எனறார் கிருஷ்ணன்.
அர்ஜுனனும் அப்படியே செய்தான்.அந்த சமயம் விருத்தட்சரன் பூமியில் அமர்ந்து சந்தியோபாசனம் செய்து கொண்டிருந்ததால்,மடியில் தலை விழுந்ததை கவனிக்கவில்லை.
பிறகு அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்த போது, அவரது மடியில் ஏதோ கனமாக இருப்பதைக் கண்டு கீழே தள்ளினார். அது பூமியில் விழுந்தது. தன் மகன் தலையைக் கீழே தள்ளுபவனின் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும் என்ற சாபத்தால், விருத்தட்சரனின் தலை வெடித்துச் சிதறியது.
நாம் என்னதான் சூழ்ச்சி செய்தாலும்,சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், அதைத் தீர்மானம் செய்வதும், நடத்திவைப்பதும் பகவான் தான். அதனால் எல்லாப் பொறுப்புகளையும்,பகவானிடம் ஒப்புவித்துவிட்டு, "பகவானே.! உன் சித்தம்.! எது நல்லதோ,அதைச் செய் என்று சொல்லி,அவனைச் சரணடைந்தால் போதும். நம்மைக் காப்பாற்ற வேண்டியது அவன் கடமை.அவன் செய்வான்....

RAJAJI JS

ஏழுமலையானுக்கு கோபுரம்இல்லாதது ஏன்?

திருப்பதி ஏழுமலையானுக்கு கோபுரம்
இல்லாததற்க்கு ஆதிசேஷனே
காரணம் !

வீர நரசிம்ம கஜபதி என்னும்
விஜயநகர மன்னர் ராமேஸ்வரத்திற்கு
யாத்திரை புறப்பட்டார். வரும் வழியில்
திருப்பதி பெருமாளை தரிசிக்க
மலையேறினார். ஏழுமலையானை தரிசித்த
பின், அங்கு கோபுரம் கட்ட
உத்தரவிட்டார்.

ராமேஸ்வரம்
யாத்திரை முடித்துவிட்டு, மீண்டும்
திருப்பதி வந்தார். கோபுரம் கட்டும் பணி
நடந்து கொண்டிருந்தது.
பெருமாளை தரிசித்த அவர்,
மலையிலேயே தங்கினார்.

அன்றிரவு கனவில் பாம்பு வடிவில்
தோன்றிய ஆதிசேஷன், “மன்னா! இந்த
மலையே என் உடம்பாகும். இங்கு கோபுரம்
கட்டினால் ஏற்படும் பாரத்தை
என்னால் தாங்க முடியாது,” என்று
சொல்லி விட்டு கருவறைக்குச்
சென்று எம்பெருமானின்
வலக்கையில் சுற்றிக்
கொண்டார்.

பதறி எழுந்த மன்னர், பண்டிதர்களை
அழைத்து கனவுக்கான விளக்கத்தை
கேட்டார். அவர்கள், “மன்னா!
கோபுரப்பணியை இப்போதே நிறுத்தி விடுவோம்.
ஆதிசேஷனை அமைதிப்படுத்தும் விதத்தில்
பரிகாரமாக தங்க நாகாபரணம்
ஒன்றைச் செய்து
பெருமாளுக்கு அணிந்து விடுவோம்.”
என்று கூறினர்.

அதன் படி, வீரசிம்ம
கஜபதி அளித்த நாகாபரணமே
இன்றும் ஏழுமலையானின் வலது திருக்
கரத்திற்கு அழகு சேர்க்கிறது

RAJAJI JS

வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்..,??

இதற்கான விடையை சீன தத்துவ ஞானியான லா வோ த் ஸவின் ஒரு கதை மூலம் பார்க்கலாம்.

'என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை' என்றான் ஒரு அரசன் ஞானியிடம்.

'உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா' என்று ஞானி கேட்டார்.

'என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை.

முறையாக நீதி செலுத்தப்படுகிறது.

நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.

ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.

இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை' என்றான்.

'அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு' என்றார் ஞானி.

'எடுத்துக் கொள்ளுங்கள்'என்றான் மன்னன்.

'நீ என்ன செய்வாய்' என்றார் ஞானி.

'நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்' என்றான் அரசன்.

'எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய்.

உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா.

நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.' என்றார். சரி என்றான் மன்னன்.

ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார்.

அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான்.

அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.

'அது கிடக்கட்டும்' என்ற ஞானி 'நீ இப்போது எப்படி இருக்கிறாய்' என்று கேட்டார்.

'நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்'
'முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா.....???'

'இல்லை'

'அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்.....???

இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்.......???'

விழித்தான் அரசன். ஞானி சொன்னார்.

'அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய்.

இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய்.

அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே.

நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும்.

இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல.

எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்.

இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய்' என்று கூறி விடைபெற்றார் ஞானி.

ஐம்புலன்களையும் இடைவிடாமல் நெறிப்படுத்துபவன் மனம் ஒருமித்தவன் ஆகிறான். அவனிடம் சலனங்கள் ஏற்படுவதில்லை .

RAJAJI JS

சுவாமி விவேகானந்தரின் பார்வையில் ஆன்மீகம்!

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் தன் சிஷ்யர்களுடன் கல்கத்தாவிலிருந்து காசிக்கு யாத்திரையாகப் புறப்பட்டார்.

யாத்திரை செல்லும் வழியில் ஒரு ஊரில் கோயிலின் வாயிலில் குஷ்ட நோயினால் பாதிக்கப்பட்ட பலர் உட்கார்ந்து கொண்டு வருவோர் போவோரிடம் பிட்சை கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்தக் காட்சியைக் கண்ட சுவாமி விவேகானந்தரின் மனம் வேதனை அடைந்தது.

தன்னுடன் வந்த சிஷ்யர்களை அழைத்து யாத்திரைக்கு வழிச் செலவுக்கு கொண்டுவந்த தொகையைக் கொண்டு அங்கு நோயாலும், பசியாலும், குளிராலும் வாடி வதங்கிப் போயிருக்கும் மக்களுக்கு உணவும், உடையும் மருந்தும் வாங்கிவரச் சொன்னார்.

சிஷ்யர்களும் அவ்வாறே அந்த தொகையைக் கொண்டு உடையும், உணவும் மருந்தும் வாங்கி வந்தனர்.

அதைக் கொண்டு அவர்களை அருகில் இருந்த குளத்தில் குளிப்பாட்டி, அவர்களின் உடலில் இருந்த புண்களுக்கு மருந்து தடவி, பிறகு புதிய உடைகளைக் கொடுத்து அணிய வைத்து, அவர்களுக்குப் பல வகையான உணவுப் பொருள்களையும் வழங்கி மனம் மகிழ்ந்தார்.

அதன் பிறகு சுவாமி விவேகானந்தர் தனது சிஷ்யர்களைக் கூப்பிட்டு கல்கத்தாவுக்கே திரும்பிச் செல்வோம் என்றார்.

”காசி யாத்திரை செல்லவே வந்தோம், பாதியில் திரும்பச் சொல்கிறீர்களே ஏன்?” என்றனர் சிஷ்யர்கள்.

நோயாலும் பசியாலும் வாடி வதங்கிய இம்மக்களுக்குச் செய்த சேவை மூலம் நாம் இறைவனை தரிசித்த பயனை அடைந்து விட்டோம். ‘மக்களுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் பூஜை ‘ என்றார் சுவாமி விவேகானந்தர்.

இதுபோன்ற சேவையை இறைவனின் வழிபாடு எனப் பாவித்துச் செய்யுங்கள். என்னுடைய நன்மைக்காகவே நான் வழிபடுகிறேன். அதுபோல் நம்முடைய நன்மைக்காகவே நாம் ஏழை மக்களிடம் கடவுளைக் கண்டு வழிபட வேண்டும்.

எவனொருவன் எல்லா உயிர்களையும் தன்னிலும், தன்னை கடவுள் எல்லா உயிர்களிலும் இருப்பதாகக் காண்கிறானோ அவனே ஞானி. எவன் ஒருவன் இந்த வாழ்க்கையிலேயே கடவுளை அனைவரிடத்திலும் சமமாகக் காண்கிறானோ அவனே கடவுளை அடைந்ததாகக் கருதப்படுவான்.

ஏழையிடமும், பலவீனரிடமும், நோயுற்றோரிடமும் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறவன் ஆகிறான்.

விக்கிரகத்தில் மட்டுமே சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்பநிலையில் உள்ளது. இப்படிச் சொன்னதால் கோயில்களில் விக்ரகங்களுக்கு பூஜை, வழிபாடு கூடாது என்று கூறினார் என்று பொருள் கொள்ளக் கூடாது.

இதற்காக ஆலய வழிபாட்டை வெறுத்தார் என்பதல்ல. அவரே ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டுள்ளார். ஆனால் அதையும் தாண்டி செல்வது தான் உண்மை ஞானம் என்றுரைத்தார்.

