Thursday, January 24, 2019

Charlie Chaplin

Today is the day...when charlie chaplin died....so
A Good Day to Recollect
his 3 Heart Touching
Statements:

(1) Nothing is Permanent
     in this World,
     not even our
     Troubles.

(2) I like Walking in
     the Rain,
because
     NoBody can see
     my Tears.

(3) The Most Wasted
      Day in Life is the
      Day in which
we
      have not Laughed.

LIFE is to Enjoy with
Whatever you have with
You,
Keep Smiling...!

If you feel STRESSED,
Give yourself A Break.

Enjoy Some..
Icecream/ Choclates/
Candy/ Cake...

Why...?
B'Coz...:

STRESSED
backwards spelling is
DESSERTS...!!
Enjoy...!

Very Beautiful lines
Pls Store it.

ONE Good FRIEND
is equal to ONE
Good Medicine...!
Likewise
ONE Good
Group is equal to ONE
Full medical store...!!

Six Best Doctors
in the World....:

1.Sunlight,
2.Rest,
3.Exercise,
4.Diet,
5.Self Confidence &
6.Friends

Maintain them
in all
stages of Life and
enjoy healthy life...!

If you see the Moon...
You see the Beauty of
God.....!
If you see the Sun...!
You see the power of
God....
And....
If you see the Mirror,
You see the
Best
Creation of GOD...!

So,
Believe in YOURSELF.
We all are Tourists &
God is our Travel Agent
Who has already fixed
all our Routes,
Reservations
& Destinations
So....
Trust him &
Enjoy the
"Trip" called LIFE...!!

Life will never
come Again.!!
Live Today..!

You May Share this to All People who
Are Important to You..!!
🙏🙏🙏

Monday, January 21, 2019

Zen. Story. Self confidence

ஒரு தன்னம்பிக்கை
பதிவு,,,,,,,,, ஜென்,,,

ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான்.

ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு.

ஆனால், அவனுக்கு இடது கை கிடையாது.

கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம்.

கையில்லாத பையன் என்ன செய்வான் ?
பல மாஸ்டர்களிடம் போனான்.

எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள்

கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார்.

பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான்.

குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான்.

இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்” என்றார் குரு.

குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது ? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது !

முதல் போட்டி. சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது. எல்லோரும் ஆச்சரியப் படும் விதமாக பையன் வெற்றி பெற்றான்.

இரண்டாவது போட்டி. அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான். அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.

கடைசிப் போட்டி. எதிரே இருப்பவன் பலமுறை சேம்பியன் பட்டம் பெற்றவன்.

ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது. முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான்.

பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள். “வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்” என்கிறார் குரு.

இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய்வந்திறங்கினான்.
பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான்.

பார்வை யாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள், போட்டியாளர்களுக்கு ஆச்சரியம். அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை. அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான்.

குருவே. நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன் ? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே “ என்றான்
புன்னகைத்தபடியே குரு சொன்னார் “உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள்.

ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய்.

🌻 இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே !

🌻 உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது !”

🌻குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான்.

நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது.

🍊ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது

ஜென்,,,,,

Saturday, January 19, 2019

Free heart. Treatment. Ahmedabad

ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை, ராஜ்கோட்   "பணமே   இல்லாமல் இருதய சிகிச்சை"  என்று பிரபலமாக  உள்ளது,  பணம் செலுத்தும் இடம் என்பதே  இந்த மருத்துவமனையில் இல்லை.

ஒரு இருதய அறுவை சிகிச்சைக்கு, மூன்றிலிருந்து நான்கு  இலட்சங்களுக்கிடையே  செலவு  ஆகும் என்று, நாம் அனைவரும் அறிவோம் ,

ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனை, ராஜ்கோட்,  கடந்த 17 ஆண்டுகளாக    இலவசமாக  எல்லா  இருதய நோய்களையும்    குணப்படுத்தி  வருகிறது.

