Friday, June 29, 2018

Midi family

My Dear Brothers and Sisters,       சசி,தினகரன் இவங்க சொத்தை பாத்து வாயை பொளக்கும் தமிழன்லாம் இதையும் படிங்க ப்ளீஸ்..வாட்ஸ் அப் உபயம்!
மோடிஜயை ஏன்?  நேசிக்கிறோம்,ஆதரிக்கிறோம், தெரிந்து கொள்ளுங்கள்.....
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சோமபாய் மோடி (75) பப்ளிக் ஹெல்த் டிபார்ட்மெண்டில் இன்ஸ்பெக்டராக இருந்து ரிடையரானவர். தற்போது வசிப்பது வாத்நகரில் இருக்கும் ஒரு சிறிய வீட்டில்.

அம்ருத்பாய் மோடி (72) 2005 இல் ஒரு பாக்டரியில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். கடைசியாக அவர் வாங்கிய சம்பளம் ரூ10,000/-. தற்போது அஹமதாபாதில் ஒரு சிறிய ப்ளாட்டில் மகனுடனும், மருமகளுடனும் வசித்து வருகிறார்.

ப்ரஹ்லாத் மோடி (64) ஒரு சிறிய கடை ஒன்றை நடத்துகிறார். தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்துகிறார்.

பங்கஜ் மோடி (58) குஜராத் மாநிலத்தின் இன்பர்மேஷன் டிபார்ட்மெண்டில் அதிகாரியாக வேலை செய்கிறார். இருப்பவர்களுள் நல்ல நிலையில் இருக்கும் இவருக்கு காந்திநகரில் ஒரு 3 படுக்கை அறை கொண்ட ப்ளாட் சொந்தம். அங்கேயே வசிக்கிறார்.

மேலே குறிப்பிட்டிருப்பவர்கள் யார் என்று தெரிகிறதா....? ஆம்.... இவர்கள் அனைவரும் நம் பாரதப் பிரதமர் மோடிஜியின் உடன் பிறந்தவர்கள். இவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்களுக்கு சொந்தமாக கார் கிடையாது. இவர்கள் யாருமே விமானத்தில் பயணித்ததும் கிடையாது.

எல்லோருமே மத்தியதர வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இவர்களின் சகோதரர் குஜராத்தின் முதலமைச்சராக 12 வருடங்கள் இருந்தவர். பாரதத்தின் பிரதமராக 3 வருடங்களாக இருந்து வருகிறார்.

இப்போது மற்ற மோடிகளையும்... அதாவது நம் பிரதமரின் பங்காளிகளையும் பற்றி பார்க்கலாம்.

போகிலால் மோடி (67) ஒரு மளிகைக் கடை நடத்துகிறார்.

அரவிந்த் மோடி (64) பழைய பொருட்களை விற்கும் கடை ஒன்றை (சாதாரண நிலையில்) நடத்துகிறார்.

பரத் பாய் மோடி (55) ஒரு பெட்ரோல் பங்கில் அட்டெண்டராக வேலை செய்கிறார். இவரின் மாத வருமானம் ரூ6000/- இவர் மனைவி காய்கறி, பழங்கள், சிறிய உணவுப் பொட்டலங்கள் விற்று மாதம் ரூ3000/- சம்பாதிக்கிறார்.

அஷோக் மோடி (51) இவர் ஒரு சிறிய உணவுக் கடை (8x4) மற்றும் பட்டம் முதலியவைகளை விற்கும் கடை வைத்திருக்கிறார். அது ஒரு தகரத்தால் ஆன கடை. மாத வருமானம் ரூ5000/- இவர் மனைவி ஒரு உணவு விடுதியில் உதவியாளராக இருந்து கொண்டு ரூ3000/-  சம்பளமாக ஈட்டுகிறார்.

மேலே கூறிய இந்த நான்கு பேருமே நம் பிரதமரின் தந்தை தாமோதர மோடியின் சகோதரர் நரசிம்ஹதாஸ் மோடியின் மகன்கள்.

