Sunday, August 13, 2017

ஊதியூர்மலை

*🌹🌺ஸ்ரீ செட்டி தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி - ஊதியூர்மலை🌹🌺*

ராம லக்ஷ்மனனுக்காக அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துவந்த போது, அதன் ஒரு பகுதி கொங்குநாட்டில் விழுந்தது. அந்த மலையை சஞ்சீவி மலை என்றும் ஊதியூர் மலை என்றும் அழைக்கப்படுகிறது.

கொங்கு நாட்டில் பழம் பெருமை வாய்ந்த யோகிகளும் ,சித்தர்கள் வாழ்ந்த பூமியாகும் . 18 சித்தர்களில் ஒருவரான கொங்கணர் ஊதியூர் மலையில் தவம் இருந்தார் . பின் ஸ்ரீ உத்தண்ட வேலாயுதசாமி திருக்கோவில் பிரதிஷ்டை செய்தார் என்றும் சிலகாலம் வாழ்ந்து தம் சீடரான செட்டி தம்பிரானுக்கு ஆசிர்வாதமளித்து திருப்பதி சென்று ஜீவசமாதியாகி விட்டதாக வரலாறு . கொங்கண சித்தரின் திருக்கோவிலும் ,பொன் செய்ய ஊதிய பாறைகளின் ஓட்டைகளும் தற்போதும் உள்ளன.

அருட்சக்தி அற்புதமாய் அமைந்துள்ள ஜீவசமாதியாகும் . சுமார் 3000 ஏக்கர் மூலிகை வளம் பொருந்திய குன்றாகும் .பெளர்ணமி நாட்களில் இங்கு வழங்கப்படும் மூலிகைச்சாறு விஷேசமாகும் . இங்கிருந்து மேலே சென்றால் ஸ்ரீ கொங்கண சித்தரின் திருக்கோவிலை காணலாம் . ஊதியூர் மலை சிவனும் சித்தர்களும் வாசம் செய்யும் அற்புதமான மலை என்பதை ஆங்காங்கு காணப்படும் வில்வமரங்கள் உறுதி செய்கின்றன. சித்தர்களின் தேடல் உங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக பார்க்க,தெளிய அறிய, அற்புதமானஇடம்

உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் கோவையில் இருந்து  காங்கேயம்-பழனி பாதையில் 13 கி.மீ. தொலைவில் உள்ளது.கோவிலின் அருகில் மலைமேல், கொங்கணச் சித்தர் தங்கி தவம் செய்த சிறிய குகை உள்ளது. செல்லும் வழியில் கொங்கணச்சித்தரின் சீடரான ஸ்ரீ செட்டி தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி உள்ளது

RAJAJI JS. 13.8.17

No comments:

Post a Comment