80 படுக்கைகள் கொண்ட, இந்த மருத்துவமனையில் ஏற்கனவே பத்து லட்சத்திற்கும் அதிகமான  மக்கள்  சோதனை செய்து உள்ளனர்,  மற்றும்  பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விலை உயர்ந்த இருதய அறுவை சிகிச்சைகள்  முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டு  உள்ளது

தன்னலமற்ற அதே சேவை  தீர்மானத்தோடு ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை இப்பொழுது  கஷின்ரா,, அகமதாபாத்தில் , விரைவில் துவங்க போகிறது

இந்த புதிய மருத்துவமனையில், இருதய பிரச்சினைகளை கொண்ட  3 முதல் 18 வயது, குழந்தைகளுக்கு,  இலவச அறுவை சிகிச்சையில்  முன்னுரிமை வழங்கப்படும்

இந்த மருத்துவமனையில் சமீபத்திய மற்றும் நவீன இயந்திரங்கள்,  அனைத்து வசதிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளன .

310 படுக்கைகள்  வசதியுடன், வருடத்திற்கு சுமார் 3000 இருதய அறுவை சிகிச்சைகளை  இலவசமாக செய்ய போகிறார்கள் .

இந்த மருத்துவமனையின்  சேவை  தேவைப்படும்  இருதய நோயாளிகளுக்கு     வழிகாட்டுவதன் மூலம்,  நீங்களும்  இந்த தன்னலமற்ற சேவையில் பங்கு பெற முடியும்

முகவரி :

ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை

ஸ்ரீ சத்ய சாய் மார்க், களவாட  சாலை, ராஜ்கோட் - 360005.

ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை
கஷின்ரா கிராமம், தாலுகா: தாசிசிரோய் , தோள்க  சாலை,
மாவட்டம்: அகமதாபாத் - 382210
தொலைபேசி: 94260 58897/ 99250 34534
மின்னஞ்சல்: saihospital@gmail.com

குறிப்பு :

தயவு செய்து இந்த செய்தியை அனைத்து வாட்ஸாப் குழுக்களுக்கும் பகிர்ந்து 
இந்த சேவையில் , சிறிய அளவில் நம்மால் முயன்ற அளவு  
என கேட்டுக்கொள்கிறோம்

பெண்கள் பற்றிய சில பெருமைகள்....

பெண்கள் பற்றிய சில பெருமைகள்....

எதற்கு வெளியே போகும் போது இவ்வளவு மேக்கப்?

தான் திருப்தியாக வாழ்கிறேன். மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என்று ஊர் உலகத்துக்குக் சொல்ல வேண்டாமா? அழுது வடியும் முகத்தோடு வெளியே போனால், யார் அவளை மதிப்பார்கள்? மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என்ற செய்தியை அழகின் மூலம் தானே சொல்ல முடியும்!.

பெண்ணுக்கு அரசியலில் ஆர்வம் இல்லையா?

யார் சொன்னது? அவர்களுடைய அதிகாரம் தான் வீட்டில் தூள் பறக்கிறதே. அப்படியானால் அவர்களுக்குள் ஒர் அரசியல் குட்டிப் பிசாசு ஒளிந்து கொண்டு இருக்கிறது என்று தானே அர்த்தம்.

பெண் எதற்காக அழுகிறாள்?

அழுகை அவளுக்கு ஆயுதம். மற்றவர்கள் ஒரு விஷயம் குறித்துக் கவனத்தை குவிக்க வேண்டுமென்பதற்காக அழுகையை அவள் பயன்படுத்துகிறாள். அப்படி கவனத்தைக் குவிக்காததால், தனக்கு வலி ஏற்படுகிறது என்பதைச் சொல்லாமல் சொல்கிறாள்

பெண்கள் ஏன் அதிக சென்டிமெண்ட்டாக இருக்கிறார்கள்?

சென்டிமெண்ட் இல்லாமல் அவர்கள் இருக்கட்டும். நீங்கள் (Gents) நாய்படாத பாடு படுவீர்கள். போனால் போகிறது என்று இறைவன் அவளுக்கு ஒரு சிட்டிகை தாய்மையையும் தயையையும் கூடுதலாகக் கொடுத்து இருக்கிறான்.

கடையில் உடையைத் தேர்வு செய்ய ஏன் இவ்வளவு தாமதமாகிறது?

