Saturday, May 6, 2017

பதஞ்சலி_முனிவர்

#பதஞ்சலி_முனிவர் யோகக்கலை பற்றி எழுதிய 'யோக சூத்திரங்கள்' என்னும் நூலே யோகக்கலைக்கு அடிப்படை.

அதில் தேவையற்ற ஒரு அலங்கார சொல் கூட கிடையாது.

முதல் சூத்திரமே 'இப்போது யோகம் விளக்கப்படுகிறது' என்ற ஒற்றை வாக்கியம்தான்.

இரண்டாவது சூத்திரத்தில் யோகம் என்பது என்ன என்பதை ஒரே
வரியில் விளக்கியுள்ளார்!

"மனம் பல வடிவங்களை எடுக்க விடாமல் தவிர்ப்பதே யோகம்"

மனிதர்கள் அனைவரும் படிக்க வேண்டிய அற்புத நூல் இது.

இந்த நூல் நான்கு பகுதிகளால் ஆனது.

1-#சமாதி_பாதம்

கருத்தொருமித்தலின் தன்மை மற்றும் நோக்கம் ஆகியவற்றை விரித்துரைக்கிறது

2- #சாதனா_பாதம்

மெய்யுணர்தலுக்கான வழிமுறைகளை சொல்லித்தருகிறது.

3- #விபூதி_பாதம்

யோகத்தால் கிடைக்கும் (அட்டமா சித்திகள் போன்ற, அற்புத சக்திகள் பற்றி பேசுகிறது.

4- #கைவல்ய_பாதம்

முக்திநிலை மற்றும் முக்தி நிலையில் ஆன்மாவின்
நிலை பற்றி பேசுகிறது.

பதஞ்சலி முனிவர் ஐந்து விதமான மன நிலைகளைப் பற்றி விளக்குகிறார்,.அவை

1-#ஷிப்தா-அமைதியற்ற நிலை

மனம் ஏதேனும் ஒன்றில் நிலைபடாமல் ஒன்றிலிருந்து
மற்றொன்றிற்கு தாவிக்கொண்டே இருக்கும் மனநிலை.

2-#மூதா

மனம் சோம்பலில் செயலற்றுக் கிடக்கும் மனநிலை.

(இந்தநிலையில் தமோ குணத்தின் ஆதிக்கத்தில் மனம் இருக்கும்)

3- #விஷிப்தா

மனம் எழுச்சியுடனும்,குழப்பத்துடனும் இருக்கும் நிலை.

(இந்த நிலையில் ரஜோ குணத்தின் ஆதிக்கத்தில் மனம் இருக்கும்)

4-#ஏகாக்ரா

மனம் ஒரு நிலைப்பட்டு நிற்கும் நிலை

(இந்த நிலையில் சத்வ குணத்தின் ஆதிக்கத்தில் மனம் இருக்கும்)

5- #நிருத்தா

மனம் தன் நடவடிக்கைகள் அழிந்து ஒடுங்கியிருக்கும் நிலை.

இவற்றில் கடைசி இரண்டு நிலைகள்தான் யோகத்துக்கு
உகந்தவை.

[இந்து மதம் மூன்று விதமான குணங்கள் பற்றி விளக்குகிறது.அவை சத்வ குணம்,ரஜோகுணம்,தமோ குணம்
(பகவத்கீதை இதுபற்றி விரிவாக விளக்குகிறது) ]

நம்முடைய #ஆழ்மன_சக்திகளை அடைய எட்டு படிகளை
பதஞ்சலி முனிவர் தனது யோகசூத்திர நூலில் விளக்குகிறார்.

ஒரு கணித சூத்திரத்தை விளக்குவதுபோல் படிப்படியாக விளக்குகிறார் #பதஞ்சலி_முனிவர்!

பதஞ்சலி யோகாவின் எட்டு நிலைகளை கீழே
படித்துப் பாருங்கள்!

1-#இமயம்

#அஹிம்சை -சொல்லாலும், மனதாலும், செயலாலும் பிற உயிர்களுக்கு துன்பம் ஏற்படுத்தாமல் இருத்தல்

#பிரம்மச்சரியம்-மனதாலும், செயலாலும் காமத்தை விலக்குதல்.

#சத்தியம்- உண்மையே பேசுதல்,மனதாலும் செயலாலும் வாக்காலும் உண்மையாக இருத்தல்.

#அஸ்தேயம்-பிறர்பொருள் விரும்பாமை,

#அபரிக்ரகம்-பேராசையின்மை

2. #நியமம்:

#சௌசம்- உடல்தூய்மை ,உள்ளத்தூய்மை இரண்டையும் கடைபிடித்தல்

3. #ஆசனம் -இருக்கை-உடம்பை இருத்திக்கொள்ளும் நிலை.இவை ஆயிரக்கணக்கானவை.

4. #பிராணாயாமம்-மூச்சுப்பயிற்சி
இது மூன்று நிலைப் பயிற்சியாகும்,
அவை,

#பூரகம்- மூச்சை உள்ளிழுத்தல்.

#ரேசகம்-மூச்சை வெளியேற்றுதல்.

#கும்பகம்-மூச்சை அடக்குதல்.

5. #பிரத்தியாகாரம்-புலன்களை உள்ளிழுத்தல்.
புலன்கள் எப்போதும் புறப்போருட்களை பற்றுவதிலேயே விருப்பம் கொள்ளும்.இவ்வாறு புறத்தே போகும் புலன்களை மடைமாற்றி அவற்றை அகத்தே திருப்புதல் பிரத்தியாகாரம் எனப்படும்.

6. #தாரணை-ஒருமுகப்படுத்துதல்.
மனத்தை ஏதேனும் ஒரு தியானப் பொருளின்மீது நிலை நிறுத்துதல்.

7. #தியானம்-கருத்தொருமித்தல்
ஒரு பொருளின்மீது கவனத்தை விலக்காமல் இடைவெளியின்றி கவனம் செலுத்துதல்.

8. #சமாதி- உள்ளொடுங்குதல்.

யோகத்தின் இறுதி நிலை இதுவே.இந்நிலையில் தியானிப்பவனும்,தியானிக்கப்படும் பொருளும் இரண்டறக்கலந்து விடும் நிலையாகும்.இதுவே இறைநிலை.

(சமாதி நிலையில் பல்வேறு நிலைகள் உண்டு)
இதில் முதலில் கூறிய ஐந்து படிகளும் யோகத்தின் புறநிலைக் கூறுகள்.

இவற்றைக் கடைபிடிக்காதவர்களுக்கு,
இறுதியில் கூறப்பட்டுள்ள அகநிலைக் கூறுகளான மூன்று நிலைகளையும் அடைய இயலாது.

No comments:

Post a Comment