மோடிஜியின் தாயார் ஒரு சிறிய 10 க்கு 8 அறையில் வசிக்கிறார். பாங்க், கோவில், மருத்துவமனைகளுக்கு ஆட்டோவில் பயணிக்கிறார்.
அண்மையில் உடல் நிலை சரியில்லாதபோது 108 ஆம்புலன்ஸ்சில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்,
மோடி 12 வருடம் முதல்வர் பதவி வகித்தபோதும் அவரின் தாயார் தன் வீட்டிலேயே வசித்து வந்தார், மோடிஜீ பிரதமரான பிறகும் பிரதமர் மாளிகைக்கு ஓரிரு முறை சென்று வந்ததோடு சரி,
இப்படிப்பட்ட ஒரு பிரதமரைப் பற்றிதான் நம் தமிழ்நாட்டில் பொய்யான செய்திகளை திட்டமிட்டு பரப்பப்படுகிறது.

நாட்டின் நலனில் அக்கறை உள்ள நண்பர்களே!  ஒரு கணம் சிந்திப்பீர்!
நம்  தமிழகத்தின் திமுக, அதிமுக அரசியல் வியாதிகள்,
முதல்வர் முதல் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரை பலர் பதவிக்கு வரும் முன்னரும் வந்த பின்னரும் அடைந்த வசதிகள் உங்களுக்கு தெரியும், 

ஒரு தட்டில் பிரதமர் மோடியையும்!
மறு தட்டில் நம் தமிழக அரசியல்வாதிகள் அனைவரையும் வைத்தாலும்
நேர்மையில், ஒழுக்கத்தில்
மோடிக்கு ஈடாக மாட்டார்கள்
அதனால்தான் அவரை நேசிக்கிறோம்!

நேர்மையான அரசியல்வாதி
வேண்டும் என்கிறீர்கள், ஆனால் அப்படி ஒருவர் வந்தால் அவரின் ஒவ்வொரு செயலிலும் குற்றம் காண்கிறீர்கள், பிறகு எப்படி நேர்மையானோர் அரசியலுக்கு வருவார்கள்,

மோடிஜயை விமர்சிக்கும் நண்பர்களே, மோடிஜயை விட
தேச பக்தி, நேர்மை,
செயல் திறன் கொண்ட ஒருவரை காட்டுங்கள், பிறகு குற்றம் சொல்லுங்க!

Copied. From : smt.Rm Gowri post (#NG)

Wednesday, June 27, 2018

கறந்தபால் முலைப்புகா

கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்ப்புகா  விரிந்தபூ உதிர்ந்த காய் மீண்டும் மரம்புகா  உடைந்த சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா  இறந்தவர் மீண்டும் பிறப்பதில்லை இல்லை இல்லையே ! - சிவவாக்கியார்  பசுவின் மடியிலிருந்து கறந்தபாலை, எத்தகைய  திறமைசாலியாலும் மீண்டும் அதன் உடலுக்குள் செலுத்த முடியாது. மலர்ந்த பூவை யாராலும் மீண்டும் மொட்டாக மாற்ற முடியாது. மரத்திலிருந்து கீழே உதிர்ந்துவிட்ட காயை யாராலும் மீண்டும் மரத்தில் ஒட்டவைக்க முடியாது.  சங்கை ஊதியதால் வெளிப்பட்ட ஓசையை யாராலும் மீண்டும் அந்த சங்கிற்குள் செலுத்த முடியாது. உடலை விட்டு பிரிந்த உயிரும் மீண்டும் உடலுக்குள் புக முடியாது. இவற்றைப் போன்றே இறந்தவர் யாரும் மீண்டும் இனியொரு உடல் எடுத்து பிறக்க முடியாது ! முடியாது ! முடியாது !  ~ வள்ளல் இராமமூர்த்தி  வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

Monday, June 25, 2018

புகழிமலை முருகன் கோவில்

காவிரி ஆற்றின் தென்பகுதியில் அமைந்து உள்ள குன்றுதான்(மலை) புகழிமலை ஆகும். இந்த மலையின் உச்சியில்தான் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்து உள்ளது. கரூர் மாவட்டத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் வடக்கே உள்ளது புகழூர். இங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் வேலாயுதம்பாளையம் என்னும் ஊரில்தான் புகழிமலை முருகன் கோவில் அமைந்து உள்ளது.

