Saturday, November 16, 2019

Maharishi thoughts. Nov'16

*வாழ்க்கை மலர்கள் - நவம்பர்: 16*

*இறைவனின் கருவி*

இறைவனுடைய எந்திரமாகவே இருக்கக்கூடிய  மனிதனிடம் – இறைவனுடைய கருவியாகவே இருக்கக் கூடிய மனிதனிடம் – முழுமையாக ஆறாவது அறிவு வந்து விட்டதால், இறைவனோடேயே கலக்கக் கூடிய அளவுக்கு மனிதனிடம் ஆற்றல் இருப்பது தெரியவரும். அந்த ஆற்றலைக் கொஞ்சம் வளர்த்துக் கொண்டால் போதும். நீங்கள் இனிமேல் இறைவனிடம் போய் எதுவும் தனியாகக் கேட்க வேண்டியது இல்லை. உங்களுடைய மனத்தின் அடித்தளத்தில் இறைவனே அமர்ந்திருக்கின்றான். அதைத் தெரிந்து கொள்ளாதது தான் உங்களுடைய தவறு. அந்தத் தவறு தான் அவனை மறைத்துக் கொண்டு இருக்கிறது.

சும்மா ஒரு தட்டுத் தட்டிவிட்டால் போதும்; உங்கள் அறிவு பிரகாசிக்க  ஆரம்பித்து விடும். அப்படித்தட்டிவிடும் வேலை தான், “நான் என்ன செய்ய வேண்டும்? என்னிடம் என்ன இருக்கிறது? அதை எந்த அளவு வேண்டுமோ அந்த அளவு எப்படிப் பெருக்கிக்கொள்ள முடியும்?” என்ற ஊக்கம். ஒரு குடும்பமானலும் சரி, தனி மனிதனாலும் சரி அல்லது சமுதாயம் ஆனாலும் சரி, எல்லோருமே ஆக்கத்துறையில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க முடியும். இந்தத் தத்துவம் விஞ்ஞானத்திற்கு ஒத்தது. இந்த எனது விளக்கம் உளவியல் தத்துவத்திற்கும் சரி அல்லது வாழ்க்கைக்கும் சரி, எதற்கும் முரண்படாது. உலகத்திலே இதுவரைக்கும் தோன்றி இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய எந்த மதத்திற்கும் அது முரண்பாடானது ஆகாது.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

Maharishi thought. Nov'17

*வாழ்க்கை மலர்கள் - நவம்பர்: 17*

*பேரறிவில் தோய்வோம்*

உலக வாழ்வில் பொருள், மக்கள், பால் (Sex), புகழ், செல்வாக்கு என்ற ஐவகைப் பற்று ஏற்படுவது இயல்பே. கடமை உணர்வோடும், அளவு,  முறை அறிந்தும் விழிப்போடு இப்பற்றுக்களை வளர்த்துக் காத்துக் கொள்ள வேண்டியது பிறவிப் பயனை எய்த அவசியமானது. நீரில் குளிப்பது தேவைதான்; அனால், நீரில் மூழ்கி விடாமலும் காத்துக் கொள்ள வேண்டும். நெருப்பு வாழ்வுக்குப் பலவகையிலும் தேவைதான்; ஆனால் நெருப்பு எரித்து விடாமலும் காத்துக் கொள்ள வேண்டும்.

எந்த இடத்தில் மனிதன் மேலே சொல்லப்பட்ட ஐவகைப் பற்றுதல்களால் அறிவு குறுகி மயங்கித் தன் பிறவி நோக்கத்தையும், வாழ்வின் நெறியையும் மறக்கின்றானோ, அதே நேரத்தில், மனிதனிடத்தில் அமைந்துள்ள அடித்தள ஆற்றலாகிய பேரறிவு, குறுகி நிற்கும் புற அறிவை நேரான வழிக்குத் திசை திருப்புகிறது.

