Sunday, August 21, 2016

தினமும் அதிகாலையில் water therraphy

தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்று விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப்பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகரமாக குணப்படுத்த முடியும் என ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

தலை வலி, உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய், வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறுநீரகம் மற்றும் சிறுநீர் வியாதிகள், வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், மூல வியாதி, சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்கு, தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம்மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை:

1. காலையில் துயில் நீங்கி நீங்கள் எழுந்ததும், பல் துலக்கும் முன்பே 4 X 160 மிலி டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய உணவு, இரவு உணவின் போது 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம்.

5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடைய முடியும். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.

இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது கடுமை மட்டுப்படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தம் – 30 நாட்கள்

வாய்வுக் கோளாறுகள் – 10 நாட்கள்

சர்க்கரை வியாதி – 30 நாட்கள்

மலச்சிக்கல் – 10 நாட்கள்

புற்றுநோய் – 180 நாட்கள்

காச நோய் – 90 நாட்கள்

ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம்முறையினைப் பின்பற்ற வேண்டும்.

பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது. எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.

நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். “நீரின்றி அமையாது உலகு” என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?

Saturday, August 20, 2016

யூரிக் ஆசிட்

யூரிக் ஆசிட்
**********************

எல்லா உயிருள்ள உடல்களைப் போல, நாம் உண்ணும் உணவு என்பதும் (சைவ மற்றும் அசைவ உணவுகள்) செல்களால் ஆனதே. பாலூட்டி இன விலங்குகளில் இந்த உணவு ஜீரணமடைதல் நிகழ்வின் போது இந்த உணவில் உள்ள புரோட்டீன், கொழுப்பு போல, இதில் உள்ள மரபணு பொருட்களும் (DNA & RNA) ஜீரணமடைதல் நிகழ்விற்கு உட்படுத்தப்படுகிறது.

அதோடு, உடலின் செல்கள் பல்வேறு காரணங்களால் மரணமடையும் போது அதில் உள்ள மரபணுக்களும் இதே நிகழ்வின் மூலம் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு புதிய செல்கள் உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு, மரபணுக்களான DNA மற்றும் RNA ஜீரணமாதல் நிகழ்விற்கு உட்படுத்தும் போது அதன் மூலப்பொருட்களாக மாற்றப்படுகிறது. இந்த மூலப்பொருட்களே புதிய செல்கள் உருவாக்கத்தின் போது DNA மற்றும் RNA உருவாக்க பயன்படுகிறது. அந்த மூலப்பொருட்கள் மொத்தம் இரண்டு வகைப்படும்.

அவைகள் :-
--------------------

பியூரின் (PURINES) மற்றும் பிரிமிடின் (PYRIMIDINES).
யூரிக் ஆசிட் என்பது பாலூட்டி வகை உயிரினங்களில், மேற்சொன்ன மூலப்பொருட்களில் ஒன்றான பியூரின்கள் (PURINES) பல்வேறு காரணங்களுக்காக வேதியியல் முறையில் (METABOLISM) உடைபடும் போது உண்டாகும் நச்சு தன்மை வாய்ந்த இறுதி நிலை கழிவுப்பொருள் (FINAL METABOLITE) ஆகும்.

இவ்வாறு செல்களில் உண்டாக்கப்படும் யூரிக் ஆசிட், இரத்தம் வழியாக எடுத்து செல்லப்பட்டு, சிறுநீர் உருவாதலின் போது அதில் கரைத்து, பின்னர் சிறுநீர் வழியாக உடலை விட்டு வெளியேற்றப்படுகிறது.

இந்த யூரிக் ஆசிட் நச்சு தன்மை வாய்ந்தது என்பதால், தினசரி நமது உடலை விட்டு வெளியேற்றப்பட வேண்டியது கட்டாயம். இது நலமாக உள்ள ஒரு உடலில் தினசரி நடக்கும் இன்றியமையாத நிகழ்வாகும்.

ஒரு நலமாக உள்ள மனிதனுக்கு சராசரியாக 250 – 750 மில்லி கிராம் யூரிக் ஆசிட் சிறுநீரிலும், 3.5 – 7.2 மில்லி கிராம் இரத்தத்திலும் இருக்கலாம். இந்த அளவு கூடவோ குறையவோ செய்யும் போது நமது உடல் நலத்தில் குறைபாடு என தெரிந்து கொள்ளலாம்.