பெண்ணுக்கு எப்போதும் இன்னும் பெட்டரான விஷயம், பெட்டரான ஆடை, பெட்டரான வாழ்க்கை காத்திருக்கிறது என்ற உணர்வு உண்டு. அவள் எப்போதும் தேடுவது தி பெஸ்ட்.

வாழ்க்கை முழுவதும் பெண்கள் போற்றும் விஷயம் என்ன?

நினைவுகள். இனிய மற்றும் துக்க நினைவுகள். அவர்களுக்கு எந்த ஒரு விஷயமும் மறந்து போகாது.தேதி, நாள், இடம் எல்லாம் கூட ஞாபகம் இருக்கும். அது அவர்கள் அடி மனதில் சித்திரமாகப் பதிந்து இருக்கும். எப்போது வேண்டுமானாலும் அந்த நினைவுகளை அவர்கள் மீட்டலாம்.

அவள் பாதுகாப்பாக உணரும் இடம்?

தன் சொந்தவீடு...

ஒரு பெண் அடுத்த பெண்ணின் அழகை கவனிப்பாளா?

கண்டிப்பாக  கவனிப்பாள். ஆனால் வாயைத் திறந்து பாராட்டுவாள் என்றால் அது சாத்தியமில்லை.

பெண்களின் மிகப்பெரிய குறை என்ன?

தன் எண்ணங்களை வெளிப்படையாகபேசாமல் இருப்பது. பல குழப்பங்களுக்கு இதுவே வழிவகுக்கும். தனக்கு இது பிடிக்கும். இது பிடிக்காது என்று தேங்காய் உடைக்கிறார் போல் பேசிவிட்டால் பாதிப்பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

இழப்புகளில் பெண் அதிகம் துவளுவது இல்லையே?

வலி அவள் கூட பிறந்தது. 12 வயதில் தொடங்கும் இந்த வலி அவளை மனரீதியாக உறுதியானவளாகவும் ஆக்கி விடுகிறது. அதனால்வேறு எந்த வலி வந்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் மனத்திண்மை அவளுக்கு வாய்த்து விடுகிறது.

பெண்கள் ஏன் தங்களை ஒல்லியாக வைத்துக் கொள்ள விரும்புகிறாள்?

பெண்ணின் கற்பனைச் சித்திரம் பதினெட்டு வயதோடு நின்று விடுகிறது. அது தான் அவள் மனதில் வாங்கிக் கொண்ட கடைசி சித்திரம். அதில் அவள் ஒல்லியாக கொடி போல, பளபள சருமத்தோடும் இருக்கிறாள். திருமணம் ஆன பின்பும் குழந்தைகள் பெற்ற பின்பும் பழைய சித்திரத்தையே அவள் மீண்டும் பார்க்க விரும்புகிறாள்.

பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்ப்பட்ட காதல் உண்டா?

கண்டிப்பாக உண்டு. இது என்ன தமிழ் சினிமா, ஒருவனை நினைத்து அவனோடு வாழ்க்கை இல்லையென்றால், தன் வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்கு? இது வாழ்க்கை. முதல் காதல் தோற்றுபோய் விட்டது என்று முழுமையாக அவள் நம்பும் வரை அடுத்த காதலுக்குபோக மாட்டாள். அது மட்டும் நிச்சயம். அடுத்த காதலுக்கு போகும்போது இன்னும் கவனமாக இருப்பாள்.

பெண்களுக்கு ஏன் குழந்தைகள் மேல் இவ்வளவு அக்கறை?

தன்னிடமிருந்து வந்திருந்தாலும் தன்னைப்போல் ஆகிவிடக்கூடாது என்ற பயம் பெண்ணுக்கு. தான் அடைந்த தூரம் குறைவு, பெற்ற பெருமைகள் குறைவு, வளர்ச்சி குறைவு என்ற எண்ணம் எப்போதும் அவள் மனதில் ஒடிக்கொண்டு இருக்கும். தன்னை விட தன் குழந்தைகள் ஒரு பிடி மேலே இருக்க வேண்டும் என்ற எண்ணமே இந்தக் அக்கறைக்கு காரணம்.

