பிராணாயாமத்தின்பொழுது காற்று நுரையீரலில் அதிக நேரம் நிறுத்தப்படுவதால் காற்றிலுள்ள ஆக்சிஜன் அதிக அளவு பரிவர்த்தனை செய்யப்படுகிறது.இதனால் செல்களுக்கு அதிக ஆக்சிஜன் என்கிற பிராணவாயு கொடுக்கப்பட்டு சக்தி வீணாவது தடுக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாகக் கிடைக்கும் ஆக்சிஜனால் கிடைக்கும் பிராண சக்தி தசைகளில் உள்ள மயோகுளோபினால் சேர்த்து வைக்கப்படுகிறது.சாதாரணமாக சுவாசிக்கும் போது நுரையீரலில் உள்ள 3000 காற்றறைகள் மட்டுமே செயல்படுகின்றன.ஆனால் பிராணாயாமத்தின்போது 6000 காற்றறைகள் செயல்படுகின்றன.எனவே இரு மடங்கு சக்தி கிடைப்பதோடு, அதிகமான பிராணசக்தி சேமிக்கப்பட்டு ஒரு நிலையில் ஓஜஸாக மாறி மூலாதாரத்தில் சேர்கிறது. இதனால் ஆயுளும் அதிகரிக்கிறது.செல்களுக்குத் தேவையான பிராணவாயுவை பிராணாயாமம் மூலம் பெறும் தன்மையையும் உடல் அடைவதால் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும் தன்மையைப் பெற்றுவிடுகின்றன.நிமிடத்துக்கு 15 முறை சுவாசிக்கும் மனிதன் 10 நிமிடம் பிராணாயாமம் செய்யும் போது ஒரு பங்கு நேரம் உள் இழுத்தல், நாலு பங்கு நேரம் உள்ளே வைத்தல், இரண்டு பங்கு நேரம் வெளியே விடுதல் என்று சுவாசம் செய்யும் போது 140 சுவாசங்களை மிச்சப்படுத்துகிறான்.காலை, மாலை இரு வேளையும் செய்தால் 280 சுவாசம் ஒருநாளில் மிச்சமாகிறது. மேலும் சுவாசத்தை ஆழமாக இழுத்து மெதுவாக விடும் பழக்கத்தைப் பெற்றுவிடுவதால்நிமிடத்திற்கு மூன்று சுவாசம் மிச்சமானால் கூட, தூங்கும் நேரம் போக மற்ற நேரங்களில் எவ்வளவு சுவாசம் மிச்சமாகும் என்று கணக்கிட்டுப் பாருங்கள்.அந்த அளவு ஆயுள் அதிகரிக்கும் என்பதோடு மட்டுமல்ல ஆரோக்கியமும் மேம்படுகிறது.இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. பிராணன் அடங்கினால் மனம் அடங்கும், பிராணனின் சலனம் மனதின் சலனம், பிராணன் வசமானால் மனம் வசமாகும் என்றெல்லாம் சொல்கிறீர்கள்.அப்படியானால் எதற்காக அஷ்டாங்க யோகத்தில் இயமம், நியமம், ஆசனம் என்கிற மூன்று நிலைகளை பிராணாயாமத்திற்கு முன்னால் கடைபிடிக்கச் சொல்கிறீர்கள் ?நேரடியாகப் பிராணாயாமம் அதற்கு அடுத்து பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று போய் விடலாமே ?ஒருவன் தன் ஆன்மிக வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியே இயமம், நியமம் என்பனவாம், வேறொன்றும் இல்லை. இந்த ஒழுக்க நெறிகளையும், ஆசனம் என்கிற உடலை உறுதி செய்கின்ற பயிற்சியையும் மேற்கொண்டவர்கள்மட்டுமே தியானத்தில் நிலைத்து நின்று சமாதி நிலையை அடைய முடியும்.மற்றவர்கள் மனதையும், உடலையும் வலுவாக்கி உலகாய வாழ்வை திறம்பட நடத்திக் கொள்ளலாம். ஏனென்றால், எவ்வளவு சக்தியை மேம்படுத்திக் கொண்டாலும், உலகாய வாழ்வைப் பொறுத்த மட்டில் சக்திவிரையமாவதைத் தடுக்க முடியாது.இந்த உலகாய வாழ்விலும் இல்லற ஒழுக்கம் என்ற நெறியைத் தவறாமல் கடைபிடித்து மேம்பாடு அடைந்தவர்களும் உண்டு.எனினும் இரண்டிற்கும் பலனடையும் காலம் வித்தியாசப்படும். என்றாலும் பிராணனைக் கையிலெடுத்தவர்கள் காலதாமதமானாலும்உண்மையை உணரும் வழிக்கு தானே வருவார்கள். இது நிச்சயம்.ஒரு ஆரோக்கியமான சூழலில் வாழும், திடகாத்திரமான மனிதன் சராசரி ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிப்பான். ஆனால் நாமெல்லாம் இருபது முறைக்கும் அதிகமாகவே சுவாசிக்கிறோம் என்பது அதிர்ச்சிதரும் புள்ளி விபரம்.ஆரோக்கியமான நல்ல மனிதனுக்குக் கூட ஒரு நாளைக்கு 21600 சுவாசங்கள் இயங்கினாலும், 7100சுவாசங்கள் பாழாகும் என்று சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது.எஞ்சிய 14500 சுவாசங்களே உள்ளே புகுந்து உடலுக்கு நன்மை செய்யும் என்று கணக்கிட்டு கூறியிருக்கிறார்கள்.தற்போது மனிதர்களின் ஆயுள் குறைந்துள்ளது எதனால் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக வெளியே விடும் பழக்கம் நமக்கு இல்லை. கட்டாயம் அதை நாம் பழகிக் கொள்வதோடு நம் குழந்தைகளுக்கும் இளம் வயதிலேயே அதைப் பழகித்தர வேண்டும்.எனெனில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிராண சக்தியே மானிட உடலுக்குள் உயிராய் விளங்குகிறது. அதை நாம் உணவு, நீர் மற்றும் வாயுவிலிருந்துப் பெற்றுக் கொள்கிறோம். எனினும் சுவாசம் மூலமாகவே நாம் அதிகம் பெறுகிறோம்.அதிகாலையில் நிறைய தண்ணீர் குடியுங்கள் என்று சொல்வதன் காரணம் கூட அதில் உள்ள பிராண சக்தி எந்தத் தடையுமில்லாமல் கிடைக்கும் என்பதால்தான்.மனித சக்திக்கு ஆதாரமாய்த் திகழும் பிராணனே உடலில் ஒவ்வொரு அணுவுக்குள்ளும்இயங்கிக் கொண்டிருக்கிறது. பிராணன் உடலின் தொழிலாகவும், நரம்பில் ஓட்டமாகவும், இதயத்தில் துடிப்பாகவும், நுரையீரல் விரிந்து, சுருங்கவும், சுரப்பிகள் சுரப்பு நீரை சுரப்பதற்கும், உணவு செரிப்பதற்கும்,கழிவுகள் வெளியேற்றப்படவும் எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணத்தின் போக்குக்கும், வலிமைக்கும் காரண, காரியமாகவும் விளங்குகிறது.எவர் ஒருவர் உடலில் பிராணசக்தி குறைவில்லாமல் உள்ளதோ, அவர் முகத்தில் வனப்பும், உடலில் வலிமையும் மிகுந்து காணப்படும்.நாம் சுவாசிப்பது மூச்சுவிடுவது என்பது நமது உயிரின் வடிவம். அதிலிருந்து எழும் பிராணசக்தி அதன் சூக்கும வடிவம். எனவேதான் உயிர் மூச்சு உள்ளவரை பிராணன் இருக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.பிராணன் நம் உறுப்புகள் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பே கருவிலேயே உதயமாகிவிடுகிறது. பரம ஆத்மாவிலிருந்துஉண்டாகும் பிராணன் ஜீவாத்மாவிடம் பரவி நிற்கின்றது.ஆத்மாவின் நிழல் போன்றது பிராணன் என்று சொல்வார்கள். ஆகவேதான் பிராணன் நம் மனதையும், புலன்களையும் இயக்கும் சக்தி பெற்றுள்ளது.பிராணனை முறைப்படுத்தி, கட்டுப்படுத்தி பயன்படுத்தினால்நெருப்பினால் உலோகம் தூய்மையடைவது போலஜீவாத்மாவின் கரும வினைகளும் தொலைந்து ஜீவன் தூய்மையடையும்.உடம்பிலும், இந்திரியங்களிலும் உள்ள அசுத்தங்கள் யாவும் நீங்கி அவைகளும் தூய்மையடையும். மனதைஅழிவிலிருந்துக்காத்து காயசித்தி பெற்று மரணத்தை வெல்லலாம்."மூச்சு என்ன செய்யுமடா (என அலட்சியம் காட்டினால்) நரகில் தள்ளும், மோசமது போகாதே பாசன் (எமன்) கையில்". – அகத்தியர்.
Friday, April 28, 2017
புகழ் எனும் போதை
==============
ஒரு சிங்கமோ, புலியோ இன்னொரு சிங்கத்தையோ, புலியையோ பார்த்து....
"சே.....நீ எவ்வளவு வேகமா துரத்தி எப்படி லாவகமா அந்த மானை வேட்டையாடினே. உன் வீரமும், ஆற்றலும் மெச்சுதற்குரியது. நீ மேலும் மேலும் நிறைய மான்களை வேட்டையாடி, விரைவில் சதம் அடிக்க உனக்கு என் மனம் திறந்த பாராட்டுக்கள்"
என பாராட்டுவதில்லை.
ஏனெனில் திறமையாய் வேட்டையாடுவது என்பது அதன் இயல்பு. அது இயற்கை. அவ்வளவுதான். இதில் பாராட்டுவதற்கு ஏதுமில்லை.
பூவலகில் எல்லா உயிர்களும் ஒன்றுக்கொன்று ஒத்துதவி வாழ்கின்றன.
நதியோரம் ஓங்கி உயரமாய் வளர்ந்திருந்த ஒரு மரத்திலுள்ள குரங்குகள் அந்த மரத்தின் பழங்களை சாப்பிடுகின்றன. சில பழங்களை அவை முகர்ந்து பார்த்துவிட்டு நதியில் வீசிவிடுகின்றன.
அதற்காகவே காத்துக்கிடக்கும் மீன் கூட்டம் ஒன்று அந்தப் பழங்களை உணவாகக் கொள்கின்றன.
பின்பு சமவெளியில் நதியின் ஓட்டத்தோடு நீண்ட நெடுந்தூரம் பயணித்து வேறோரு இடத்தை அடைகின்றன. அங்கு கழிவுகளை வெளியேற்றுகின்றன.
கழிவுகளோடு சேர்ந்து வெளியேறும் அம்மரத்தின் விதைகள் கரையொதுங்கி புதிய நிலத்தில் முளைக்கத்தொடங்குகின்றன. அந்த மரத்தின் சந்ததி நிலைபெறுகிறது.
இதில் யார் யாரைப் பாராட்டுவது? இந்த மரத்தின் சந்ததியை நிலைபெறச் செய்யும் பணியை நாம் செய்கிறோம் என அந்தக் குரங்களுக்கோ, மீன்களுக்கோ அல்லது அந்த ஆற்றிற்கோ தெரியுமா?
இது இருப்பு சக்தியின் திருவிளையாடல். அதன் பேரறிவு மயமான திட்டம். குரங்கு, மரம், மீன், ஆறு என அனைத்துமே வெறும் கருவிகளே.
இவை எதுவும் அந்த மரத்தைத் தான் நட்டதாக பெருமை பேசிக்கொள்வதில்லை. ஆனால் அவை ஒன்றுக்கொன்று ஒத்துதவி வாழ்கின்றன.
மனிதனும் அது போலத்தான். இந்த பூமியில் அவன் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து செல்லும் ஜீவன். தனியாக ஆகாயத்திலிருந்து குதித்துவிட்டவனல்ல. அவனும் பிற ஜீவன்களோடும், சக மனிதர்களோடும் ஒத்துதவி வாழ்பவன்.
இது புரியாமல் ஒருவரையொருவர் பொய்யாய்ப் புகழ்ந்து தள்ளி, அகங்காரத்திற்குப் பெருந்தீனியிட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.
புகழ் என்ற ஒன்று கிடையவே கிடையாது. அது கற்பனையானது. அது ஒரு மாயை. அது ஒரு போதை. அது ஒரு மனநோய்.
துன்பப்படும் ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அத்துன்பத்திலிருந்து வெளிவந்தவர் மிகவும் தளர்வாக உணர்கிறார். அந்தத் தளர்வு நிலையை தனக்குக் கொடுத்துதவியவர் மீது அவர் ஆன்மாவிலிருந்து நன்றியுணர்வு பெருகுகிறது. உயிரிலிருந்து வாழ்த்துகிறார். இது ஆறாவது அறிவின் காரணமாய் எழுந்த நன்றியுணர்வு. அதன் வெளிப்பாடு. இதுவே உயர் புகழ். இதில் அகங்காரத்திற்கு இடமில்லை.
மற்றெல்லாம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கபட வேடங்களே. அவை தந்திரமான உள் நோக்கங்களைக் கொண்டவை. மிகுந்த ஆபத்தானவை. அகங்காரத்தை வளர்ப்பவை. மனித குலத்தின் சாபக்கேடுகள்.
ஆகவே புகழ்வதும், புகழ்ச்சிக்கு அடிமையாவதும் மனிதனை பல்வேறு துன்பங்களுக்குள் அழைத்துச் செல்பவை என உணர்ந்து, இங்கு நாம் அனைவரும் ஒத்துதவி வாழ்வதே வாழ்க்கை எனப் புரிந்து, இறைநிலையில் பேரறிவு மயமான திட்டத்தில் நாம் அனைவரும் சாதாரணக் கருவிகளே எனத்தெளிந்து, அகங்காரம் தொலைத்து ஆனந்தமாய் வாழ்வோம்.
தேங்காய் பற்றிய அதிசய உண்மைகள்
============================
தென்னை பூ பூத்த நாளிலிருந்து தேங்காயாக விளைந்து அது உதிரும் நாள் வரை அனைத்து பருவ நிலைகளையும் உள்ளடக்கியது .
மேலும் நிலம் , நீர் , ஒளி , காற்று, விண் ஆகிய பஞ்ச பூதத் தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்ச பூத சக்திகள் குவிக்கப் படுகிறது , இது சித்தர்கள் விஞ்ஞானத்தில் நிரூபிக்கப் பட்டுள்ளது.
இது சிவனின் மூல சக்தியாக உள்ளது இதில் உள்ள முக் கண்களில் வழியே பஞ்ச பூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது .
தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி சுழன்று கொண்டே இருக்கும்.கோவில் விக்கிரகத்தின் முன் தேங்காய் உடைக்கும் போது அது இறைசக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது . இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது .
ஒரே இடத்தில் தேங்காய் சிதறு காய் இடும்போது அங்கெ பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும் .
முச்சந்தியில் சிதறுகாய் அந்தியில் இடும்போது அங்கே துர்சக்திகள் விலக்கியடிக்கப் படுகிறது .
ராகு கேது தோஷம் உடையோர் ஞாயற்று கிழமையின் பிற்பகலில் , திங்கள் கிழமையின் முற்பகலில் , முச்சந்தி விநாயகருக்கு வாரம் தோறும் சிதறு காய் இட்டால் கால சர்ப்ப தோஷம் கூட சரியாகி விடும் .
வீட்டில் தினம் ஒரு தேங்காய் உடைத்து பூஜை செய்தால் பிணிகள் நீங்கி லக்ஸ்மி கடாட்சம் பெருகும் ,
மாந்திரீகத்தில் சண்ட காளிவேர் , நரபூதாளம் , சூலநாசவேர் , இவற்றுடன் வேண்டாதவரின் காலடி மண் , இந்த நான்கையும் நவமி திதியில் வேங்கை மரத்தின் கீழ் பதித்தால் சம்மந்தப்பட்டவர் நிலை அதோ கதிதான் .
இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு மறு நவமிவரை அந்தியில் தேங்காய் உடைத்து உடன் நுகரச் செய்தால் குணமாகி விடும் . இது சித்தர்கள் முறையாகும் .
முள்ளம் பன்றி முள் , எட்டிமர வேர் இரண்டையும் வீட்டில் வைத்துவிட்டால் சண்டை சச்சரவு வந்து கொண்டே இருக்கும்.
இதற்கு நல்ல விளைந்த தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டால் சுபிட்சம் ஏற்படும் , மாலையில் அந்த தேங்காயின் உட்புறம் வியர்த்து பிசு பிசு வென்று இருப்பதைக் காணலாம்.
அம்மாவாசையில் பிறந்த குழந்தைகள் கெட்ட பெயரெடுக்கும் , அவர்களுக்கு அடிக்கடி தேங்காய் உடைத்து நுகரச் செய்தால் குணம் மாறும் ,
குழந்தைகளுக்கு தேங்காய் பால் அடிக்கடி( சாறு ) கொடுத்தால் உடல் பலமாகும் ஞபக சக்தி கூடும் .
வீட்டில் திருஷ்டிக்கு நவமி திதியில் பறித்த தேங்காய் மஞ்சள் தடவி முக்கண்ணில் திலகம் இட்டு வீட்டு வாசல் முன் கட்டி விட்டால் எப்பேர்ப்பட்ட திருஷ்ட்டியும் கழிந்து விடும் .
வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டால் , ரோகினி ஹஸ்த்தம் , திருவோணம் , நட்சத்திர நாளில் விநாயகருக்கு சிதறுகாய் இட்டு வழிபட்டால் காரியம் சித்தியாகும் .
( அக்கால ராஜாக்கள் அந்நிய தேச பயணத்திற்கு முன் இந்த நட்சத்திர நாளில் தேங்காய் முக்கண் வழிபாடு செய்தே சென்று வருவர்)
இதுதான்நம் முன்னோர்கள் வைத்த தேங்காய் உடைக்கும் சாஸ்திரம்.
பிரம்மம்
======
தேகமும் நீ அல்ல. எண்ணமும் நீ அல்ல.ஆத்மாவே நீ.ஆத்மாவே எல்லாமுமாய் இருக்கிறது.தேகம் " நான்" என்னும் அபிமானத்தைத் துறக்க வேண்டும்." நான் யார்?" என்று பார்த்தால் , நான் என்ற சொல்லின் பொருள் ஆத்மா. நான் என்ற சொல்லின் வாயிலாக எந்த " ஆத்மா" விளக்கப்படுகிறதோ, அந்த ஆத்மா உள்நோக்குப் பொருளாக உள்ளது.அனுபவத்தால் அறியக்கூடியது.அனுபவத்தால் அறியக்கூடிய ஆத்மா ஞானத்தின் மொத்த உருவம்.ஆனந்தத்தின் இருப்பிடம்.நமக்கு உடம்பு இருக்கிறது.இந்த உடலை இயக்குவது உயிர்.கடைசியில் நாம் இறந்து போவோம்.இங்கு இறந்து அழிந்து போவது உடல்தான்.அழியாதது உயிர்.வாழ்க்கையில் நாம் சம்பாதிப்பது அழியாத உயிருக்கு உதவுவதாக இருக்க வேண்டும்.ஆனால் நாம் வாழ்நாளில் பெரும்பாலும் உழைப்பது, சம்பாதிப்பது எல்லாம் அழியும் உடலுக்காகவே இருக்கிறது.அழியாத உயிருக்காக சம்பாதிப்பதை விட்டுவிட்டு அழியும் உடலுக்காக மட்டும் நேரத்தை செலவிட்டு சம்பாதிப்பது புத்திசாலித்தனம் ஆகாது.இவ்வாறு சம்பாதித்ததை நாம் இறந்த பிறகு நம்மோடு கொண்டு செல்ல முடியாது.தன்னைத் தான் அறிவதாகிய ஆன்ம அனுபவம் பெற நாம் நமது ஆசைகளைத் தூண்டி அதன் வலையில் சிக்க வைத்துக் கொள்ளும் உலகப் பொருட்களிலிருந்து விலகி வாழ வேண்டும்.ஆன்ம நலத்தில் பெரும் விருப்பம் கொண்டவர்கள் இந்த உலகமே நிலையற்றது.மாறுபடுவது.தோன்றி மறைவது.மாயையால் தோன்றுவது என்று எண்ணி அவற்றிலிருந்து விலகி தனது ஆன்ம சொரூபத்தை அடைய விரும்புவார்.அறிவு உள்ளவர் எவரும் இவற்றில் சிக்கிக் கொள்வதில்லை.அறியாமையினாலும், பலவீனத்தாலும் உலகப் பொருட்களின்மாட்டு எழும் அடங்காத ஆசையினாலும் அவற்றிலிருந்து விலகி வாழ இயலாமல் , செல்லும் வழி அறியாமல் பயனின்றி வாழ்ந்து மறைகிறான்.ஞானி ஆன்மாவின் பக்கமே மனத்தைச் செலுத்துவான்.உலகில் ஆன்மாவைத் தவிர பிற பொருட்கள் எல்லாம் வானவில் போன்று தோன்றி மறையக் கூடியனவே என்பது அவனுக்குத் தெளிவு.தன்னைத்தான் அறிவதாகிய ஆன்ம அனுபவத்தைப் பெற நமது ஆசைகளைத் தூண்டி அதன் வலையில் சிக்க வைத்துக் கொள்ளும் உலகப் பொருள்களிலிருந்து விலகி வாழ வேண்டும்.உலகத்தை உலகமாகக் காண்பது ' மாயை'. உலகத்தை பிரம்மமாகக் காண்பது ' ஞானம்'.எவன் ஒருவன் தேடுகிறானோ, அவன் தன்னைத் தானே உணரும் வேளையில் தேடியது தன்னைத்தான் என்று உணர்வான்.' நீயே நான்.நானும் நீயே' என்ற உண்மையைப் புாிந்து கொள்வான்.இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்து இறுதியில் தன்னுள் பயணம் செய்து பார்க்கும் பொழுதுதான் உண்மைப் பொருள் வேறு எங்கும் இல்லை.தன்னுள்ளே உள்ளது என்பதை முழுமையாக உணர்வான்..' அயம் ஆத்மம் பிரம்மம்' என்பது அதர்வண வேதத்தின் மகாவாக்கியம்.இதன் பொருளாவது ஆத்மாவே பிரம்மம் என்பதாம்.அதாவது இந்த ஆத்மா என்பது நமது உடல் , மனம், புத்தி, இவற்றை செயல்படுத்துகிறது.ஆத்மாவின் ஒளியில் தான் இவை செயல்பட முடியும்.அதுபோல உலகில் உள்ள அனைத்துப் பொருடள்களையும் செயல் படுத்துவது பிரம்மம்.ஆகவே தான் இந்த ஆத்மா தான் பிரம்மம்.நான் ' மனம்' அல்ல.,'உடல்' அல்ல.,'புத்தி' அல்ல.நான் பிரம்மம் என்று உணரும் சாதகன் புறத்தேடலை விட்டு அகத்தேடலை தொடர்கின்றான்.அழிவற்றது எதுவோ பிரம்மம்.புலன்களால் அறியப்படுபவை அனைத்தும் அழிவின் கேந்திரங்களே.அழிவு உருவத்திற்கு மட்டுமே.உருவத்தினால் சூழப்பட்டு, உள்ளிருப்பது அழிவது இல்லை.இரு எண்ணங்களுக்கு இடையில் உள்ள வெற்றிடக்தைப் பற்றினால், அந்த இடைவெளியில் மூழ்கினால், அருவத்தின் தரிசனம் கிடைக்கும்.அதுவே பிரம்மம்..உருவத்திற்கு அழிவு உண்டு.அருவத்திற்கு அழிவு கிடையாது.அருவம் பிரம்மம்.
போகரின் நவபாஷாண சிலை முருகப் பெருமானைப் பற்றிய சில அதிசயத் தகவல்கள்
===================================
1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது
முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.
2. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.
3. அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
4. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.
5. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.
6. தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.
7. தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.
8. அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.
9. இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.
10. அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி
தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு துணுக்குத் தகவல் உண்டு.
11. அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.
12. போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.
13. கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம்.
14. தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகதலிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.
15. பழனியில் இரண்டு மரகதலிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு
அகத்தியர் தன்னுடைய நூலில் சொன்ன மரணத்தைப்பற்றிய அபூர்வ ரகசியம்
==============================
ஒரு ஜீவன் உடலைவிட்டு பிரிந்த பிறகு 12 நாட்கள் காரியங்கள் செய்ய வேண்டும் என்ற நியதிஇருக்கிறது.
பொதுவாக இதை பலவிதமாக கூறலாம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு விதமாக வழக்கம் இருக்கிறது.
இந்த வழக்கத்தை என்னால் மீற முடியவில்லை என்பவரை விட்டுவிடலாம்.
ஒரு குடும்பத்திலே ஒரு ஆத்மா பிரிகிறது என்றால் அதனால் அந்த குடும்ப உறுப்பினர்கள் மனோரீதியாக கடுமையான உளைச்சல் அடைகிறார்கள் என்றால் அந்த மனம் ஆறுதல் பெரும் அளவிற்கு கால அவகாசத்தைக் கொடுப்பது தவறல்ல.
அங்ஙனம் இல்லாமல் அகவை எனப்படும் வயது அதிகமாகி ஒரு ஆத்மா பிரிகிறது என்றால் பெரிய அளவிலே அந்த குடும்பத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லையென்றால் வழக்கம் போல் அவர்கள் இறை சார்ந்த கடமைகள் செய்யலாம்.
ஆலயம் செல்லக்கூடாது. அங்கு செல்லக்கூடாது இங்கு செல்லக்கூடாது என்பதெல்லாம் எதற்காக கூறப்பட்டது என்றால் ஒரு குடும்பம் ஒருவனை மிகவும் பால்ய வயதில் இழந்து விட்டால் அந்தக் குடும்பம் அந்த இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் தடுமாறும்.வேதனைப்படும்.
அதிலிருந்து அந்த குடும்ப உறுப்பினர்கள் மாறுவதற்கு சில காலங்கள் அவகாசம் வேண்டும்.
அதுவரை அந்த குடும்ப உறுப்பினர்கள் இயல்பு வாழ்விற்கு வர இயலாது என்பதற்காகத்தான் இது போன்ற சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன.
இது மனித ரீதியானது.
ஆத்மா என்பது நீ கூறுவது போல படிப்படியாக இத்தனை தினங்கள், அத்தனை தினங்கள் என்பதெல்லாம் முழுக்க, முழுக்க எல்லா ஆத்மாக்களுக்கும் பொருந்தாது.
இவையும் வினைப்பயனுக்கேற்ப மாறும் அஃதாவது உடலை விட்டு பிரிந்த அடுத்த கணமே மறுபிறப்பு எடுக்கக்கூடிய ஆத்மாக்கள் உண்டு.
மனித கணக்கிலே பல வருடங்கள் கழித்து பிறவியெடுக்கூடிய ஆத்மாக்களும் உண்டு.
அடுத்த கணமே இறையோடு இரண்டற கலக்கின்ற ஆத்மாக்களும் உண்டு.
அடுத்த கணமே தேவர்களாக, தேவதைகளாக மாறுகின்ற ஆத்மாக்களும் உண்டு.
பாவங்கள் அதிகமாகவும், புண்ணியங்கள் குறைவாகவும் செய்தவர்கள் பெரும்பாலும் அந்த உடலையும் அந்த இல்லத்தையும் சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.
இன்னும் கூறப்போனால் உடலை விட்டு பிரிவதுதான் மரணம் என்கிற நிகழ்வு.
இந்த நிகழ்வு தனக்கு நிகழ்ந்ததையே அறியாமல் குழப்பத்தோடு அலைவார்கள்.
இந்த குழப்பத்தை நீக்கி அந்த ஆத்மாவை நல்வழிப்படுத்தத்தான் இறை வைத்துள்ள சடங்குகள்..
இறந்தவர்களை எரிக்க வேண்டும்,அடக்கம் ஆனவர்களை மண் மறைவு செய்ய வேண்டும்:
வியாச முனிவர்தான் இறப்பவர்களை எரிக்கும் சட்டத்தை கொண்டு வருகின்றார்.ஒரு இறக்கும் சடலம் நீதி படி வாழாததால் அது புதைத்த ஒரு குறிப்பிட்ட அளவுகோளில் உள்ள இடத்தை அது அசுத்த படுத்தும்.ஆதலால் இறந்த உடலை எரிக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வருகின்றார்கள்.
மேலும் இறந்த உடலில் முதல் 2 மதங்களில் தோல்கள் தேயும்,பின்னர் சதை மறையும்,பின்னர் எலும்பு தேய ஆரம்பிக்கும்,கடைசியில் உள்ளது நரம்பு.நம் உடலிலுள்ள நரம்பின் நீளம் 5000 கிலோமீட்டருக்கு மேல் இருக்கும்.அது அத்தனையும் கரைய 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று மெய்ஞானிகளின் கணக்கு.அப்படி அது அழியும் வரை இறந்த அந்த உயிருக்கும் உபாதை என்றே,அதனை எரிக்க சட்டம் எடுத்து வைத்தது.
அப்படி நரம்பு அழிந்த பின் அதற்கு "அலகை"(பிசாசு) தேகம் கொடுக்கபெற்று பின்னர் நரகில் தள்ளப்படும்.
மரணத்தின் வேதனையை குறிப்பிடும் பொழுது ,ஒருவனை ஒரு மரத்தில் கட்டி எல்லா அவயவங்களையும் கட்டி போட்டு வாய்க்கு பூட்டு போட்டு விட்டு,சுற்றி தீ வைத்து எரித்தால் என்ன வேதனை இருக்குமோ அதனை விட 70,000 மடங்கு அதிகம் இருக்கும் என்று வேதம் குறிப்பிடுகின்றது.இதையே
மரணம்=மாரணம்=மா+ரணம்
மனித உயிர் 6 உயிர்களின் கலப்பு,இதை 7 வது உயிராகிய "ஆவல்" என்னும் உயிரால் கட்டப்பட்டு இந்த மனித தேகம் எடுக்கின்றது.
எரிக்கும் பொழுது இந்த ஆவல் என்னும் உயிர் பிரிந்து அந்த 6 உயிரும் களைந்து விடும்.ஆதலால் அவர்களுக்கு வேதனை கிடையாது.இந்த 6 உயிர் சேருவதற்கு எத்தனனயோ பிறவி எடுத்துதான் அது கிட்டுமாம்.ஆதலால் மனித பிறவி சாதாரண பிறவி அன்று.தேவர்களாக மாறுவதற்கு உரிய வித்தே மனித பிறவி.இந்த பிறவியை வீனாக்கிவிட்டால்,அதை விட தோஷிதனம் படைத்தவன் இந்த உலகில் வேறு ஒருவனும் இல்லை.
எனவேதான் இறந்தவர்கள் எரிக்க வேண்டும்,அடக்கம்(ஜீவசமாதி) ஆனவர்களை மண் மறைவு செய்ய வேண்டும் என்று சட்டம் பிறப்பிக்க பட்டது.