Saturday, April 2, 2016

சீரகம்

[02/04 20:48] ‪+91 99657 58011‬: தினமும் ஒரு மூலிகையில்
இன்று (02.04.2016)

சீரகம்

1. தினசரி 3 லிட்டர் நீரரில் 2 ஸ்பூன் சீரகம் போட்டு காய்ச்சி இறக்கி ஆறவைத்து வெள்ளைத்துணியில் வடிகட்டி அருந்திவர உல் உள்உறுப்புகளில் உள்ள நோய்கள் அகலும்

2. எலுமிச்சை சாற்றில் 7 முறை சீரகத்தை ஊற வைத்து காயவைத்து பொடி செய்து உணவிற்கு முன்பு 3 வேளை சாப்பிட்டு தண்ணீர் அருந்திவ ர
BP. குறையும்  இருதயம் சம்பந்தமான நோய்கள் தீரும்

இன்னும் ஏராளமான நண்மைகள் படியுங்கள்
[02/04 20:48] ‪+91 99657 58011‬: சீரகத்தின் மருத்துவ குணங்கள்...!

சீரகம் நற்சீரகம், காட்டு சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் அல்லது சோம்பு என பல வகைப்படும். நற்சீரகமும் பெருஞ்சீரகமும் உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும். மற்றவை மருந்தாக மட்டுமே பயன்படும். சீரகத்தை மருந்தாகப் பயன்படுத்தும்முன் அதை நச்சு நீக்கிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொதுவாக சீரகத்தை சுண்ணாம்பு நீரில் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்து உலர்த்தி புடைத்து சுத்தப்படுத்தி வைத்துக்கொண்டு மருந்துக்கு உபயோகப்படுத்துவது சிறந்த முறையாகும்.

சீரகத்தின் மருத்துவ குணங்கள்:

கொத்தமல்லி விதையை போல சீரணிக்கும் சக்தியுள்ளது.

நற்சீரகம் அசோசகம், வயிற்று வலி, பீலிகம் (கெட்டிப்பட்ட சளி), காசம் (எலும்புறுக்கிநோய்) போக்கும்

காட்டு சீரகம் சர்மநோய்களை போக்கும்

பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு பீசைம், வயிற்று உப்புசம் ஆகியவற்றை போக்கும்

கருஞ்சீரகம் மண்டைக் காப்பான், சிராய்ப்பீனிஸம், உட்சூடு, தலைநோய் ஆகியவற்றை குணப்படுத்தும்.

மலத்தை கட்டும், புத்திக்கு பலன் தந்து ஞாபக சக்தியை பெருக்கும், கருப்பையை தூய்மைப்படுத்தும், விந்துவை வளர்க்கும், உடல்வலியும் வனப்பு பெறச்செய்யும் உணவுக்கு சுவையுண்டாக்கும், கண்களுக்கு குளிர்ச்சிதரும், வெறிநோய் (இன்சேன்டி) குணமாகும்.

குருதிக்கழிச்சல் என்னும் ரத்தபேதி குணமாகும். வாய்நோய்கள் அனைத்தையும் போக்கும்.
ஈரலை பலப்படுத்தும் கல்லடைப்பு எங்கிருந்தாலும் அதை வெளித்தள்ள உதவும். வாயுவால் ஏற்படுகின்ற நோய்கள், மூக்கு சம்பந்தப்பட்ட நோய்கள், பித்த சம்பந்தப்பட்ட நோய்கள், கண் சூடு, எரிச்சல் ஆகியவை குணமாவதுடன் உடல் பலம் பெறும். பித்த வாந்தி, சுவையின்மை, வயிற்றுவலி, வாய்நோய், கெட்டிப்பட்டசளி, ரத்தபேதி, இரைப்பு, இருமல், கல்லடைப்பு, கண் எரிச்சல் ஆகியவற்றை போக்கும்.

சீரகத்தில் நறுமணமும் காற்றில் ஆவியாக கூடியதும் மஞ்சள் நிறம் கொண்டதுமான எண்ணெய்த் தன்மை 2.5-4% வரை உள்ளது. இந்த எண்ணெயில் “குமிக் அல்ஸ்ரீஹைட்” என்னும் வேதிப்பொருள் 52% அளவுக்கு செரிந்துள்ளது. இந்த எண்ணெயில் இருந்து செயற்கையாக “தைமால்” என்னும் ஓமஉப்பு செய்யப்படுகின்றது.
சீரகத்தின் எண்ணெய் சீழையும் கிருமிகளையும் அழிக்க வல்லது. மேலும் சீரகத்தில் அடர் எண்ணெய் 10% வரையிலும் பென்டோசான்” 6.7! வரையிலும் அடங்கியுள்ளது.

