நாளை மார்ச் 28, வேதாத்திரி மகரிஷி முக்தி அடைந்த நாள். 2006 ல் தன் பூத உடலை விட்டு வான் காந்தத்தில் விரிந்து நின்ற நாள். அந்த நாள் நீங்கா நினைவுகளை இங்கு நான் பகிர்ந்து கொள்கிறேன்.
ஏற்கெனவே சுவாமிஜிக்கு இரண்டு மூன்று முறை உடல் நலனுக்காக KG Hospital கோவையில் admit ஆகியிருந்த போது, நானும் என் துணைவியாரும், சென்னையிலிருந்து கோவை வந்து, இரயில்வே நிலையத்தில் ரூம் எடுத்து தங்கிவிடுவோம்.ரூமில் தியானம் செய்வோம். Hospital சுவாமிஜி ரூமுக்கு பக்கவாட்டில் உள்ள benchilல் உட்கார்ந்து சுவாமிஜிக்கு வாழ்த்துகள் சொல்லிக் கொண்டே prayer செய்வோம். மீண்டும் room வந்து தியானம். இது குழந்தை தாயை பார்த்து பாடும் தாலாட்டு. அது பெருங்கடல் நாங்கள் சிறு துளிகள் தான் என்று நன்கு தெரியும். இருப்பினும் ஆன்மா அங்கு இழுத்துக் கொண்டு போனது.
ஒரு முறை சுவாமிஜி கைகளில் இணைக்கப்பட்ட tube களுடனே கைகளை தூக்கி ஆசீர்வதித்தது கண்டு அடக்க முடியாமல் அவர் முன்னிலையிலேயே கண்களில் நீர் பெருகி வழிந்தோடியது. என்னே கருணை உலக மக்களின் மேல்!
மகான்களுக்கு இது கடைசிப்பிறவி என்பதால் , மிச்ச கர்மாக்கள் உடற் துன்பமாக வாழ்வின் இறுதிக் கட்டத்தில் வெளிப்படும். இரமண மகரிஷிக்கும், இராம கிருஷ்ணபரம்ஹம்சருக்கும், யோகிராம் சுரத்குமாருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் இதே நிலைதான். ஆனால் மனதளவில் அவர்களுக்கு அது துன்பமாகத் தெரியாது.
2006, மார்ச் 27 அன்று தற்செயலாக சென்னையிலிருந்து ஆழியார் phone செய்த போது, சுவாமிஜி மீண்டும் hospital வந்ததும் , இம்முறை உடல் நலம் கவலைப் படும்படி உள்ளதாகவும் AO சொன்னார்கள். எல்லோரையும் நன்கு தவம் செய்து சுவாமிஜியை நன்கு வாழ்த்தச் சொன்னார்கள்.100 வருடங்கள் இருப்பார் என்று உறுதியாக நம்பியிருந்தேன். மறுநாள் காலை அலுவலகம் சென்று விட்டேன். அங்கிருந்து phone போட்டபோது, serious condition எனும் உண்மைநிலவரம் அறிந்து பதறிப் போனேன். உடனே அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு , இல்லம் விரைந்தேன். Internetல் மதியம் கோவை expressல் டிக்கெட் கிடைத்தது. நானும், தணைவியாரும் உணவு முடித்து விட்டு, ஒரு ஆட்டோ பிடித்து மணி சுமார் 12.45 க்கு ttk சாலையில் சென்று கொண்டிருக்கும் போது , pressல் இருக்கும் என் தம்பி(தினமணி cartoonist மதி)யிடமிருந்து phone வந்தது. 12.20க்கு சுவாமிஜி முக்தி அடைந்ததாக PTI செய்தி என்றான். மிகச் சிறு வயதிலேயே வருமையில் வாடிய உடல். தன் யோக சாதனைகளால் 95 வயது வரை மிக நலமுடனிருந்தது. இனி போதும் என்று முடிவெடுத்து விட்டார் போலும். அந்த தீர்மானம் அவர்கள் கையில் தான். தனது கடைசி சொற்பொழிவில் வேண்டாமை தான் வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். மனம் நிறைவாக இருப்பதாக சொன்னார்கள். இருப்பினும் மறைவுச் செய்தி
நம்ப முடியாத பெரும் துயரம் தந்தது. ஆழ்மனத்தை பாதித்தது. வீட்டிலேயே தெரிந்திருந்தால் அழுதுவிட்டு வந்திருக்கலாம். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் , சுற்றியிருப்பவர்கள் பற்றி கவனம் கொள்ளாமல், அழுதவாறே தெரிந்தவர்களுக்கு போன் செய்கிறேன். இரயிலில் அமர்ந்த பின்னும் அதே அழுகை நிலை தான். நெஞ்சு அடைப்பது போலிருந்தது. மனைவியும் அதே நிலையிலிருப்பது கண்டு சுதாரித்துக் கொண்டேன். இப்படி இருந்தால் நாமிருவரும் ஊர் போய் சேர மாட்டோம் என்று மனதை சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டோம். பொள்ளாச்சி சென்று 4 நாட்களுக்கு ரூம் போட்டுக் கொண்டோம்.
சுவாமிஜியின் பூத உடலை 3 நாட்கள் பொது மக்கள் பார்வைக்காக auditoriuத்தில் வைத்திருந்தார்கள். நாங்கள் நாள் முழுவதும் அங்கிருந்து விட்டு இரவில் பொள்ளாச்சி தங்கி விடுவோம். எத்தனையோ மடாதிபதிகள், ஆன்மீகப் பெரியோர்கள், ஆசிரம ஞானியர்கள், சமூக முக்கியஸ்தர்கள் வந்த வண்ணமிருந்தார்கள். இரண்டு நாட்கள் முன்பு தான் சுவாமிஜி இறுதியாக எழுதியிருந்த புத்தகம் 'இறைநிலையின் தன் மாற்ற சரித்திரம்' வெளியிட்டிருந்தார்கள். அந்த புத்தகத்தில் பல சூட்சுமமான இரகசியங்களை எழுதியிருந்தார்கள். அதனை அவர் சன்னிதானத்திலேயே படித்து முடித்தோம். பெரும்பாலான நேரங்களில் துரியாதீத தவம் இருந்தோம். அந்த அலைவரிசையில் நம்முடனும் கொஞ்சம் அவரை ஐக்கியப் படுத்திக் கொள்ளலாம் என்ற ஞானாசை தான். 3ம் நாள் மகாசமாதியில் அவரை அமர்த்தும் நாள். அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில், அந்த ஜொலிக்கும் குடையின் கீழ், ஈடில்லா தேவ தூதனாக அவர் பவனி வந்த காட்சி காணக் கண் கோடி வேண்டும். சமாதிக்குள் இரக்கும் முன், அவர் பூத உடலை இரண்டு பக்கமும் திருப்பி காட்டிய போது, மக்களிடமிருந்து வெடித்தெழுந்தது அழுகையும், அலறலும்.
குழிக்குள் விபூதியும், உப்பும், வில்வமும் ஆதின முறைப்படி இன்ன பிற சடங்குகளும் செய்து அடக்கம் செய்தனர்.
மறுநாள் மாலை அவர் சமாதியருகில் தவம் செய்து விட்டு ஊருக்கு கிளம்பினோம். 4 நாட்கள் வேற்றுலக அனுபவத்திற்கு பின், மீண்டும் உலக வாழ்க்கைக்கு செல்கிறோம் சுவாமிஜி என்று உணர்ச்சி வசப்பட்டு கனத்த மனதுடன் விடைபெற்ற அந்த நொடியில் தூரத்தில் இடி இடிக்க எங்கோ மயில் கூவியது.
வாழ்க வளமுடன்!
அந்த குருவருளும், இறையருளும் இன்றும் எங்களை வழிநடத்துகிறது.
வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
Thursday, March 28, 2019
Maharishi. Irainilai yatra
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment