*வாழ்க்கை மலர்கள்: டிசம்பர் 10*
*மனிதவளக் கம்ப்யூட்டர்*
இறைநிலையானது நெடும் பயணத் திருவிளையாடல்கள் அனைத்தும் முழுமையாக அலை வடிவில் சுருக்கி வைத்துள்ள கருவூலம்தான் உயிரினங்களின் உடலின் மையத்தில் அமைந்துள்ள கருமையம்.
ஒரு பெரிய ஆலமரம் அதன் சிறுவித்தில் அலை வடிவில் சுருங்கியுள்ளது போல, இயற்கையின் பரிணாமச் சரித்திரமானது வான்காந்த அலையில் பதிவாகி, மேலும் மனிதனுடைய சீவகாந்தக் கருமையத்தில் சுருங்கி இருப்பதாக உள்ளது. இந்தக் காலத்தின் விஞ்ஞானப் பேரறிஞர்கள் கண்டுபிடித்து, வழக்கில் வந்துள்ள கம்ப்யூட்டர் கருவியைப் போல, இறை ஆற்றாலால் வடிவமைக்கப்பட்டது கருமையம் எனும் (Organic computer) காந்த மையம்.
இயற்கை வளச் சரித்திரத் திரட்டான மனிதவளக் கம்ப்யூட்டர் என்னும் கருமையம் காந்த ஆற்றலின் திணிவு பெற்ற பிரபஞ்சப் பிரதிபலிப்பு, கண்ணாடி ஆகும். இத்தகைய இயற்கைச் சுரங்கத்தைத் தன்னகத்தே அடக்கப் பெற்றுள்ள பாக்கியசாலியே மனிதன் என்ற திருஉருவம்.
இந்தத் தெய்வீக நிதியை மதிப்போடும், தூய்மை கெடாமலும் காத்து வரவேண்டியது ஆறாவது அறிவின் நிலையில் வாழும் மனிதனுடைய கடமையாகும்.
*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam
No comments:
Post a Comment