Monday, July 29, 2019

Maharishi thought ( July 29)

ஜூலை 29 : வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

உலக சகோதரத்துவம் :

மூன்று மறைபொருள்களாகிய தெய்வம், உயிர், சீவகாந்தம் ஆகிய இவற்றைப் பற்றிச் சரியாக விளங்கிக் கொள்ளாததனாலேயே மனித இனம் பெரும்பாலும் முடிவில்லாத துன்பத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. கல்வி முறையின் மூலமாக இந்த மூன்று மறைபொருள்களைப் பற்றிய விளக்கமானது தெளிவாக எல்லோருக்கும் கொடுக்கப்பட்டால் தான், மனித இன முன்னேற்றம் என்பது நடைமுறையில் சாத்தியமாகும். ஒவ்வொரு தனி நபரும், பொருளாதாரம், அரசியல், சுகாதாரம், அறிவியல் ஆகிய பல்வேறு கோணங்களிலே இந்தப் பரந்த உலகத்தோடு ஒரு இடைவிடாத தொடர்பை எப்போதும் வைத்துக் கொண்டிருக்கிறார். யாராவது ஒரு தனி நபர் இத்தகைய அறிவு விளக்கத்திலோ அல்லது வாழ்க்கை ஒழுக்கத்திலோ பின்தங்கி இருப்பாரானால் அது தொடர் நிகழ்ச்சி போல குடும்பம், சமுதாயம், உலகம் என்ற அளவில் மனித குலத்துக்குப் பெரிய அளவில் மிக மோசமான பாதிப்பை உண்டாக்கும்.

ஆகவே, உலகில் வாழும் ஒவ்வொருவரின் நலத்திற்காகவும், மனித சமுதாயம் முழுவதும் அறிவு வளமும், மன வளமும், உடல் நலமும் நிறைந்ததாக இருக்க வேண்டும். உலக சகோதரத்துவம் (Universal Brotherhood) என்பது ஒரு பேச்சளவில் இருக்கிற கொள்கையாக இருக்கக் கூடாது. அது, மெய்ஞானிகளாலும், விஞ்ஞானிகளாலும், சிந்தனையாளர்களாலும் வரையறுத்துச் சொல்லப்பட்ட உண்மை உணர்வாக இருக்க வேண்டும். உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருடைய அனுபவ அறிவாக அறிவாட்சித்தரமாக அமைய வேண்டும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * *
இறைநிலையை விளக்கும் கடமை :

"தெய்வம் உயிர் சீவகாந்தம் திருநடனம் மறைபொருள்
தெரியாமலே உலகம் திகைத்துச் சிக்கல் ஏற்றது;
ஐயமின்றி அனைவரும் இவ்வரும் பொருள் விளங்கியே
அனைத்து விஞ்ஞானம் மெய்யறிவு நோக்கி முழுமையாய்
உய்ய ஓர் சிறந்த வழி உயர்ந்த காந்தத் தத்துவம்,
உண்மை தெய்வம், உயிர், அறிவு, உணர்த்தி விட்டதிந்த நாள்
செய்யவுள்ள கடமையோ இச்சீரறிவு உலகெலாம்
சிறப்புடனே பரவ ஏற்ற சீரிய தொண்டாற்றுவோம்".

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Tuesday, July 9, 2019

தூபங்களும் அதன் பயன்களும் .

தூபங்களும் அதன் பயன்களும் .நான் சொல்ல வரது நல்ல தூபமாக்கும் .

சந்தனத்தில்- தூபமிட தெய்வ கடாட்சம் உண்டாம்.

சாம்பிராணியில்- தூபமிட கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

ஜவ்வாது - தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.

அகிலி - தூபமிட குழந்தை பாக்கியம் உண்டாகும்.

துகிலி -தூபமிட குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு ஆரோக்கியத்தினை உண்டாகும்.

துளசி_தூபமிட -காரியத்தடை திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும்.

தூதுவளை - தூபமிட எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்.

