Tuesday, December 22, 2015

மார்கழி மாதம்

இன்று மாதங்களில் சிறந்த மார்கழி மாதம் தொடங்கிவிட்டது. உங்களில் பலருக்கும் ஏற்கனவே தெரிந்த சில உண்மைகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

மார்கழிப் பனி உடலுக்கும், உயிருக்கும், மனதுக்கும் மிகவும் நன்மை பயக்கும். காரணம் அதில் ஓசோன் அளவு சற்று அதிகமாக இருப்பதே.

மார்கழிப் பனி அனுபவம் அதன் பின்பு வரக்கூடிய மாதங்களில் வறண்ட பனி, அதிக குளிர் மற்றும் பகலில் அடிக்கும் அதிக வெயிலால் வரக்கூடிய உடல், உயிர், மன பாதிப்புகளிலிருந்து காக்கும்.

மார்கழியில் அதிகாலை எழுந்து உடல் தூய்மை
செய்துகொண்டு சிறிது நேரம் வெளியில் உலவுவது (அரசு, ஆலமரம், வேம்பு மரங்களை 30 மணித்துளிகள் சுற்றுவது மிகவும் சிறப்பு) அதிக பலனைக் கொடுக்கும். பிள்ளையார் சிலைக்கு தண்ணீர் ஊற்றும் வழக்கமும் இதனாலேயே ஏற்படுத்தப்பட்டது.

மார்கழியில் பெண்கள் அதிகாலை எழுந்து உடல் தூய்மை செய்துகொண்டு வாசலில் கோலமிடுதல் வேண்டும் என்று முன்னோர்களால் வழிமுறை செய்யப்பட்டது.

மார்கழி மாதம் எந்த விளைச்சலும் இருக்காது, ஆகையால் எறும்புகளுக்கு உணவு கிடைப்பது கடினம் அதனாலேயே ஒவ்வொரு வீட்டின் முன்பும் அரிசிமாவில் கோலமிடல் வலியுறுத்தப்பட்டது.

மார்கழி மாதத்தில் அனைவரும் அதிகாலை எழுந்து உடல் தூய்மை செய்துகொண்டு கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்யும்போது சற்று அதிக ஓசோன் கலந்துள்ள அதிகாலை பனிக்காற்று நம் உடலில், உயிரில், அறிவில், மனதில் அருமையான அமைதியை, நிறைவை, நம்பிக்கையை, உறுதியை, புத்துணர்ச்சியை, ஆனந்தத்தை ஏற்படுத்தும். அனுபவித்துப் பாருங்கள்.

மூட நம்பிக்கைகள் தவிர்த்து நம் முன்னோர்கள் வகுத்து வைத்த பல பண்பாட்டு வழிமுறைகளில் உள்ள நற்பயன்கள் கருதி அவற்றை போற்றி, பின்பற்றி சிறப்புடன் வாழ்வோம்.

நன்றி...!

வாழ்க வளமுடன்...!

No comments:

Post a Comment