Thursday, December 31, 2015

பதிணெண் சித்தர்களைக் காண

பதிணெண் சித்தர்களைக் காண ஒரு அருமையான மந்திரம் உள்ளது.இது சித்தர்கள் பெரிய ஞானக்கோவை ( ரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் ) நிஜானந்த போதத்தில் வெளியிடப்பட்டு மிக சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மந்திரம் இதோ…

சித்தர்கள்  பாடி வைத்த ( செய்த ) தமிழ்ப் பாடல்களின் உண்மைப் பொருள் உணர்ந்துஅனுபவத்தைப் பெறாமல் , உணராமல் இருந்தால் அகங்காரமாய்ப் பேசினால் சிறுகுடலும் , பெருங்குடலும் புரண்டு  பெரும் துன்மடைவார்கள்.
சித்தர்கள்  பாடி வைத்த ( செய்த ) தமிழ்ப் பாடல்களின் உண்மைப் பொருள் உணர்ந்து அறிந்து கொள்ளவும் , சித்தர்களைக் காண்பதற்கு ஒரு மூலமான மந்திரம் உள்ளது.சைதன்யமான இறையைப் போற்றி எந்நேரமும்  ஓம் சிங் ரங் அங் சிங் என்று ஒரு ( பூரணம் ) கோடித் தடவை வேறு சிந்தனையில்லாமல்  உருவேற்றினால், வேதாந்த சித்தர்களை வசமாய்க் காணலாம் .அவர்களை வசமாய்க் கண்டால் சகல சித்துக் குதவியாகும் , என்று கூறுகிறார்.எனவே அவர்களை வசமாய்க் காண இந்த மந்திரத்தை  உபயோகித்து பயன் பெறுவீர்களாக!!!
காயத்திரி மந்திரத்தை எல்லாப் பிராமணர்களும் மூச்சுப் பயிற்சியுடன்  கூடிய பயிற்சியை  சங்கற்பம் என்பார்கள் .அது விசுவாமித்திரரால் உருவாக்கப்பட்டது.விசு என்றால் ஆகாயம் .ஆகாயத்துக்கு மித்திரன் என்றால் நண்பன் என்று பொருள்.ஆகாயக் கூறான உயிர்க் கூறு இயற்கையில் உள்ளது போல் நம்முடலில் மிகுமானால் நம்முடலும் இயற்கை போல் அழியாமல் இருக்கும்.
அதாவது ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல் செய்ய வேண்டும் என்பார்கள்.ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல்தான் இருக்கிறது.அதாவது உயிர் பிரிந்த போது பழுதுள்ள மூன்று பூதங்களான ஆகாயம் உயிருடன் ஓடிவிடும் , வாசித்துக் கொண்டிருக்கும் காற்று பின்னால் ஓடிவிடும் ,  காற்றில்லாவிட்டால் நெருப்பு அணைந்துவிடும் , மண்ணும் , நீரும் மட்டும் பிணமாகக் கிடக்கும்.
இயறகையில் விண்தான் இந்த பூமி , முதலான அனைத்துக் கோள்களையும் , அண்ட பேரண்டங்களையும் தாங்கி சரியான விதியில் சுழற்றுகின்றது. நம்மால் இரண்டு பந்துகளை ஒரு குடத்தில் போட்டு ஒன்றுடன் ஒன்று மோதாமல் சுழற்ற முடியுமா ? இத்தனை கோடி அண்டங்களையும் , பல கோடி பிரபஞ்சங்களையும் , பற்பல கோடிக் கோடி சூரியன்களையும்  அத்துடன் சேர்ந்த  பல கிரகங்களையும் ஒன்றுடன் ஒன்று மோதாமல் சுழற்றும் இந்த விண் என்ற பூதம் எவ்வளவு ஆற்றல் பெற்று மற்ற பூதங்களைவிட அளவில் பெரிதாய்த் திகழ்கிறது .
எனவே விண் பூதத்தை இயற்கையில் உள்ளது போல உடலில் அதிகரித்தால் நம்  உடலும் இயற்கையைப் போல அழிவற்றதாய்த் திகழும் .அப்படிப்பட்ட சாகாக் கலையை ஓதுவிக்கும் நம் தமிழ் மொழி எப்பேர்ப்பட்ட மொழி.நாம் எப்படிப்பட்ட ஞான நாட்டில் , ஞான பூமியில் பிறந்திருக்கிறோம்.அப்படிப்பட்ட ஆகாயக் கூற்றை உடலில் அதிகரிக்க இந்த மந்திரம் உதவும்.
அதே போல இந்த மந்திரத்தை  ஓம் என்று மூச்சை உள்ளிழுக்கவும் , பின் சிங் என்று வெளியில்  விடவும் , ரங் என்று மூச்சை உள்ளிழுக்கவும் , பின் அங் என்று வெளியில்  விடவும், மீண்டும் சிங் என்று மூச்சை உள்ளிழுத்து கடைசியா மூச்சை ஏதும் சொல்லாமல் வெளியில்  விடவும் , மீண்டும் மேற்படி மந்திர சங்கல்பத்தை தொடரவும்  இவ்வாறு செய்தால் 48 நாளில் நினைத்த சித்தரைக் காணலாம்.
இதை சங்கற்ப தரிசனம் என்று சொல்லலாம்.நாம் எந்த ரகசியத்தை கொண்டு செல்லவில்லை.சித்தர்கள் சொன்ன ரகசியத்தை சொல்லியே செல்கிறோம் .நீங்களும் சித்தர்களை தரிசனம் செய்து  இறையை தரிசிக்கலாம்.மேலான ஞான ரகசியத்தையும்  அடையலாம்.எம்மிடம் ஏதும் ரகசியம் இல்லை.

