கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்ப்புகா விரிந்தபூ உதிர்ந்த காய் மீண்டும் மரம்புகா உடைந்த சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா இறந்தவர் மீண்டும் பிறப்பதில்லை இல்லை இல்லையே ! - சிவவாக்கியார் பசுவின் மடியிலிருந்து கறந்தபாலை, எத்தகைய திறமைசாலியாலும் மீண்டும் அதன் உடலுக்குள் செலுத்த முடியாது. மலர்ந்த பூவை யாராலும் மீண்டும் மொட்டாக மாற்ற முடியாது. மரத்திலிருந்து கீழே உதிர்ந்துவிட்ட காயை யாராலும் மீண்டும் மரத்தில் ஒட்டவைக்க முடியாது. சங்கை ஊதியதால் வெளிப்பட்ட ஓசையை யாராலும் மீண்டும் அந்த சங்கிற்குள் செலுத்த முடியாது. உடலை விட்டு பிரிந்த உயிரும் மீண்டும் உடலுக்குள் புக முடியாது. இவற்றைப் போன்றே இறந்தவர் யாரும் மீண்டும் இனியொரு உடல் எடுத்து பிறக்க முடியாது ! முடியாது ! முடியாது ! ~ வள்ளல் இராமமூர்த்தி வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
No comments:
Post a Comment