பெண்கள் போக விரும்பும் ஹாலிடே ஸ்பாட் எது?

அம்மா வீடு இத்தனை இடர்களுக்கு மத்தியிலும் தான் நீந்தி வந்திருக்கிறேன். என் துன்பங்களின் வலிபொறுக்க முடியவில்லை. கொஞ்சம் நான்ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன். எனக்கு உன் மடியைக்காட்டு என்று படுத்துக் கொள்ளத் துவங்கி விடுவாள் பெண்.

தைப்பூச ஜோதி தரிசனம் காண வாரீர்!

தைப்பூச ஜோதி தரிசனம் காண வாரீர்!

உலகில் இரக்கம் எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மக்களுக்கும் உரியது; உலகியலுக்கும் அடிப்படையாக விளங்குவது எல்லா உயிர்களிலும் இயற்கை விளக்கமாய் திகழ்வது தன்னை மேற்கொண்ட வரை இயல்பாக தன்வயப்படுத்தி எல்லா சித்திகளையும் வழங்குவது கொள்கைகளில் மாறுபடும் தத்துவஞானிகளும் "உயிர்இரக்கம்" என்னும் இனிய எளிய தத்துவத்தில் ஒன்றுபடுகின்றனர் உலக அருளாளர்கள் அனைவரும் உயிர் இரக்கமே வலிமை மிக்க ஆற்றல் என்னும் சிறந்த முடிவினை அறிவிக்கின்றனர் மேலும் உயிர்இரக்கம் பன்னெடுங்காலமாக நம் தமிழகத்தில் வழங்கி வரும் இயற்கை தொன்மை நெறியாகும்.

உயிர் இரக்கம் என்னும் ஒளி எங்கும் பரவத் அதற்கென்றே திருஅருட்பிரகாச வள்ளலார் ஆகிய நம் இராமலிங்க பெருமான் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் ஆணைக்கு இணங்க வருவிக்கவுற்று
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் அவதரித்தார்தார்கள்
அவர்கள்

சிதம்பரத்திற்கு அருகில் உள்ளது மருதூர் இராமையாபிள்ளை சின்னம்மையாருக்கும்5.10.1823
(சுபானு புரட்டாசி 21) ஞாயிற்றுக்கிழமை அன்று இராமலிங்க பெருமான் ஐந்தாவது மகவாக அவதரித்தார்கள்
சிறுவயது முதல் சாதாரண குழந்தை போல் அல்லாமல் இறை உணர்வுடன் சாந்த சொரூபத்துடன் காணப்பட்டார்
அருட் குழந்தையாகிய இராமலிங்க பெருமானுடன் சிதம்பரம் கோயிலுக்கு சென்றனர் கோயிலில்திரையை தூக்கிய பொழுது எல்லாம் வெளியாகத் காணப்பெறும் கடவுள் காட்சியை பெருமான் பெற்றார்கள்

சென்னை வாழ்வு🌟
தந்தையின் மறைவுக்குப் பின் குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்தது மூத்த அண்ணன் புராண விரிவுரை செய்து குடும்பத்தை பாதுகாத்து வந்தார் ராமலிங்க பெருமான் அன்னை அண்ணன் முதலான அனைவர் மனமும் மகிழுமாறு வளர்ந்து குமாரப் பருவம் எய்தினாதினார்கள் குடும்பத்தில் யாருக்கும் எவ்விதத் துன்பமும் சலிப்பும் இல்லாத வளர்ந்துவந்தார்கள்

திருவருட்பா பாடுதல்

நம் பெருமான் உயிர் இரக்கமும் கடவுள் பக்தியும் பொங்கித் ததும்பும் செந்தமிழ் பாடல்கள் பலவற்றை தம் ஐந்தாவது வயதிலேயே இயற்றிபாடத் தொடங்கினார்கள்.
அவர்கள் சென்னை கந்தகோட்டம் திருத்தணிகை திருவொற்றியூர் திருமுல்லைவாயில் திருவலிதாயம் திருத்தில்லை முதலான அனைத்து தலங்களையும் வழிபட்டு தலங்களில் எழுந்தருளியிருக்கும் தெய்வங்களை தலைவராகிய கடவுளாகவே கண்டு அனுபவித்து பொழிந்த பாடல்கள் யாவும் கல் நெஞ்சத்தையும் கரைப்பவனவாகும்.

