Saturday, March 30, 2019

அன்பேசிவம் #ஆகம_குறிப்புகள்

# ;

1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.

2. மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது.(கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.)

3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும்.
முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.

4. காயத்ரி மந்திரத்தை
பிரயாணத்தின்போது, சொல்லுதல்கூடாது
சுத்தமானஇடத்தில்தான் ஜபிக்கவேண்டும்.

5. கற்பூர ஹாரத்தி :
(சூடம்காண்பித்தல் பற்றி)

சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்.

தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்கவேண்டும்
முகத்துக்கு ஒரு தடவை
கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.

6. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

7. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

8. சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும்

• விஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும்

• விநாயகருக்கு = அருகம்புல் ஆகும்

• பிரும்மாவிற்கு உகந்தது = அத்தி இ்லை ஆகும்

இவைகளை மாற்றி மற்றவருக்கு வைத்து வணங்க கூடாது.

9. கலசத்தின் அா்த்தங்கள்
கலசம்(சொம்பு) − சரீரம்
கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு
கலசத்தின் உள் இருக்கும் தீா்த்தம் (நீர்) − இரத்தம்
கலசத்தின் மேல் உள்ள தேங்காய் − தலை
கலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை − சுவாசம்
கலசத்தின் அடியில் இருக்கும் அரிசி & இலை − மூலாதாரம்
கூர்ச்சம் − ப்ராணம்(மூச்சு)
உபசாரம் − பஞ்சபூதங்கள்.

10.தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்...
• சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,
தயிர் சாதம், பலகாரம்
• வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்
• ஆனி – தேன்
• ஆடி – வெண்ணெய்
• ஆவணி – தயிர்
• புரட்டாசி – சர்க்கரை
• ஐப்பசி – உணவு, ஆடை
• கார்த்திகை – பால், விளக்கு
• மார்கழி – பொங்கல்
• தை – தயிர்
• மாசி – நெய்
• பங்குனி – தேங்காய்.

11. திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக
கிடைக்கும்.

12. அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில்  திருநீற்றை குழைத்து புசிகொள்ள கூடாது.

13. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது )

14. கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.

15. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

#ஓம்_நமசிவாய
வாழையூர் சிவன் கோவில்

திருக்குறள் - களவு

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்.

பொருள்: களவின் மூலம் உண்டாகிய செல்வம் நிறைய அளவு கடந்து ஆவது போலத் தோன்றிப், பின்னால் அழியும்.

இது பள்ளிகளில் நாம் படித்தது.

அதாவது தீய வழியில் சேர்த்த செல்வம் நிலைத்து நிற்காது என்பதாகப் பொருள் சொல்லப் பட்டது.

வள்ளுவராவது அவ்வளவு லேசா எழுதுவதாவது.

கொஞ்சம் குறளை மாற்றிப் போடுவோம்

களவினால் ஆகிய ஆகம் ஆவது போல் அளவிறந்து கெடும்

அஃதாவது, களவினால் ஆகிய ஆக்கம் முதலில் ஆவது போலத் தோன்றினாலும் பின் அளவு இன்றிக் கெடும்.

தீய வழியில் வந்த செல்வம் முதலில் பெரிதாக வளர்வது போலத் தோன்றினாலும், அது போகும் போது அந்த செல்வம் மட்டும் அல்ல போவது அதற்கு முன் சேர்த்து வைத்த செல்வத்தையும், நல்ல பெயரையும், புகழையும் சேர்த்து கொண்டு போய் விடும்

அது மட்டும் அல்ல, மீண்டும் செல்வம் வரும் வழியையும் அது அடைத்து  விடும்.

மேலும், பாவத்தையும் பழியையும் களவு செய்தவன் மேல் சுமத்தி விட்டு போகும்.

இந்தப் பிறவியில் வறுமையும், பழியும் சேர்க்கும்

மறு பிறவிக்கான வீடு பேறு அடைய முடியாமல் பாவத்தை சேர்த்து வைக்கும்.

அதனால், களவினால் ஆகிய ஆக்கம் அளவற்ற கெடுதலை செய்யும்.

இன்னொரு பொருள் என்ன வென்றால்.....

நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க நாள் பல ஆகும். கொஞ்சம் கொஞ்சமாகத் தான் செல்வம் சேரும்.