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்:

சீரகத்தையும் மிளகையும் சமபங்கு எடுத்து பாலோடு சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து வைத்திருந்து அரை மணி நேரம் கழித்து குளிக்க தலை அரிப்பு, பொடுகு, பேன் முதலியன ஒழியும்.
ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் சுமார் 30 கிராம் சீரகத்தை பொடித்து போட்டு நன்றாக காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து வைத்திருந்து சிறிது நேரங்கழித்து குளித்துவர தலை உஷ்ணம் (காலச்சூடு), உடற்சூடு (உள்அனல்), மேகத்தழும்பு (தோல்நோய்கள்) ஆகியன குணமாகும்.

மிளகு, சீரகம் இரண்டையும் சமஅளவு சேர்த்து பொடித்து வைத்துக் கொண்டு வெருகடி அளவு தேனில் குழைத்தோ அல்லது வெந்நீருடனோ சேர்த்து வாப்பிட அஜீரணத்தால் ஏற்பட்ட கடுமையான வயிற்றுவலி, பித்த மயக்கம், அரோசகம் (உணவின் மீது வெறுப்பு) ஆகியவை போகும்.

சீரகத்தை அரைத்து களியாகக் கிண்டி கட்டிகளின்மேல் வைத்துக் கட்ட கட்டியினால் ஏற்படும் உஷ்ணத்தையும், வலியையும் போக்குவதோடு வீக்கமும் வற்றும்.
சீரகத்தை அரைத்து ஒரு கரண்டி அளவு எடுத்து எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க கர்ப்பிணிகளுக்குத் துன்பம் தரும் வாந்தி குணமாகும்.

ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தைப் பொடித்து ஒரு வாழைப்பழத்தோடு சேர்த்து உறங்கப் போகும் முன் சாப்பிட நல்ல தூக்கம் வரும்.
வயிற்றில் அமிலச் சுரப்பு (அஸிடிடி) அதிகமானதால் ஏற்பட்ட வயிற்று வலிக்கு ஒரு ஸ்பூன் சீரகத்தை வாயிலிட்டு மென்று அதன் சாற்றை விழுங்க உடனே பலன் கிடைக்கும்.
சீரகம், இந்துப்பு (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) இரண்டையும் சேர்த்து மைய அரைத்து அத்துடன் சிறிது நெய்விட்டுச் சூடாக்கித் தேனீ கொட்டிய இடத்தில் பூசி வைக்க நஞ்சு இறங்கி வலி மறையும்.
ஒரு கரண்டி அளவு சீரகத்தைப் பொடித்து அதனோடு சிறிது வெல்லம் அல்லது தேன் சேர்த்து சாப்பிட்டு உடன் துணை மருந்தாக மோரை உட்கொள்ளச் செய்து உடல் வியர்க் கம் வரை வெயிலில் இருக்கச் செய்ய காய்ச்சல் தணியும்.
சீரகப் பொடியோடு கற்கண்டு தூள் சேர்த்து தினம் இரு வேளை சாப்பிட்டு வர குத்திருமல், வறட்டு இருமல் என வரும் எந்த இருமலும் தணியும்.

சீரகத்தை பொடித்து வெண்ணெயில் குழைத்துக் கொடுக்க எரிகுண்மம் என்னும் (அல்சர்) வயிற்று உபாதை குணமாகும்.

35 கிராம் போதிய அளவு உப்பு சேர்த்து அரைத்து நெய்விட்டு தாளித்து தேன் அல்லது சர்க்கரையுடன் சேர்த்துக் கொடுக்க வளி (வாயு) மற்றும் தீக்குற்றத்தால் வந்த நோய்கள் குணமாகும்.
சீரகத்தை 50கிராம் அளவு எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து நல்ல வெல்லம் 20 கிராம் அளவுக்கு சேர்த்துப் பிசைந்து ஒரு புதுச்சட்டியின் மேல் அப்பி வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டு 500மி.கி அளவுக்கு இரண்டு வேளையும் சாப்பிட்டு வர வெட்டை என்கிற உடற்சூடு, கைகால் குடைச்சல், எரிச்சல், குலைஎரிச்சல் முதலியன குணமாகும்.