பிரபஞ்ச சக்திகள்

பிரபஞ்ச சக்திகள்பிரபஞ்ச சக்திகள் அனைத்தும் மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளிலும் நிறைந்துள்ளது. இதனால்தான் திருமூலர் ஊண் உடம்பே ஆலயம் என்றார். இந்த வாதபித்த கபம் எவ்வாறு மனித உடலில் உள்ளது என்பதையும் வாத பித்த கப நிலைப்பாட்டின் தன்மையை இந்த பிரபஞ்சத்தில் ஐம்பூதங்களான மண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் இவற்றின் பிரதிபலிப்பு ஒவ்வொரு உயிரிலும் நிறைந்துள்ளது.அண்டத்திலுள்ளதே பிண்டம்பிண்டத்திலுள்ளதே அண்டம்அண்டமும் பிண்டமு மொன்றேஅறிந்து தான் பார்க்கும் போதேஎன்று சித்தர் பாடுகிறார். பொதுவாக எலும்புக்கூடு, நரம்பு, தசை, தமனி, முதலானவைகள் தான் மனிதன் என்று சொல்வது அறியாமை என்கின்றனர் சித்தர்கள்.அண்டத்தில் அதாவது பிரபஞ்சத்தில் உள்ளது அனைத்தும் பிண்டத்தில் உள்ளது என்கிறார். பிண்டம் என்றால் உடம்பைக் குறிக்கும்.பிரபஞ்ச சக்தியானது உடலில் கரு உற்பத்திக்கு முக்கிய காரணமாகிறது.சுக்கிலமும் சுரோனிதமும் இணையும்போது, காற்று நீர், நெருப்பு மூன்றும் சேர்ந்து மண் உருவு கொண்டு உடலாய் மாறி உயிர் சேர்ந்து வாதம், பித்தம், கபம் என நிலைப்படுகின்றது.இவ்வாறு பஞ்ச பூதங்களுள் அமைந்துள்ள உடலானது உலகில் உள்ள தாதுப்பொருட்கள் தாவரப் பொருட்கள் அனைத்தும் சங்கமமாகின்றது. மனிதஉடல் ஐம்பெரும் பூதங்கள் அடங்கிய சிறிய பிரபஞ்சம் என்றே சித்தர்கள் கூறுகின்றனர்.மேலும் மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களோடு தொடர்புடைய தாகவும், இந்த தத்துவங்களின் அடிப்படையில்தான் மனித உயிர் அனைத்து சக்திகளையும் அடக்கி ஆளும் தன்மை கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.சூரிய சக்தியானது மனிதனின் தமரகம் என்னும் இதயத்துடன் தொடர்புடையது என்றும், மூளை நரம்புகள் அனைத்தும் சந்திரனோடு தொடர்பு உடையவை என்றும், பித்தப்பை இரத்தம், செவ்வாயோடு தொடர்பு உடையவை என்றும் உடலை பிரபஞ்சத்துடன் ஒப்பிட்டுள்ளனர்.சூரிய சக்தி – தமரகம் (இதயம்)சந்திர சக்தி – மூளை நரம்புகள்செவ்வாய் – பித்தப்பை, இரத்தம் (செந்நீர்)சுக்கிரன் – இடுப்புப் பகுதிபுதன் – நுரையீரல்குரு (வியாழன்) – கல்லீரல்சனி – மண்ணீரல்ஆகவே மனித உடலானது கிரகங்கள் (கோள்கள்) நட்சத்திரங்களின் ஆதிக்கத்தைப் பொறுத்து மாறுபாடு அடைகிறது என்பது புலனாகிறது.பிரபஞ்ச சக்தியை அடைந்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் இந்த கோள்களின் ஆதிக்கத்தை மாற்றியும், நட்சத்திரங்களின் தன்மைகளை மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவர்கள். சில சமயங்களில் இவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி இயக்குபவர்களும் இவர்களே.பிரபஞ்சத்தில் மனிதனே முதன்மையானவ னாகவும் அவன் தன்னைத்தானே அறிந்து கொள்பவனாகவும் இருக்கிறான். இதையே ஒளவையார் அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று பாடினார்.இதனால்தான் மனிதன் ஐம்பெரும் பூதங்களை அடக்கி ஆளும் சக்தியைப் பெற்று இயற்கையின் போக்கை இயக்கவும், மாற்றவும் வல்லவன் ஆகிறான் என்கின்றனர்.இந்த பிரபஞ்ச சக்தியை அடைவது பற்றி நாம் வர்மத்தின் மர்மங்கள் என்ற தொடரில் திலர்த கால ஒளியின் மூலம்இந்த சக்தியை அடைவது பற்றி விரிவாக அறிந்துகொண்டிருப்பீர்கள்.இதுபோல் மனித உடலில் உள்ள நரம்பு மண்டலங்கள் ஆதாரங்களுடன் தொடர்பு உள்ளது போல் ஐம்பூதங்களின் ஆதிக்கம் மனித சக்தியிலும் நிறைந்துள்ளது. ஆகையால் மனிதன் ஐம்பூதங்களை அடக்கியாள முடிகிறது. இதைத்தான் சித்தர்கள் பல நூல்களிலும், சோதிட சாஸ்திரங்களிலும் மனிதனுக்கு கோள்களின் மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை துல்லியமாக கணித்துக் கூறியுள்ளனர்.பஞ்ச பூதங்கள் வாத பித்த கபமாக நிறைந்து அதனதன் நிலைப்பாட்டுடன் உள்ளது. பிரபஞ்சத்தில் கோள்களின்ஆதிக்கம் மாறும்போது உடலிலும் வாத பித்த கப மாறுபாடு ஏற்படுகிறது. இதனால் மனிதன் பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது.இப்படிப்பட்ட கோள்களின்ஆதிக்கத்தைத் தெரிந்துகொண்டு அதன்மூலம் மனிதன் நோய் நொடியின்றி தன்னைக் காத்துக்கொள்ளவே வான சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம் போன்றவற்றை சித்தர்கள் உருவாக்கினர்.மனித உடலானது பிரபஞ்சத்தில் ஒரு பிரபஞ்சம் என்றே சித்தர்கள் கூறுகின்றனர்.நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இந்த ஐம்பெரும் பூதங்கள் நம் உடலில் செயல்படுகிறது.ஐம்பூதங்களின் தன்மையினால் உருவான உடலானது அண்டத்தின் செயல்பாடுகளால்தான் இயக்கப் படுகிறது.இத்தகைய உடலை இயக்கும் உயிர்ஸ்தானம் எங்குள்ளது என்பதை தியானம் மூலமே அறிந்துகொள்ள முடியும்.சித்தர்கள் தங்களின் தவப்பயனால், உடலின் சாராம்சங்களை அறிந்து கொண்டு மனதை செம்மைப்படுத்தி ஒருநிலைப்படுத்தும் போது உடலில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு ஒரே நேர்க்கோட்டில் வரும்போது திலர்த காலம் என அழைக்கப்படும் சுழிமுனையில் ஒளியை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில்தான் உடலில் பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளுக்கும், கோள்களின் ஆதிக்கத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர் இதைத்தான் சித்தர்கள் அகாரம் உகாரம் மகாரம் என்ற சொல்லின் வடிவம்தான் ‘ஓம்’ என்று அழைத்தனர். இந்த ‘ஓம்’ என்ற சொல் எந்த ஒரு மதத்தினருக்கும் சொந்தமானதல்ல. அனைவருக்கும் பொதுவானது. மனிதனின் முகம் ஓம் என்ற வடிவில் அமைந்துள்ளது என சித்தர்கள் கூறுகின்றனர்.