*வாழ்க்கை மலர்கள்: ஜனவரி 5*
*கடவுளைக் காணலாம்*
கடவுளைக் காண முடியுமா என்றால் காண முடியும். எந்தக் கண்ணால் பார்க்க வேண்டுமோ, எந்த நோக்கத்தோடு பார்க்க வேண்டுமோ, அப்படிப் பார்த்தால் காணலாம். ஒரு செயல் செய்கிறோம்; எந்தச் செயல் செய்தாலும் ஒரு விளைவு இருக்கிறதல்லவா? கையைத் தட்டினேன், சப்தம் வந்தது. கையைத் தட்டினவரைக்கும் தான் என் முயற்சி. சப்தம் நான் செய்தேனா, ஒலியை நான் செய்தேனா, நான் கொண்டு வந்தேனா? இல்லவே இல்லை; இருப்பில் இருந்து, என்னுடைய செயலினால் குவிந்தது, காது கேட்கின்ற அளவுக்குக் குவிந்தது, அவ்வளவு தான் சொல்லலாம்.
ஆகவே இறைவன் இல்லாத இடமே இல்லை. அதற்கு அடையாளம் என்ன? நீ எந்தச் செயலைச் செய்தாலும் அதற்கு விளைவாக வருபவனும் இறைவன் தான். அதுதான் இறைவனுடைய செயலே. அந்தச் செயல் அதனுடைய அனுபவத்தை வைத்துக் கொண்டு நல்ல செயலாக இருக்கவேண்டும் என்று சிந்தனையோடு திட்டமிட்டுச் செய்வோமானால் நலமே விளையும். இல்லை, புலனளவில் கவர்ச்சியாகி மயக்கத்திலே ஏதோ வேகத்திலே செய்கின்ற போது இன்பமும் வரலாம், துன்பமும் வரலாம். இன்பம் வேண்டும், அமைதி வேண்டும் என்றால் அதற்கு இறையுணர்வு, அறநெறி இரண்டும் வேண்டும்.
*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
No comments:
Post a Comment