Tuesday, January 23, 2018

நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள

்!

💊 முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் ---
கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

💊 வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் ---
கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

💊 கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் ---
ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.

💊 காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் ---
காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.

💊 கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் ---
கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.

💊 உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் ---
அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.

💊 கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்--
உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.

💊 முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் ---
உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனைக் குறைக்கவேண்டும் என அர்த்தம்.

💊 தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் ---
அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.

💊 உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் ---
உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப்பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம்.

💊 தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால் ---
உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.

💊 கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் ---
இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.

நல்ல பதிவு. அனைவருக்கும் பகிருங்கள்.

*தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு...! சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை என்ன ?

💫 *தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு...! சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை என்ன ?*
_____________________

💫 ஒரு பவுன் தங்கசெயினுக்கு
1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்...!

💫 இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால்
8 தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக
6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது...!

💫 ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள். அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்...!

💫 இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்...!

💫 ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள் ! ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்...!

💫 ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ? நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...!

💫 இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ? பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ? கணக்கு போட்டு பாருங்கள்...!

💫 என்ன தலை சுத்துதா ? எனக்குள் ஒரு ஆதங்கம். ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்...!

💫 நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசையுள்ள நல்ல உள்ளங்களே ! உங்கள் ஆதங்கத்தை காட்ட அதிகப்படி ஷேர் செய்யவும். எதுவும் மக்களால் முடியும்...!

சாந்தி  தவம

*💓்💓*:
✨⚡✨⚡✨⚡✨⚡

நமக்கு ஒரு பதினைந்து வயது இருக்கும் போதே மூலாதாரத்திற்கு ஆற்றல் வந்து விடுவதால்
நாம் முழுமையாய் தவம் கற்கும் காலம் வரை அங்கேயே (தாய்வீடு) இருந்ததால் புது இடத்திற்கு போனால் ஆக்கினை, துரியம்.இன்னும் பிற தவங்கள் மனதில் (உயிரில்) பதிகிறது . வழக்கமாய் அங்கேயே இருப்பதால் சாந்தி தவத்தின் போது நாம் அங்கேதான் இருக்கிறோம். புது இடம்போல் பழகிய இடம் தோன்றாது.

யோகசாதனையின் ஆற்றல் மிகுதியின் காரணமாகவோ, உணவின் காரணமாகவோ, ஆராய்ச்சியின் காரணமாகவோ, அல்லது கோள்களின் நிலை காரணமாகவோ, தவக்கனல் மிகுந்தால், அதை உடனடியாக உணர்ந்து, தணித்துக் கொள்ளவும், அந்த தவக்கனலின் மிகுதியை உடல் நலனுக்கும், உள்ளத்தின் நலனுக்கும் பயனாக்கி கொள்ளவும் சாந்தி தவம் உதவுகிறது.

சாந்தி தவத்தினால் உடல் வெப்பம் தனியும், நரம்பு மண்டலம் அமைதி அடையும். தவத்தின் போது முழுமையான அனுபவம் ஏற்படும். உடலுக்கு மூலப்பொருளான வித்துக் குழம்பு பால் சுரப்பியில் தேங்கி கிடப்பதால் சாந்தி தவத்தால் தவ ஆற்றல் உடல் ஆற்றலாக மாறும்.

நாம் சாந்தி தவத்தை முழுமையாக செய்தால் முதலில் கண்கள் குளிர்ச்சி பெரும்.
1 .சாந்தி தவத்தால் நிலத்தை சார்ந்த ஆராய்ச்சி பற்றிய அறிவு அதிகமாகிறது.
2 .உடல் வலி, காய்ச்சல், அசீரணம் போன்ற நோய்கள் நீங்குகின்றன.
3 .உடலில் உயிரின் இயக்கம் சீராகிறது.
4 .உடல் சக்தி மனோ சக்தியாகவும், மனோ சக்தி உடல் சக்தியாகவும் மாற்றி பயன் பெறலாம்.