ஆகையால்தான் தமிழ்மொழியில் ‘அ’ என்ற எழுத்தை முதல் உயிரெழுத்தாக கொண்டுள்ளது.திருவள்ளுவர் தன்னுடைய திருக் குறளில்அகர முதல எழுத்தெல்லாம்ஆதி பகவன் முதற்றே உலகுஎன்று பாடியுள்ளார்.சிலர் திருவள்ளுவர் இறைவணக்கம் பாடவில்லை என்று கூறுவர். ஆனால் அகர என்ற சொல்லே இறைவனை வணங்கும் முதல் சொல்லாகும். மனித உடலின் பிரபஞ்சத்தை நன்கு அறிந்து அதனையே முதல் குறளில் முதல் வரியாகவும் இறைவணக்க பாடலாகவும் பாடியுள்ளார்.அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும்அண்டத்திற் சேர்த்திடவே ஆகும் முக்திபரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும்விரிவான மனந்தனையும் அணுவ தாக்கிவிட்டகுறை தொட்டகுறை விதியைப்பார்த்துகுறியான குண்டலியா மண்ட வுச்சி கூறுகிறேன்முக்கோண நிலையதாமே சித்தர் பாடல்“பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்”இந்த ஓங்கார சக்திதான் உடலை இயக்கும் மாபெரும் சக்தி என்கின்றனர் சித்தர்கள். இத்தகைய சக்தியை அடைந்துவிட்டால் மனம் என்னும் அடங்காத குதிரையை அடக்கி அதன்மேல் சவாரி செய்வதுபோல் கம்பீரம் கிடைக்கும் என்கின்றனர்.மேலும் அவர்கள்அம் என்று இருஇம் என்று இருஉம் என்று இருஎன்று கூறுகின்றனர். பிராண வாயுவின் செயல்பாடுகள் இந்த வடிவில்தான் செயல்படுகின்றது. தவக்கோலத்தில் பிராண வாயுவை அம், இம், உம் என்ற நிலையில் செயல்படுத்தினால் மூலாதாரத்தில் இருந்து எழும்பும் (அதாவது குண்டலினி) ஓங்கார சக்தி மேல் நோக்கி எழுந்து தனஞ்செயன் வாயு அடங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று அங்கிருந்து சுழிமுனையை அதாவது திலர்த காலத்தை அடைகின்றது. இதனால்தான் சித்தர்கள் அண்ட சாரத்தினை தங்களின் ஆற்றலினால் மாற்றி அமைக்க முடிந்தது.சாதாரணமாக மனித உடலில் கிலேசம் என்ற நீர் உற்பத்தியாகிறது. இந்த கிலேச நீரை ஒருநிலைப் படுத்தும்போது உருவாகும் நீரைத்தான் அமிர்த கலை நீர் என்று அழைக்கின்றனர். இந்த கிலேச நீர் என்பது ஒன்றை பார்த்தவுடன், கேட்டவுடன் அல்லது உணர்ந்தவுடன் உடலில் ஊறும் ஒரு அபரிமிதமான நீராகும். இந்த நீர் எண்ணங்களுக்கு ஏற்ப உற்பத்தியாகிறது… மாறுபடுகிறது.உதாரணமாக ஒரு ஆண் ஒருபெண்ணைப் பார்க்கும்போது அல்லது ஒரு பெண் ஒரு ஆணைப் பார்க்கும்போது உடலில் ஒருவகையான மனக் கிளர்ச்சி உண்டாகும். அப்போது சுரக்கும் நீர் மனக் கிலேச நீராகும். அதுபோல் தொடும்போது, உணர்ச்சிவசப்படும்போது, இனிமையான பாடலைக் கேட்கும்போது பலவிதமான எண்ணங்களை வெளிப்படுத்தும் போது உடலில் மாற்றம் ஏற்பட்டு மனநிலை மாறி கிலேச நீர் உற்பத்தியாகிறது. இந்த கிலேச நீர்தான் அனைத்து செயல்பாட்டினையும் தூண்டும் சக்தியாக விளங்குகிறது.