திருமணம்🌟
பெரியோர்களின் வற்புறுத்தலாம் உயிர் இரக்கத்தாலும் பெருமான் தமது தமக்கை மகள் தனக்கோடியைத் திருமணம் செய்து கொண்டார்கள் தமது துணைவியார் அருள் நெறியில் பழகி வருமாறு செய்தார்கள் சில ஆண்டுகளுக்குப்பின் அவர்களை தம் சுற்றத்தாருடன் சென்னையில் இருக்குமாறு பணித்தார் மற்றும் அன்பர்களுடன் தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் பலவற்றையும் வழிபட்டார்கள் சொற்பொழிவுகள் செய்து உயிர் இரக்கத்தையும் கடவுள் பக்தியையும் மக்கள் உள்ளத்தில் மலரச் செய்தார்கள்
புலால் உண்ணும் வழக்கத்தை
கைவிடுமாறு வலியுறுத்தி பேசினார்கள் இவ்வாறு பல இடங்களிலும் புனித பயணம் செய்தபின் கடலூரை அடுத்த கருங்குழி என்னும் ஊரில் வேங்கட ரெட்டியார் என்னும் அன்பர் இல்லத்தில் தங்கி இருந்தார்கள்.

ஜீவகாருண்ய திருநெறி

வள்ளல் பெருமான் செடி கொடி முதலான அனைத்து உயிர்களிடத்தும் சகோதர ஒருமையும் உரிமையும் கொண்டு வாழ்ந்து வந்தார்கள் உயிர்களுக்கு பசி கொலை தாகம் பிணி இச்சை எளிமை பயம் முதலியவற்றால் உண்டாகும் துன்பங்களை நீக்கி அதனால் உண்டாகும் கடவுள் விளக்கத்தையும் கடவுள் இன்பத்தையும் பெறுவதில் ஒரு முழுமையை அடைந்தார்கள் அப்போது அவர்கள் உடம்பு இயற்கை உடம்பாக அருள் உடம்பாக ஒளி உடம்பாக வேதிக்கப்பட்டது அவர்கள் நடந்தால் அடிச்சுவடு உண்டாவதில்லை சூரிய ஒளி முதலியவற்றால் அவர்களுக்கு நிழல் உண்டாவதில்லை  அவர்களை ஒளிப்படம் (photo) எடுக்கபலமுறை பலர் முயன்றும் அவர்கள் அணிந்திருந்த வெண்ணிற ஆடைகள் மட்டுமே ஒளிப்பட தகட்டில் பதிவாயின அவர்கள் உடம்பில் அழுக்கு வியர்வை நரை திரை பிணி மூப்பு இறப்பு முதலியன இல்லை உணவு உறக்கம் முதலியன சிறிதும் தேவை இல்லாத நிலையில் அவர்கள் உடம்பு விளங்கியது அவரது திருமேனி ஒரு சமயம் தோன்றும் ஒரு சமயம் தோன்றாது இவ்வாறு அவர்கள் பால் விளங்கிய ஒளிவண்ணச் சிறப்புகளைக் கண்ட சான்றோர்களும் அறிஞர்களும் பக்தர்களும் யோகிகளும் பெரியோர்களும் அன்பும் வியப்பும்ஒருங்கே அடைந்து அவர்களை அடுத்து வாழத் தொடங்கினார்கள்.