ஆரம்ப பயிற்சியாளர்கள் ஒவ்வொரு வேளை சாப்பிட்ட பிறகும் மூன்று நிமிடம் மூலாதாரத்தை கவனிக்க வேண்டும். இதற்கு உட்கார்ந்து தவம் செய்ய வேண்டும் என்பதில்லை. சாப்பிட்டு முடித்தபின் அடுத்த அடுத்த காரியங்களை பார்த்துக்கொண்டே, நினைவை மட்டும் மூலதாரத்தில் வைத்திருக்க வேண்டும்.

மூலதாரத்திளிருந்து உணர்வு மேலெழுப்பப் பெற்ற உணர்வாளர்களுடைய உயிர் ஆற்றலானது சில சூழ்நிலைகளுக்கு உள்ளாகும் போது சிதைவையும் , இழப்பையும் ஏற்க வேண்டி வரும். அவை :
1 . மாத விலக்கில் இருக்கும் பெண்களின் அருகாமை
2 . நாயின் அருகாமை
3 . பன்றியின் அருகாமை மற்றும்
4 . பிணத்தின் அருகாமை. பிணத்தில் பக்கத்தில் போக கூடாது.
ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், இந்த மாதிரி சீவ காந்த சிதைவு நிலைகளை எதிர் கொள்ள வேண்டி வரும் போது நாம் சாந்தி யோகத்தில் இருந்து கொண்டால் சீவ காந்த சிதைவு ஏற்படாது.
சீவ காந்த சிதைவு என்பது நாய், பன்றி, பூனை, ஆந்தை, கோட்டன் , வவ்வால் போன்ற உயிரினங்களில் உண்டு. அதை வளர்ப்பதிலும் , தொடுவதிலும் , யோகிகள் தவிர்த்தே ஆக வேண்டும்.

சீவகாந்த உறுதிநிலை அருகம்புல், வேம்பு, துளசி, பசு, யானை, மயில், மான், குழந்தை, , நவரத்தின கற்கள், வெள்ளி, பொன், பெண்களிடத்திலும் அதிகம் இருக்கும்.

முகத்திலோ, கண்ணிலோ சூடு தெரியலாம். ஜூரம் வரலாம். வயிற்று வலி, வயிற்று பொருமல் போன்ற உஷ்ண வியாதிகள் வரலாம். அப்படி வந்து விட்டால், உடனடியாக சாந்தி யோகம் கொடுத்து விட வேண்டும்.
சாந்தியை பல காலம் செய்வதால் எந்தப் பிரச்சினையும் வராது.
மனதையும், உடலையும் அமைதி படுத்துவதால் தான் அதற்க்கு சாந்தி தவம் என்றே பெயர்.

சாந்தி தவம் செய்வதால் உடல் குளிர்ச்சி அடையலாம் .
உடல் செல்களின் காந்த துருவ இணைப்பு ஒரு ஒழுங்குக்கு வரும். நிலைக்கும்.
இதனால் நாள் பட்ட கர்ம நோயும் தீரும்.
கர்ம நோயை எதிர்க்க சாந்தி யோகம் செய்வதென்றால் தொடர்ந்து செய்து வர வேண்டும். தினந்தோறும் செய்ய வேண்டும். இரண்டு வேளையும் செய்து வர வேண்டும். மூன்று மாதம் செய்து வர வேண்டும். அதற்குள் அந்த நோயை அகன்று விடும். இல்லையென்றால் இன்னும் மூன்று மாதம் நீடித்து கொள்ள வேண்டும். இக்காலகட்டத்தில் மேல்தவம் எதுவும் செய்யக் கூடாது.