அப்போது விருப்பங்கள், செயல்கள் இவற்றில் தடைகள் விளைந்து வாழ்வில் மாற்றங்கள் தோன்றுகின்றன. இவையே துன்பமாக, சிக்கலாக, கருத்துப் பிணக்காகப் பெற்றுப் புறமனம் குழப்பமடைகிறது. இத்துன்பங்களிலிருந்து புறமனத்தை மீட்க, பேரறிவு, விரிந்த இயற்கை ஆற்றல்  மூலமாகவும், மனிதர்கள் மூலமாகவும் உதவிக்கொண்டேதான் இருக்கும்.

இந்த நிலையிலேனும், புறமன இயக்கத்திலேயே குறுகியுள்ள மனிதன் அவன் வாழ்வின் இயக்கக்களமான அருட்பேராற்றலை நினைவு கொள்ள வேண்டும். பேரறிவின் நிலைக்கு அந்நினைவு அழைத்துச் சென்று ஒன்றவைத்துவிடும். இவ்வகையில் பேரறிவில் புறமனம் தோய்வு பெறும்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

Saturday, November 9, 2019

Maharishi thought. N0v"7

*வாழ்க்கை மலர்கள்: நவம்பர் 7*

*பிறவித் தொடர்பு*

எரியும் விளக்கிலிருந்து தோன்றும் வெப்பமும், வெளிச்சமும், விளக்கை நிறுத்திய உடனே எங்கே போகின்றன? சுற்றிலும் தொடர்பாக உள்ள அணுக்களில் அவ்வெளிச்சம் பிரதிபலித்துக்  கொண்டே இருக்கிறது. அணுவில் காந்தமாகிறது. அந்த அணுக்கள் தாங்கும் அளவு போக மீதம் சூனியம் என்ற ஈர்ப்புச் சக்தியில் சேர்ந்து விடுகிறது. சூன்யமாகி  விடுகிறது, வெளிச்சம் தோன்றிக் கொண்டே பிரதிபலித்துக் கொண்டே, சூனியமாகிக் கொண்டே இருக்கிறது.

ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது; போய்க் கொண்டேயும் இருக்கிறது. ஆனால், பார்வைக்கு ஆறு நிலையான வடிவமாகத் தெரிந்து கொண்டிருக்கிறது. வரவு நின்று விட்டால் பார்க்கும் நீரானது ஓடி மறைந்துவிடும், ஆறு காலியாகத் தெரியும். இது போன்றேதான் விளக்கின் ஒளியும் நிலையானது அல்ல. விளக்கை நிறுத்திய உடனே ஒளி மறைந்து விடுகிறது. இதுபோன்றே, உடலில் சுவாச ஓட்டம், இரத்த ஓட்டம் நின்றவுடன், அதனால் உற்பத்தியாகி இயங்கிக் கொண்டேயிருந்த காந்த அலைகளின் உணர்ச்சிச் செயல்பகுதி செயலற்றதாகி விடுகிறது. அலை அடங்கின நீராகும் தன்மை போலவும், நீராவி குளிர்ந்து விட்டால் தண்ணீராகிவிடும் தன்மை போலவும் அறிவு (Consciousness) என்ற உணரும் சக்தியும் ஆதி என்ற மௌன சக்தியாகி விடுகிறது.

எழுச்சி, இயக்கம் என்னும் நிலையில் எல்லையுடையதாக இருந்த சக்தி இயக்கம் நிற்க எல்லையற்று நிரவி நிர்விகற்ப நிலையாகி விடுகிறது. உயிரைப் பற்றிக் கற்பனையாக எழுதப்பட்டவற்றை மறந்து, அறிவை நிறுத்தி ஆராய்ந்துபார்த்தால் இது நன்றாக விளங்கும்.