ஆனால், களவின் மூலம் சேரும் செல்வம் மிக வேகமாக வளரும். குறுகிய காலத்தில் மிகுந்த செல்வம் சேரும், களவின் மூலம்.

களவினால் ஆகிய ஆகம் ஆவது போல் அளவிறந்து கெடும்

வள்ளுவர் சொல்கிறார், அது எந்த வேகத்தில் வந்ததோ (ஆவது போல்) அதை விட வேகமாகக் கெடும்.

எப்படி ஆகியதோ அதே போல் கெடும். சொல்லப் போனால், "ஆவது போல் கெடும்" என்று சொல்லி இருந்தால் எப்படி ஆனதோ அதே போல் கெடும் என்று அர்த்தம் கொள்ளலாம் .

வள்ளுவர் ஒரு படி மேலே போய் "ஆவது போல் அளவிறந்து கெடும்" என்கிறார்

இதை எல்லாம் சின்ன வயதில், பிள்ளைகளுக்கு சொல்லிக்  கொடுத்தால் அவர்கள் மனதில்  பசு மரத்து ஆணி போல் பதியும். அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வார்கள். நல்ல சமுதாயம் வரும்.

சரியாகச் சொல்லிக் கொடுக்காமல், பாடநூல்களை அரசியல்வாதிகள் கையில் கொடுத்து, பல தலைமுறைகளை இந்த மாதிரி உயர்ந்த கருத்துகள் சென்று அடைய விடாமல் தடுத்து விட்டோம்.

இப்படி ஒரு பொக்கிஷத்தை எப்படி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது ?

அரு. லெட்சுமணன் கோவை / சென்னை

Accupressure point explanation

*அக்கு பிரஷர் பயிற்சி விளக்கம்*
(14 points Acupressure)

*1. மூன்று ஜோடி நரம்புகள் இணையும் இடம்*

மூளையிலிருந்து அனுப்பப்படும் ஆணைகளை செயலாக்க உதவுகிறது.

*2. இரைப்பையின் மேல்புறம்*

உணவைக் கூழாக்க தேவையான திரவங்களை உற்பத்தி செய்வதை சரியாக்குகிறது.

*3. இரைப்பையின் நடுப்புறம்*

செரிமானம் சரியாக நடைபெறுகிறது.

*4. இரைப்பையின் அடிப்புறம்*

சிறுகுடலை ஊக்கப்படுத்துகிறது.

*5. மேலே கொக்கி போல தூக்கும்போது பலன்கள்*
*இரைப்பை சிறுகுடல் ஆரம்பமாகுமிடம்*
(அ) பித்தப்பை ஊக்குவிக்கப்பட்டு பித்தநீர் சுரந்து இரைப்பையில் சுரக்கும் திரவங்களில் உள்ள அமிலத்தன்மையை சமன்செய்து குடல்புண் வராமல் காக்கிறது.

(ஆ) *கணையம் அட்ரினல் பகுதி*
கணையம் மற்றும் அட்ரினல் பகுதியை ஊக்குவித்து இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை வராமல் காக்கிறது.(sugar, BP)

*6. சிறுநீர்ப்பை: கீழே கொக்கி போல் இறக்கவும்*
சிறுநீர் கோளாறு நீங்குதல்.
பெண்களுக்கு கர்ப்பப்பை , மாதவிடாய் சம்மந்தமான நோய் தடுக்கப்படுதல்.

*7. கல்லீரல் கீழ்ப்பகுதி*
வலது தோள் நோக்கி இழுக்கிறபோது பித்தப்பை ஊக்குவிக்கப்படுகிறது.

*8.மண்ணீரல் கீழ்ப்பகுதி*

இடது தோள் நோக்கி இழுக்கும்போது  கொழுப்புச்சத்து கரைக்கப்படுகிறது.

*9. சிறுகுடல் பெருகுடல் சந்திக்கும்போது*

கீழ்நோக்கி வலது தொடை நோக்கி இழுக்கும்போது (குடல்) appendicitis வராமல் தடுக்கிறது.

*10. பெருங்குடல்*

இடது தொடை, கீழ்நோக்கி இழுப்பது மலத்தை போதிய நீருடன் வைத்திருக்கும்.

*11.கல்லீரல்*

விலா எலும்பு கீழே வலது புறம்
குளுக்கோஸ் உற்பத்தி செய்து உடலுக்கு சக்தியைத் தருகிறது.