எப்போதெல்லாம் யூரிக் ஆசிட் பரிசோதனை பரிந்துரை செய்யப்படுகிறது ?

தற்போதுள்ள நிலையில் CHEMOTHERAPHY எனப்படும் கூட்டு மருந்து சிகிச்சை செய்துக் கொள்ளும் புற்று நோய் நோயாளிகளும், RADIATION THERAPHY எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ளும் புற்று நோய் நோயாளிகளுக்கும், GOUT எனப்படும் நோய் ஏற்பட்ட நோயாளிகளும் இரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவை பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

GOUT என்பது இரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவு கூடும் போது, உடலின் பல்வேறு மூட்டுகளிலும் குறிப்பாக கால் விரல் மூட்டுகளில் இந்த அதிகப்படியான யூரிக் ஆசிட் படிமங்கள் போல (கற்கள்) ஏற்பட்டு, விரல்களை நீட்டி மடக்க இயலாத நிலை உண்டாகும். அவ்வாறு நீட்டி மடக்கும் போதும், நடக்க முயற்சிக்கும் போது தாங்க இயலாத வலி ஏற்படும். புற்று நோயாளிகள் மேற்சொன்ன சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் போது உடலில் அதிக அளவில் செல் இறப்பு ஏற்பட்டு, அதன் மூலம் இரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவு கூடும்.

அதோடு சில சந்தர்ப்பங்களில் உதாரணமாக, சிறுநீரக கோளாறுகள் மூலம் சிறுநீர் பிரித்தெடுக்கும் செயல் குறையும் போது இரத்தத்திலும், சிறுநீரிலும் யூரிக் ஆசிட் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சிறுநீரக கோளாறுகளின் போதும் இந்த பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது.

யூரிக் ஆசிட் பரிசோதனை முடிவுகளில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன ?

இரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவு, சாதரண அளவை விட அதிகமாக இருக்குமானால் அதை HYPERURICEMIA என அழைப்பர். இதன் படி அதிக அளவு யூரிக் ஆசிட் உருவாகி இரத்தத்தில் கலக்கிறது அல்லது சிறுநீரகங்களால் இரத்தத்தில் கலக்கும் யூரிக் ஆசிட்டை வெளியேற்ற இயலவில்லை என மருத்துவர்கள் அறிந்து கொள்வர். ஆனால் இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க மேலும் பரிசோதிக்க வேண்டியிருக்கும்.

MULTIPLE MYLOMA, LEUKIMEIA போன்ற புற்று நோய்கள், சிறுநீரக செயல் இழப்பு, பெண்களில் கர்ப்ப காலம், அதீத குடிப்பழக்கம் முதலிய நிலையிலும் இந்த பரிசோதனை அதிக அளவு யூரிக் ஆசிட் கொண்டிருக்கும்.

இரத்தத்தில் குறைவான யூரிக் ஆசிட் அளவு என்பது பொதுவாக சில வகை கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களிலும், அதிக அளவு நச்சு பொருட்கள் இரத்தத்தில் கலக்கும் போதும் (புகை மற்றும் குடிப்பழக்கம்) மரபணு குறைபாடு தொடர்புடைய நோய்களிலுமே காணப்படும். உதாரணமாக வில்சன் நோய் குறைபாடு (WILSON DISEASE) – செம்பு (COPPER) எனப்படும் தாது பொருள் சம்பந்தப்பட்ட நோய்.

சிறுநீரில் அதிக அல்லது குறைவான அளவு யூரிக் ஆசிட் என்பது, இரத்தத்தில் காணப்படும் அளவை பொறுத்தே அமையும். இதை தவிர குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், சிறுநீரக கோளாறு, குடிப்பழக்கம் போன்றவை சிறுநீரில் யூரிக் ஆசிட் அளவை வேறுப்படுத்தும் காரணிகள் ஆகும்.

பியூரின்கள் (PURINES) செல்களில் வேதிவினைகள் மூலம் உடைக்கப்படுவதற்க்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இது பாலூட்டிகளில் அனுதினமும் சாதாரணமாக நடக்கும் ஆனால் முக்கியமான வேதி நிகழ்வுகளில் ஒன்று ஆகும். சில குழந்தைகள் இயல்பிலேயே மரபணு குறைபாட்டின் காரணமாக இந்த வேதி நிகழ்வு தடைப்பட்ட நிலையில் பிறப்பதும் உண்டு. இந்த குழந்தைகளையும் இந்த பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்க இயலும்.

இதை தவிர சில மருந்துகளின் அதீத உபயோகம் உதாரணமாக ஆஸ்பிரின், சில வகை வலி நிவாரணிகள் (Salycilate drugs), அதிக மது உட்கொள்ளுதல், புற்று நோய்க்கு மேற்கொள்ளப்படும் பல்கூட்டு மருந்துகளின் உபயோகம் – CHEMOTHERAPHY, அதீத அசைவ உணவுகள் (கல்லீரல் மற்றும் சிறுநீரகம்), பட்டினி அல்லது விரதம் காரணமாக உணவு உட்கொள்ளாமை, மன அழுத்தம், கடுமையான உடற்பயிற்சி போன்றவையும் இரத்த யூரிக் ஆசிட் அளவை மாறுபடுத்தும்.

உடல் சூடு என்னும் வெட்டை நோய்

உடல் சூடு என்னும் வெட்டை நோய்

வெள்ளரிக்காய்   ............  பத்து கிராம்
ஆரஞ்சு பழ  சுளை     ..  ஏழு எண்ணம்
புதினா ..  இருபத்தி ஐந்து கிராம்

அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து சாறு எடுத்து  உப்பு   .  ஒரு சிட்டிகை  தேன் ஒரு தேக்கரண்டி கலந்து தினமும் காலை மாலை என இரண்டு வேளைகள் உணவுக்கு அரை மணி நேரம் முன் குடித்துவர பன்னிரண்டு நாட்களில் குணம் கிடைக்கும் உடல் குளிர்சி பெறும் சிறுநீர்த் தாரை நோய்கள் நீங்கும்
இது ஒரு எளிய வீட்டு அனுபவ மருத்துவம் ஆகும்

மருந்து இரண்டு
நாட்டு ரோசா இதழ்கள்    ஐம்பது கிராம்
கற்கண்டு   .     நூற்று ஐம்பது கிராம்
பன்னீர்   ........  ஐந்து மில்லி

அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து விழுதாக்கி
தேன்  ..  ஐந்து தேக்கரண்டி    கலந்தால் கிடைப்பது குல்கந்து ஆகும்
இதை அப்படியே ஒரு நாள் முழுவதும் அப்படியே விட்டு விட வேண்டும்
மறு நாளில் இருந்து தினமும் மதியம் ஒருவேளை ஒரு தேக்கரண்டி குல்கந்து சாப்பிட்டு வர உடல் சூடு குறையும்

தகவல் நன்றி :- திரு.பொன்.தங்கராஜ்

Thursday, August 18, 2016

நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம்

நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம்
சோடசக்கலையைப் பின்பற்றுங்கள் !!!

எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே  இருக்கின்றனர் ?

எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?

இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ?

அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.

இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)

மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,

அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களை அதிகம்பாதிக்கிறது. அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன .சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.

வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன. திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேச கலை!

இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள், மகான்கள்,செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள்  என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.

தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம். இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,என வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.
பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார். இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம்

முழுவதும் பரவும்.திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச் சொல்வார்கள்.
இந்த 16 வது கலையை சித்தர்களும்,முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த  ஒன்றையும் பெற முடிகிறது.

அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அமாவாசை காலை மணி 10.20 வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.
பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் ( நாம் வாழும் மில்கி வே, அருகில் உள்ள அண்ட்ராமீடா ),சகல உயிரினங்களும் ( பாக்டீரியா, புல், பூண்டு ,மரம்,யானை, திமிங்கலம்,சிறுத்தை, கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு, நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன், கடல்பசு,கடல் பாசிகள், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி,பூரான்,பல்லி, ஆந்தை, புறா, கிளி, காட்டெருமை, காண்டாமிருகம், நாய், குதிரை,கழுதை,கோவேறுக்கழுதை,எறும்பு, சுறா மீன் ), ஒவ்வொரு மனிதனும்  சூட்சுமமாக அதிரும்.

அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும். கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது.

ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.

இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்ய வேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்துவிடும்.இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது. மனவலிமையைப் பொறுத்தது. திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.

தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறு காலியாக இருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்) .நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.
அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை ( திருமணம், பணக்காரனாவது, நோய் தீர, கடன் தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றி எதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும் ) நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும்.

தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.

மிஸ்டிக்செல்வம்
இம்மாதம் சோடசக்கலை நேரம் 18.08.2016 வியாழக்கிழமை அன்று மதியம் 2:52 PM  முதல் 4:52 PM மணி வரை                                                                                                                                                                            வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com⁠⁠⁠⁠

Wednesday, August 17, 2016

உடல் மெலிந்தவர்களுக்கு...

எளிய வைத்திய முறைகள்... உடல் மெலிந்தவர்களுக்கு...

             பொதுவாக உடலில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசிய சத்துக்களும் வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் போதுமான அளவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இச்சத்துக்கள் குறையும்போது உடல் பலவீனமடைகிறது.  இவற்றைப் போக்க மருந்து மாத்திரைகள் உண்பதை விட உணவில் அதிகளவு காய்கறி பழங்கள் கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  மதிய உணவில் மோர் சாப்பிடவேண்டும்.

· வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது.  அதுபோல் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பாலில் சிறிது சுக்கு தட்டிப்போட்டு காய்ச்சி அருந்த வேண்டும்.  வாழைப்பழம், கொய்யாப்பழம் சாப்பிடலாம்.

· நோயினால் பாதிக்கப்பட்டு உடல் பலம் குறைந்தவர்கள் அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து அரைத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் கலந்து காலை மாலை டீ காஃபிக்கு பதிலாக அருந்தி வந்தால் உடல் பலவீனம் நீங்கும்.
· பச்சை பயறை நீரில் ஊறவைத்து முளை கட்டிய பின் அதனை லேசாக அவித்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.

· பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் பலம் பெறும்.

· சோற்றுக் கற்றாழை மடலை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் சதைப் பகுதியை நன்கு நீர் விட்டு அலசி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும். 

· தூதுவளை பொடியை தேனில் கலந்து  1 ஸ்பூன் அளவு காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் நன்கு பசியைத் தூண்டும். இளைத்த உடல் தேறும். இதை உடல் பலவீனமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

· கொண்டைக் கடலை 10 எடுத்து இரவு சுத்தமான நீரில் ஊறவைத்து மறுநாள்  காலையில் நீருடன் சேர்த்து கடலையை மென்று சாப்பிட்டு நடைபயிற்சியோ உடற்பயிற்சியோ செய்து வந்தால் மெலிந்த உடல் தேறும். சோர்வு நீங்கும். 

· தேவயான அளவு பேரிச்சம் பழம், தேன் இவற்றோடு கற்கண்டும் சேர்த்து லேகியப்பதமாகச் செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மெலிந்த தேகம் பருக்கும்.

· முருங்கை இலைக்கொத்தின் ஈர்க்குகளை எடுத்து  சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் கை கால் உடல் அசதி நீங்கும்.  உடல் பலம் பெறும்.  உடலைத் தேற்ற சிறந்த டானிக் இது.

· உடல் பலவீனமடைந்து தேறாமல் நோஞ்சான் போல் உள்ளவர்களின் உடல் பலமடைய தூதுவளை, பசலைக்கீரை சிறந்த நிவாரணி.  இவற்றைப் பக்குவப்படுத்தி உண்டு வந்தால் உடல் பலமும், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

· முதல் வாரத்தில் தூதுவளைக்கீரை, அடுத்த வாரத்தில் பசலைக்கீரை..

அதேபோல் அடுத்த வாரத்தில் தூதுவளைக் கீரை என மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் நீங்கி தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=11610

மெலிந்தவர் பருமனாக

மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை
விளக்கம் !!

உடலில் உஷ்ணம் மிகுந்து இருப்பதாலும்,உடலுக்குத் தேவையான புரத சத்துக்கள் கிடைக்காததாலும்,உடல் மெலிந்து இருப்பதற்கு காரணங்களாகும்.   

சித்த மருத்துவ முறைகளில் இளைத்த உடல் பருக்கவும்,
பருத்த உடல் இளைக்கவும் ஏராளமான முறைகள் உண்டு.

இளைத்தவனுக்கு  எள்ளு,
கொழுத்தவனுக்கு  கொள்ளு

என்பது மருத்துவ பழமொழியாகும்.இதன் விளக்கம் என்ன வென்றால் உடலில் சதைப்பிடிப்பு இல்லாமால் மெலிந்து இருப்பவர்கள் தினமும் இரவில் ஒரு கைபிடி அளவு எள்ளு எடுத்து சிறிது,சிறிதாக வாயிலிட்டு நன்கு மென்று தின்று ஒரு தம்ளர் பால் சாப்பிடவும்.இது போல் 40 -தினங்கள் தொடர்ந்து உண்டு வரவும்.

மேலும் காலையில் வெறும் வயிற்றில் வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு உண்ணவும்.இதுவும் 40 -நாள் தொடர்ந்து உண்ணவும். 

தேறாத பிள்ளையையும் தேற்றி வைக்குமாம்
தேற்றான் கொட்டை லேகியம்.

இதுவும் ஒரு மருத்துவ பழமொழிதான்.அதாவது உடல் இளைத்து மெலிந்து இருக்கும் இளம் வயது பிள்ளைகளை உடல் பருக்க இந்த "தேற்றான் கொட்டை லேகியம்" உதவும்.சாப்பிடும் உணவுகளின் சத்துக்களை முழுமையாய் உடலில் சேர்க்க இந்த லேகியம் உதவும்.

சித்தா மெடிக்கல் கடைகளில் இந்த லேகியம் கிடைக்கும்.வாங்கி தினமும் காலை, இரவு உணவிற்குப் பின் ஒரு டீஸ்பூன் உண்டு ஒரு தம்ளர் பால் சாப்பிடவும்.

இதில் கூறப்பட்டுள்ள மூன்று முறைகளையும் கடை பிடித்து வாருங்கள். மூன்று மாதங்களில் உடல் பருமனாக காணலாம்.

நன்றி !
Dr.அரவின் தீபன்...
http://siththamaruththuvavilakkam.blogspot.in/2013_07_01_archive.html

அலர்ஜி, ஆஸ்த்துமா, இருமல்,

கசாயப்பொடி (அலர்ஜி, ஆஸ்த்துமா, இருமல், ஈஸிணோபிலியா, சைனஸ், மண்டைவலி, காய்ச்சல், குணமடைய இந்த உலகில்) இதுவே சிறந்த மருந்து !

சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிச்ச பத்திரி, சித்தரத்தை, பேரரத்தை, அதிமதுரம் முதலியவற்றை சரிவிகித எடையில் கலந்து பொடியாக தயாரித்து பொடியாக வைத்துக்கொள்ளவும்.

இந்தப்பொடியில் ஒரு கிராம் (கால் தேக்கரண்டி) அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிடலாம். தண்ணீரில் கலந்தும் சாப்பிடலாம். அல்லது கொதிக்கும் தண்ணீரில் போட்டு வெல்லம் சேர்த்து வடிகட்டி காபி குடிப்பது போல குடிக்கலாம்.

மூக்கு ஒழுகும் உள்ள நேரத்திலும் சளி, இருமல், காய்ச்சல் சமயத்திலும் தினசரி ஐந்து தடவை காபி மாதிரி சாப்பிட வேண்டும். சாப்பிட சுவையாக இருக்கும்படி தயாரித்து குடிக்கவும்.

காரம் அதிகமாக இருந்தால் தண்ணீர் கலந்து சுவையாகத்தான் சாப்பிட வேண்டும். காரமாக சாப்பிடக்கூடாது.

அலர்ஜி, ஆஸ்த்துமா, இருமல், ஈஸிணோபிலியா, சைனஸ், மண்டைவலி, காய்ச்சல், குணமடைய இந்த உலகில் இதுவே சிறந்த மருந்தாக வேலை செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.