ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை வாங்கி சாப்பிடுவது போல், யாரும் நாவல் பழத்தை வாங்கி சாப்பிடுவதில்லை. நாவல் பழத்தின் மகிமை, நமக்கு தெரியாததே இதற்கு காரணம். நாவல் பழத்தின் மருத்துவ குணம் தெரிந்தால், ஒருபோதும் இப்பழத்தை ஒதுக்க மாட்டோம். இதன் துவர்ப்புச் சுவை ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. நாவல் பழத்தில் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை இருக்கிறது. ரத்தத்தில் கலந்திருக்கும் கெட்ட கழிவுகளை, இது வெளியேற்றி விடும்.
நாவல் பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும். தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.
மெலிந்த உடல் உள்ளவர்கள், தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். நாவல்பழம் வியர்வையை பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
நாவல் பழம் சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோய் பாதிப்பு உள்ளவர்கள், நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நோயின் தாக்கம் குறையும்.
நாவல் பட்டையை இடித்து, நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பை பாதிப்புகளைப் போக்கும். எனவே, நாவல் பழம் கிடைக்கும் சீசன் காலங்களில், அதனை வாங்கி சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
வாழ்க வளமுடன்.
RAJAJI JS. 24.7.17
No comments:
Post a Comment