*12. மண்ணீரல்*

விலா எலும்பு கீழே இடதுபுறம்
உயிர்ச்சத்து, விட்டமின்கள் A,B,C,D,E தயாரிக்க உதவுகிறது.

*13.தண்டுவடபகுதி(வளைந்து திரும்புவது)*
இடுப்பில் குடம் வைக்கும் இடம்.
மெரிடியன் நரம்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

*14.மலக்குடல்*

தொடை இடுக்குப்பகுதி (இடதுபுறம்)

புரோஸ்டேட் சுரப்பி, புரோஸ்டேட்டிஸ் மற்றும் ஜெரீனியா நோய்கள் வராமல் காக்கிறது.

*வாழ்க வளமுடன்!!*

நமக்கும் சுரக்கும் அமிர்தம் பற்றிய ரகசியம்*

*நமக்கும் சுரக்கும் அமிர்தம் பற்றிய ரகசியம்*

*{2000 வருடங்களுக்கு முன்பே சித்தர்கள் கூறிய அறிவியல் உண்மைகளை சித்தர்களின் குரலில் இன்று பகிர்கிறேன் }*

சித்தர்கள் மிகப் பெரிய விஞ்ஞானிகள். யோகத்தால் ஞானமடைந்து, ஞானத்தால்
உண்மையை உணர்ந்தவர்கள். உணவே
இல்லாமல் உயிர் வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டியவர்கள். பல நாட்கள் உணவே இல்லாமல் தவம் செய்து பேரானந்தத்தை
அனுபவித்தனர். அது எப்படி?

நவீன உடலியல் உமிழ் நீரானது வாய், கன்னம் ,தாடை, போன்ற
வாய் பகுதியில் சுரப்பதாகச் சொல்கிறது. அது எங்கே சுரந்தாலும் அதற்கு அடித்தளமாக
இருந்து அதைஅதிகமாகச் சுரக்கச் செய்வதும், கட்டுப் படுத்துவதுமான வேலைகளைச் செய்வது எது என்றால் *பிட்யூட்டரி சுரப்பியே* ஆகும். இதை சித்தர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த *உமிழ்நீரைத்தான் அவர்கள் காயப்பால்*
என்று சொல்வார்கள். என்னடா இது எச்சிலைப் போய் பெரிதாகப் பேசுகிறானே என்று நினைக்காதீர்கள். *எச்சில் வேறு உமிழ்நீர் வேறு.*

*எச்சிலானது நாறும். உமிழ்நீர் நாற்றமடிக்காது.*

இது எப்பொழுதாவது நமக்கு வாயில் ஊறும்.
டாக்டர் ஊசி போடுவதற்கு முன் பீய்ச்சி
அடிப்பாரே, அது போல சுரந்து அடிக்கும்.

வெட்டவெளியாகிய சிரசில் ஊறுவது, தன்னை உண்பவரின் பசியை போக்குவது. ஆட்டுப்பால், மாட்டுப்பால் போல காயப்பால் நாற்ற மடிக்காது, என்று சித்தர்கள்
சொல்லியிருக்கிறார்கள்.

*தேவலோகத்திலும் இதைப்போல் பாலில்லை. இது நம்மை இறவாமல் காக்கும் அமிர்தமாகும். யோகிகள் இதை நாள்தோறும் உண்டிருப்பர். சாதாரணமாக இது தொண்டை வழியாக உள்ளே சென்று அக்னியில் விழுந்து போகும். அவ்வாறு விடாமல் நாக்கை மடித்து வாயால் நன்கு சுவைத்து நெடுநேரம் இருத்தி உண்ணவேண்டும். அப்படி உண்பவர்களுக்கு காயசித்தி ஏற்படும். உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும். நீண்டநாள் வாழலாம்.*

*ப்ராணாயாமத்தால் பிட்யூட்ரி சுரப்பியை நன்றாகச் சுரக்கச் செய்யமுடியும்.*

*ஊறு மமிர்தத்தை யுண்டி யுறுப்பார்க்கில்*
*கூறும் பிறப்பறுக்க லாம்.*
         *- ஔவையார்.*

*இந்த உமிழ்நீரில் ஸ்டார்ச் இருக்கிறது.*
தாவரங்கள் இந்த ஸ்டார்ச் மூலமாகத்தான்
தேவையான உணவை தயாரித்துக்
கொள்கின்றன. அதற்க்குச் சூரிய ஒளியும்
நீரும் இருந்தால் போதும். சித்தர்களும் இந்த
வழிமுறையையே பின்பற்றி இருக்கிறார்கள்.