மூலாதாரம் மண்ணுக்குரிய மையமாகையினால்,
சப்த தாதுக்களில் மண்ணுக்குரிய வித்துவின் உற்பத்தி அதிகமாகும்.
அதனால் பால் உணர்வுகள் கூடுதலாகும்.
பால் உறவில் வல்லமை கூடும்.
இவற்றை சமாளித்து கொள்ள கூடிய அறிவு பலமும்,
குணசிறப்பும் ஏற்கனவே பெற்றிறுக்க வேண்டும்.
பால் உணர்வில் வல்லமை இன்மையை போன்ற
பலகீனகங்களையும் இந்த தொடர்ந்த சாந்தி யோகம் சரிப்படுத்தும்.மலட்டு தன்மை கூட சாந்தி யோகம் சரிப்படுத்தும்.
பால் உணர்வு கருவிகளுக்கு பக்கத்தில் மூலதாரம் இருப்பதால், பால் உணர்வு வெறியும்  தவம் தொடர்ந்து செய்வதால் உண்டு பண்ணக் கூடும்.
சாந்தி யோகத்தால் பெரிய நன்மைகளையும் உண்டு
பண்ணிக் கொள்ளலாம் அல்லது கஷ்டங்களை நீக்கிக் கொள்ளலாம்.

*💓வாழ்க வளமுடன்💓*

முருகனை பற்றிய வித்தியாசமான ஆய்வு ......  

சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை
பற்றிய வித்தியாசமான ஆய்வு ......
 
வாசித்து பாருங்கள் .... வியந்து போவீர்கள் .......

ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள்.
தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு. வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூதஉடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

’சரம்’ என்றால் மூச்சு. ’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது இவரது தத்துவம். சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற
சிறப்புப் பெயரும் உண்டு. மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது; சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான் முருகன் பிறவான்; இறவான்...’ என்று அருணகிரி நாதரால் பாடப் பெற்றார்.

அகத்தியர், போகர், ஔவையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள். உலகில் முருகனை அறியாத
தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலும் இல்லை. முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல, மனிதனாக இருந்தவர் மகானாக மாறி இருக்கிறார்.

"தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய நமக்கு இன்னும் ஞானம் போதாது இருப்பினும்
அவருக்கு மனைவியர் இரண்டு பேர் எதற்கு என்பதை இந்த பதிவில் பார்ப்போம் .அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும். மகான் ஸ்ரீமத்சத்குரு சாந்தானந்த சுவாமிகள் தன் கந்தகுரு கவசத்தில் சொல்வதினை பாருங்கள்.

"நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்
பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்.
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா"

சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள ஒரு மைய நரம்பு. நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம் இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பினைந்து உள்ளன. அந்த மையமே சுழுமுனை என்பது
ஆகும். இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன.

இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்

1.நெற்றி (பிரம்மந்திரா)
2.தொண்டைக் குழி (ஆங்ஞை)
3.மார்புக்குழி (விசுத்தி)
4.தொப்புள் குழி (மனிப்புரம்)
5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)
6.மலக்குழி (மூலாதாரம்)

இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இனைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும். இந்த சுழுமுனை புருவமுடிச்சிலிருந்து தலையில் விரிந்து பின் குவிந்து ஒடுங்குகிறது இந்த தலைப்பரப்பினை பெரியோர்கள் சாஹஸ்ரா எனவும் அர்ஸ் எனவும் அழைப்பர். மருத்துவர்களின் லோகோவான கீழுள்ள படத்தினைப் பார்த்தால் இது எளிதாக புரியும். முருகன் கையிலுள்ள வேலும் இந்த
சுழுமுனை குறியீடே. வேலின் குவிந்த பரப்பு நமது நெற்றியையும் வேலின் கீழுள்ள தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும் சுழுமுனை கோடாகவும் உள்ளது. மருத்துவர்களின் லோகோவில் இடது
புறமாகவும் வலது புறமாகவும் சுழுமுனையைப் பின்னிப் பினைந்து செல்பவை நமது அவயங்கள். வலது புறம் இருப்பது பிங்கலை இடது புறம் இருப்பது இடகலை.இதைத்தான் கந்தகுருகவசத்தில் ஸ்ரீமத்
சத்குரு சாந்தானந்த சுவாமிகள் சொல்லுகிறார்.

"இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்"

எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள அவயங்களை இயக்கி இயங்கச் செய்வது இந்த
சுழுமுனையே சுழுமுனை தத்துவத்தினை அறிந்து கொண்டால் எல்லாம் வல்ல இறைவனையும் அறிந்திடலாம் குண்டலினி சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழுமுனை முடிச்சான நெற்றிப் பரப்பேதான். ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன் உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன்
உள்ளான். இதையே கந்த குரு கவசத்தில் இப்படி சொல்லுகிறார் சதானந்த சுவாமிகள்

"உள்ளொளியாய் இருந்து
உன்னில் அவனாக்கிடுவான்
தன்னில் உனைக்காட்டி
உன்னில் தனைக்காட்டி
எங்கும்  தனைக்காட்டி
எங்குமுனைக் காட்டிடுவான்"

சுழுமுனையைப் பற்றி தெரிந்து கொண்டாயிற்று இன்னும் தலைப்புக்கு வரவில்லையே என திட்ட வேண்டாம். ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே முருகன்.இடகலை பிங்கலை என இடப்புறமும்
வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி, தெய்வானை. ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே. ஆனால், மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.

இறுதியாக ஒன்று கடவுள் ஒருவரேஅவர் எவராலும் பெறப்படவும் இல்லை. அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை. எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர வேறொன்றும் இல்லை. முருகன் என்பது மனிதன் இல்லை சத்தம் ஓசை சிவன் படைப்புக்களை சத்தமாகி முருகன் ஊடாகவே உருவாக்குகிறான் உருவாக்கி கொண்டு இருக்கிறான் அதனாலே ஓசையனசத்ததின் ஊடாக உருவாகும் தமிழ் மொழிக்குகடவுள் முருகன் என்றார் . எமது உடலில் இதயத்தில் சத்தம் கேட்டுக்கொண்டு இருக்கிறது அது சத்தம் ஓசை முருகன் அந்த சத்தம் எமது இதையத்தில் இல்லை என்றால் உயிர் இறந்து விட்டது உயிர் இருந்தால் தான் படைப்பு உருவாகும் .

ஒரு மொழிக்கு ஓசை கொடுப்பதை என்றால் உலக அறிவான தகவல்களை ஆவனப்படுத்த வேண்டும் எனவே ஆவணப்படுத்தாத அறிவான தகவல் மனித ஆயுலுடன் முடிந்து போகும் எனவே எனவே என்னதான் ஓசை படைப்பாக இருந்தாலும் அதை ஆவணப்படுத்தாட்டி வெறும் ஓசையாக அதன் அர்த்தம் கருத்து தெரியாத வெறும் ஓசையாகவே உணர்வோம். எனவே ஆவணப்படுத்தும் எழுத்து வடிவத்தை
பிள்ளையார் என்று அழைத்தார்

. சிவன் அணுத்துகள் atom , என்பதை உணர்ந்த அதத்தியர் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும் சிவனை சிவசத்தியன சிவலிங்கத்தை வழிப்பட சிவ பக்தர்கள். முதல் தமிழ் சங்க தமிழ் மொழி ஓசை ஊடக உருவாக்க பட்டமையல் ஓசை முருகன் என்றனர் நடராசர் கையில் உள்ள உடுக்கு ஓசையை குறிக்கிறது. முருகனிடம் உள்ள வேல் மனித மூளைக்குல் இருக்கு செவ்வேல் குறிக்கும் அதவது pinnal இதில் இருந்துதான் மெலட்னோன் என்ற சுரப்பு இரவு சுரந்து உடலை சமநிலை சீர் செய்கிறது. இதை மூன்றாம் கண் என்றும் சொல்வார்கள். இதனாலே தான் சிவனின் மூன்றாம் கண்ணில் இருந்து முருகன் தோன்றினார்கள் என்றும் சொல்கிளார்கள் சிவன் மனித உடலில் தலையில் உருவாக்கி இருப்பது தான் செவ்வேல் இதை முருகனுக்கு சூரனை அழிக்க சக்தி கொடுத்தார் என்பதன் பொருள் அறியாமை இருளில் மனிதன் மிருகங்கள் போன்று வாழமல் மனித மூளையில் உள்ள செவ்வேலை பயன்படுத்தி அறியாமை என்ற சூரனை வதம் செய்து அறிவுடன் வாழ செல்லும் வரலாறு விந்து கட்டுதல் என்றொரு பயிற்சி நிலை யோகத்தின்கண் உள்ளதுதான், என்ற உண்மையும், அது சாதாரண மக்களுக்கு சொல்லப்பட்டதல்ல என்றும் உணர்வதுடன் அதன் தன்மையையும் உணர்ந்திடலாம்.