நாத விந்துவின் சேர்க்கையே எல்லாப் பிறவிகளுக்கும், முன் தொடர்பும் பின் தொடர்பும் ஆகும். அதாவது தாய் தகப்பன் முன்பிறவி, மக்கள் பின் பிறவியாகும்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

Maharishi thought. Nov"8

*வாழ்க்கை மலர்கள்: நவம்பர் 8*

*முயற்சியளவே ஞான விளைவு*

விதை, நிலம், எரு, தண்ணீர், காவல் இவைகள் அனைத்தும் சரியாக இருந்தால் தான் விளைவு நன்றாக இருக்கும். அதுபோலவே, ஒரு ஆசான் அத்துவிதத் தத்துவம் என்ற ஒருமைத் தத்துவ விதையை உன் அறிவு என்னும் நிலத்தில் ஊன்றினால் அது வளர்ச்சி பெற, நீ ஒழுக்கம் என்ற உரம் இட வேண்டும். அறிவை ஒன்றி ஒன்றிப் பழகும் ஒருமைப் பழக்கமான தவமும் – ஆராய்ச்சியும் என்ற தண்ணீரும் பாய்ச்ச வேண்டும்.

அறிவை ஒன்றச் செய்து உறுதியான, அசைவற்ற நிலையடைவதே ஞானத்திற்குத் தேவையாக இருக்கிறது.   

ஆகையால், அறிவு சலனப்பட்டுக் காமம், குரோதம், கோபம், மோகம், மதம், மாச்சர்யம் என்னும் ஆறு குணங்களில் எதுவாயும் மாறாது பார்த்துக் கொள்ளும் விழிப்பு நிலையாகிய காவல் புரிய வேண்டும்.  

இவைகள் எல்லாம் அமையும் வகைக்கும் அளவிற்கு ஏற்றபடி “ஞானம்” என்ற விளைவும் உனக்கு உண்டாகும்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

Maharishi thought nov 9

Maharishi thought

*வாழ்க்கை மலர்கள்: நவம்பர் 9*

*உயிரும் மனமும்*

உலகில் பிறந்த எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனும் வாழ நினைக்கின்றான். துன்பமில்லாத இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை அவன் நாடுகிறான்.

வாழ்வின் நோக்கத்திற்கு முரண்பாடாக வாழ்வு அமையுமானால், அது துன்பம் தரும். இயற்கையாகக் கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையையும், வாழ்க்கையின் நோக்கத்தையும், அந்நோக்கத்திற்கேற்ப வாழும் முறை என்ன என்பதையும் அறிந்து கொள்வது தான் ஞானம்.

பொதுவாக, நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரிவதில்லை. பெரும்பாலும் பழக்கத்தின் காரணமாகவே தவறுகள் செய்யப்படுகின்றன. அதிலும் சூழ்நிலை நிர்ப்பந்தத்தால் செய்யப்படும் தவறுகளே மிகுதியாக உள்ளன. மனம், புலன் கவர்ச்சியிலேயே நிற்கும்போதும், சூழ்நிலைக் கவர்ச்சியிலே நிற்கும் போதும் பழக்கத்தின் அழுத்தத்தால் உந்தப்பட்டுச் செயலாற்றும்போதும் பெரும்பாலும் தவறுகள் தெரிவதில்லை.

இதனால் வந்த வேலை, பிறவியின் நோக்கம் மறந்து போகின்றன. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் முதலான அறுகுணங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. இதன் விளைவாகப் பஞ்ச மகா பாதகங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதைப் பார்க்கின்றோம்.

தவறிழைப்பது மனம். இனித் தவறு செய்துவிடக் கூடாது எனத் தீர்மானிப்பதும் அதே மனம். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் அதே மனம்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

Wednesday, November 6, 2019

Siddhar. Pazhamozhi

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                          
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

Thursday, October 31, 2019

Vegetarian. (And) non -vegetarian

*அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம் #*

தொகுப்பு - *ராஜரிஷி தரணியோகி*
  

இறை நம்பிக்கை உள்ளவர்கள் ???
அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????
...
இந்த கேள்வியை
கேட்காத மனிதர்கள் இல்லை
இதற்கு
பதில் தராத
குருவும் இல்லை
ஆயினும்
கேள்வி தொடர்கிறது
...
*இதோ ஓஷோ அவர்களின் பதில்...*
உணவுக்கும்
இறைவனுக்கும்
எந்த சம்மந்தமும் இல்லை..
...
உணவுக்கும்
கடவுள் கோபிப்பார் என்பதற்கும்
எந்த சம்மந்தமும் இல்லை...
....
உணவுக்கு
கடவுள் தண்டிப்பார் என்பதற்கும்
எந்த சம்மந்தமும் இல்லை.
...

*உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு*
..
*உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு*
..
*உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு*
..
*உணவுக்கும் மனிதன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு...*
..
*உணவுக்கும் மனிதன் ஆயுளுக்கும் சம்மந்தம் உண்டு...*

*உணவுக்கும் மனித மனதிற்கும் சம்மந்தம் உண்டு..*
..

*மனதிற்கும் இயற்கைக்கும், இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு..*

------------
1. கர்மாவின் காரணமாக
பிறவி எடுத்தவன் மனிதன்..
அந்த அதைக் கரைக்கவே
மனித பிறவி...*

2. தாவர உயிரினங்களுக்கு
கர்ம பதிவுகள் குறைவு
மாமிச  உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள் அதிகம்...*

3. எந்த
உணவை
மனிதன் உண்டாலும்
அந்த
உணவான
உயிர்களின்
பாவ கணக்கை
அந்த
மனிதனே அடைக்க வேண்டும்.*
----------- ------------

4. அம்மாவை தேடி அலையும் தாயில்லாத
குஞ்சுகள் மற்றும் குட்டிகள்
தாயின் மனம் மற்றும்
அந்த குட்டியின் மனம்
எவ்வாறு
தேடி தவித்து இருக்கும்? அதன்
தாயை கொன்று தின்னும்
மனிதன்
உணரவேண்டியது
இதுதான்.
அதிக பாசம் உள்ள
ஆடு கோழி மீன்
இவைகளை
மனிதன் உண்பது
பாச தோஷம் ஆகும்.
அந்த தோஷத்தை
மனிதன்
அடைந்தே தீருவான்
அந்த
கர்மாவையும் சேர்த்து கரைக்க
ஒருவன்
தைரியமாக முன்வந்தால்
அவன்
தாராளமாக
அசைவம் உண்ணலாம்
இதில்
கடவுளுக்கு என்ன பிரச்சனை ???
------------------ --------------
ஒருவர்
வங்கியில்
ஒரு லட்சம் கடன் வாங்குகிறார்
மற்ற ஒருவர்
ஒரு கோடி வாங்குகிறார்
இதில்
மேனேஜருக்கு என்ன பிரச்சனை
கடன் வாங்கியவனே
கடனை கட்ட வேண்டும்.*
------- -------- ---------

6. சில நேரங்களில்
விரதம் இருப்பது
உடலுக்கு மட்டும் நல்லதல்ல
பிறந்த பிறவிக்கும் நல்லதே காரணம்
அந்த விரத நாளில்
மனிதனால்
எந்த உயிரும் பாதிக்காததால்...*
--------- ----- -------------

7. காட்டில் கூட
ஆடு மாடு
யானை குதிரை ஒட்டகம்
இவைகளை
மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை.
புலி சிங்கம்
போன்ற அசைவ உணவு உண்ணியே
மிருகம் என்று கூறுகின்றோம்.
ஆக, சைவ உண்ணிகளுக்கு
மிருகம் என்ற பெயர்
காட்டில் கூட இல்லை..*
------ ------- ------

8. உடலால்
மனித பிறவி சைவம்...
உயிரால்
மனித பிறவி சைவம்...
குணத்தால்
மனித பிறவி
அசைவம் மற்றும் சைவம்.

9.ஆடு, மாடு, மான், யானை
போன்றவை
உடலால் சைவம்
உயிரால் சைவம்
மனதாலும் சைவம்.
---- ----- ----

*ஆகவே, மனித பிறவியின் உணவு #சைவமாக இருத்தலே மனிதனின் #தர்மமாகிறது.*
என்பதால்
*அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் மனித பிறவிக்கு சிறந்தது சைவம் என வழிகாட்டி சென்றார்கள்.*

🙏🙏🙏🙏🙏🙏