உமிழ்நீரில் இருந்து ஸ்டார்ச்சை பெற்ற உடல்
அதன் உதவியோடு சூரிய ஒளியில் இருந்து
உடலுக்குத் தேவையான சக்தியை தயாரித்துக் கொள்ளும். ப்ராணாயாமம் செய்தால் காயப்பால் அதிகம் சுரக்கும்.

*எப்பொழுதும் துப்பிக் கொண்டே இருப்பவர்களுக்கு எப்பொழுதாவது சுரக்கும் இந்த உமிழ்நீரின் சக்தி கிடைக்காமலே போய்விடுகிறது.* சித்தர்கள் உணவை நன்றாக மென்று அரைத்து நீர்போலாக்கி சாப்பிடச் சொன்னார்கள். அப்படிச் சாப்பிடும்போது உமிழ்நீர் சுரந்து உணவுடன் கலந்து நமக்கு பலம் கிடைக்கும். நீரை மெதுவாகச் சாப்பிடுவது போலக் குடிக்கச் சொன்னார்கள். அப்படிக் குடிக்கும் போது உமிழ்நீர் நீருடன் கலந்து நமக்கு நல்ல பலன் தரும்.

ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ! உமிழ் நீருக்கு சுவையா என்று. ஆம். நன்கு கவனித்து பாருங்கள். ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதன் தன்மையை உற்று நோக்கி, பல இன்னல்களை சரி செய்து கொள்ள
முடியும். வாய் துர்நாற்றம் முதலில்? உடலின்
உள் உறுப்புகளில் ஏற்படும் ஆபத்தான புண்கள்/ கட்டிகள் வரை அனைத்தையும் சரி
செய்யும் வல்லமை உமிழ் நீருக்கு உண்டு. சரி
, நாம் செய்ய வேண்டியது என்ன... வழக்கம்
போல, உடல் (உமிழ் நீர்) சொல்வதை கேட்பது
தான்......... அனுபவத்தில், நல்ல தூய நீர்
போல சுவைக்கும் உமிழ் நீர் இருந்தால் உடல்
நன்றாக உள்ளது என்று பொருள்.

சில நேரம் புளிப்பாக, கசப்பாக இருக்கும். அந்த நேரங்களில், உணவை, முக்கியமாக சமைத்த உணவை தவிர்த்து, நல்ல பழங்கள் அல்லது நீர் அருந்தினாலே போதுமானது. அடுத்த வேளைக்குள்ளாக அந்த சுவையுணர்வு மாறி விடும். பசி உணர்வு அறிந்து உணவு உண்ண இயலாதவர்கள், உமிழ் நீரின் சுவை உணர்வு அறிந்து அதற்கேற்றார் போல் உணவு உண்ணலாம். பூச்சி மருந்துகள், இராசாயன உரங்களுக்கு பயந்து பழங்களை தவிர்ப்பவர்களுக்கு ஒரு செய்தி.

அதிக பட்சம் 10% இரசாயனம் என்றாலும் கூட, மீதி 90% இயற்கை பழங்களில் உள்ளது. அதை தவிர்த்தால், பிறகு 100% இரசாயனம் கொண்ட மருந்துகளை உண்ண நேரிடலாம்....

எச்சிலைத் துப்பாதீர் என்ற வாசகம் தாங்கிய
பலகைகளை நாம் பல இடங்களில்
பார்த்திருப்போம்.

எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது
உணவை செரிப்பதற்கும், வாயின் உள்
பகுதியையும், தொண்டைக் குழியையும்
ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது
வாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை
உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது.
உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என
சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.

புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை
உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.

அதுபோல் உடலுக்கு ஒவ்வாமை
ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும்
உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.

உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று ஜோடிகள்
உள்ளன.
*1. பரோடிட் சுரப்பி*
*2. சப்மாண்டிபுலர் சுரப்பி*
*3. சப்லிங்குவல் சுரப்பி*

*பரோடிட் சுரப்பி*
********************
இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது.
இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின்
உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு
மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள்
உள்ளன. இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ்
நாளங்கள் என்று பெயர். இது மனித உடலில்
நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம்
சுரந்து வறட்சியைக் குறைக்கிறது.

