"நாம் பேசாதிருக்கும் போது இறைவன் நம்மோடு பேசுகிறான்."
இப்படிச் சொல்வது வேறு ஒன்றுமில்லை.
எப்போதும் அவன் இருக்கிறான், அவன் பேசுகிறான், அதைக் கேட்பதற்கு இல்லாமல் நாம் வேறு எதையோ கேட்டுக் கொண்டிருந்தால் அவன் பேசுவது கேட்பதில்லை.
அதனால் நம் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு கொஞ்சநேரம் மௌனம் இருக்க வேண்டும்.
ஒவ்வொருவரிடமும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு ஆயிரம் தேவையில்லாத கருத்துகள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நாளைக்கு மௌனத்தில் உட்கார்ந்தீர்களானால் தானே வரும்.
அதில் பத்து பதினைந்து கருத்துகளை எடுத்து முடிவு கட்டுங்கள்.
ஓரிரு மாதங்களில் முடிவு பண்ணிவிடலாம்.
மறுபடியும் அதே கருத்து வரும் போது அதே அழுத்தம் கொடுத்து கெட்டக் கருத்துகள், செயல்கள், எண்ணங்கள் எத்தனை உண்டோ அத்தனையும் நல்லதாக்கி விடலாம்.
இதற்கு உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால்தானே நேரம் கொடுத்தால் தானே வரும்?
சிலருக்கு ஒரு நாளைக்குக் கூட உட்கார முடியவில்லையே என்று மன வருத்தம் இருக்கிறது.
அதற்காக வருந்தவே வேண்டியதில்லை.
யாராகிலும் ஒருவர் நமக்குத் தேவை இல்லாத வார்த்தையைச் சொன்னார்கள்.
அதற்குப் பதில் சொல்லாமல் எரிந்து விழறது என்று இல்லாமல் அந்த இடத்தில் மாத்திரம் மௌனம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம் இல்லையா?
இதற்கு நேரம் தேவையில்லை.
எப்படி கண்ணாடி அதிகமான சூரிய வெளிச்சத்தை வாங்கி
மற்றதை எரிக்கக்கூடிய வல்லமை பெறுகிறதோ அதேபோல
மௌனத்தில் ஏற்படக் கூடிய (Vortex) சுழல் மையம் நம்முடைய
ஜீவகாந்த சக்தி அதிகமாக ஆக ஆக அதில் சுழற்சி அதிகமாக
ஆக ஆக மைய ஈர்ப்பு அதிகமாகும். அந்த மைய ஈர்ப்பு
அதிகமாகி விட்டதென்றால் எண்ணங்களையும்
ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.
மற்றவர்களுடைய நட்பும் அதிகமாக இருக்கும்.
எல்லோருக்கும் உங்கள் பேரில் விருப்பமும் மதிப்பும் தானாகவே உருவாகும்.
---வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment