Wednesday, April 5, 2017

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி..

*#பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி..பெருங்காயம் - பெருங்காயமே இல்லை.* என்னங்க ஒரே குழப்பமா இருக்கு.

அன்புள்ள மக்களே!

பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும்  என்று நாம் கேள்விப் பட்டிருப்போம்.  ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?

அந்த கூட்டு பெருங்காயம் ...
இந்த கூட்டு பெருங்காயம் ...
அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம்  இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு.  ஆனால் இது அந்த கூட்டு அல்ல.  இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக்  கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும்.

இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை.   என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம்.

அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்?
ஒரு வகையான அராபிய பிசின் 60%,
மைதா 30%,
பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10%

இவற்றின் மொள்ளமாரி கூட்டே கூட்டுப் பெருங்காயம்.  இந்த மூன்றில் எதுவுமே பெருங்காயம் இல்லை என்பது தான் விந்தை!! இதை ஏதோ இரகசியமாகவோ, திருட்டுத் தனமாகவோ செய்வதாக நினைக்கிறீர்களா?  அது தான் இல்லை.  "பெருங்காய டப்பாக்களின்  மேலேயே கொட்டை எழுத்துகளில் அச்சடிச்சு விற்கிறாங்க, ஆனால்  நாம்தான் கவனிப்பதில்லை"-என்று படித்ததும் வியப்பாக இருந்தது. சரி நாமே பார்த்துடுவோம்னு வீட்டில் வாங்கி வைத்திருந்த இரண்டு வெவ்வேறு பிராண்டு பெருங்காய டப்பாக்களை எடுத்து வரச் சொல்லி பார்த்தேன்.  அட ஆமாங்க அவனுங்க க்ளீனா எழுதி வச்சுதான் நம்ம தலையில் கட்டுரானுவ......
இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

வயிறு புண்ணாகும்....
வயிற்றில்  வாயு அதிகமாகும் ..

நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..
மயக்கம் வரும் ...
பால்காயம் என நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பெருங்காயமே நாம் விரும்பும் உடல் ஆரோக்கியத்தை தருமாம்.

*"மேலே சொன்னதைக்கூட தயவுசெய்து நம்பாதீர்கள்.*

*"தகவலை கேளுங்கள்; உறுதிபடுத்துங்கள்; நடைமுறைப்படுத்துங்கள்"*

தலை நிமிர்ந்து வாழ நினைக்கிறீர்களா? கீழ் உள்ளதை தினமும் கடைப்பிடியுங்கள்.

தலை நிமிர்ந்து வாழ நினைக்கிறீர்களா?
கீழ் உள்ளதை தினமும் கடைப்பிடியுங்கள்.
********************************************
1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்.
2. அமரும்போது வளையாதீர்கள்.
3. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்
4. சுருண்டு படுக்காதீர்கள்।
5. கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள்.
6. தினம் இருபத்து மூன்று நிமிடங்கள் வேகமாக நடங்கள்.
7. எழுபது நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.
8. டூ வீலர் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள்.
9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள்.
10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்..

உடல் எடை பராமரிப்பு எப்படி?*

*உடல் எடை பராமரிப்பு எப்படி?*
*********************************
பெண்ணோ, ஆணோ... உங்கள் உடல் எடையை சரியான அளவில் பராமரிக்க விரும்புகிறீர்களா? ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் பட்டினி கிடப்பதால், ஒர்க்கவுட் செய்வதால், தினம் 5 கிமீ ஓடுவதால், காலை வெறும் வயிற்றில் அந்த ஃபிட்னஸ் செண்டர் சென்று அவர்கள் கொடுக்கும் பழச்சாற்றினை அருந்துவதால், டிவி யில் விற்பனை செய்யும் பெல்ட் அணிவதால், வைப்ரேட்டிங்க் மிஷின் வைப்பதால் என இவை எதனாலும் உங்களுக்கான இயற்கையான, வாகான, ஆற்றல் மிக்க உடலை பெற்றுவிட முடியாது.

அப்ப என்ன செய்ய? அப்படின் கேட்கிறீர்கள்... செலவு செய்வதை நிறுத்தி விட்டு, இன்றைய உங்கள் எடையை குறித்து கொள்ளுங்கள் அடுத்த பதினைந்து நாட்களுக்கு பின்வரும் படி நிலைகளை பின்பற்றுங்கள் 16 வது நாள் உங்கள் எடையை பார்க்க தேவையில்லை, உங்கள் மனமே சொல்லும் இவ்வளவு நாள் இது தெரியாமல் போய்விட்டதே என....