இந்த மலைக்கு வடக்கே அகண்ட காவிரி ஓடுகிறது. மலைக்கு செல்லும் வழிப்பாதை கிழக்கு திசையை நோக்கி அமைந்து உள்ளது. இதன் உயரம் சுமார் 400 அடி ஆகும். மலைக்கு செல்லும் வீதிக்கு மலைவீதி என்றும், மலையை சுற்றி வரும் வீதி தேரோடும் வீதி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் சுற்றளவு 4 கிலோ மீட்டர் தூரம் ஆகும்.

மலையின் அடிவாரத்தின் கீழ் திசையில் கிழக்கு நோக்கி விநாயகர் சன்னிதி உள்ளது. மலையின் நுழைவுவாயில் மண்டபத்தின் முன் மலையை நோக்கி மேற்கு திசையில் முருகனுடைய மயில் வாகன சன்னிதி உள்ளது. இதன் அருகில் உற்சவமூர்த்தி மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.

மலையின் உச்சிக்கு சென்று முருகனை தரிசிக்க 354 படிக்கட்டுகளை ஏறி செல்ல வேண்டும்.

அதற்கிடையில் உள்ள பல குன்றுகளில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் அமைந்து உள்ளது. முதல் படியில் இருந்து 25 படிக்கட்டுகள் ஏறியதும், தென் திசையில் மலைக்காவலரான அய்யனாருக்கு தனி சன்னதி உள்ளது. இந்த மலைக்கு இவர்தான் காவல் தெய்வமாக கருதப்படுகிறார். இப்பெயரில் மலை அடிவாரத்தின் கீழ் மலைக்காவலன் என்ற தெரு பெயரும் உள்ளது.

இதில் இருந்து 43 படிகள் ஏறியதும் ஒரு குன்றின் மேல் குரங்கு சிலை வாழைப்பழத்தை தின்று கொண்டு உட்கார்ந்த நிலையில் வரவேற்பதாக அமைந்து உள்ளது. இதன் கழுத்தில் தங்கள் வேண்டுதலை பக்தர்கள் எழுதி அந்த வேண்டுதலை நிறைவேற்றி தருமாறு துண்டு சீட்டு கட்டி மாலையாக அணிவிக்கப்பட்டு இருக்கும்.

இதில் இருந்து 5 படிகள் ஏறியவுடன் தென் திசையில் உள்ள சிறிய குகையில் சிவனும், பார்வதியும் அமர்ந்த நிலையில் உள்ளனர். இவர்களின் இடப்புறத்தில் நாரதர், விநாயகர் மூசிக (எலி) வாகனத்தில் நின்ற நிலையில் சிவனிடம் பழத்தை பெறுகிறார். வலதுபுறத்தில் முருகன் மயில் வாகனத்தில் அமர்ந்து உள்ளார்.

முருகன் கழுத்தில் குழந்தை வரம் வேண்டி கொள்பவர்கள் துண்டு சீட்டு எழுதி மாலையாக அணிவித்துள்ளனர். இதன் அருகில் கிழக்கு திசையை நோக்கி 7 கன்னிமார் சாமிகள் உள்ளனர்.

இதன் எதிரில் பூங்காவனம் அமைந்து உள்ளது. இது ஒரு அடர்ந்த காடுபோல் இருக்கும். இக்காட்டில் புலி, சிங்கம், யானைகள் உலாவுவது போல் உள்ள சிலைகள் உள்ளன.
இக்காட்டின் ஒருபுறத்தில் வள்ளி மானுடன் திரிவது போல் உள்ள சிலைகள், மற்றொரு இடத்தில் வேடவர் வேடத்தில் வேட்டைக்கு செல்லும் முருகன் சிலைகளும் உள்ளன.