ஞானம் பெறுதலின் ஒரு படிநிலையே விந்து கட்டுதலாகும் என்றும் அதுவே முடிவானது அல்ல என்றும் அதை மூன்றாம் படி நிலையாகிய யோகநிலைதனை ஆறுமுகனார் அருளினால் பெற்றிட்ட யோகிகளால்தான் செய்திட இயலும் என்றும் அறியலாம். பெண்பாலிலுள்ள சுரோணிதமும், ஆண்பாலிலுள்ள சுக்கிலமும் சேர்ந்து கருத்தரித்து உடம்பும் உயிரும் உண்டாகிறது. தந்தையிடமிருந்து உயிரும் தாயிடமிருந்து உடம்பும் தோன்றினாலும் தோன்றிய அந்த உடம்பும் உயிரும், நூறு ஆண்டுகள் வரை நட்புடன் இருந்து உடம்பும் உயிரும் பிரியாமல் நட்போடு வாழ்ந்தாலும் ஒரு காலத்தில் எப்படியாவது உடம்பை விட்டு உயிர் பிரிந்து போய் விடுகிறது. இதுவே இயற்கையின் நியதியாகும். பரு தேகமான ஆணும், பெண்ணும் கூடினால், உயிரும் பிரிந்துப் போகக்கூடிய பரு உடம்பும் உண்டாகிறது. ஆனால் சூட்சும தேகத்தை உண்டாக்கவல்ல இடது கலையாகிய பெண்ணும், வலது கலையாகிய ஆணும் சேர்ந்தால் சூட்சும தேகம் உண்டாகும்.

ஆனால் இடது கலையும் வலது கலையும் ஒருபோதும் சாதாரணமாக ஒன்று சேராது. ஆனால் ஒன்று சேராத இடது கலையையும் வலது கலையாகிய சூரிய கலையையும் சுழிமுனையாகிய புருவ மத்தியில் ஒன்று சேர்த்தால் அழிகின்ற பரு உடம்பும் அழியாது, அழியாத சூட்சும தேகமும் தோன்றும், உயிரும் தோன்றி எல்லாம் ஒன்றினுள் ஒன்றாய் கலந்து என்றும் அழிவற்ற மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்று மாறாத இளமை கொண்ட ஒளிதேகமாக மாறி விடும். இந்த மாபெரும் இரகசியத்தை முதலில் அறிந்த முதுபெரும் தலைவன் முருகப்பெருமான் தான் பெற்ற அந்த பேரின்பத்தை தனது சீடனான அகத்தியம் பெருமானைச் சார்ந்து சேராத இடது வலது கலைகளை சுழிமுனையில் ஒடுக்கி சேர்ந்திட செய்து அகத்தியம் பெருமானையும் மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்தார் என்பதையும் அறியலாம்.

