*"என்னிடம் ஒரு முழுமையான ஆற்றலோடு எல்லாம் வல்ல இறைவன், என்னைப் படைத்திருக்கிறான், பக்திமானாக இருந்தாலும் ஞானவானாக இருந்தாலும் அவனுடைய பிரதிநிதியாகவே, அவனுடைய பகுதியாகவே தான் இருக்கிறேன். பேராற்றல் என்னிடம் அடங்கி இருக்கிறது. இதைக் கொண்டு என்னென்ன நலம் கொள்ள வேண்டுமோ அதை நானே விளைவித்துக் கொள்வேன். பிறருடைய உதவி தேவையான இடத்திலே அவர்களுக்கு உதவி செய்து அந்த உதவியை நான் பெறுவேன் என்ற அளவிலே உதவுபவர்களுக்கெல்லாம் நாம் பதில் செய்து கொண்டிருப்பேன் என்ற அளவிலே, கடமை உணர்வோடு நின்று பாருங்கள். பெரிய சக்தி வாய்ந்த ஒரு ஆற்றல் உங்களிடம் பெருகிவிடும். தினந்தோறும் அதைப் பயன்படுத்துங்கள்*
*நீங்கள் ஒரு அதிகாரியாக இருக்கலாம். உங்கள் அதிகாரத்தின் கீழ் ஆயிரமாயிரம் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கக்கூடும். நீங்கள் இந்தப்புறம் திரும்பி நாம் அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று எண்ணிவிட்டீர்களேயானால் அத்தனை ஆயிரம் மனிதர்களும் அவர்களின் தேவைகளும் நேரடியாக உங்களுக்குத் தெரியத் தொடங்கும். அதைச் செய்ய ஆரம்பித்தீர்களேயானால் அவ்வாறு செய்யச் செய்ய இன்ப ஊற்று தான் மனதிலே வளரும். தெய்வத்தோடு தெய்வமாகவே நிற்கும் ஒரு நல்ல காட்சி உள்ளத்தில் ஏற்படும்.*
*அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி*
°
*ஸ்ரீ விகாரி வருடத் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் மன மகிழ்வையும், அனைத்து செல்வங்களையும் சேர்க்கட்டும். அனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழட்டும். அதற்காக இறையருளையும், குரு அருளையும் வணங்கி, அனைவரையும் வாழ்க வளமுடன் எனத் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறி மகிழ்கின்றேன்.*
No comments:
Post a Comment