காத்திருக்கப் பழகு ... !!!
சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில்
தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்:
தியானம் செய்... !!!
நான் அழைக்கும் வரை காத்திரு'.
நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும்.
பசிக்கும் வரை காத்திரு
உடல் நீர் கேட்கும் வரை காத்திரு
காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு
சளி வெளியேறும் வரை காத்திரு
உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு
பயிர் விளையும் வரை காத்திரு
உலையில் அரிசி வேகும் வரை காத்திரு
கனி கனியும் வரை காத்திரு
எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு.
செடி மரமாகும் வரை காத்திரு
செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு
தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு
தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு
துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு
தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு
உணவு தயாராகும் வரை காத்திரு
போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு
நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு
பிறர் கோபம் தணியும் வரை காத்திரு
இது உன்னுடைய வாழ்க்கை
ஒட்டப்பந்தையம் அல்ல
ஒடாதே
நில்
விழி
பார்
ரசி
சுவை
உணர்
பேசு
பழகு
விரும்பு
உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததால்,
உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத,
தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது.
உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது.
எதிலும் அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே.
உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா......???
நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்
உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்.
காத்திருக்கப் பழகினால்........
வாழப் பழகுவாய்.
இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்புவாய் என்று காத்திருப்பதை உணர்வாய்
எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை உணர்வாய் ... !!! RAJAJI JS
No comments:
Post a Comment