இங்குள்ள ஒரு மலை குன்றின் மீது அகத்திய முனிவர் கடுமையான தவத்தில் இருக்கிறார். அவரது அருகில் கமண்டலம் உள்ளது.

தீராத தாகத்தை தணிப்பதற்கு காகம் பல இடங்களில் தேடி அலைந்தும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அகத்திய முனிவர் அருகில் கமண்டலம் இருப்பதை அறிந்து கொண்டு அவருடைய தவத்தை கலைக்க கூடாது என்பதற்காக கமண்டலத்தை சாய்த்து விட்டு அதில் ஓடும் தண்ணீரை தாகம் தீர காகம் அருந்தும் நிலையை குறிக்கும் சிலைகள் இப்பூங்காவனத்தில் உள்ளது.

பூங்காவில் இருந்து 18 படிகள் ஏறியதும் நுழைவாயில் மண்டபம். இதன் அருகில் பக்தர்கள் அமர்வதற்காக மேடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் அமர்ந்து சிறிது நேரம் களைப்பு நீங்கி ஓய்வு எடுத்த பின்னர் மேலும் 56 படிகள் ஏறினால் தென் திசையில் உள்ள குன்றில் முருகன் மயில் வாகனத்திலும், அய்யப்பன் புலி வாகனத்திலும், விநாயகர் எலி வாகனத்திலும் அமர்ந்து கொண்டு செல்வது போன்ற சிலைகள் உள்ளன.

இதனையடுத்து 54 படிகள் ஏறியதும் தென்திசையில் உள்ள குன்றில் பாம்பாட்டி ஒருவர் மகுடி ஊதுவதும், நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடுவது போன்ற சிலைகள் உள்ளன. இதனை பார்த்து விட்டு மேலும் 14 படிகள் ஏறினால் வடதிசையை நோக்கி அமைந்து உள்ளது இடும்பன் சன்னிதி. இந்த சன்னிதிக்கு பின்புறம் கல்வெட்டுகள், சமணர்கள் படுக்கை இருப்பது வரலாற்று சிறப்பாகும்.

மேலும் பல படிகள் ஏறி வந்தபின் உச்சிமலை முருகன் சன்னிதியின் நுழைவாயில் மண்டபம். சிறிது தூரத்தில் சன்னிதியின் கொடிமரம். இதன் அருகில் சேவல் சின்னம் பொறித்த கொடிமரம். இதன் முன் சன்னிதியை நோக்கி மேற்கு திசையில் மயில் வாகனம் சன்னிதியை தரிசனம் செய்த பின்னர் சன்னதியின் கிழக்கு திசை நோக்கி விநாயகர் சன்னிதி மற்றும் சன்னிதியை சுற்றி வரும் இடத்தில் தென் திசையை நோக்கி தட்சிணாமூர்த்தி.

இதையடுத்து கிழக்கு திசையில் மகா கணபதி, முருகப்பெருமான் ஆகியோரின் தரிசனத்திற்கு பின்னர் தென் திசையில் சுந்தரேஸ்வரர் சன்னிதியில் நடராஜர் நடனமாடிய நிலையில் அருகில் சவுந்தரநாயகி நின்ற நிலையில் உள்ள விக்கிரக சிலைகள் உள்ளன. கிழக்கு திசையில் பாலமுருகன் ஒரு கையில் வேலும், மற்றொரு கையில் சேவல் கொடியுடனும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

முருகனை தரிசித்த பின்னர் சன்னிதியை விட்டு வெளியில் வந்தவுடன் மேற்கு திசையில் உள்ள சிவலிங்கத்தை வணங்கிய பின் தென் திசையில் உள்ள மீனாட்சி அம்மன், நவக்கிரக சன்னிதிகளை சுற்றி வந்து அனைத்து சாமிகளையும் தரிசனம் செய்யலாம்.