*சப்மாண்டிபுலர் சுரப்பி*
****************************
இது பரோடிட் சுரப்பிகளுக்குக் கீழே
அமைந்துள்ளது. இதன் நாளங்கள் நாக்கின்
அடிப் பகுதியில் துவாரங்களாக
அமைந்துள்ளன.

*சப்லிங்குவில் சுரப்பி*
***************************
கன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும்
அமைந்துள்ளன. இதன் துவாரங்கள் வாய்
முழுவதும் அமைந்துள்ளன.

*உமிழ்நீரின் தன்மைகள்*
******************************

உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது. இது அதிக என்ஸைம்களைக் கொண்டது. இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500
மி.லி. அளவு சுரக்கிறது. இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும்
மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு
மாறுபடுகிறது..

உமிழ் நீரின் முக்கிய பணி சீரணமாக்குவது.
நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது
பழமொழி.

நொறுங்க என்பது நன்றாக மென்று என்று
பொருள்.

உணவை நன்கு மென்று சாப்பிட்டால்
நோயின்றி நூறுவயதுக்கு மேல் வாழலாம்
என்று கூறுகின்றனர்.

உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள்
உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் சீரணிக்க உதவுகிறது.

பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது.

வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான்.

உமிழ்நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும்,
அதிகரித்தாலும் கடினத் தன்மை அடைந்தாலும் அது நோயின்அறிகுறியாகும்.

சிலர் பாக்கு புகையிலை மற்றும் போதை
வஸ்துக்களை உபயோகிப்பார்கள். அது
உமிழ்நீருடன் சேர்த்து விஷநீராகி உடலைக்
கெடுக்கிறது.

மதக் கோட்பாடுகளில் விரதம் இருக்கும் காலங்களில் உமிழ்நீரை விழுங்காமல் வெளியே துப்பிவிடுவார்கள். இந்த உமிழ்நீரானது உள்ளே
சென்றால் அதிகமாக பசியைத் தூண்டும் என்ற காரணத்தால் விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்குவதில்லை.

ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த உமிழ்நீரை சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களை அவமானப் படுத்துவதற்காக வெளியே
துப்புவார்கள்.

உமிழ்நீர் என்பது அடுத்தவரை அவமானப்
படுத்தும் நீர் அல்ல. அது நம்மை நோயின்றி
காக்க சுரக்கும் அமிர்த நீராகும்.

*எனவே உணவைக் குடியுங்கள்.*
*நீரைச் சாப்பிடுங்கள்.*
பான்பராக், புகையிலைப் பொருள்களை
தவிர்ப்போம்.

                      - *சித்தர்பீடம் *

Thursday, March 28, 2019

அன்பேசிவம் #ஆகம_குறிப்புகள்

# ;

1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.

2. மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது.(கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.)

3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும்.
முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.

4. காயத்ரி மந்திரத்தை
பிரயாணத்தின்போது, சொல்லுதல்கூடாது
சுத்தமானஇடத்தில்தான் ஜபிக்கவேண்டும்.

5. கற்பூர ஹாரத்தி :
(சூடம்காண்பித்தல் பற்றி)

சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்.

தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்கவேண்டும்
முகத்துக்கு ஒரு தடவை
கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.

6. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

7. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

8. சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும்

• விஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும்

• விநாயகருக்கு = அருகம்புல் ஆகும்

• பிரும்மாவிற்கு உகந்தது = அத்தி இ்லை ஆகும்

இவைகளை மாற்றி மற்றவருக்கு வைத்து வணங்க கூடாது.

9. கலசத்தின் அா்த்தங்கள்
கலசம்(சொம்பு) − சரீரம்
கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு
கலசத்தின் உள் இருக்கும் தீா்த்தம் (நீர்) − இரத்தம்
கலசத்தின் மேல் உள்ள தேங்காய் − தலை
கலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை − சுவாசம்
கலசத்தின் அடியில் இருக்கும் அரிசி & இலை − மூலாதாரம்
கூர்ச்சம் − ப்ராணம்(மூச்சு)
உபசாரம் − பஞ்சபூதங்கள்.

10.தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்...
• சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,
தயிர் சாதம், பலகாரம்
• வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்
• ஆனி – தேன்
• ஆடி – வெண்ணெய்
• ஆவணி – தயிர்
• புரட்டாசி – சர்க்கரை
• ஐப்பசி – உணவு, ஆடை
• கார்த்திகை – பால், விளக்கு
• மார்கழி – பொங்கல்
• தை – தயிர்
• மாசி – நெய்
• பங்குனி – தேங்காய்.

11. திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக
கிடைக்கும்.

12. அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில்  திருநீற்றை குழைத்து புசிகொள்ள கூடாது.

13. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது )

14. கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.

15. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

#ஓம்_நமசிவாய
வாழையூர் சிவன் கோவில்

Maharishi. Irainilai yatra

நாளை மார்ச் 28, வேதாத்திரி மகரிஷி முக்தி அடைந்த நாள். 2006 ல் தன் பூத உடலை விட்டு வான் காந்தத்தில் விரிந்து நின்ற நாள். அந்த நாள் நீங்கா நினைவுகளை இங்கு நான் பகிர்ந்து கொள்கிறேன்.
ஏற்கெனவே சுவாமிஜிக்கு இரண்டு மூன்று முறை உடல் நலனுக்காக KG Hospital கோவையில் admit ஆகியிருந்த போது, நானும் என் துணைவியாரும், சென்னையிலிருந்து கோவை வந்து, இரயில்வே நிலையத்தில் ரூம் எடுத்து தங்கிவிடுவோம்.ரூமில் தியானம் செய்வோம். Hospital சுவாமிஜி ரூமுக்கு பக்கவாட்டில் உள்ள benchilல் உட்கார்ந்து சுவாமிஜிக்கு வாழ்த்துகள் சொல்லிக் கொண்டே prayer செய்வோம். மீண்டும் room வந்து தியானம். இது குழந்தை தாயை பார்த்து பாடும் தாலாட்டு. அது பெருங்கடல் நாங்கள் சிறு துளிகள் தான் என்று நன்கு தெரியும். இருப்பினும் ஆன்மா அங்கு இழுத்துக் கொண்டு போனது.
ஒரு முறை சுவாமிஜி கைகளில் இணைக்கப்பட்ட tube களுடனே கைகளை தூக்கி ஆசீர்வதித்தது கண்டு அடக்க முடியாமல் அவர் முன்னிலையிலேயே கண்களில் நீர் பெருகி வழிந்தோடியது. என்னே கருணை உலக மக்களின் மேல்!
மகான்களுக்கு இது கடைசிப்பிறவி என்பதால் , மிச்ச கர்மாக்கள் உடற் துன்பமாக வாழ்வின் இறுதிக் கட்டத்தில் வெளிப்படும். இரமண மகரிஷிக்கும், இராம கிருஷ்ணபரம்ஹம்சருக்கும், யோகிராம் சுரத்குமாருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் இதே நிலைதான். ஆனால் மனதளவில் அவர்களுக்கு அது துன்பமாகத் தெரியாது.
2006, மார்ச் 27 அன்று தற்செயலாக சென்னையிலிருந்து ஆழியார் phone செய்த போது, சுவாமிஜி மீண்டும் hospital வந்ததும் , இம்முறை உடல் நலம் கவலைப் படும்படி உள்ளதாகவும் AO சொன்னார்கள். எல்லோரையும் நன்கு தவம் செய்து சுவாமிஜியை நன்கு வாழ்த்தச் சொன்னார்கள்.100 வருடங்கள் இருப்பார் என்று உறுதியாக நம்பியிருந்தேன். மறுநாள் காலை அலுவலகம் சென்று விட்டேன். அங்கிருந்து phone போட்டபோது, serious condition எனும் உண்மைநிலவரம் அறிந்து பதறிப் போனேன். உடனே அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு , இல்லம் விரைந்தேன். Internetல் மதியம் கோவை expressல் டிக்கெட் கிடைத்தது.  நானும், தணைவியாரும் உணவு முடித்து விட்டு, ஒரு ஆட்டோ பிடித்து மணி சுமார் 12.45 க்கு ttk சாலையில் சென்று கொண்டிருக்கும் போது , pressல்  இருக்கும் என் தம்பி(தினமணி cartoonist மதி)யிடமிருந்து phone வந்தது.   12.20க்கு சுவாமிஜி முக்தி அடைந்ததாக PTI செய்தி என்றான். மிகச் சிறு வயதிலேயே வருமையில் வாடிய உடல். தன் யோக சாதனைகளால் 95 வயது வரை மிக நலமுடனிருந்தது. இனி போதும் என்று முடிவெடுத்து விட்டார் போலும். அந்த தீர்மானம் அவர்கள் கையில் தான். தனது கடைசி சொற்பொழிவில் வேண்டாமை தான் வேண்டும்  என்று சொல்லியிருந்தார்கள். மனம் நிறைவாக இருப்பதாக சொன்னார்கள். இருப்பினும் மறைவுச் செய்தி
நம்ப முடியாத பெரும் துயரம் தந்தது. ஆழ்மனத்தை பாதித்தது. வீட்டிலேயே தெரிந்திருந்தால் அழுதுவிட்டு வந்திருக்கலாம். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் , சுற்றியிருப்பவர்கள் பற்றி கவனம் கொள்ளாமல், அழுதவாறே தெரிந்தவர்களுக்கு போன் செய்கிறேன். இரயிலில் அமர்ந்த பின்னும் அதே அழுகை நிலை தான். நெஞ்சு அடைப்பது போலிருந்தது. மனைவியும் அதே நிலையிலிருப்பது கண்டு சுதாரித்துக் கொண்டேன். இப்படி இருந்தால் நாமிருவரும் ஊர் போய் சேர மாட்டோம் என்று மனதை சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டோம். பொள்ளாச்சி சென்று 4 நாட்களுக்கு ரூம் போட்டுக் கொண்டோம்.
சுவாமிஜியின் பூத உடலை 3 நாட்கள் பொது மக்கள் பார்வைக்காக auditoriuத்தில் வைத்திருந்தார்கள். நாங்கள் நாள் முழுவதும் அங்கிருந்து விட்டு இரவில் பொள்ளாச்சி தங்கி விடுவோம். எத்தனையோ மடாதிபதிகள், ஆன்மீகப் பெரியோர்கள், ஆசிரம ஞானியர்கள், சமூக முக்கியஸ்தர்கள் வந்த வண்ணமிருந்தார்கள். இரண்டு நாட்கள் முன்பு தான் சுவாமிஜி இறுதியாக எழுதியிருந்த புத்தகம் 'இறைநிலையின் தன் மாற்ற சரித்திரம்' வெளியிட்டிருந்தார்கள். அந்த புத்தகத்தில் பல சூட்சுமமான இரகசியங்களை எழுதியிருந்தார்கள். அதனை அவர் சன்னிதானத்திலேயே படித்து முடித்தோம். பெரும்பாலான நேரங்களில் துரியாதீத தவம் இருந்தோம். அந்த அலைவரிசையில் நம்முடனும் கொஞ்சம் அவரை ஐக்கியப் படுத்திக் கொள்ளலாம் என்ற ஞானாசை தான். 3ம் நாள் மகாசமாதியில் அவரை அமர்த்தும் நாள். அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில், அந்த ஜொலிக்கும் குடையின் கீழ், ஈடில்லா தேவ தூதனாக அவர் பவனி வந்த காட்சி காணக் கண் கோடி வேண்டும். சமாதிக்குள் இரக்கும் முன், அவர் பூத உடலை இரண்டு பக்கமும் திருப்பி காட்டிய போது, மக்களிடமிருந்து வெடித்தெழுந்தது அழுகையும், அலறலும்.
குழிக்குள் விபூதியும், உப்பும், வில்வமும் ஆதின முறைப்படி இன்ன பிற சடங்குகளும் செய்து அடக்கம் செய்தனர்.
மறுநாள் மாலை அவர் சமாதியருகில் தவம் செய்து விட்டு ஊருக்கு கிளம்பினோம். 4 நாட்கள் வேற்றுலக அனுபவத்திற்கு பின்,  மீண்டும் உலக  வாழ்க்கைக்கு செல்கிறோம் சுவாமிஜி என்று உணர்ச்சி வசப்பட்டு கனத்த மனதுடன் விடைபெற்ற அந்த நொடியில் தூரத்தில் இடி இடிக்க எங்கோ மயில் கூவியது.
வாழ்க வளமுடன்!
அந்த குருவருளும், இறையருளும் இன்றும் எங்களை வழிநடத்துகிறது.
வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.