சன்மார்க்க சங்கம் அமைத்தல்

வள்ளல் பெருமான் உயிர்இரக்க நெறி உலகெங்கும் பரவ தமது அன்பர்கள் அனைவரையும் சேர்த்து சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள் புலால் மறுத்த அனைவரையும் சாதி சமய மத இன ஆண் பெண் வேறுபாடு இன்றி சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
உயிர் இரக்கமே வடிவான கடவுளை உயிர் இரக்கமே வடிவாய் வழிபட வேண்டும் அப்பொழுது அருள்விளக்கம் உண்டாகும் அருள் விளக்கத்தால் எல்லாவகை உடல் நோய்களும் மனநோய்களும் மாறும்; ஊழ்வினை துன்பம் நீங்கும்; கல்வி செல்வம் தொழில் வளர்ச்சி பதவி உயர்வு முதலான இவ்வுலக இன்பங்கள் தடையில்லாமல் உண்டாகும் அருள் விளக்கம் நிறைவு பெறும் பொழுது உடம்பின் அணுக்கள் அருள் ஒளியால் மாற்றமடைந்து நரை திரை பிணி மூப்பு இறப்பு முதலியன இல்லாத ஒளி உடம்பு வாய்க்கும். ஒளி உடம்புடன் எல்லா உயிர்களிலும் கலந்து கொண்டு கடவுளை போல பேரின்பத்தோடு மரணம் இல்லாமல் வாழலாம். இதுவே கடவுள் கற்பித்த சமரச சுத்த சன்மார்க்க நெறி -ஒளிநெறி பெருநெறி -எல்லா சமயங்களுக்கும்- எல்லா மதங்களுக்கும்- எல்லா காலங்களுக்கும்- எல்லா உலகங்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் பொதுவான இயற்கை திருநெறி' என்று சன்மார்க்கத்தை வள்ளல் பெருமான் வரையறுத்து உபதேசித்தார்கள்.

திருஅருட்பா வெளியீடு
வள்ளல் பெருமானுடைய  நன் மாணவர்கள் பலருள் தலைசிறந்தவர் தொழுவூர் வேலாயுதனார் அவர்கள் பலர் வள்ளற்பெருமான் பாடிய இனிய எளிய அருட்பாக்கள் அனைத்தையும்வள்ளற் பெருமான் கருத்தை உணர்ந்து தொகுத்து ஆறு திருமுறைகளாக வகுத்தார்கள் அவற்றுள் திருஅருட்பா முதல் நான்கு திருமுறைகள் சன்மார்க்க சங்கம் சார்பில் 1867ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது ஐந்தாவது ஆறாவது திருமுறைகள் பிறகு வெளியிடப்பட்டன.

அருள் நிலையங்கள்
உயிர்இரக்க திருநெறியை விளக்குவதற்கு வள்ளற்பெருமான் சத்திய தருமசாலை சத்திய ஞானசபை சித்திவளாகம் என்னும் மூன்று அருள் நிலையங்களை ஏற்படுத்தினார்கள் இவற்றுள் சத்திய தருமசாலை பசி நீக்குதல் என்னும் பேர் அறத்தை நடைமுறைப்படுத்தி காட்டுவது சத்தியஞானசபை எல்லா உயிருக்கும்.
உயிருக்கு உயிராக பெரும் தயவே  வடிவாகி கடவுள் விளங்குகிறார் என்னும் இயற்கை உண்மையை விளக்குவது .
சித்திவளாகம் உயிர்இரக்கதின் முடிவான சித்திநிலை. கடவுளைபோல எல்லாம் செய் வல்ல திறன் எல்லாம் அறியும் முழு உணர்வு முதலியன விளங்க எல்லா உயிர்களிலும் கலந்து மரணமில்லாமல் வாழுதல் என்பதை அறிவிப்பது.

சத்திய தருமசாலை
வள்ளல் பெருமான் வடலூர் 1867 ஆம் ஆண்டு வைகாசி திங்கள் 11 ம் நாள் சத்திய தருமச்சாலையை துவக்கினார்கள் வளர்ஒளிவிளக்கு(அகண்ட தீபம்)
அமைத்து கடவுளை ஒளி வடிவில் வழிபடும் நெறியை கற்பித்தார்கள் பிறகு தாம் வரைந்த ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற பொது வேதத்தை உயிர்இரக்க பயிற்சி செய்யும் முறையை விரிவாக உபதேசித்து அருள் செய்து அன்றைய தினம் முதல் மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் பேருக்கு உணவளித்தார்கள் அன்று தொடங்கி அற்றார் அழிபசி தீர்த்தல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது அதன் காரணமாக 1867ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் 11 ம் நாள் வள்ளற் பெருமான் இயற்றிய அடுப்பு அணையாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது இன்று வரையும் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது1870 வரை பெருமான் சத்திய தருமசாலை தங்கியிருந்தார்கள்.

