*இட்டுக் கெட்டது காது*
*இடாது கெட்டது கண்*
*கேட்டுக் கெட்டது குடி*
*கேளாது கெட்டது கடன்*
*பார்த்துக் கெட்டது பிள்ளை*
*பாராமல் கெட்டது பயிர்*
*உண்டுக் கெட்டது வயிறு*
*உண்ணாமல் கெட்டது உறவு*
விளக்கம் :
குச்சியைச் சதா காதில் விட்டு குடைவதால் காது கெடும் 🌹
மையை இடாததால் கண் கெடும் 🌹
பிறர் சொல்லும் கோள் வார்த்தைகளை காது கொடுத்துக் கேட்டால்,
குடும்பம் சீரழியும் 🌹
அடிக்கடி கேட்காததால் கடன் திரும்பி வராமல் அழியும் 🌹
தயவு தாட்சண்ணியம் பார்த்துக் கண்டிக்காமல் இருந்தால்
பிள்ளைகள் திருந்தாமல் கெட்டுப் போவார்கள் 🌹
அடிக்கடி போய் பார்க்க வில்லையானால் பயிர் கெடும் 🌹
அடிக்கடி உண்பதால் வயிறு கெடும் 🌹
உறவினர் வீடுகளில் விசேஷக் காலங்களில்
நாம் கலந்துக் கொண்டு உணவு உண்ணவில்லையானால்
உறவினர் நட்புக் கெடும்.🌹
No comments:
Post a Comment