யஜுர்வேதம்- கர்ப்போபநிஷதம்


-

-
3. ருதுகால சம்போகத்தால் ஓரிரவு கழிந்ததும் கருவானது கலங்குகிறது. ஏழிரவுகளில் நீர்க்குமிழி போன்ற உருவத்தை அடைகிறது.
-
அரை மாதத்தில் பிண்டமாகிறது.ஒரு மாதத்தில் அது கடினமாகிறது. இரண்டு மாதங்களில் தலை தோன்றுகிறது. மூன்று மாதங்களில் பாதங்களின் பகுதிகள் தோன்றுகிறது.
-
நாலாவது மாதத்தில் மணிக்கட்டு வயிறு,இடுப்பு முதலிய பிரதேசங்கள் உண்டாகின்றன. ஐந்தாவது  மாதத்தில் முதுகு உட்பட பின்புறம் எலும்பு உண்டாகிறது.ஆறாவது மாதத்தில் வாய் மூக்கு கண்கள் காதுகள் உண்டாகின்றன.
-
ஏழாவது மாதத்தில் ஜீவனுடன் கூடுகிறது. எட்டாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும் பூர்த்தியாகின்றன. தந்தையின் வீர்யம் அதிகமாக இருந்தால் புருஷனாகவும்,தாயின் வீர்யம் அதிகமாக இருந்தால் பெண்ணாகவும்,இரண்டும் சமமாக இருந்தால் அலியாகவும் ஆகிறது. மனக்லக்கம் ஏற்பட்டால் குருடர்களாகவும்,கூனர்களாகவும்,முடவர்களாகவும் பிறக்கிறார்கள். ஒன்றுக்கொன்று வாயுவால் பீடிக்கப்பட்டு சுக்லம் இரண்டு பட்டால் இரட்டைப்பிள்ளைகள் பிறக்கின்றனர்.
-
பஞ்சபூத வடிவான சரீரம் ஸாமர்த்தியமாகும் போது ஐந்து ஞானேந்திரியங்களும் புத்தியும் அதனால் கந்தம்,ரஸம்,முதலியவற்றை அறியும் திறமையும் உண்டாகின்றன. அப்போது அந்த ஜீவன் அழியாத அக்ஷரமாகிய ஓங்காரப்பொருளை சிந்திக்கிறான். அந்த ஓரெழுத்தை உணர்ந்ததும் (பஞ்சபூதங்களும், மனம்,புத்தி,அகங்காரம்) என்ற எட்டு பிரகிருதிகளும் அவற்றின் பதினாறு விகாரங்களும் தேகத்தில் அதை உடைய தேகியாகிய ஜீவனுடையவை ஆகின்றன என்பதும் உணரப்படுகிறது.
-
தாயார் உண்டதும் பருகியதும் தாயுடன் இணைந்த நாடிகளில் பரவி அதன்மூலம் குழந்தையின் பிராணன் திருப்தியடைகிறது. பிறகு ஒன்பதாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும் ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் பரிபூரண நிலையை எய்துகின்றன. அப்பொழுது அந்த ஜீவனுக்கு முந்திய பிறவி ஞாபகம் உதிக்கிறது. தான் செய்த புண்ணிய செயல்களையும் பாவச் செயல்களையும் உணர்கிறது
-
4. என்னால் முன்பு ஆயிரக்கணக்கான யோனிகள் பார்க்கப்பட்டும் பலவிதமான ஆகாரங்கள் புசிக்கப்பட்டும் பலவிதமான தாய்ப்பால் பருகப்பட்டும் ஆகிவிட்டது. திரும்பத்திரும்ப பிறந்தும் இறந்துமாயிற்று. நல்லதோ பொல்லாததோ எந்த கருமம் எந்தச் சுற்றத்தின் பொருட்டு என்னால் செய்யப்பட்டதோ அந்தச் சுற்றத்தார் பயனை அனுபவித்துப்போய்விட்டார்கள். நானோ தன்னந்தனியனாக அதனால் தவிக்கிறேன்.
-
யோனியினின்று வெளிவந்தால் இனி நான் பாவத்தைப் போக்குபவரும் கருமப்பயனிலிருந்தும் முக்தியளிப்பவருமான  மகேஷ்வரனை நாராயணனை சரணடையப்போகிறேன். யோனியினின்று வெளிவந்தால் இனி நான் பாவத்தை போக்குவதும் கர்மபந்தத்திலிருந்து விடுதலை அளிப்பதுமாகிய ஸாங்கிய யோகத்தை (துறவு மார்க்கத்தை) பின்பற்றப்போகிறேன்.யோனியிலிருந்து வெளிவந்தால் பிரம்மத்தை தியானிக்கப்போகிறேன் என்று எண்ணுகிறான்
-
பிறகு யோனித்துவாரத்தை அடைந்து இயந்திரத்தால் பீடிக்கப்பட்டவனைப்போல் மிகுந்த துன்பத்திற்குள்ளாகிப் பிறந்தவுடன் விஷ்ணுமாயா வாயுவால் தொடப்பட்டு அப்பொழுது நினைவிழந்து முந்தைய பிறப்புகளை மறக்கிறான்.புண்ணிய பாவச் செயல்களை மறக்கிறான்.
-