சத்திய ஞானசபை 🌟
மக்களின் வயிற்றுப்பசியை தனித்த வடலூர் வள்ளலார் மக்களின் அறியாமையை நீக்கி அறிவுப்பசியை தூண்டிவிட வேண்டும் என்று விரும்பி தனது சமரச சன்மார்க்க வேதம் பரவுமாறும்
உயிர் இரக்கத்தின் உயர்நிலை அனுபவங்களை வடலூர் என்ற புனித பூமி அறிவை விளக்குவதால் வடலூரை பெருமான் உத்தர ஞான சிதம்பரம் உத்தர ஞான சித்திபுரம் என்று அழைத்தார்கள் உத்தர ஞான சிதம்பரம் ஆகிய வடலூரில் சத்திய ஞான சபை என்னும் என்ற அற்புதமான தெய்வ நிலையத்தை பார்வதிபுர அன்பர்கள் கொடுத்த மனை பரப்பில் அனைவரும் சமரசமாக கலந்து வழிபாடு செய்யத்தக்க அமைப்புடன் சத்திய ஞான சபையை தாமரை வடிவில் எண்கோணமாக அழகுற அமைத்து
25 .1. 1872 பிரஜாபதி தைத் திங்கள் 13-ஆம் நாள் வியாழக்கிழமை பூச நாள் அன்று முதல் முதலாக சபையில் வழிபாடு தொடங்கப் பெற்றது அனைவரும் அருட்பெரும் ஜோதி தரிசனத்தைக் கண்டு களித்தனர்
அதில் ஏழு திரைகள் விடப்பட்டுள்ளன அருட்பெரும் ஜோதியை மறைத்துக் கொண்டிருக்கும் வெவ்வேறு ஏழு திரைகளும் தத்துவ படங்கள் நம்மிடமுள்ள ஞானம் ஆகிய ஏழு திரைகள் நீங்க பெற்றால் அருட்பெரும் ஜோதியை தரிசிக்கலாம் என்பதை இது உணர்த்துகிறது வள்ளலார் தமது அருட்பெருஞ்ஜோதி அகவலில் இத்தத்துவத்தை எடுத்து கூறியுள்ளார்

பூச நன்னாளில் கருந்திரை, நீலத்திரை, பச்சைத்திரை, செம்மை திரை, பொன்மை திரை, வெண்மைதிரை,கலப்பு திரை என்ற 7திரைகளை தைப்பூச நன்னாளில்நீக்கி

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆகிய இறைவனை

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற மகா மந்திரத்தை உச்சரிக்க செய்து அருட்பெருஞ்சோதியை ஜோதி வடிவில் தரிசனம் செய்தார்கள்.
செய்வித்தார்கள்.

சித்திவளாகம்
வள்ளல் பெருமான் 1870 ஆம் ஆண்டு முதல் கடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் என்னும் ஊரில் ஒரு குடிலில் தங்கி இருந்தார்கள் சித்திவளாகம்(உயிர் இரக்கத்தால் உண்டாகும் அருள் சித்திகளை வழங்கும் இடம்)என்று பெயரிட்டார்கள்.
1873 ஆம் ஆண்டு ஐப்பசி திங்கள் 7 ஆம் நாள் மேற்புறமும் கீழ்புறமும் உடைய சன்மார்க்கக் கொடி கட்டி ஒரு சொற்பொழிவு செய்தார்கள் அப்போது என்னை ஏறா நிலைமிசை ஏற்றியது யாதெனில் தயவு தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது என்று கூறி உயிர் இரக்கமே தம்மை கடவுள் நிலைக்கு உயர்த்தியது என்று அறிவித்தார்கள்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
என்னும் அருள் மந்திரத்தை வெளிப்படையாக உபதேசித்தார்கள் பெரும் தயவு மயமான பேரழிவை கடவுள் இதுவே பேரின்பம் என்று மந்திரத்தின் பொருளையும் விளக்கி உரைத்தார்கள்