மூலாதாரத்திலிருந்து உயிர் சக்தி சீற்றமாகி மேல் எழும்பி ஆதாரங்களைத் தூண்டி தனஞ்செயனை தொடும்போது கிலேசன் என்னும் அமிர்த நீர் உற்பத்தியாகிறது. இதைத்தான் சிவனின் தலையிலிருந்து உற்பத்தியாகும் கங்கை நீராக புராணங்களில் சித்தரிக்கின்றனர்.ஒருவரை பார்க்கும்போதும், பேசத் தூண்டும் போதும் கிலேச நீர் அபரிமிதமாக தோன்றி எண்ணங்களை மேலோங்கச் செய்கிறது.அதிக மகிழ்ச்சியடையும்போது ஆனந்தக் கண்ணீராக வெளிவருவதற்கும்,துக்கமடையும்போது கண்ணீராக வெளிவருவதற்கும் இந்த கிலேச நீர்தான் காரணம்.இந்த கிலேச நீர் வாத, பித்த கப உடல்கூறுகளுக்குத் தகுந்தவாறு எவ்வாறு மாறுகிறது, அப்படி மாறும்போது உடலில் அதிக மாற்றம் உருவாகிறது.ஐம் பூதங்களின் மொத்த உருவே பிரபஞ்சம். இதுபோல் மனித உடலும் ஐம் பூதங்களால் ஆன சிறிய பிரபஞ்சம் என்கிறார்கள் சித்தர்கள். இதைத்தான் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.இந்த பஞ்ச பூதங்கள் எவ்வாறு மனித உடலை தீர்மானிக்கின்றன, அவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதை விரிவாக அறிந்துகொள்வோம். மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள்.இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.நிகழ்ந்த சீர்ப் பிருதிவியும் அப்பு நானும்நேரான தேயுவோடு வாயுமாகும்அகழ்ந்தவா காயத்தோ டைந்து பூதம்அரிதான பிருதிவியு மண்ணு மாகும்தகழ்ந்தவப்பு சலமாகும் நெருப்பாற் தேயுதாக்கான வாயுவது காற்றுமாகும்இகழ்ந்தவா காயமது சத்தமாகும்ஏற்றபிரு திவியும் பொன்னிறமதாமேயூகி வைத்திய சிந்தாமணிமண்ணின் கூறுகள் மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல், நரம்பு, தசை, மயிர் இவை அனைத்தும் மனித உடம்பின் மண் கூறு கொண்டவை.பிருத்திவியில் பிருத்திவி அதாவது மண்ணில் மண் சேர்ந்ததால் உருவானதுதான் எலும்பு என்றும், மண்ணுடன் நீர் சேர்ந்து உருவானது தசை என்றும், மண்ணுடன் நெருப்பு சேர்ந்து உருவானது தோல் என்றும், மண்ணுடன் வாயு சேர்ந்து உருவானது நரம்பு என்றும், மண்ணுடன் ஆகாயம் சேர்ந்து உருவானது மயிர் என்றும் குறிப்பிடுகின்றனர்.