‘ஆலயத்தில் பிறப்பது நல்லது.
ஆனால் ஆலயத்திலே செத்து மடிவது துரதிருஷ்ட வசமானது ‘ என்றார்.

அதாவது ஒருவரின் உண்மையான ஆன்மிகம் என்பது ஆலய வழிபாடு மாத்திரமல்ல, அதையும் தாண்டி, உயிருள்ள ஒவ்வொரு ஜீவர்களையும் நேசிப்பது, அவர்களுக்கு சேவை செய்வது தான். குறிப்பாக சிவ வழிபாடு என்பது அவனது படைப்பில் உள்ள சகல ஜீவர்களுக்கும் தொண்டு செய்வது தான்.

‘விக்கிரகத்தில் மட்டுமே சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில் உள்ளது ‘ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

மனத்தூய்மை, பிறருக்கு நன்மை செய்வது இதுவே எல்லா வழிபாடுகளில் சாரமாகும். ஏழையிடமும், பலவீனரிடமும், நோயுற்றோரிடமும் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறவன் ஆகிறான்.

வேதாந்தம் புகட்டுவது ‘யாவற்றிலும் ஈசனே நிறைந்துள்ளான் என்பதை அறிந்து அவனுக்கே அரும்பணியாற்று’ என்பதாம்.

இதுவே சுவாமி விவேகானந்தரின்
பார்வையில் உண்மையான ஆன்மிகம்.
RAJAJI JS

Thursday, June 2, 2016

கவிஞர் கண்ணதாசன் சுயசரிதை!

கவிஞர் கண்ணதாசன் சுயசரிதை எழுதுவதை கேள்விப்பட்ட ஒருவர் , நேராக அவரிடம் சென்றார்.

“காந்தி , நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் நாடு சுதந்திரம் அடைவதற்காக பாடுபட்டவர்கள் . அவர்கள் சுயசரிதை எழுதியது சரி. நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள் ‘ என்று கேட்டார் .

இப்படி ஒரு கேள்வியை எதிர்கொள்ளும் எவரும் ஆத்திரமடைய வாய்ப்புண்டு. ஆனால் கண்ணதாசனோ மிக அமைதியாக , ‘ காந்தி , நேரு போன்றவர்கள் ஒருவர் எப்படி வாழவேண்டும் என்பதற்காக எழுதினார்கள் . ஒருவர் எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் எழுதுகிறேன் ‘ என்றார்.

தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!

தன் அன்னை மறைந்தபோது ஒருவர் நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தார்

இந்த அளவு அழுவதற்குக் காரணம் என்ன என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு அவர், “எப்படி நான் அழாமல் இருக்க முடியும்?

சொர்க்கம் செல்லும் வாசல்களில் ஒரு வாசல் மூடப்பட்டு விட்டதே!” என்றார்.

ஆம்!தாயுடன் சேர்ந்து வாழும் பாக்கியம் பெற்றவர்களே!

நீங்கள் சொர்க்கம் செல்லும் வாசல்களில் ஒன்று உங்கள் கண் முன்னால் இருக்கிறது.அவர்களைப் பேணுங்கள்.

அவர்களின் ‘துஆ’வைப் பெறுங்கள்.எவர் தன் தாயின் மனதை குளிர வைக்கிறாரோ அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்வார்.

ஏனென்றால் ஒரு தாய் தன் மகனைப் பார்க்கும்போதெல்லாம் மனதிற்குள்ளும்,வாய்விட்டும் தனது மகன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று தான் ‘துஆ’ செய்வார்.”உங்கள் பெற்றோர்களைப் பேணுங்கள்.

அவர்கள்உங்களுக்கு அநீதி இழைத்தாலும் சரி, அநீதி இழைத்தாலும் சரி, அநீதி இழைத்தாலும் சரி” என மூன்று முறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

தனது தாய் உயிருடன் இல்லையே என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேதனைப்பட்டதாக துணைவியர் (ரளியல்லாஹு அன்ஹுமா) அறிவிக்கின்றனர்.”

மனிதனுக்கு அவனுடைய பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.”
(அல்குர் ஆன் 31:14)

யார் யாரையோ நினைத்து காலத்தை கடத்துபவர்களே!!!

உங்களைக் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த தாயை சற்று சிந்தியுங்கள்…

நீங்கள் பிறப்பதற்கு முன்பு உங்களுக்காக அழுது துஆ செய்தவள் உங்களின் தாய்….

நீங்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக தன்னுடைய சந்தோஷங்கள் பலதை உங்களுக்காக தியாகம் செய்தவள் உங்கள் தாய்….