வலம்புரிக்காய்- தூபமிட பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்.

வெள்ளைகுங்கிலியம் தூபமிட துஷ்ட அவிகள் இருந்தவிடம் தெரியாது நீங்கிவிடும்.

வெண்கடுகு --- தூபமிட பகைமை எதிர்ப்புகள் விலகும்.

நாய்கடுகு - தூபமிட துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர்.

மருதாணிவிதை -- தூபமிட சூனிய கோளாறுகளை நீக்கும்.

கரிசலாங்கன்னி தூபமிட மகான்கள் அருள்கிட்டும்.

வேப்பம்பட்டை- தூபமிட ஏவலும் பீடையு நீங்கும்.

நன்னாரிவேர் - தூபமிட இராஜவசியம் உண்டாக்கும்.

வெட்டிவேர்-தூபமிட காரியங்களும் சித்தியாகும்

வேப்பஇலைதூள் -- தூபமிட சகலவித நோய் நிவாரணமாகும்.

மருதாணிஇலைதூள் --- தூபமிட இலட்சுமி கடாட்சம் உண்டாகும்.

அருகம்புல்தூள் தூபமிட சகல தோஷமும் நிவாரணமாகும்.

*தினமும்* *வீடு*, *கடை,* *தொழிற்சாலை,* *பாடசாலை,* *அலுவலகம்* *போன்ற* *இடங்களில்,*
*இறைவனை* *நினைத்து* *தூபமிட்டாலே*
*அவ்விடத்தில்* *அமைதியும்* *நற்சூழலும்* *அமைந்து அங்கு நடக்கும் நடைபெறும் செயல்கள் யாவும் சிறப்பாக அமையப்பெறும்!*

Vethathri thought . Family peace

நல்ல குடும்பம் பற்றி :
*-அருட்தந்தை பேசுகிறார்-* மனவளக்கலைப் பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால்,
அதற்கு என்ன வழி?

மூன்று பண்புகள்:

1.  விட்டுக் கொடுப்பது,
2.  அனுசரித்துப் போவது,
3.  பொறுத்துப் போவது.

இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது.
இந்த இடத்தில் ஒரு சந்தேகம். ஒரு பேராசிரியை எழுந்து அதைக் கேட்டார்.

“விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்...
யார் விட்டுக் கொடுப்பது? *கணவனா? மனைவியா?*
பிரச்சினையே அங்குதானே ஆரம்பம்!” எல்லோரும் ஆவலோடு
மகரிஷியின் முகத்தைப் பார்கிறார்கள்.

இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

கணவனுக்குச் சாதகமாகப் பேசுவாரா?அல்லது
மனைவிக்குச் சாதகமாகப் பேசுவாரா?

மகரிஷி சிரிக்கிறார். அப்புறம் சொல்கிறார்.

*“யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள் தான்* விட்டுக் கொடுப்பார்கள். *அவர்கள்தான்* அனுசரித்துப் போவார்கள். *அவர்கள்தான்* பொறுத்துப் போவாகள்.”

அரங்கம் கைதட்டலால் அதிர்கிறது.

ஆரவாரம் அடங்கியவுடன் அருட்தந்தை தொடந்து பேசுகிறார்:

“அன்புள்ளவர்களிடம்தான் பிடிவாதம் இருக்காது. பெருந்தன்மை இருக்கும். குடும்பத்தில் ஆற்றலை உற்பத்தி பண்ணுகிறவர்கள் அவர்கள்தாம்,
அவர்கள்தாம் Power Producers, Charged Batteries, நம்பிக்கை நட்சத்திரங்கள், இறை ஆற்றலோடு நெருக்கம் உள்ளவர்கள். அவர்களுக்குத்தான் தவம் எளிதாகக் கைகூடும். அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.

அத்தனைச் சிக்கல்களுக்கும் தீர்வாக அவர்கள் திகழ்வார்கள்.
அருட்பேராற்றலால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள் அவர்களே!”