நீரின் கூறு (புனலின் கூறு)நீரின் தன்மை கொண்டவை இரத்தம், விந்து (வெந்நீர்), சிறுநீர், மூளை, கொழுப்பு. நீரினை புனல் என்று அழைக்கின்றனர். நீருடன் நீர் சேர்ந்து வெளியேறுவது சிறுநீர் என்றும், நீருடன் மண் (பிருத்திவி) சேர்ந்து உருவானதுதான் உமிழ்நீர் என்றும், நீருடன் நெருப்பு சேர்ந்துதான் வியர்வையானது எனவும், நீருடன் வாயு சேர்ந்துதான் இரத்தம் (குருதி, செந்நீர்) உண்டானது எனவும், நீரின் கூறுடன் ஆகாயம் சேர்வதால் உருவானதுதான் சுக்கிலம் எனப்படும் விந்து எனவும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.நெருப்பின் கூறு உணவு, தூக்கம், அச்சம், சேர்க்கை, சோம்பல் முதலியவை நெருப்பின் கூறாகும். நெருப்பை தேயு (தீ) என அழைக்கின்றனர்.நெருப்பு கூறுடன் நெருப்பு சேரும்போது தூக்கம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் மண் சேரும் போது பசி உருவாகிறது எனவும், நெருப்புடன் நீர் சேரும்போது தாகம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் வாயு சேரும்போது அச்சம், சோம்பல் உருவாகிறது எனவும், நெருப்புடன் ஆகாயம் சேரும்போது ஆசை, சேர்க்கை உருவாகிறது எனவும் குறிப்பிடுகின்றனர்.வளியின் (காற்று) கூறுஓடல், நடத்தல், நிற்றல், உட்காருதல், படுத்தல்.வாயுவுடன் வாயு சேரும்போது ஓடுதல் நடைபெறும் என்றும், வாயுவின்கூறுடன் மண் (பிருத்திவி) சேரும்போது படுத்தல் எனவும், வாயுடன் நீர் சேரும்போது நடத்தல் நடைபெறும் என்றும், வாயுவுடன் நெருப்பு இணையும்போதுஉட்காருதல் நிகழும் என்றும் வாயுவுடன் ஆகாயம் சேரும்போது தாண்டுதல், குதித்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.விண்ணின் (ஆகாயம்) கூறுஇன்பம் (காமம்), உட்பகை (குரோதம்), ஈயாமை (உலோபம்), பெருவேட்கை (மோகம்), கொழுப்பு (மதம்)விண்ணின் தன்மையுடன் ஆகாயம் சேரும்போது மோகம் உண்டாவதாகவும், ஆகாயத்துடன் மண் சேரும்போது இராகம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் நீர் சேரும்போது துவேசம் ஏற்படுவதாகவும், ஆகாயத்துடன் நெருப்பு இணையும்போது பயம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் வாயு சேரும்போது நாணம் ஏற்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.மனித உடலில் ஐம்பூதங்களின் செயல்பாடுகளை சித்தர்கள் இவ்வாறு விளக்கியுள்ளனர்.மண்ணின் தன்மையால் மயிர் வளர்கிறது. எலும்பு வலுவடைகிறது. நரம்புகள் அதிக வேகத்துடன் செயல்படுகின்றன. தசைகள் இறுக்கம்கொள்கின்றன.இவ்வாறு பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளால் தான் மனித உடல் உருக்கொண்டுள்ளதாக சித்தர்கள் கூறுகின்றனர்.இதே கருத்தையே ஆன்மீகம் தெரிவிக்கிறது. சைவ சமயத்தில் பஞ்ச பூதங்களுக்கும் கோவில்கள் அமைத்துள்ளனர்.காஞ்சிபுரம் மண் (பிருத்திவி)திருவாணைக்கால் நீர்திருவண்ணாமலை நெருப்புகாளஹஸ்தி காற்றுசிதம்பரம் ஆகாயம்.பஞ்ச பூதங்களையே தெய்வ வடிவமாக வணங்கி வரச் செய்துள்ளனர்.by.pp.சதீஸ்