1. பால், பால்-டீ, பால்-காபி மற்றும் பால் கலந்த உணவு பொருட்களை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள் (ப்ளாக் டீ, காபி ஓகே)
2. பசி இல்லாத போது வாய்க்குள் எதையும் அனுமதிக்காதீர்கள், நொறுக்கு தீனிகள் உட்பட.
3. நன்றாக பசித்த பின்னர் பிடித்த உணவை, நன்றாக சுவைத்து சாப்பிடுங்கள், பசி அடங்கியதும் சாப்பிடுவதை நிறுத்துங்கள். வீணாகி விடுமே என குப்பையில் கொட்ட வேண்டியதை உங்கள் வயிற்றில் கொட்டி வயிற்றை குப்பை தொட்டி ஆக்கிவிடாதீர்கள்.
4. மூன்று வேளையும் மணி அடித்தால் சாப்பிடும் கொடிய பழக்கத்தை கைவிடுங்கள், பசிக்கிறதா என கேளுங்கள்.
5. டிவி பார்த்து கொண்டோ, புத்தகம் படித்து கொண்டோ, பேசி கொண்டோ எதையும் உண்ணாதீர்கள்
6. கதிரவன் மறைந்த பின்னர் சமைத்த உணவை உண்ணாதீர்கள், இரவு உணவை மாலை 6.30 மணிக்குள் முடியுங்கள் அப்போதும் பசி இருந்தால் மட்டும் உண்ணுங்கள்.

  அய்யய்யோ என பதறாதீர்கள், உங்களை பட்டினி கிடக்க சொல்லவில்லை, சமைத்த உணவை தான் உண்ண வேண்டாம் என கூறுகிறேன், கதிரவன் மறைந்த பின்னர் பசித்தால் அ. பழங்கள் ஆ. பழச்சாறு இ. சூப் இவைகளை மட்டும் உங்களுக்கு பசிக்கின்ற அளவு தாராளமாக உண்ணுங்கள்.

   இவற்றில் எல்லாற்றையும் கடைபிடிக்க முடியாவிட்டாலும் கடைசியாக சொன்னதை மட்டுமாவது செய்யுங்கள். இதனால் செரிமானம் மேம்படும், ஆற்றல் மிக்கவராக திகழ்வீர்கள், அதிகாலையில் எழ முடியும் மேலும் உங்கள் உடல் வசீகரமானதாக மாறிவிடும். ஒரு பதினைந்து நாட்கள் முயற்சித்து தான் பாருங்களேன், உங்களுக்கும் மாலை 7 மணிக்கே சமையலறையிலிருந்து விடுதலை கிடைத்தால் மகிழ்ச்சிதானே.

ஹீலர்.இஸ்மாயீல்

குழந்தை ஊனமாகப்பிறக்க சோதிடத்திலும்,திருமூலரின் திருமந்திரத்திலும் கூறப்படும் காரணங்கள்    

குழந்தை ஊனமாகப்பிறக்க சோதிடத்திலும்,திருமூலரின் திருமந்திரத்திலும் கூறப்படும் காரணங்கள்     ================================

கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை ஏற்பட்டால்
பிரசவத்துக்கு முன்பாகவே கரு கலைந்து
விடுவது.போதிய வளர்ச்சி இல்லாத குழந்தை
பிறப்பது, குறைபிரசவம், பொய்யாக பிரசவ
வலி தோன்றுவது, நஞ்சுக்கொடி இடம்
மாறிவிடுவது பிரசவத்தின் போது தாய்
இறந்து விடுவது ஆகிய கொடிய விளைவுகள்
ஏற்படலாம். கர்ப்பிணிக்கு வைட்டமின் பி-12
ஃபோலிக் அமிலம் ஆகிய சத்துகளில்
குறைபாடு இருந்தால் குழந்தை ஊனமாக
பிறக்க வாய்ப்புள்ளது.

சோதிடம்
***********

1. சனி ஓரையில் கர்ப்பம் தரித்தல், அமாவாசை,
கிரகண காலத்தில் மேற்கொள்ளப்படும்
சேர்க்கையால் உருவாகும் கருவும்
ஊனமுற்றதாக இருக்கும் என ஜோதிட நூல்கள்
கூறுகின்றன.

2, கர்ப்பகாலத்தில் தம்பதிகளுக்கு ஏழரைச் சனி
நடந்தாலும், சனி தசை அல்லது கேது தசை
அல்லது 6-ஆம் அதிபதியின் தசை அல்லது 8-
க்கு உரியவரின் தசை அல்லது 6-க்கு
உரியவரின் புக்தி நடந்தாலும் குழந்தைகள்
ஊனமுற்றதாகப் பிறக்கும்.

3. புத்திரகாரகன் வியாழன் கிரகம், புதனின்
வீடுகளாகிய மிதுனம், கன்னியில்
அமர்ந்திருந்து, புத்திர ஸ்தானாதிபதியும்
பலவீனமாக இருந்தால் ஊனமுற்ற குழந்தைகள்
பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது.

திருமூலரின் திருமந்திரத்தில்
******************************

பாய்கின்ற வாயுக் குறையின் குறள் ஆகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடம் ஆகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூன் ஆகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே.
(திருமந்திரம் 480)

480. சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவுக்கு
ஏற்பக் குழந்தையின் அங்கம் அமைதல்:
சுக்கிலத்தைச் செலுத்தும் வாயு
குறைந்திடின் குழந்தையானது குட்டையாய்ப்
பிறக்கும். பாயும் வாயு மெலிந்திடின்
முடமாகும். அவ்வாயு தடைப்பட்டால்
குழந்தை கூனாய்ப் பிறக்கும். ஆனால்,
ஆராய்ந்து பார்த்தால், பெண்களுக்கு வாயு
இல்லை.

மாதா உதரம் மலம் மிகின் மந்தன் ஆம்
மாதா உதரம் சலம் மிகின் மூங்கை ஆம்
மாதா உதரம் இரண்டு ஒக்கின் கண் இல்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.
(திருமந்திரம் 481)

481. கரு வளரும் காலத்தில் தாயின் வயிறு
இருக்க வேண்டிய நிலைமை :
அன்னையின் வயிற்றில் கருவாக அமைந்த
குழந்தைக்கு அந்த அன்னையின் வயிற்றில்
மலம் மிகுமானால் அக்குழந்தை மந்த
புத்தியுடையதாய் விளங்கும். அவள்
வயிற்றில் நீர் மிகுமானால் அந்தக் குழந்தை
ஊமையாய் விடும். மலமும் நீரும் மிகுந்து
இருக்குமானால் அக்குழந்தை குருடாகிவிடும்.

ஒரு மரண வீட்டில்

ஒரு மரண வீட்டில் எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். அந்த வழி வந்த பட்டினத்தார் அழுபவர்களைக் கண்டதும் அவரும் கதறி அழத் தொடங்கினார்.உடனே பட்டினத்தாரிடம்,"நீங்கள் ஏன் இப்படி அழுகிறீர்கள் எனக் கேட்டாார்கள்.நான் செத்தவருக்காக அழவில்லை.கதறியழும் உறவினர்களுக்காகவே அழுகின்றேன்" என்றார்" ஏன்?" என்று அவர்கள் கேள்வி கேட்டதும் ," செத்த பிணத்துக்காக சாகப்போகும் பிணங்கள் அழுவது மூடத்தனம் இல்லையா?.மரணம் என்பதும் இறைவன்தான்.அதனை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்கள் " என்று கிளம்பினாராம். மரணத்தையும் இறைவனாகப் பார்க்க முடியும் போது இந்த உலகில் எல்லாமே இறைவன்தானே!

வாசி யோகம்- 8*

*
*******************

*நன்றி... ராஜா கிருஷ்ண மூர்த்தி ஐயா....*

*அடுத்த பயிற்சி சந்திர யோகம்*
***********************************

கேளப்ப பூரனச் சந்திரனை நோக்கி
கெட்டியாய் நவமி முதல் தொட்டுபாரு
ஆலப்ப இடகலையிற் சுலழினை நோக்கி .
அண்டரண்ட தீ எல்லாம் மகன்று போகும்
மாள்ப்பா தீபத்தில் சுழினை நோக்கி
மருவி அங்கே பார்க்கையிலே ஒளிதான் வீசும்
நாளப்ப அறுபதுநாள் இப்படியே பாரு
-அகத்தியர் பூஜா விதி பாடல்

சந்திர யோகம் என்பது சந்திரனை கண் கொட்டாமல் பார்ப்பது .

அமாவாசையில் இருந்து ஒன்பதாம் நாள் நவமி நாள்  அன்று இரவு சநதிரை கண் கொட்டாமல் பாருங்கள் . முடிந்தவரை பாருங்கள் அதன் பின் கண்ணை மூடி அன்னாகிற்கு மேல் உள்ள சுழிமுனையில் உள்ளே பாருங்கள் . . உங்களுக்கு சந்திர ஒளி உள்ளே தெரியும் . இவ்விதம் பெளர்ணமி அன்று வரை பாருங்கள் வளது நாசியை பெரு விரலால் அடைத்து இடது நாசிவழி சுவாசிக்கவும் . ..

அப்பொழுது ஓம் ந மா சி வா ய அல்லது விருப்ப மந்திரம் ஓதலாம் . சக்கிரத அவஸ்தை என்ற நல்ல நினனைவுடன் இதை செய்யுங்கள் .

சூரிய யோகத்தையும் சந்திர யோகத்தையும் அறுபது நாள் செய்யுங்கள் .

*இதன் தத்துவம்*
********************

நமது இடது நாசி வழி செல்லும் மூச்சு சநதிர கலை . இது சந்திர யோகத்தால் பலப்படும் சந்திரனிடம் இருந்து வரும் உயிர் சக்தி முழுமையாக கிடைக்கும் . இந்த சூரிய சந்திர யோகங்களால் சூரிய சக்தியும் , சந்திர சக்தியும் வசப்படும் . .

உடல்வலுவும் .,மனவலுவும் , ஓங்கும் . மனம் குவியும் . மிகுந்த சக்தி கிடைக்கும் . அறிவு சுடர்விடும் .

நான் இந்த யோகத்தை சில ஆண்டுகள் செய்தேன். இன்னும் அவ்வப்பொழுது பெளர்ணமி அன்று செய்கிறேன் . . செய்து பாருங்கள் அனுபவம் சொல்லுங்கள்.

*வாசி ரகசியங்கள் இன்னும் ஆழமாக தொடரும்.....*

*ஓம் ஜெய் குருவே துணை*

- *சித்தர்களின் குரல் shiva shangar*

*வாசி யோகம்-7

*
******************

*அடுத்த பயிற்சிசூரிய யோகம் .*
******************************

ஏதுமென்ற பங்குனி சித்திரை இரண்டில்
இதமாக உதயத்தில் ரவியை பாரு
தேருமடா கண் கூசிடாது இளமை வெயில்
தீர்க்கமாய் பிங்கலையில் கண் மூடிப்பரு .
நூறு மடங்காய் அருணன் காந்தி வீசும்
நுனியான சுழி முனையில் உற்று பாரு
பேருபெருன்ச் சுளினைஎலே கண் கெடாது .
பேராக இன்னமொரு சேதி கேளு
அகத்தியர் பூஜா விதி  பாடல்

பொருள்
**********

பங்குனி சித்திரை மதத்தில் சூரியன் உதயமாகும் போது சூரியனை பாருங்கள் . கன்னியா குமரியில் சூரிய உதயம் பார்ப்பது போல் .

கண் கெடாது பின்பு கண்ணை மூடி மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசியில் சுவாசியுங்கள் .

அன்நாக்கிற்கு மேல் மனதை நிறுத்தி பாருங்கள் . உள்ளுக்குள் ஒளி தெரியும் ..

தயவு செய்து இதை உடனே செய்ய தீர்கள் த்ரடக செய்து சித்தி ஆனா பின்பு சூரியனை நேரில் பாருங்கள்
யோகதொடக்கம் .

ஆரம்பத்தில் குளித்து மேல் ஆடை இல்லாமல் சூரியன் முன்பு நில்லுங்கள் . ஓம் ந மா சி வ யா என்று 108 முறை சொல்லுங்கள் . .

அல்லது உங்கள் விருப்ப ஜெபம் , மந்திரம் சொல்லுங்கள் சுமார் 7 முதல்  10நிமிடம் செய்தால் போதும் .

இந்த யோகம் சக்தி வாய்ந்தது . ஸ்ரீ ராமர் சூரிய யோகம் செய்து அதித்ய ஹிருதயம் என்ற மந்திரம் ஜெபித்து ராவணனை வென்றார் . சூரிய ஒளி தரும் வைடாமின் டி உணவில் இருந்து கல்சியத்தை பிரித்து உடலின் செல்களுக்கு கொடுக்கும் . கல்சியம் உடலை இளமையாக வைத்திருக்கும் . சூரிய நாடியில் உயிர் சக்தி முழுமையாக பிரபஞ்சத்தில் இருந்து கிடைக்கும் ..

பின்பு வீட்டிற்குள் வந்து ஒரு கோரை பாய் அல்லது பருத்தி துணிமேல் சம்மணம் இட்டு நிமிர்ந்துஉட்காருங்கள். உங்கள்ளல் எவ்வளவு மூச்சை இரண்டு நாசியிலும் இளுக்க முடியும்மா அவ்வளவு இழுங்கள் . எவ்வளவு நேரம் நிறுத்த முடியுமோ நிறுத்துங்கள் . பின்பு வெளிவிடுங்கள் இப்படி 7 முறை செய்யுங்கள் .. இப்படி 10 நாட்கள் செய்யுங்கள் .

இதை செய்தாலே போதும். சூரிய யோக சித்திகள் முழுமையாக கிடைக்க தொடங்கி விடும்.

*தொடரும்*

- *சித்தர்களின் குரல் shiva shangar*