1.உணவிடை நீரை பருகாதே!
2.கண்ணில் தூசி கசக்காதே!
3.கத்தி பிடித்து துள்ளாதே!
4.கழிக்கும் இரண்டை அடக்காதே!
5.கண்ட இடத்தில் உமிழாதே!
6.காதை குத்தி குடையாதே!
7.காெதிக்க காெதிக்க குடிக்காதே!
8.நகத்தை நீட்டி வளர்க்காதே!
9.நாக்கை நீட்டிக் குதிக்காதே!
10.பல்லில் குச்சிக் குத்தாதே!
11.பசிக்காவிட்டால் புசிக்காதே!12.பசித்தால் நேரம் கடத்தாதே!
13.வயிறு புடைக்க உண்ணாதே!
14.வாயைத் திறந்து மெல்லாதே!
15.வில்லின் வடிவில் அமராதே!
16.வெற்றுத் தரையில் உறங்காதே!
இவைப் பதினாறையும் கடைபிடித்தாலே பாேதும் உடல் ஆராேக்கியத்துடன் வாழ நம் முன்னாேர்களின் எளிய வழிமுறை...!!!
Saturday, December 23, 2017
Quotes in tamil
Friday, December 15, 2017
ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது..?*
*
*சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது.*
*வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது.*
*வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது.*
*அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது.*
*அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது.*
*வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது.*
*வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது.*
*உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது.*
*தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது.*
*அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது.*
*தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது.*
*சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது.*
*விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது.*
*அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது.*
*குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது.*
*கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது.*
*நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் எனஅளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது.*
*அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது.*👍
Wednesday, December 13, 2017
பதஞ்சலியின் யோகா astrol Body
பதஞ்சலியின் யோகா மனிதனுக்கு இருப்பது ஒரு உடல் அல்ல அது ஐந்து படிவங்களாக அதாவது ஐந்து உடல்களாக இருப்பதாக சொல்கிறது
1. அன்னமய கோசம்
2. பிராணமய கோசம்
3. மனோமயக் கோசம்
4. விஞ்ஞானமயக் கோசம்
5. ஆனந்தமயக் கோசம்
இந்த ஐந்து உடல்களுக்கு பின்னால்தான் உங்கள் மெய்யிருப்பு இருக்கிறது
இந்த ஐந்து உடல்களையும் தனித்தனியாக ஐந்து வகையான மருத்துவங்கள் பார்க்கின்றன
1. அலோபதி
இது உங்கள் அன்னமய கோசத்தில் வேலை செய்கிறது அதாவது அலோபதி வைத்தியம் மனித உடலை மட்டுமே நம்புகிறது இதில் விஞ்ஞானக் கருவிகள்தான் உங்கள் உடலை பார்க்கின்றன
2. அக்கு பஞ்சர்
இது உங்கள் பிராணமயக் கோசத்தில் வேலை செய்கிறது
அதாவது அக்கு பஞ்சர் வைத்தியம் உயிரியல் சக்தியில் உயிரியற் பொருளில் வேலை செய்ய முயலுகிறது
அக்குபங்சர் உடலில் ஏதாவது கோளாறு என்றால் உடலைத் தொடவே தொடாது
அது உடலின் முக்கிய புள்ளிகளைத்தான் தொடும் உடனே மொத்த உடலும் நன்றாக வேலை செய்யத் துவங்கி விடும்
உங்கள் மைய உடலில் ஏதாவது கோளாறு என்றால் அலோபதியால் குணப்படுத்த முடியாது
ஆனால் அக்குபஞ்சரால் அதை எளிமையாக குணப்படுத்த முடியும்
மைய உடல் என்பது உடலுக்குச் சற்று மேலானது
அந்த மைய உடலை சரி செய்து விட்டால் உடல் தானாகவே அதை பின்பற்றும்
காரணம் உடலின் வரைபடம் மைய உடலில்தான் உள்ளது
மைய உடலின் செயல் வடிவம்தான் புற உடல்
ரஷ்யாவின் கிர்லான்
புகைப்படக்கருவி நமது உடலில் எழுநூறு மையப் புள்ளிகளை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது
புற வழியாக நமக்கு இந்த எழுநூறு மையப்புள்ளிகள் தெரிவதில்லை
நீங்கள் உங்கள் மையப்புள்ளிகளை சரி செய்வதன் மூலம் உடலின் செயல்பாடுகளை மாற்றி அமைக்கலாம்
ஒரு அக்குபங்சர் மருத்துவருக்கு நோய் முக்கியமில்லை நோயாளிதான் முக்கியம்
காரணம் நோயாளிதான் நோயை உருவாக்கி இருக்கிறார்
3. ஹோமியோபதி
இது இன்னும் சற்று ஆழமாக சென்று மனோமயக் கோசத்தில் வேலை செய்கிறது
சிறிய அளவிலான மருந்து ஆழமாகப் போகும் மருந்தின் அளவைக் குறைத்துக் கொண்டே செல்லும் இந்த முறைக்கு வீரியப்படுத்துதல் என்று பெயர்
அதிக வீரியம் இருக்கும் போது அதன் அளவு சிறியதாக இருக்கும்
அது மனோ மையத்தின் ஆழத்திற்கு செல்லும்
அது உங்கள் மன உடலுக்குள் செல்லும்
அங்கிருந்து வேலை செய்யத் துவஙகும்
பிராணமயத்தைவிட அதிகமாக வேலை செய்யும்
4. மனோவசிய சிகிச்சை (ஹிப்னாடிசம்)
இது விஞ்ஞான மயக் கோசத்தை தொட்டு வேலை செய்யும்
இது எதையும் எந்த மருந்தையும் பயன்படுத்தாது
இது யோசனையை மட்டுமே பயன்படுத்தும்
இது ஒரு யோசனையை உங்கள் உள் மனதில் விதைக்கும் உங்களை மனோவசியப் படுத்தும்
உங்களுக்கு எது பிடிக்குமோ அது சிந்தனை சக்தியால் வேலை செய்கிறது
இது அப்படியே சிந்தனை சக்திக்குள் குதிக்கிறது
விஞ்ஞானமய கோசம் உணர்வுகளின் உடல்
உங்கள் உணர்வுகள் ஒரு யோசனையை ஏற்றுக்கொண்டவுடன்
அது இயங்கத் துவங்குகிறது
மனோவசிய சிகிச்சை உங்களுக்கு ஒரு வகை உள் பார்வையைக் கொடுக்கும்
5. தியானம்
ஆனந்தமய கோசத்திற்கு தியானம்தான் சிகிச்சை வைத்தியம்
தியானம் உங்களுக்கு எந்த யோசனையையும் சொல்லாது
காரணம் யோசனை என்பது வெளியில் இருந்து வருவது
யோசனை என்றால் நீங்கள் யாரையாவது நம்பியிருக்க வேண்டும்
தியானம்தான் உங்களை சரியானபடி உணரச் செய்கிறது
தியானம் ஒரு தூய்மையான புரிந்து கொள்ளுதல் அது ஒரு சாட்சிபாவ நிலை
தியானத்தில் ஒருவர் ஆழ்ந்து உள்ளே சென்றால் ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும்
உலகத்தில் தியானம் வெற்றி பெற்றால் பிறகு எந்த மதமும் தேவையில்லை
தியானத்தில் நீங்கள் இருத்தலோடு நேரடி தொடர்பில் இருப்பீர்கள்
தியானத்தின் உச்சமே புத்துணர்ச்சி
தியானம் முழுமை பெறும் போது உன்னுடைய இருத்தல் முழுவதிலுமே ஒளி வருகிறது
முழு பேரின்பம் பரவுகிறது
முழு பரவசம் உன்னை ஆட்கொள்கிறது
Tuesday, December 12, 2017
காலையில் வெறும் வயிற்றில் இவைகளை சாப்பிடுங்கள் நீங்க நோயின்றி 100வயசு வரை வாழலாம்!*
🍛 *
உலகில் உயிர்கள் வாழ மிக அவசியமானது உணவு. அது, அறுசுவையும் கலந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில், அவைதான் நம் உடலுக்கும் உயிருக்கும் ஆதாரமான தாதுக்களாகிய பித்தம், கபம், வாதம் ஆகியவற்றைச் சமநிலையில் வைத்து, நம் உடல் நலத்தைக் காப்பவை. அதே நேரம், எல்லா உணவுகளையும் எல்லா நேரத்திலும் எடுத்துக்கொள்வதும் தவறானது.
ஒரு நாளின் தொடக்கத்துக்கான பூஸ்ட்டராக இருப்பது, காலைஉணவுதான். காலை உணவே நம் உடலுக்கும் மூளைக்கும் தேவையான சுறுசுறுப்பைத் தரும். காலை உணவைத் தவிர்த்தால், நமது மூளை சோர்வடையும். தேவை இல்லாமல் சாப்பிடத் தூண்டும். இது உடல் எடையை அதிகரிக்கும். காலை உணவில் எவற்றை எல்லாம் எடுத்துக்கொள்ளலாம், எவற்றைத் தவிர்க்கலாம் எனப் பார்ப்போம்…
பருத்திப்பால்
காலையில் காபி, டீ குடிப்பதற்குப் பதிலாக, பருத்திப்பால் குடிக்கலாம். முதல் நாள் இரவிலேயே பருத்தி விதைகளைத் தேவையான அளவு எடுத்து, ஊறவைத்து, காலையில் அதில் இருந்து பால் எடுத்து (ஒரு டம்ளர்), தேங்காய்ப் பால் (ஒரு டம்ளர்), பசும்பால் (ஒரு டம்ளர்) கலந்து குடிக்கலாம். கடின உடல் உழைப்பு செய்பவர்கள், இதனுடன் சம்பா அவல், கருப்பட்டி சேர்த்து, கஞ்சிபோல் காய்ச்சிக் குடிக்க, அன்றைய காலை உணவு அபாரம்!
பூண்டுக் கஞ்சி
பூண்டு ஒரு கை அளவு, சாரணைவேர் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்), சுக்கு (சிறிதளவு), முருங்கை இலை (ஒரு கைப்பிடி), புழுங்கல் அரிசி (தேவையான அளவு) மற்றும் பசும்பால் அல்லது தேங்காய்ப் பால் ஆகியவற்றைச் சேர்த்துக் கஞ்சி காய்ச்சி, வாரம் ஒரு முறை காலை வேளையில் குடித்துவர, வாயுத்தொல்லைகள் அறவே நீங்கும்.
காலையில் டிபன் வகைகளுக்குச் சட்னி சாப்பிட்டுச் சலிப்படைந்தவர்கள், பயறு, கடலை, காராமணி, துவரை, உளுந்து, மொச்சை ஆகியவற்றை கடுகு, மிளகு, பெருங்காயம், சுக்குடன் சேர்த்து, கறியாகச் சமைத்து, இட்லி, புட்டு, தோசை, இடியாப்பம், ஆப்பம் ஆகியவற்றுடன் எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் சிறுதானியங்களில் சமைத்த உணவுகளுடன் இதனை எடுத்துக்கொள்ளலாம்.
பழைய சோறு
இரவில் செய்த அரிசிச் சோறு மீந்துபோனால், அதில் நீரூற்றி வைக்கலாம். நீரூற்றிய சோறு அதாவது, பழைய சோற்றை நீருடன் காலை வேளையில் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இதனோடு, சிறிய வெங்காயம் இரண்டு சேர்த்துச் சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாகப் பெருகும். பழைய சோற்றுடன் மோர் சேர்த்தும் சாப்பிடலாம். பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 முதலான சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும், பழைய சோறு குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், சைனஸ் முதலான தொந்தரவு உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது. நிசிநீர் எனப்படும் பழைய சோற்று நீர் அருந்த, நாவறட்சி நீங்கி, உடல் வெப்பம் தணியும்.
இஞ்சி – தேன்
இஞ்சியைத் தோல் நீக்கி, அரைத்து, சாறு எடுத்து, அதனுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிடலாம். இதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும். மேலும், இஞ்சியானது உமிழ் நீரைப் பெருக்கி, பசியைத் தூண்டும். செரிமானத்திறன் மேம்படும். வயிற்றுப்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. உடல் பருமன் உள்ளவர்கள், நீரில் தேன் கலந்து பருகலாம்.
வெந்தய நீர்
வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.
வெந்தயக் களி
100 கிராம் பச்சரிசி, 10 கிராம் வெந்தயத்தைத் தனித்தனியாக மாவு போல பொடித்துக்கொள்ள வேண்டும். இதை, வாரத்துக்கு ஒருமுறை காலையில், களியாகச் செய்து சாப்பிட, உடல் வெப்பம் தணியும். அரிசியில் மாவுச்சத்து உள்ளதால், உடல் எடை அதிகரிக்கும். பெண்களுக்கு இது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கும் ஏற்றது.
உளுந்தங்களி
பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் அரிசி மாவுக்கு, 25 கிராம் உளுந்து என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாகக் கிண்டிச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும்.
காலையில் அருந்தக்கூடிய எளிய பானங்கள்
விழித்தவுடன் சுத்தமான நீர் இரண்டு டம்ளர் அருந்த மலம், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இல்லாமல் இருக்கும். வெந்நீர் அருந்த மந்தம் நீங்கும்.
குழந்தைகளுக்குப் பல தானியங்கள் கலந்த சத்து மாவுக் கஞ்சி பால், வெல்லம், நாட்டுச்சர்க்கரை கலந்து கொடுக்கலாம். கேழ்வரகை முளைக்கட்டி அரைத்து, பால் எடுத்துக் கஞ்சி காய்ச்சி அருந்தலாம். இதில் கால்சியம் நிறைவாக உள்ளதால், எலும்புத் தேய்மானம் உள்ளவர்களுக்குச் சிறந்த பானம்.
பாதாம், சோயா போன்றவற்றை நீரில் ஊறவைத்து அரைத்து, பால் எடுத்து, கஞ்சி காய்ச்சிக் குடித்துவந்தால், உடல் பலம் பெறும். இதனுடன், வெல்லம், ஏலப்பொடி, நாட்டுச்சர்க்கரை முதலானவற்றைச் சேர்த்துப் பருகலாம். வெயில் காலங்களில் கம்பங்கஞ்சியை மோருடன் கலந்து குடிக்க, உடல் வெப்பம் நீங்கும். தேங்காய்ப் பாலை வெறும் வயிற்றில் குடிக்க, வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்கும்.
எதைத் தவிர்க்க வேண்டும்?
காலையில், மிகவும் புளிப்பு உணவுகளான எலுமிச்சை, புளி, தக்காளி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், வாழைப்பழம், எண்ணெயில் பொரித்த உணவுகள், மாமிச உணவு, இளநீர் முதலானவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக் கூடாது.
இவை பித்தம், வாதம் முதலானவற்றை அதிகப்படுத்தி, வயிற்று நோய்கள், குடல் நோய்களை உண்டாக்கும். வாழைப்பழத்தை உணவுக்குப் பின் எடுத்துக்கொள்ளலாம்.
அதே போல் டீ, காபி முதலானவற்றை காலையில் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவை, வயிற்றுக்கோளாறு, குடல்புண், செரிமானக் குறைபாடு முதலானவற்றை ஏற்படுத்தும்.
வெறும் வயிற்றில் இலகுவானதும், எளிதில் சக்திதர வல்லதும், எளிதில் ஜீரணமாகக்கூடியதுமான உணவுகளையும், நீர்ச்சத்து உடையதுமான உணவுகளை எடுத்துக்கொள்வதுதான் நம் போன்ற வெப்ப மண்டல நாட்டு மக்களுக்குப் பொருந்தும்.
"...8 க்குள் ஒரு யோகா..."
"...8 க்குள் ஒரு யோகா..."
(முழுவதும் படியுங்கள்)
🤝
"எட்டு" போடுகிறவனுக்கு "நோய்"
எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி...!
🙌
மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும்..
🤝
உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து,
6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு அதற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்...!
"...இது தெற்கு வடக்காக நீளப் பகுதி இருக்கணும்..."
காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த 8 வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள்...!
🤝
ஆண்கள் வலது கை பக்கம் பெண்கள் இடது கை பக்கமும் நடக்க ஆரம்பிக்கணும்.
🤝
ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து 21 நிமிடம் நடக்கணும் .
🤝
பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று இதேபோல் 21 நிமிடம் கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில்
நடை பயிற்சி செய்யணும், 42 நிமிடம்.
🤝
1. பயிற்சி தொடங்கிய அன்றமார்பு சளி
கரைந்து வெளியேறுவதை காணலாம்.
2. இந்த பயிற்சியை இருவேளை
செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள்
சிவந்திருப்பதை காணலாம். அதாவது
ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று
அர்த்தம்.
3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை
வியாதி) குறைந்து முற்றிலும்
குணமாகும். (பின்னர் மாத்திரை,
மருந்துகள் தேவை இல்லை).
4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.
5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.
6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.
7. உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும்.
8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.
9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில் வரும்.
10. பாத வலி, மூட்டுவலி மறையும்.
11. சுவாசம் சீராகும் அதனால் உள் உருப்புக்கள் பலம் பெரும்...!
சரி...! இதெப்படி நடக்கிறது என்று
உங்களுக்குள் கேள்வி ஏழும்.
"8" வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது
நீங்களே உணர்வீர்கள்...!
🤝
அந்தவடிவம்
"முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம
நிலை படுத்துகிறது என்பதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்தனர் சித்தர்கள்.
விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து
பலனடையுங்கள்...!
நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்யலாம்,
🤝
1வது 21 நாளில் - சர்க்கரை நோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல், குதிவாதம், வடகலை நாடி- இடகலை நாடி புத்துயிர் பெரும்...!
🤝
2 வது 21 நாளில் -
மூட்டு வலி, ஒட்டுக்கால், பிரச்னை குறையும்...!
🤝
3 வது 21 நாளில் -
தொடை பகுதி பலம் பெரும்...!
🤝
4 வது 21 நாளில் - ஆண்மை குறைபாடு, விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு, விந்து நாத அணு குறை பாடு, கல்லீரல் மண்ணீரல் குறைபாடு, கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை, மாதநாள் குறைபாடு, ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் ...!
🤝
5 வது 21 நாளில் - வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும்...!
🤝
6 வது 21 நாளில் - இரத்த அழுத்தம், இதய நோய் , ஆஷ்துமா , காசம், நீர் உடம்பு, உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும்...!
🤝
7 வது 21 நாளில் - தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு, முதுகில் வாய் பிடிப்பு வராது...!
🤝
8 வது 21 நாளில் - அன்னாக்கு பகுதி விழிப்படையும், வாய் கண் காது கருவிகள் நோய் தன்மை தாக்காது, 2 நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும், மூளைப் பகுதி விழிப்படையும், மூளைப் பகுதி நோய் தீரும்...!
🤝
இதை செய்ய வயது வரம்பு இல்லை, இப்பயிற்சி
"வாசி யோக"த்திற்கு இணையானது,
இந்த 8 நிலைகளில் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உயிர், மனம் உடல் ஒன்றாகி காலன் தள்ளி நிர்ப்பான்...,
மெளனமாக நடக்கணும் அல்லது ஏதாவது இறை நாமத்தை மனதில் செபித்தவாறு நடக்கணும் , வாய் வழியாக சுவாசம் கூடாது...!
📚படித்ததிலிருந்து பிடித்த ஒரு பதிவுகள் & பகிர்வுகள்...,✍ kadi 👁👁kannan @fb.Com
--
Monday, December 11, 2017
சூட்சும விஞ்ஞானம்
...!
1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.
2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.
3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.
4. ஒவ்வொரு மனிதனுக்கும் சூட்சும சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.
5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.
6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.
7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.
8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.
9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.
10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.
11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.
12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.
13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.
14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.
15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.
16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.
17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.
18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.
19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.
20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.
21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.
22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.
23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.
24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.
25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.
26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.
27. விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.
28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.
29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.
30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.
31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.
32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.
33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.
34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.
35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.
36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.
37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.
38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.
39. சூரிய ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.
40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.
41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.
42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.
43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.
44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.
45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.
46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.
47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.
48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.
49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.
50. தூக்கம் என்பது,
விழிப்புணர்வு அற்ற தியானம்.
தியானம் என்பது,
விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.