Sunday, December 27, 2015

மனைவியின் உணவை இனி

சாப்பாடு சரியில்லை என்றால் “சட்” என்று கோபப்படும் ஒரு சராசரி கணவன்தான் நான்...!

இன்று காலையில் கூட சப்பாத்தி மென்மையாக இல்லை என்பதை , கொஞ்சம் மென்மை இல்லாத வார்த்தைகளை உபயோகித்தே என் மனைவியிடம் என்னால் சொல்ல முடிந்தது...!

ஆனால்...
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை இன்று தற்செயலாக “தினகரன்” நாளிதழில் படிக்க நேரிட்டது.... 
இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில் , 
அவரது இளமைக்கால வாழ்க்கை :

"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்...

என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்...

சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன் , என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய் ..... ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்....

‘ இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனது ’ என்று என் தந்தை என்னிடம் கேட்டார்.
நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவில்லை ..

என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய்...
ஆனால் அதற்கு என் தந்தையோ .."எனக்கு கருகிய ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும் " என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ....

சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்... நான் மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு , அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன் :
" அப்பா ... உங்களுக்கு உண்மையாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?"

சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை , என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார்....
" மகனே...உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு , நமக்கும் பணிவிடை செய்கிறார் ..
களைத்துப் போய் இருப்பார் ... 
ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ... 
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்...
நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...
இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ....
நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே ....”

# அப்துல் கலாமின் இந்த அனுபவத்தைப் படித்தபோது அவரது அப்பா மீது , அளவில்லாத மரியாதை எழுந்தது...
அது இன்று முழுவதும் என்னைத் தொடர்ந்து வந்தது...

ஆம்..
“ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ... 
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்....”

# இந்த தத்துவத்தை எண்ணியபடியே இன்று இரவு சாப்பிட அமர்ந்தபோது ...
எனக்கு பரிமாறப்பட்ட உணவு கொஞ்சம் ஆறித்தான் போய் இருந்தது...
ஆனால் என் உணர்வுகள் ரொம்பவுமே மாறிப் போய் இருந்தது...

மனைவியின் உணவை இனி ஒருபோதும் குறை சொல்லக் கூடாது என்ற திருந்திய மன உணர்வோடு , இருந்ததை இனிதே உண்டு முடித்தேன்...

# எதிர்காலத்தில் நம் குழந்தைகள் கலாமின் கொள்கைகளை கடைப்பிடிக்கட்டும்..
இப்போது நாம் கொஞ்சம் அவரது அப்பாவின் கொள்கைகளை கடைப்பிடிக்கலாமே...!!!

# நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... 
ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...!!!

INDIAN GOVERNMENT iNTRODUCED ONLINE

👌👌👌Excellent
🔘 INDIAN GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES 🔘 

*Obtain:
🔴1.  Birth Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1

🔴2.  Caste Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4

🔴3.  Tribe Certificate
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8

🔴4.  Domicile Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5

🔴5.  Driving Licence
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6

🔴6.  Marriage Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3

🔴7.  Death Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2

Apply for:
🔴1.    PAN Card
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15

🔴2.     TAN Card
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3

🔴3.     Ration Card
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=7

🔴4.     Passport
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2

🔴5.     Inclusion of name in the Electoral Rolls
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=10

Register:  
🔴1.    Land/Property
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=9

🔴2.    Vehicle
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=13

🔴3.    With State Employment Exchange
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=12

🔴4.    As Employer
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=17

🔴5.    Company
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=19

🔴6.    .IN Domain
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=18

🔴7.    GOV.IN Domain
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=25

Check/Track:
🔴1.    Waiting list status for Central Government Housing
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9

🔴2.     Status of Stolen Vehicles
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1

🔴3.    Land Records
http://www.india.gov.in/landrecords/index.php

🔴4.    Cause list of Indian Courts
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7

🔴5.    Court Judgments (JUDIS )
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24

🔴6.    Daily Court Orders/Case Status
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21

🔴7.    Acts of Indian Parliament
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13

🔴8.    Exam Results
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16

🔴9.    Speed Post Status
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10

🔴10. Agricultural Market Prices Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6

Book/File/Lodge:
🔴1.     Train Tickets Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5

🔴2.     Air Tickets Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4

🔴3.     Income Tax Returns
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12

🔴4.     Complaint with Central Vigilance Commission (CVC)
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14

Contribute to:
🔴1.      Prime Minister's Relief Fund
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11

Others:
🔴1.      Send Letters Electronically
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20

Global Navigation  
🔴1.     Citizens
http://www.india.gov.in/citizen.php

🔴2.     Business (External website that opens in a new window)
http://business.gov.in/

🔴3.     Overseas
http://www.india.gov.in/overseas.php

🔴4.     Government
http://www.india.gov.in/govtphp

🔴5.     Know India
http://www.india.gov.in/knowindia.php

🔴6.     Sectors
http://www.india.gov.in/sector.php

🔴7.     Directories
http://www.india.gov.in/directories.php

🔴8.     Documents
http://www.india.gov.in/documents.php

🔴9.     Forms
http://www.india.gov.in/forms/forms.php

🔴10.    Acts
http://www.india.gov.in/govt/acts.php

🔴11.  Rules
http://www.india.gov.in/govt/rules.php

PLS FORWARD TO ALL GROUPS AND FRIENDS.
Keep ds msg handy...u may need it anytime.