அருட்பெரும் சித்தி

திருஅருட்பிரகாச வள்ளலார் சித்தி வளாகத்தில் வழிபாட்டுக்காக ஒரு திருவிளக்கை கொண்டிருந்தார்கள் அதனை ஸ்ரீமுக ஆண்டு 1873 கார்த்திகை மாதம் முழுநிலவு நாளில் சித்தி வளாகத்தின் வாயிலில் வைத்து இதைத் தடைபடாது ஆராதியுங்கள் கடவுள் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்து உண்மை அன்புடன் வழிபடுங்கள் நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்று தமது அருட்பேர் ஒளி நிலையை அறிவித்தார்கள்.

பெருமானின் அறிவுரை
திருஅருட்பிரகாச வள்ளலார் ஆகிய நம் இராமலிங்க பெருமான் சன்மார்க்க சங்கத்தார் பெரும் தயவோடு பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்
சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியம் உயிர்இரக்கம் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை இதற்கு சாதி சமய மத உலகியல் ஆசாரங்களிலும் பெரும் வெறுப்பு விருப்புகளேமுக்கிய தடைகள் இவைகளை அறவே கைவிட்டு உயிர் இரக்கத்தையே முக்கிய லட்சியமாகக் கொள்ள வேண்டும்
காலம் தாழ்த்தாது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல பார்க்கின்ற பாவனையை வரவழைத்து கொள்ள வேண்டும்
என்று அறிவுறுத்தினார்

திருக்காப்பிட்டுக் கொள்ளுதல்🌟
வள்ளல் பெருமான் தம் அருள் உடம்பை மக்களின் புறக்கண்களுக்குத் தோன்றாமல் மறைத்துக்கொண்டு உயிர்களுக்கு உதவி செய்வதே சிறந்தது என்று முடிவு செய்தார்கள் அதனால் 1874ஆம் ஆண்டு தைப்பூச நாளில் இரவு 12 மணிக்கு சித்தி வளாகத்தில் அமர்ந்து கொண்டு நான் உள்ளே இருக்கப்போகிறேன் பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள் ஒருகால் கதவைத் திறந்து பார்த்தால் வெறும் வீடாக இருக்கும் படி ஆண்டவர் அருள் செய்வார் என்னை காட்டி கொடுக்க மாட்டார் என்று கூறி கதவுகளை திருகாப்பிட்டு கொண்டார்கள் சில நாட்களுக்குப் பின் அவர்கள் வள்ளலாரின்ஆணையை மீறி சில அரசு அதிகாரிகள் கதவை திறந்து பார்த்த பொழுது வெறும் வெளியாக அறை காட்சி தந்தது
நம்பெருமான் மரணமிலாப் பெருவாழ்வு பெற்று உலகின் கண்களுக்கு பெரும்பாலும் தோற்ற படாமல் சித்தி வளாகத்தில் இருந்த வண்ணம் திருவருட் செங்கோல் செலுத்துகின்றார்கள் அரசியல் அறிவியல் அருளியல் முதலிய அனைத்துத் துறையிலும் உள்ள தன்னலமற்ற தலைவர்கள் அனைவரையும் கருவியாகக் கொண்டு நமது வள்ளற் பெருமான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்தை சன்மார்க்க உலகமாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் உயிர்க்கொலையும் புலைபுசிப்பும்நீக்கி உயிர்இரக்கத் திரு நெறியில் பழகுவோர் பெருமானை வழிபடுங்கால் ஒரு சமயம் ஒளி உடம்புடன் தோன்றி உதவிகள் செய்தும் ஒரு சமயம் ஜோதி வடிவில் தோன்றி மகிழ்வித்தும் எப்போதும் வான் வடிவமாக இருந்து அறிவை விளக்கி வருகிறார்கள்
என்பது
சத்தியம் சத்தியம் சத்தியம்

வாழ்க வள்ளற் பெருமான்
திருவடிகள்
☀☀☀☀☀
வாழ்க உயிர்இரக்கத்திருநெறி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
தாழ்மையுடன்
அருள் நாகலிங்கம்
மாநிலத் துணைத் தலைவர் வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
ஈரோடு9095905000