அருட்தந்தையின் விளக்கம் நமக்குள் ஓர் உந்துதலை
ஏற்படுத்துவதை உணர முடிகிறது.

*விட்டுக்கொடுப்பதில் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற வெளிச்சத்தை நமக்குள்ளே உண்டு பண்ணுகிறது.*

அமைதியான குடும்பமே நல்ல குடும்பம். குடும்ப அமைதியே
உலக அமைதிக்கு வித்தாகும் என்கிறார் மகரிஷி.

அமைதியான குடும்ப வாழ்விற்கு மேலும் அவர் சொல்கின்ற
*கீழ்க்கண்ட பத்து அறிவுரைகளை* கவனத்தில் கொள்வோம்.

பத்து வழிகள்:

1.  நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2.  கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3.  குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் *அறிவாகத்தான்* இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உங்கள் *உணர்ச்சிகள்* நிர்வாகம் செய்யக் கூடாது.

4.  வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியைக் குலைக்கும்.

5.  ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது பெரும்பாலோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம்; சிலர் குறைவாகச் சம்பாதிக்கலாம்.
அப்படி இருந்தாலும் அதைக் காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது
ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6.  கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிணக்குக்கு இடம் தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் இல்லற இன்பம் நிலைக்காது.  பொறுப்பற்று வீண் செலவு செய்பவராக இருந்தாலும் குடும்பத்தில் அமைதி போய்விடும்.

7.  குடும்ப அமைதி நிலவ, *சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம்* என்ற மூன்றையும் கடைபிடித்து வரவேண்டும்

8.  பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் *பொறுத்தலும், மறத்தலும்* அமைதிக்கு வழி வகுக்கும்.

9.  தனக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவை இல்லை. ஏனென்றால் *அவரவர் அடிமனமே* தனக்கான துணையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகும்.

10.  நல்ல குடும்பத்தில் *நன்மக்கள்* தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.

நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!!

*--தத்துவஞானி வேதாத்திரி மகரிசி--*

வாழ்க வையகம் !
வாழ்க வளமுடன் !!

Vethathri thought JULY"9

*வாழ்க்கை மலர்கள்: ஜூலை 9*

*பூஜ்யமும் பூஜ்யரும்*

பூஜ்யம், முழு எண் ஒன்று இருக்குமானால் அது பூஜ்யம் ஒன்று தான். ஏன் என்றால் மற்ற எண்ணெல்லாம் ஒரு பக்கம் ஆரம்பிக்கும். ஒரு பக்கம் முடியும். உருவம் கோணல் மாணலாக இருக்கும். “1” என்ற எண்ணை எடுத்துக் கொண்டீர்களானால், அதற்கு மேல் முனை, கீழ் முனை என்று இரண்டு இருக்கின்றன, “2” என்ற எண்ணை எடுத்துக் கொண்டீர்களானால், முன் முனை இருக்கிறது. பின் முனை இருக்கிறது. மற்ற எண்கள் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் வளைகின்றன. 3, 4, 5, 6, 7, 8, 9, என்று எல்லா எண்களும் கோணல் மாணலாக இருக்கின்றன. ஆனால் பூஜ்ஜியத்தை எடுத்துப் பாருங்கள் “0” அது எங்கே தொடங்குகிறதோ, அங்கே போய்த்தான் முடிகிறது.

பூஜ்ஜியம் தான் முழுமையான எண். மற்ற எண்களுக்கு மதிப்பு வைத்திருக்கிறோம். பூஜ்ஜியத்திற்கு மதிப்பு ஒன்றுமில்லை என நினைக்கிறோம். ஆனால், அதுவா ஒன்றுமில்லை? 1 என்ற எண்ணினை எடுத்துக் கொள்ளுங்கள். பூஜ்ஜியத்திற்குப் முன்னால் இந்த 1ஐ வையுங்கள். இப்போது அதன் மதிப்பு 10. பூஜ்ஜியமோ ஒன்றுமில்லை. ஒன்றுமில்லாததை மதித்து அதற்குப் முன்னால் 1ஐ வைத்தால், அதன் மதிப்பு பத்தாகி விட்டது. பூஜ்ஜியத்திற்கு ஒன்றுமே இல்லாத போதும் பூஜ்ஜியத்தை அலட்சியப்படுத்தி 1ஐ பின்னால் போட்டால் 1இன் மதிப்பு பத்தில் ஒன்று [0.1]

அது போன்று இறைவன் நிறைவானவன். தனக்கென்று தனி மதிப்பு இல்லாதவன். யார் அவனைச் சேர்ந்தார்களோ, அவர்களுடைய மதிப்பை உயர்த்தக் கூடியவன். யார் அவனை அலட்சியம் செய்து ஒதுங்கி இருக்கிறார்களோ, அவர்கள் பத்தில் ஒன்றாக ஆகி விடுவார்கள், இறைநிலையை மதிப்பவர்கள் அந்த இறைநிலை அளவுக்கு உயர்வார்கள். இறைநிலையை உணர்ந்து அதை மதிப்பவர்களை பூஜ்யர் என்பார்கள்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*

Atthi varadhar

*யார் இந்த அத்திவரதர்?* *இவரது அவதாரம் எப்படி நிகழ்ந்தது?* *ஏன் இவர் குளத்தில் மூழ்கி உள்ளார்?*
*வாருங்கள்...* *தலபுராணத்தைப் பார்ப்போம்.*
மூலவர் திருநாமம் வரதராஜப் பெருமாள். இவருக்கு தேவராஜப் பெருமாள் என்றும் பெயருண்டு.
இங்கு ஆதிகாலத்தில் மூலவராக இருந்தவர் அத்தி வரதர் தான். அத்தி மரத்தாலான இச்சிலையை பிரதிஷ்டை செய்தவர் பிரம்மா. ஒருமுறை படைப்புத் தொழிலை மேற்கொள்ள தயாரானார் பிரம்மா. அதற்காக அஸ்வமேத யாகம் நடத்த காஞ்சிபுரம் வந்தார். இத்தலத்தில் எந்த செயலைச் செய்தாலும், ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். அதாவது ஒருவருக்கு அன்னதானம் செய்தால் ஆயிரம் பேருக்கு செய்த புண்ணியம் கிடைக்கும். ஒரு பாவம் செய்தாலும், அதுவும் ஆயிரம் மடங்காகி தண்டனைக்கு ஆளாக்கும்.
ஒருவர் யாகம் நடத்தும் போது அவரது மனைவியும் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் பிரம்மா தன் மூத்த மனைவியான சரஸ்வதியுடன் இங்கு வரவில்லை. முறையாக அழைக்காததால் யாகத்தில் பங்கேற்க சரஸ்வதிக்கு விருப்பமில்லை. பிரம்மாவின் மற்ற மனைவியரான காயத்ரி, சாவித்ரியின் துணையுடன் யாகப்பணிகள் நடந்தன. இதையறிந்த சரஸ்வதி, கோபம் கொண்டு யாகத்தை தடுக்க தீர்மானித்தாள்.
வேகவதி என்னும் நதியாக மாறி ஆர்ப்பரித்தாள். யாகசாலையை இன்னும் சில விநாடிகளில் மூழ்கடிக்கும் நிலை உருவானது. இந்நிலையில் மகாவிஷ்ணு, யாகத்தைப் பாதுகாக்க நதி பாயும் வழியில் சயனக்கோலத்தில் படுத்துக் கொண்டார்.
அதிர்ந்த சரஸ்வதியும் தன் பாதையை மாற்றிக் கொண்டு ஓடினாள். மகாவிஷ்ணுவின் துணையால் பிரம்மாவின் யாகம் நிறைவேறியது. அவர் கேட்ட வரங்களையும் வழங்கினார் மகாவிஷ்ணு. வரங்களை வாரி வழங்கியதால் 'வரதராஜப் பெருமாள்' என பெயர் பெற்றார்.
நன்றி தெரிவிக்கும் விதத்தில் வரதராஜர் திருக்கோலத்தை அத்தி மரத்தில் சிலையாக வடித்தார் பிரம்மா.
தனக்கு வரம் கிடைத்தது போல, மற்றவர்களும் வரம் பெற வேண்டும் என சிலையை காஞ்சிபுரத்தில் பிரதிஷ்டை செய்தார். இந்த நிகழ்ச்சி முதல் யுகமான கிருதயுகத்தில் நிகழ்ந்தது. இதன் பின் தேவலோக யானையான கஜேந்திரன், தேவகுருவான பிருஹஸ்பதி, ஆதிசேஷன் போன்றவர்கள் இங்கு வழிபட்டு பலன் அடைந்தனர்.
மீண்டும் ஒருநாள் இங்கு தரிசிக்க வந்த பிரம்மா யாகம் நடத்தினார். அப்போது ஏற்பட்ட தீப்பொறியானது, அத்தி வரதர் மீது படவே, சிலையில் சிதைவு ஏற்பட்டது. பதறிய பிரம்மா ' இதென்ன சோதனை? குறை நேர்ந்த சிலையை எப்படி கருவறையில் பூஜிப்பது?' என வருந்தினார்.
'என்னுடைய சிலையை (அத்தி வரதர்) அனந்த சரஸ் என்னும் குளத்தில் வைத்து விடு. யாகத் தீயால் ஏற்பட்ட வெப்பம் தணிக்க நிரந்தரமாக தண்ணீரில் தங்கியிருப்பேன்' என்றார் வரதர். அதன்படி வெள்ளிப் பெட்டி செய்து, அதற்குள் அத்தி வரதரை வைத்து, குளத்திற்குள் வைத்து விட்டனர். இக்குளம் எப்போதும் வற்றியதில்லை.
மூலவர் அத்திவரதர் குளத்தில் மூழ்கி விட்டாரே... வழிபாட்டுக்கு சிலை வேண்டாமா? அதற்கும் வரதரே உத்தரவிட்டார். என்ன தெரியுமா? 'பழைய சீவரம் (காஞ்சிபுரம் - செங்கல்பட்டு தடத்தில் உள்ள ஊர்) கோயிலில் உள்ள தேவராஜப் பெருமாளை இங்கு பிரதிஷ்டை செய்' என்று பிரம்மாவுக்கு கட்டளையிட்டார்.
அதன்படி பழைய சீவரத்திலுள்ள தேவராஜப்பெருமாள் இங்கு எழுந்தருளினார். பிற்காலத்தில் இவரே 'வரதராஜப்பெருமாள்' என பெயர் பெற்றார். அப்போது ''கலியுகத்தில் மக்களுக்கு வரம் அளிப்பதற்காக 40 ஆண்டுக்கு ஒருமுறை குளத்தை விட்டு வெளியே வந்து 48 நாட்களுக்கு தரிசனம் தருவேன்'' என அசரீரியாக வரதர் வாக்களித்தார்.
அதன்படி ஜூலை 1 முதல் அத்தி வரதர் வைபவம் நடக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் 2059 வரை காத்திருக்க வேண்டும். அத்தி வரதரை தரிசித்து அளவில்லா வரங்களைப் பெறுவோம்
💚💚💚💚 ஓம் நமோ 💚💚💚💚💚💚💚நாராயணாய நமஹ.💚💚💚

Gayatri. Manthra

காயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு ஜிம் (GYM)

காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது., "மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892—1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் "நதிகளில் நான் கங்கையாகவும., மலைகளில் நான் விந்திய மலையாகவும்., மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி இராமகிருஷ்ண பரமஹமஸர் கூறுகையில் "பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும்., காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் "காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் (Atom Bomb) சமம்" எனக் குறிப் பிட்டுள்ளார்.

ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823—1900) அவர்கள் "ஒளியினை தவம் செய்து நம் மூளை., மனதினை உயர்த்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி (1869—1948) அவர்கள் "யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் "உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்" என்பதாகும்.

இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.
காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி., மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.

தத் — வெற்றி
ச — வீரம்
வி — பராமரிப்பு
து — நன்மை
வ — ஒற்றுமை
ரி — அன்பு
நி — பணம்
யம் — அறிவு
ஃபர் — பாதுகாப்பு
க்கோ — ஞானம்
த்தி — அழுத்தம்
வா — பக்தி
ஸ்யா — நினைவாற்றல்
ஃத்தி — மூச்சு
மா — சுய ஒழுக்கம்
யோ — விழிப்புணர்வு
யோ — உருவாக்குதல்
நஹ — இனிமை
பரா — நல்லது
சோ — தைரியம்
த்தா — ஞானம்
யட் — சேவை

காயத்ரி மந்திரம் என்றால் என்ன..?

வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.
ஓம் — தெய்வீக சக்தி, ஒலி சின்னம்
ப்பூ — உடல் விமானம்
புவஹா — நிழலிடா விமானம்
ஸ்வ — வான விமானம்
தத் — அந்த தலை தெய்வத்தின்
ஸவித்து — பிரபஞ்சம் தயையும் சக்தி
வரேன்யம் — வணங்க வேண்டும்
பர்கோ — பிரபல
தேவஸ்ய — பிரகாசமிக்க
தீமஹி — நம் த்யானம்
தியோ — அறிவினை
யா — யார்
நஹ — எங்கள்
ப்ரசோதயாத் — தெளிவுப்படுத்துங்கள்

"ஓம் பூர் : புவ : ஸீவ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ : யோந: ப்ரசோதயாத்"

நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.

இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி., சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.

காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக., உண்மையான சிந்தனை., சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும். காலை., மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். ஹிருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள்., கவலைகள் நீங்கும். குறிப்பாக., பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.

காயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்

★ கம்பீரத் தோற்றம்.
★ தரமான பேச்சு.
★ வறுமை., குறை நீங்குதல்.,
★ பாதுகாப்பு வட்டம்.
★ கண்ணில் அறிவு தெரிதல்.
★ அபாயம்., தேவையற்ற சூழ்நிலை நீங்கும்.
★ நரம்புகளும்., சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும்.
மேலும்.,
★ அமைதியாய் இருப்பர்.
★ நற்செயல்களில் ஈடுபடுவர்.
★ காந்த சக்தி ஆகியவை உருவாகும்.
மேலும்.,
★ வாழ்க்கையில் தடைகளை நீக்கும்.
★ மூளையை பிரகாசிக்கச் செய்யும்.
★ உள்ளுணர்வினை தெளிவாக்கும்.
★ உயர் உண்மைகள் தெரிய வரும்.
— என்றும் கூறப்படுகின்றது.

டாக்டர் ஹெவார்ட் ஸ்டியன் கெரில் என்ற அமெரிக்க விஞ்ஞானி காயத்ரி மந்திர பலன்களாக பல செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆனால்., இதற்கு மேலும் ஆதாரப்பூர்வம் தேவைப்படுகின்றது....
கடந்த சில ஆண்டுகளில் சில வெளிநாடுகளில் காலை 7 மணிக்கு சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து காயத்ரி மந்திரத்தினை ஒலிபரப்புவதாக கூறப்பட்டுள்ளது.

இம்மந்திரம் முழுக்க முழுக்க ஒளியினை வணங்குவதும்., மனதின் இருளினை நீக்க வேண்டுவதாக அமைந்துள்ளதால்., இம் மந்திரம் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

ஒரு மந்திரமோ., தியானமோ., யோகவோ., உடற்பயிற்சியோ., ஆரம்பிப்பதற்கு முன்னால் உங்கள் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்.
ஒரு பழக்கம் உங்களை விட்டு நீங்க (உ—ம்) காபி., டீ பழக்கம் போன்றவை நீங்க 40 நாட்கள் ஆகும்.

த்யானமோ., மந்திரமோ அது பழக்கமாக ஆரம்பிக்கும் பொழுது அது உங்களுக்கு கை கூடி வர., பழக்கப்பட 90 நாட்கள் ஆகும்.

120 நாட்களில் புதுப்பழக்கம் நன்கு பழகி விடும்.

120 நாட்களில் கை விட்ட பழக்கமும் நம்மிடம் நன்கு நீங்கி விடும்.

1000 நாட்களில் நீங்கள் செய்யும் சாதனையோ., கடைப்பிடிக்கும் பழக்கமோ., அதற்கு நீங்கள் மாஸ்டர் ஆகி விடுவீர்கள். (உ—ம்) தொடர்ந்து நீங்கள் 1000 நாட்கள் காலை 4 மணிக்கு எழுந்தால்.,  வாழ்நாள் முழுவதும் அவ்வாறே செய்வர்.

★ மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.

★ ஏழு நிமிடம் தொடர்ந்து ஜபிப்பது உங்கள் மூளை செயல் திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

★ 11 நிமிடம் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும்., தியானம் செய்வதும் நரம்பு மண்டலத்திலும்., சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

★ 22 நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும்., தியானம் செய்வதும் ஒருவரின் அழிவுப்பூர்வ., ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். உள் உணர்வினைக் கூட்டும்.

★ 31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.

★ 62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் "க்ரே" பகுதியில் (Grey Matter) மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி., பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

★ இரண்டரை மணிநேரம் தொடர்ந்து ஜெபிக்கும் பொழுது உயர்நிலையினை மனம்., மூளை அடைகின்றது. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாகவே செயல்படுவர்.

— மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்கள் விஞ்ஞான ஆய்வு முடிவுகள் இல்லை. என்றாலும்,, பல அனுபவ ரீதியான கருத்துக்களாக வெளியிடப்பட்டுள்ளன.
மந்திரம் சொல்வதற்கென சில முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

★ காலை 4 மணிக்கு எழுந்து நாலரை மணிக்குள் தயாராகுங்கள்....

★ கிழக்கு முகமாக அமருங்கள்.

★ ஞான முத்திரை பரிந்துரைக்கப்படுகின்றது.

★ மந்திரத்தினை பொறுமையாய் 108 முறை சொல்லுங்கள்.

மகாத்மா காந்தி அவர்கள். அவர்களது "இயற்கை வைத்தியம்" என்ற புத்தகத்தில் "ஒரு மருத்துவரின் கடமை நோயாளியின் உடலுக்கு கவனம் செலுத்துவது மட்டுமல்ல. அவரது ஆன்மாவிற்கும் கவனம் செலுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மந்திரங்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள்.....

★ மகாத்மா காந்தி அவர்கள்., "ராம" நாமத்தினை பரிந்துரைக்கின்றார். மேலும் "ராம" நாமம் அனைத்திற்கும் தீர்வு என்று குறிப்பிடுகின்றார். இந்த நாமத்தினை சொல்பவர்கள் சிறிய முயற்சியிலேயே அரிய செயல்களை சாதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"ரா" என்பது "ஓம் நமோ நாராயணா என்பதிலிருந்தும், "ம" என்பது "ஓம் நம சிவாய" என்பதிலிருந்தும் சேர்க்கப்பட்டதால்., இரட்டிப்பு பலன் என்றும் கூறப்படுகின்றது.

★ கந்த ஷஷ்டி கவசத்தில் கூட "ரஹன பவச ரரரர., ரிஹண பவச ரிரிரிரி" என சொல்லப்படுகின்றது. "ரா" என்ற எழுத்தும் "ம" என்ற எழுத்தும் உச்சரிக்கப்படும் பொழுது உடலில் ஏற்படும் அதிர்வுகள் அவரது உடல் நலத்தினையும்., மன நலத்தினையும் காப்பதாக விளக்கப்படுகின்றது. ஆக., மந்திரங்களும் அமிர்த மருந்தே என்பதை அறிவோமாக.