காவிரி ஆற்றங்கரையின் தென்பகுதியில் உள்ள 6 கிராமங்களுக்கு இந்த மலை சொந்தமானது என்பதால் இம்மலையை ஆறுநாட்டான் மலை என்றும் அழைக்கப்படுகிறது.

சங்க காலத்தில் சமணர்கள் இம்மலையில் அடைக்கலம் பெற்று வாழ்ந்து வந்தனர். சமணர்கள் புகுந்த இம்மலை புகழிமலை என்றும், இவ்வூர் புகழூர் என்றும் பெயர் பெற்றது என்று அருணகிரி நாதர் பாடியுள்ளார். அதன்பின்னர் இம்மலை புகழிமலை என்னும் பெயர் பெற்று புகழ் அடைந்து உள்ளது.

தற்போது மலை உச்சியில் உள்ள முருகன் சன்னிதி, கருவறை அமைந்த பகுதியில் சமணர்கள் காலத்தில் வேல் மட்டும் ஊன்றி அதனை வழிபட்டு வந்துள்ளனர். இதையும் அருணகிரிநாதர் வேல் ஊன்றிய இம்மலையை வேலாயுதம்பாளையம் என்று குறிப்பிட்டு உள்ளார். அதனாலேயே இவ்வூருக்கு வேலாயுதம்பாளையம் என்னும் பெயர் வந்தது.

புகழிமலை அடிவாரத்தில் உள்ள உற்சவமூர்த்தி மண்டபத்தில் முருகனை அலங்காரம் செய்து வழிபட்டு சாமியை தேரில் ஏற்றி சூரனுடன் சண்டைக்கு செல்வதும், சண்டையில் சூரன் தலையை வெட்டுவதும் போன்ற திருவிழாவை காண 6 நாட்டு மக்களும் கலந்து கொள்வார்கள். இந்த கோவிலில் தைப்பூச தேர் திருவிழா மிகவும் சிறப்பு பெற்றதாகும்.

இந்த திருவிழா இரண்டு நாட்கள் நடைபெறும். கோவில் தேர் 2 நாட்கள் தேரோடும் வீதியை சுற்றி வரும். மற்ற முருகன் கோவில்களில் தேர் ஒரு நாள் மட்டும்தான் இழுக்கப் படும். இங்கு மட்டும் 2 நாட்கள் தேர் இழுப்பது சிறப்பானதாகும்...

Friday, June 15, 2018

கோபத்தை கட்டுப்படுத்த - 'குப்பை வண்டி விதி’   (The Law of the Garbage Truck).

கோபத்தை கட்டுப்படுத்த - 'குப்பை வண்டி விதி’   (The Law of the Garbage Truck).

ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.

இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட… ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.

அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னாபின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.

அவர் செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.

அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார், பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள்.

மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம். அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்”

அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணுக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.

வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள். அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.

நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களை புறக்கணிப்போம். வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.

Thursday, June 7, 2018

சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._

*
*1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
*2. பதஞ்சலி* – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
*3. கமலமுனி* – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
*4. திருமூலர்* – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.
*5. குதம்பை சித்தர்* – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
*6. கோரக்கர்* – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
*7. தன்வந்திரி* – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
*8. சுந்தராணந்தர்* – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
*9. கொங்ணர்* – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
*10. சட்டமுனி* – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
*11. வான்மீகர்* – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
*12. ராமதேவர்* – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
*13. நந்தீஸ்வரர்* – 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
*14. இடைக்காடர்* – 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
*15. மச்சமுனி* – 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
*16. கருவூரார்* – 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
*17. போகர்* – 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
*18. பாம்பாட்டி சித்தர்* – 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.
*(மரணமில்லா பெருவாழ்வு – சாகா கல்வி)* உலகில் உள்ள மனிதர்கள் வெல்ல முடியாத மரணத்தை வென்றவன் தமிழன்.
_வாழ்க தமிழ், வளர்க தமிழ்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!_
*குறிப்பு:* நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
_“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” வாழ்க வையகம், வாழ்க வளமுடன்._🙏🙏🙏

Wednesday, June 6, 2018

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்.

...!

சித்தமருத்துவத்தில் மிக முக்கியமான காயகற்ப மூலிகைப் பொருளாக திகழ்வது, கடுக்காய். உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, நோய்களை போக்கும் அற்புத  மருந்து கடுக்காய்.
பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, பல் அசைவு, ஈறுகளில் உண்டாகும் புண், வாயில் ஏற்படும் வாடை போன்றவைகளை போக்க கடுக்காய் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிக்கவேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண்,  குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல்,  கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய  நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய  அருமருந்தே கடுக்காய்.

இதை பற்றி சித்தர் கூறும் பாடலில் “காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே. அதாவது காலை வெறும் வயிற்றில் இஞ்சியும்,  நண்பகலில் சுக்குவும், இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே  இந்தப் பாடலின் கருத்தாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய  பொக்கிஷமாகும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

Sunday, June 3, 2018

N . MUTHUKUMAR

தனது மரணத்தை உணர்ந்த நிலையில்
அண்ணண் நா.முத்துக்குமார் தன்
மகனுக்கு எழுதி இருக்கும் கடிதம்!
“அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது..
இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம்.
இதைப் படித்துப் புரிந்து கொள்ளும்
வயதில் நீ இல்லை.
மொழியின் விரல் பிடித்து நடக்கப்
பழகிக்கொண்டு இருக்கிறாய்!
வயதின் பேராற்றாங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள் உன் கனவுகளை
ஆசீர்வாதிப்பார்கள், பெண் உடல்
புதிராகும்!
என்தகப்பன் என்னிடமிருந்து ஒளித்து
வைத்த ரகசியங்கள் அடங்கிய
பெட்டியின் சாவியை நான் தேட
முற்பட்டதைபோல நீயும் தேடத்
தொடங்குவாய்!
பத்திரமாகவும் பக்குவமாகவும்
இருக்க வேண்டிய பருவம் அது.
உனக்குத் தெரியாதது இல்லை.
பார்த்து நடந்து கொள்!
நிறைய பயணப்படு. பயணங்களின்
ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும்
இரண்டு கண்களைத்திறக்கின்றன.
புத்தகங்களை நேசி, ஒரு புத்தகததை
தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத்
தொடவாய் உன் பாட்டனும் தகப்பனும்
புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள்.
உன் உதிரத்திலும் அந்த காகித நதி
ஓடிக்கொண்டே இருக்கட்டும்.
கிடைத்த வேலையை விட பிடித்த
வேலையைச்செய். இனிய இல்லறம்
தொடங்கு. யாராவது கேட்டால்இல்லை
எனினும் கடன் வாங்கியாவது உதவி செய்.
அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது.
உறவுகளிடம் நெருங்கியும் இரு.
விலகியும் இரு. இந்த உலகில் எல்லா
உறவுகளையும்விட மேன்மையானது நட்பு
மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்
கொள். உன் வாழ்க்கை நேராகும்!
இவையெல்லாம் என் தகப்பன் எனக்கு
சொல்லாமல் சொன்னவை. நான் உனக்கு
சொல்ல நினைத்து ச்சொல்பவை.
என் சந்தோஷமே நீ பிறந்த பிறகுதான்!
என் தகப்பனின் அன்பையும்,
அருமையையும் நான் அடிக்கடி
உணர்கிறேன்.நாளை உனக்கொரு
மகன் பிறக்கையில் என் அன்பையும்
அருமையையும் நீ உணர்வாய்!

வாழ்க வளமுடன்.....