பதிணெண் சித்தர்களைக் காண ஒரு அருமையான மந்திரம் உள்ளது.இது சித்தர்கள் பெரிய ஞானக்கோவை ( ரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் ) நிஜானந்த போதத்தில் வெளியிடப்பட்டு மிக சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மந்திரம் இதோ…
சித்தர்கள் பாடி வைத்த ( செய்த ) தமிழ்ப் பாடல்களின் உண்மைப் பொருள் உணர்ந்துஅனுபவத்தைப் பெறாமல் , உணராமல் இருந்தால் அகங்காரமாய்ப் பேசினால் சிறுகுடலும் , பெருங்குடலும் புரண்டு பெரும் துன்மடைவார்கள்.
சித்தர்கள் பாடி வைத்த ( செய்த ) தமிழ்ப் பாடல்களின் உண்மைப் பொருள் உணர்ந்து அறிந்து கொள்ளவும் , சித்தர்களைக் காண்பதற்கு ஒரு மூலமான மந்திரம் உள்ளது.சைதன்யமான இறையைப் போற்றி எந்நேரமும் ஓம் சிங் ரங் அங் சிங் என்று ஒரு ( பூரணம் ) கோடித் தடவை வேறு சிந்தனையில்லாமல் உருவேற்றினால், வேதாந்த சித்தர்களை வசமாய்க் காணலாம் .அவர்களை வசமாய்க் கண்டால் சகல சித்துக் குதவியாகும் , என்று கூறுகிறார்.எனவே அவர்களை வசமாய்க் காண இந்த மந்திரத்தை உபயோகித்து பயன் பெறுவீர்களாக!!!
காயத்திரி மந்திரத்தை எல்லாப் பிராமணர்களும் மூச்சுப் பயிற்சியுடன் கூடிய பயிற்சியை சங்கற்பம் என்பார்கள் .அது விசுவாமித்திரரால் உருவாக்கப்பட்டது.விசு என்றால் ஆகாயம் .ஆகாயத்துக்கு மித்திரன் என்றால் நண்பன் என்று பொருள்.ஆகாயக் கூறான உயிர்க் கூறு இயற்கையில் உள்ளது போல் நம்முடலில் மிகுமானால் நம்முடலும் இயற்கை போல் அழியாமல் இருக்கும்.
அதாவது ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல் செய்ய வேண்டும் என்பார்கள்.ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல்தான் இருக்கிறது.அதாவது உயிர் பிரிந்த போது பழுதுள்ள மூன்று பூதங்களான ஆகாயம் உயிருடன் ஓடிவிடும் , வாசித்துக் கொண்டிருக்கும் காற்று பின்னால் ஓடிவிடும் , காற்றில்லாவிட்டால் நெருப்பு அணைந்துவிடும் , மண்ணும் , நீரும் மட்டும் பிணமாகக் கிடக்கும்.
இயறகையில் விண்தான் இந்த பூமி , முதலான அனைத்துக் கோள்களையும் , அண்ட பேரண்டங்களையும் தாங்கி சரியான விதியில் சுழற்றுகின்றது. நம்மால் இரண்டு பந்துகளை ஒரு குடத்தில் போட்டு ஒன்றுடன் ஒன்று மோதாமல் சுழற்ற முடியுமா ? இத்தனை கோடி அண்டங்களையும் , பல கோடி பிரபஞ்சங்களையும் , பற்பல கோடிக் கோடி சூரியன்களையும் அத்துடன் சேர்ந்த பல கிரகங்களையும் ஒன்றுடன் ஒன்று மோதாமல் சுழற்றும் இந்த விண் என்ற பூதம் எவ்வளவு ஆற்றல் பெற்று மற்ற பூதங்களைவிட அளவில் பெரிதாய்த் திகழ்கிறது .
எனவே விண் பூதத்தை இயற்கையில் உள்ளது போல உடலில் அதிகரித்தால் நம் உடலும் இயற்கையைப் போல அழிவற்றதாய்த் திகழும் .அப்படிப்பட்ட சாகாக் கலையை ஓதுவிக்கும் நம் தமிழ் மொழி எப்பேர்ப்பட்ட மொழி.நாம் எப்படிப்பட்ட ஞான நாட்டில் , ஞான பூமியில் பிறந்திருக்கிறோம்.அப்படிப்பட்ட ஆகாயக் கூற்றை உடலில் அதிகரிக்க இந்த மந்திரம் உதவும்.
அதே போல இந்த மந்திரத்தை ஓம் என்று மூச்சை உள்ளிழுக்கவும் , பின் சிங் என்று வெளியில் விடவும் , ரங் என்று மூச்சை உள்ளிழுக்கவும் , பின் அங் என்று வெளியில் விடவும், மீண்டும் சிங் என்று மூச்சை உள்ளிழுத்து கடைசியா மூச்சை ஏதும் சொல்லாமல் வெளியில் விடவும் , மீண்டும் மேற்படி மந்திர சங்கல்பத்தை தொடரவும் இவ்வாறு செய்தால் 48 நாளில் நினைத்த சித்தரைக் காணலாம்.
இதை சங்கற்ப தரிசனம் என்று சொல்லலாம்.நாம் எந்த ரகசியத்தை கொண்டு செல்லவில்லை.சித்தர்கள் சொன்ன ரகசியத்தை சொல்லியே செல்கிறோம் .நீங்களும் சித்தர்களை தரிசனம் செய்து இறையை தரிசிக்கலாம்.மேலான ஞான ரகசியத்தையும் அடையலாம்.எம்மிடம் ஏதும் ரகசியம் இல்லை.
No comments:
Post a Comment