31.05.19
இன்றைய சிந்தனைக்கு
பற்றை விலக்குவது:
‘பற்றை விலக்கும்’ திறமை உள்ள ஒருவரால் வெற்றியை அனுபவம் செய்ய முடிகின்றது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
“பற்றை விலக்குவது” என்பது பொதுவாக ஒன்றை இழந்து விடுவதாக புரிந்துக்கொள்ளப்படுகின்றது. நாம் ஒன்றை விட்டுவிடும்போது, அதை கைவிடுவதாக பார்க்கப்படுகிறது. ‘பற்றை விலக்குவது’ ஒரு நேர்மறையான அனுபவமாக இருக்கலாம். ஆனால், புரிந்துகொள்ளாமல் ‘விட்டுவிடுவது’ கூடுதலான எண்ணங்களுக்கும், அதிருப்தியான உணர்வுகளுக்கும் வழிவகுக்கின்றது.
செயல்முறை:
பற்றை விளக்குவதால் நான் பெறுவதற்கு என்ன இருக்கின்றது என்பதை புரிந்துகொள்வது அவசியாமாகும்: சூல்நிலையிலிருந்து நான் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்கின்றேன். என்னுள் மாற்றத்தை கொண்டுவருவதற்கு ஒரு வாய்ப்பாக இதை நான் பயன்படுத்திக் கொள்ளும்போது, நான் முன்னேற்றத்தை அனுபவம் செய்கின்றேன். நான் சூழ்நிலையையோ அல்லது மற்றவரையோ கட்டுப்படுத்த முயற்சி செய்யவில்லை. ஆனால், அதற்கு பதிலாக ஒவ்வொரு அடியிலும் சந்தோஷமாக கற்றுகொள்கின்றேன். ‘விட்டுவிடுவதால்’ என்னால் கட்டுப்பட்டை மேற்கொள்ள முடிகின்றது.