Saturday, November 9, 2019

Maharishi thought. Nov"8

*வாழ்க்கை மலர்கள்: நவம்பர் 8*

*முயற்சியளவே ஞான விளைவு*

விதை, நிலம், எரு, தண்ணீர், காவல் இவைகள் அனைத்தும் சரியாக இருந்தால் தான் விளைவு நன்றாக இருக்கும். அதுபோலவே, ஒரு ஆசான் அத்துவிதத் தத்துவம் என்ற ஒருமைத் தத்துவ விதையை உன் அறிவு என்னும் நிலத்தில் ஊன்றினால் அது வளர்ச்சி பெற, நீ ஒழுக்கம் என்ற உரம் இட வேண்டும். அறிவை ஒன்றி ஒன்றிப் பழகும் ஒருமைப் பழக்கமான தவமும் – ஆராய்ச்சியும் என்ற தண்ணீரும் பாய்ச்ச வேண்டும்.

அறிவை ஒன்றச் செய்து உறுதியான, அசைவற்ற நிலையடைவதே ஞானத்திற்குத் தேவையாக இருக்கிறது.   

ஆகையால், அறிவு சலனப்பட்டுக் காமம், குரோதம், கோபம், மோகம், மதம், மாச்சர்யம் என்னும் ஆறு குணங்களில் எதுவாயும் மாறாது பார்த்துக் கொள்ளும் விழிப்பு நிலையாகிய காவல் புரிய வேண்டும்.  

இவைகள் எல்லாம் அமையும் வகைக்கும் அளவிற்கு ஏற்றபடி “ஞானம்” என்ற விளைவும் உனக்கு உண்டாகும்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

No comments:

Post a Comment