சீரகத்தைப் பொன்னாங் கண்ணிச் சாற்றில் ஊற வைத்து
பின் காய வைத்து அரைத்த பொடி 4 கிராம் அளவும், சர்க்கரை 2 கிராமும் சுக்குத் தூள் 2 கிராமும் சேர்த்துக் கலந்து தினமும் இரு வேளை உட்கொண்டு வர காமாலை வாயுத் தொல்லைகள், உட்காய்ச்சல் தீரும்.
சீரகம், ஏலம், பச்சைக்கற்பூரம் மூன்றையும் சம அளவு எடுத்து பொடித்து அதன் எடைக்குச்சரி எடை சர்க்கரை சேர்த்து வைத்துக் கொண்டு அந்தி சந்தி என இருவேளை ஒருகரண்டி அளவு சாப்பிட்டு வர மந்தம், வாயு, ரத்த அழுத்தம் சமனாகும்.
5 கிராம் சீரகத்தோடு 20கிராம் கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர் குடித்துவிட வயிற்றுப் போக்கு குணமாகும்.
சீரகத்தை ஒரு கரண்டி அளவு திராட்சை பழச் சாற்றுடன் சேர்த்துக் குடிக்க உயர் ரத்த அழுத்தம் குறையும்.

சீரகத்தோடு இரண்டு வெற்றிலை 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டு பின் குளிர்ந்த நீர் ஒரு டம்ளர் சாப்பிட வயிற்றுப் பொருமல் வயிற்று வலி குணமாகும்.
சீரகத்தோடு கீழாநெல்லி சேர்த்து அரைத்து எலுமிச்சை ரசத்தில் சேர்த்து குடித்து வர கல்லீரல் கோளாறு காணாமல் போகும்.
மஞ்சள் வாழையோடு 5 கிராம் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.

சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.
கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்:

சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்றுகுணமாகும்.
கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்குநிற்கும்.
சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால்,தொடர் விக்கல் விலகும்.

பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செச்ரிச்சல் தீர சீரகம் + கொத்தமல்லி+ சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.

வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.

சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.

“ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து”

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். இதுபோன்ற எண்ணற்ற தன்மைகள் கொண்ட சீரகத்தின் மருத்துவ குணங்களைப் பார்ப்போம்.

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும்.
சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சீரகத்தை தூள் செய்து லேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு.
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். பித்த நோய்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், அதிக உடல் சூடு, பசியின்மை இப்படி பல நோய்களுக்கு சீரகம் சிறந்த மருந்தாகிறது

சீரகத்தை நன்கு வறுத்து ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்கவைத்து, வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து மாதவிடாய் காலங்களில் இளம் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு கொடுக்க, வலி சிறிது நேரத்திலேயே குறைந்து விடும்.

பசி மந்தம், மற்றும் உணவு ஜீரணமாகாமல் இருப்பவர்கள் சீரகம் கொதிக்க வைத்த நீரை அடிக்கடி இளம் சூட்டில் பருகி வர, பசி ஏற்பட்டு ஜீரணம் ஒழுங்காகும்.
உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் சீரகத்தண்ணீரை இளம் சூட்டுடன் உணவிற்கு பத்து நிமிடத்திற்கு முன்பும், உணவு
உண்டு பத்து நிமிடத்திற்கு பின்பும் அருந்த, உணவு நன்கு ஜீரணமாகி, கொழுப்புகள் உடலில் தங்காமல் இருக்கும்.

சில விலங்கியல் வினோதங்கள்!


1. முதலைகளால் நாக்கை அசைத்து உணவை
சுவைக்கமுடியாது. முதலையின் வயிற்றில்
உருவாகும் ஜீரண நீரினால் (digestive
juices) சிறிய இரும்பு ஆணியை கூட ஜீரணிக்க
முடியும்.
2. நீர்யானைகளின் பிரசவம் நீருக்கடியில்
தான் நடக்கும். குட்டி பிறந்ததும்
சுவாசிப்பதற்காக அடிக்கடி நீரின் மேலேவந்து
செல்லும். குட்டிகளுக்கு பாலூட்டுவதும்
நீருக்கடியிலேயே நடைபெறும்.
3. உலகின் மிக வேகமாக ஓடும் நாயினம்
Greyhound தான். இவற்றின் வேகம் மணிக்கு
சுமார் 70 கிலோமீட்டர்கள். இந்த நாய்களின்
தோற்றம் சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு
பண்டைய எகிப்த்தில் உருவானதாக
கருதப்படுகின்றது.
4. இரவில் பூனைகளின் பார்வை திறன்
மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம்.
ஏனென்றால் அதன் கண்ணின்
விழித்திரையில் உள்ள tapetum lucidum என்னும்
சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக
ஒளியினை உள்வாங்குவதால்தான்
5. Grizzly Bear, இந்த கரடியினம் குதிரைகளுக்கு
இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.
6. பூனைகளால் தாடையினை (jaw) வல இட
புறமாக அசைக்க முடியாது.
7. விலங்குகளிலே ஒட்டகசிவிங்கி மட்டுமே
பிறக்கும் போதே தலையில் கொம்புடன்
பிறக்கும்
8. உலகில் வாழும் மிகப்பெரிய பறவை
ஆண் தீ கோழிகள்தான். இதன் எடை சுமார்
175 கிலோ இருக்கும்.
9. Japanese cranes, இந்த
கொக்குகள் அதிக எடை இருப்பதின்
காரணமாக உடனடியாக மேலே எழும்பி
பறக்க முடியாது, எனவே முதலில் சுமார் 30
அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க
முடியும். (விமானம் போன்று)
10. Great horned owl, இந்த ஆந்தையின் உடலில்
உள்ள இறகுகளை எடுத்துவிட்டு அதன் எடையை
கணக்கிட்டால் அதன் இறகுகளை விட எடை
குறைவாகத்தான் இருக்கும்
11. விலங்கினகளில் Cat fish க்குதான் அதிக
சுவை மொட்டுகள் அதாவது 27, 000
சுவை மொட்டுகள் உண்டு.
12. தெள்ளு பூச்சி (Flea) அதன் உடலின்
நீளத்தை போல் சுமார் 350 மடங்கு நீளத்தை
தாண்டும்.
13. நட்சத்திர மீனுக்கு மூளை கிடையாது.
14. தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர்
வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு
குஞ்சு பொரிக்கும்.
15. Bald Eagle, இந்த பருந்துகளின் கூடுகள்
தான் உலகிலே மிகப்பெரிய பறவை
கூடுகளாகும். இவை சுமார் 2 மீட்டர் நீளமும்
மீட்டர் 3 ஆழமும் இருக்கும்.

Friday, March 25, 2016

மனோநாசம்

தியானத்தை விடு.. ( 24-03-2016 )
ஞானத்தைப் பெறு.. ( சுருக்கம் )
அத் ( 14 )..அனுபவங்களின் ஆயுள்..
-------------------------------------------------------
நம்முடைய பிரச்னைகள் இருக்கும் இடம் எது..?

மனோநாசம் செயல்படும் இடத்தில் பிரச்னைகள் உள்ளனவா..?
அல்லது..
மனோலயம் செயல்படும் இடத்தில் பிரச்னைகள் உள்ளனவா..?

மனோலயம் மட்டுமே ..  இன்பத்தையும்.. துன்பத்தையும் கொண்டு வருகிறது..

மனோலயம் செயல்படும் போது..
ஒன்று துன்பம் வெளிப்படலாம்..
அல்லது இன்பம் வெளிப்படலாம்..

மனோலயம் தான் பிரச்னைகளைக் கொண்டு வருகிறது..

நமது மனம் ஏதாவது ஒரு அனுபவத்தில் பொருந்தி இருப்பதை மனோலயம் எனக் கூறுகிறோம்..

அப்படி.. ஏற்பட்ட மனோலயம்..
கலைந்து போவதற்கு..
கால அவகாசம் ஏற்படும்போது..
அங்கு ஒரு வித உறைநிலையும் ஏற்பட்டு விடுகிறது..

மனோநாசம் என்பது.. எந்த லயத்திலும் நிலை கொள்ளாமல்.. திரவ நிலையில் இயங்கும் மனதைக் குறிக்கிறது..

மனோலயத்தில்தான் இன்பமும்.. துன்பமும் ஏற்படுகிறது..

நமக்கு ஏற்படும் துன்ப அனுபவம் நம்மை விட்டு.. போய்விட வேண்டும் என்று நாம் எண்ணும்போது...
நமக்கு ஏற்பட்ட துன்ப அனுபவத்தை எதிா்த்து நாமே போராடுகிறோம்..

நமக்கு ஏற்பட்ட இன்ப அனுபவம் நீடிக்க வேண்டும் என்று நினைக்கும் போதும்..
அந்த இன்பத்தை சுவைப்பதற்காக..
அப்போதும் ஒரு போராட்டத்தில் ஈடுபடுகிறோம்..

இன்ப.. துன்ப.. அனுபவம் எப்படி மனோலயத்தினால் ஏற்பட்ட நிகழ்வுகளோ..
அப்படித்தான்.. அது சம்மந்தமான போராட்டங்களும்..
மனோலயத்தினால் ஏற்பட்ட விளைவுகளே..

பிரச்னைகள் ஏற்பட்டது மனோலயத்தினால்தான்..
இப்போது..
பிரச்னைகளை தீா்க்க வேண்டும் என முயற்சி செய்வதும் மனோலயமே..

மனோலயத்தின் எல்லா முயற்சிகளும் மனோலயத்தையே உறுதி செய்கின்றன..

அப்படியானால்..
நமது பிரச்னைகளுக்கான  தீா்வுதான் என்ன..?
தீா்வு வேண்டும் என்ற கோாிக்கையே..
நம்முடைய பிரச்னையை மேலும் பலமுடையதாகச் செய்துவிடுகிறது..

இராமாயணத்தில்..
வாலியை எதிா்த்துப் போாிடுபவாின் பலத்தில் பாதி வாலிக்குச் செல்லும்..
இப்போது.. வாலியின் பலம் + எதிராளியின் பலம் என .. வாலியின் பலம் எதிராளியின் பலத்தைவிடக் கூடுதலாகி விடும்..

இந்நிலையில்.. வாலியை ஜெயிப்பது எவ்வாறு..?
இந்நிலையில்.. மனோலயத்தினால் ஏற்பட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதுதான் எவ்வாறு..?

நமது பிரச்னைகளுக்கெல்லாம் மூல காரணம் இன்ப நாட்டமே..
இன்பத்தை நாடும் நிலையில்தான் முரண்பாடுகளும்  போராட்டங்களும் வருகிறது..

இன்ப நாடாத நிலையில் நாம் இருப்போமாயின்.. முரண்பாடுகளும்.. போராட்டங்களும் இல்லாமல் போய்விடும்..
ஆகவே.. இன்ப நாட்டம் இல்லாத நிலையில் நாம் செயல்படுவதுதான் நல்லது..

ஆகவே.. இன்ப நாட்டமில்லாத நிலை வேண்டும்..
இப்படி.. இன்ப நாட்டமில்லாத நிலை வேண்டும் என்ற கோாிக்கையையும்..
இன்பத்தை நாடும்...
மனநிலைதான் கோருகிறது..

இப்படி.. எதையோ வேண்டும் என்று கேட்டு.. தன்னைத்தானே நமது மனது பிரச்னைக்குள் ஆழ்த்தி விடுகிறது..

இப்போது நாம்..
நமது பிரச்னைகளிலிருந்து விடுபட வழிகள்தாம் ஏதாவது உள்ளனவா..?
நாம் என்னதான் செய்வது..?

( தொடரும் )

Thursday, March 24, 2016

வெற்றி பெற முழுக்காரணம் ஆழ்மனம் தான் (Sub Conscious Mind)

வெற்றி பெற முழுக்காரணம் ஆழ்மனம் தான் (Sub Conscious Mind)
🙏�🙏�🙏�ஆழ்மனதைப் பற்றி ஓர் ஆய்வு. நமது ஆழ்மனம் நாம் விரும்பும் எதையும் நமக்கு கொடுக்கவல்லது! மனத்தில் இரண்டு நிலைகள் உண்டு.

1.மேல் மனம் (conscious Mind) அல்லது வெளிமனம்

2. ஆழ்மனம் ( Sub Conscious Mind).

மனமென்பது ஆர்டிக் கடலில் மிதக்கும்பனிப் பாறைகளைப் போன்றது. கடலுக்கு மேல் கண்ணுக்குத் தெரிகின்ற 20% பனிப்பாறையைப் போன்றது மேல் மனம். கடலில் மூழ்கியிருக்கின்ற கண்ணுக்குத்த தெரியாத 80% பனிப்பாறையைப் போன்றது ஆழ்மனம்.

மேல்மனத்தை விடப் பல மடங்கு பெரியதும், ஆற்றல் மிக்கதும் ஆழ்மனம் ஆகும்.

மேல்மனம் என்பது விழிப்பு, உணர்வு நிலை எனப்படும். நினைவு நிலைக்கு இதுவே காரணமாகிறது. ஆனால் ஆழ்மனம் துயில் நிலைக்கும், துயிலுக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட மெய்மறதி நிலைக்கும் காரணமானது!

நாம் படிப்பதும், பேசுதலும், செயல்படுவதும் மேல் மனத்தின் மூலமாகத்தான், ஆனால் என்ன படிக்கிறோம், ஏன் – எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம், ஏன் – எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம் காரணம் அடிமனம் தான் (ஆழ்மனம்)

எனவே நமது குறிக்கோள்களை நமது அடிமனம் ஏற்றுக்கொள்ளுமாறு எண்ணங்களைச் செலுத்த வேண்டும். நாம் செய்ய வேண்டியது இதுதான்.

1. நமது ஆழ்மனத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும்.

2. உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்கள் என்ன என்பதை ஆழ்மனதிற்கு தெரிவிக்க வேண்டும்.

உங்கள் குறிக்கோள்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட ஆழ்மனம், அந்த குறிக்கோள்களை விரைவில் அடைய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, உடனே உங்களைச் செயல்படுத்த தூண்டும்.

நமது குறிக்கோள்களை ஆழ்மனத்திற்கு எப்படி கொண்டு செல்வது:

1. நமது எண்ணங்கள் எல்லாம் நமது குறிக்கோள்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும்.🙏              2. ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட வேளையில் (காலையில் 15 நிமிடங்கள்) குறிக்கோளை அடைவதற்கான மனப்பயிற்சியை செய்துவர வேண்டும்.

3. நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், கண்ட குப்பை எண்ணங்களை எண்ணாமல், நமது குறிக்கோளைப் பற்றிய எண்ணங்களாகவே நினைக்க வேண்டும்.

உதாரணமாக வீடு வேண்டும் என்றால் அந்த வீட்டில் (கற்பனை வீட்டில்) எத்தனை அறைகள் இருக்க வேண்டும். அதனுடைய அளவுகள் எப்படி இருக்க வேண்டும், எந்த அளவில் கதவுகள், வர்ணங்கள் என்ன என்பதை பற்றிய கற்பனைகளையே உங்களது எண்ணம் முழுவதும் நிரம்பியிருக்க வேண்டும்.

நமது முன்னால் குடியரசுத் தலைவர் திரு ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் கூட இதன் அடிப்படையில் தான் ‘கனவு காணுங்கள்’ என்று சொன்னார்.

4. உங்கள் மனதில் குறிக்கோள் விதையை வலுவாக ஊன்றுங்கள்… அதை உங்களது தீவிர எண்ணங்களால் உரமேற்றுங்கள்.. நிச்சயம் உங்களது குறிக்கோளை அடைந்துவிடுவீர்கள். விதைத்ததையே அறுவடை செய்து விடுவீர்கள் என்பது நிச்சயம்.

5. உங்களது கற்பனையில் உங்களது குறிக்கோளை ஒரு படமாக மாற்றி அதை உங்கள் மனத்திரையில் ஓட்டிப் பார்க்க வேண்டும். என்ன நினைக்கிறீர்களோ அதை அப்படியே செய்து முடிப்பதாக நினக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு புதிய வீடு கட்ட வேண்டும் எனில், கற்பனையில் வீடுகட்டி அதற்கு கிரகப்பிரவேசமும் செய்து முடித்ததாக எண்ண வேண்டும்.. உங்கள் கற்பனை எண்ணங்கள் மேலோங்கி , எண்ணங்கள் வலுப்பெற்று அது உண்மையாகவே நடக்க ஆரம்பித்துவிடும்.

6. குறிக்கோள்களை அடைவதற்கு, தற்காலத்தில் அனுபவிக்கக் கூடிய சிறுசிறு சுகங்களை தியாகம் செய்யவும் தயங்கக் கூடாது.

7. உங்கள் ஆழ்மனத்தை, பிடிவாதத்துடன் நம்ப வைத்துவிடுங்கள். ஆழ்மனம் வெகு சீக்கிரம் உங்கள் குறிக்கோளில் கொண்டு சேர்த்துவிடும்…8. உங்களது குறிக்கோளை தெளிவாக ஒரு அட்டையில் எழுதி / உங்கள் கண்களில் அடிக்கடி படும்படியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் பார்க்கும் போதெல்லாம், எண்ணங்கள் உங்கள் குறிக்கோளின் மீது குவியட்டும்.

எனவே நாம் நமது குறிக்கோளைத் தெளிவாக ஒரு காலவரையில் முடித்தே தீருவேன் என்று முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். பின்பு ஆழ்மனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்! 🙏�🙏