*சுறுசுறுப்பு , ஆரோக்கியம் பெற ஹாலாசனம்..!*
ஹாலாசனம்..
இது மல்லாந்து படுத்துச் செய்யும் ஆசனமாகும், இதனுடைய இறுதி நிலை கலப்பை போன்று உள்ளதால் இப்பெயர் பெறலாயிற்று.
மனம் :
வயிறு , முதுகு.
மூச்சின் கவனம் :
இயல்பான மூச்சு.
செய்முறை:
விரிப்பில் மல்லாந்து படுக்கவும்,கால்களைச் சேர்த்து
வைக்கவும், தலைக்கு மேற்புறம் நன்றாக நீட்டி இருக்குமாறு செய்யவும்.
கால்களை மெல்ல உயரே தூக்கவும்.முழங்கால்களை மடக்காமல் தரையிலிருந்து 45 டிகிரிக்குக் கால்கள் சாய்ந்தபடி இருக்குமாறு வைக்கவும்.
கால்களை 90 டிகிரிக்குக் கொண்டு வரவும்.
கால்களைத் தரைக்கு இணையாகக் கொண்டு வரவும்.
கால்களைப் பின்புறமாக நீட்டிதரையைத் தொடவும் கைகள் நீட்டியவாறு தரையிலிருக்கட்டும்.
முகவாய்க்கட்டை நெஞ்சுக் குழியைத் தொட்டுக் கொண்டிருக்கவும்.
பின் மெதுவாக ஆரம்ப நிலைக்குவரவும்.
பலன்கள்:
முதுகுத் தண்டு வடம், தண்டு வடத்தின் நரம்புகள் மற்றும் முதுகுத் தசைகள் நீட்டி, இழுக்கப் பட்டு நன்கு செயல்படுகின்றன.
இரத்தஓட்ட மிகுதியால் கழுத்து நரம்புகள் பலம் பெறுகின்றன.
தைராய்டு சுரப்பிகள் நன்கு செயல்படுகின்றன.
இருமல்,சளிபோன்ற நோய்கள் குணமாகின்றன.
இதயம் தலைகீழாக அமைந்து செயலாற்றுவதால், இதயத்தின் மீதான பாரம் குறைகிறது.
நுரையீரல்களும் தலைகீழாக்கப்படுவதால், அதன் அடிப்பாகத்தில் தேங்கியிருக்கும் அசுத்தக் காற்று முற்றிலுமாக அகற்றப்படுகிறது.
தொண்டைப் பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பிகள் நன்றாக அழுத்தப்படுவதால், தைராக்ஸின் என்ற சுரப்பு நீர் நன்றாகச் சுரந்து, உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
மூளைக்கும் நல்ல ரத்த ஓட்டம் கிடைப்பதால் அதன் ஆற்றல் பெருகுகிறது.
உடல் ரீதியான பலன்கள் :
இரத்தம் சுத்தமடையும் கழிவுகள் நீங்கும்
சுறுசுறுப்பு , ஆரோக்கியம் பெருகும்.
குணமாகும் நோய்கள் :
அஜீரணம் , பலவீனமான வயிற்றுத்தசைகளால் ஏற்படும் மலச் சிக்கலுக்கு நல்லது.
முதுகுத்தண்டு வலி, வயிற்று வலி ,நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
ஆன்மீக பலன்கள்:
மன உடல் அமைப்பைத் தூண்டி, ஊக்கமூட்டி இலேசாகச் செய்கிறது.
எச்சரிக்கை :
எந்த நிலையிலும் உடல் உதறுதல் கூடாது. கழுத்து ,முதுகு பிரச்னை உள்ளவர்கள் இதை செய்யக் கூடாது
குறிப்பு :
உணவு உண்ட பிறகு செய்யக் கூடாது.
மாத விடாய் மற்றும் கர்ப்பிணி பெண்கள் செய்யக் கூடாது.
இதயக் கோளாறு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ,ஹெர்னியா பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.
*யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!*
*"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"*
No comments:
Post a Comment