பிப்ரவரி 16 : வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
உயர் புகழ் :
.
"எப்படியும் புகழ் பெறலாம், இருக்கலாம், எப்படி வேண்டுமானாலும் பெறலாம் என்பது அல்ல. நல்ல உயர் புகழ் உலகத்துக்கு நன்மையான காரியங்களையே செய்து அதனால் மக்கள் மனம் ஒரு நிறைவு பெற்று அவர்கள் வாழ்க்கையிலே துன்பங்கள் நீங்கி, இன்பம் மலரக் காணும் பொழுது அந்த மக்களால் அளிக்கக்கூடிய ஒரு வாழ்த்து, ஒரு மனநிறைவு தான் புகழ். அகவே புகழ் என்பது, தான் விரும்பிப் பெறுவதோ, தானே ஏதேனும் ஒன்றைச் செய்து அதன் மூலமாக வர வேண்டும் என்று நினைப்பதோ அல்ல. தன் செயலின் மூலமாக மக்கள் காட்டும் மனநிலை தான் புகழாக இருக்கும். அதுவே உயர் புகழாகவும் இருக்கும்.
.
நல்ல முறையில் ஆற்றும் கடமையின் மூலமாக எத்தனையோ பேருடைய வாழ்க்கை செழிப்புறும். அவர்களுடைய உள்ளங்கள் மலரும். நிறைவு பெறும். அதுவே அந்த வாழ்த்தே, அந்த நினைவே தான் ஒரு மனிதனுக்குப் புகழ் என்று கூறப்படுகிறது. அத்தகைய புகழ் தான் உயர்புகழ் ஆகும்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"புகழுக்கு விரும்புவாயேல் அந்த வேட்பே
புகழ் அணுகாமல் துறத்தும் சக்தியாகும் ;
புகழ் ஒருவர் கடமை எனும் மலர் மணம் ஆம்
புகழ் மனித சமுதாய நற்சான்றாகும்".
.
"உடலாற்றலையும், அறிவாற்றலையும் அந்தந்த
நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி குறைவில்லாமல்
சமுதாய நலத்திற்காக செலவிடல் தான் கடமை".
.
"புகழ்ந்துரைகள் பேசி பிறர் பொருள் கவரும் வஞ்சகர்க்கு
மகிழ்ந்து பொருள் உதவாதீர் மனம் திறந்த நட்பாகா
நிகழ்ந்த சில உண்மைகளை நேர் மாறாய்த் திரித்து உமை
இகழ்ந்து பேசித் திரிந்து இன்புறுவர் அவர் இயல்பு."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
No comments:
Post a Comment