அசைவம் சாப்பிடும் நாள்களில் கூடுமானவரை கீரை சாப்பிடுவதைத் தவிர்பது நல்லது. ஏனெனில், கீரைகளில் 90 சதவீதம் நீர்ச் சத்து இருப்பதால், அசைவ உணவு ஜுரணம் ஆவதில் முரண்பாடு ஏற்பட்டு, ஜீரணக் கோளாறுகள், வயிற்றிக் கழிச்சல் போன்ற பாதிப்புகள் உண்டாகும். இறைச்சி சாப்பிட்ட மறுநாள் கீரை சாப்பிடலாம். இறைச்சி சாப்பிட்டதால் ஏற்பட்ட மலச்சிக்கல் குறைபாடு இதனால் தீரும்.
அதேபோல், மீன் உணவுடன் கீரை மற்றும் பால் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் தோல் நோய்கள் உண்டாகும்.
சளி, இருமல், ஆஸ்துமா, சைனஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், ரத்த சோகை உள்ளவர்களும், தலைக்குக் குளித்த நாள் அன்று கீரை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மறந்தும்கூட, இரவில் கீரையைச் சாப்பிடக் கூடாது.
No comments:
Post a Comment