Monday, February 25, 2019

கும்பகோணத்தை சுற்றினால்.,

கும்பகோணத்தை சுற்றினால்.,வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிட்டும்!!* எந்த கோயிலில், என்ன பலன்

கோவில் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். தமிழகத்தில்

*அதிகப்படியான கோயில்களை கொண்ட ஒரு மாநகரம் என்றால் அது*

*கும்பகோணம்* தான்.

இங்கு பல்வேறு விதமான கோவில்கள் உள்ளன. அதிலும் நவக்கிரகங்கள் கொண்ட கோவில்கள் மிகவும் அதிகம்.

அதிகப்படியானோர் இந்த பகுதிக்கு தோஷங்களை நீக்க மற்றும் திருமண தடைக்கு இலக்கு வேண்டி வருகின்றனர்.

இதனால் தான் இது *கோவில் நகரம்* என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன் என்பதை தெரிந்து கொண்டு எளிதாக பயணிக்க நாங்கள் உதவுகிறோம்.

*கும்பகோணம் திருக்கோயில்கள் கருமுதல்* *சதாபிஷேகம் வரை பலனடைய இந்த கோவில்களை மற்றும் வழிபட்டால் போதும்.*

*கரு உருவாக* (புத்திரபாக்கியம்) -              கருவளர்ச்சேரி,

*கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற*     - திருக்கருக்காவூர்,

*நோயற்ற வாழ்வு பெறுவதற்கு*         - வைத்தீஸ்வரன் கோவில்,

*ஞானம் பெற*                 - சுவாமிமலை,

*கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு* - கூத்தனூர்,

*எடுத்த காரியம் வெற்றி பெற*,        
*மனதைரியம் கிடைக்க*             - பட்டீஸ்வரம்,

*உயர் பதவியை அடைய*             - கும்பகோணம் பிரம்மன் கோயில்,

*செல்வம் பெறுவதற்கு*             - ஒப்பிலியப்பன் கோவில்,

*கடன் நிவர்த்தி பெற*             - திருச்சேறை சரபரமேஸ்வரர்,

*இழந்த செல்வத்தை மீண்டும் பெற*     - திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி,

*பெண்கள் ருது ஆவதற்கும்*,

*ருது பிரச்சினைகள் தீரவும்*         - கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை),

*திருமணத்தடைகள் நீங்க*         - திருமணஞ்சேரி,

*நல்ல கணவனை அடைய*     - கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் மங்களாம்பிகை,

*மனைவி, கணவன் ஒற்றுமை பெற*     - திருச்சத்திமுற்றம்,

*பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர*         - திருவலஞ்சுழி,

*பில்லி சூனியம் செய்வினை நீக்க*     - அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிர தேவி,

*கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய* - திருபுவனம் சரபேஸ்வரர்,

*பாவங்கள் அகல*             - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்,

*எம பயம் நீங்க*                 - ஸ்ரீ வாஞ்சியம்,

*நீண்ட ஆயுள் பெற*             - திருக்கடையூர்🌹

RAJAJI

Saturday, February 16, 2019

Maharishi thought ( Feb 16)

பிப்ரவரி 16 : வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.

உயர் புகழ் :
.

"எப்படியும் புகழ் பெறலாம், இருக்கலாம், எப்படி வேண்டுமானாலும் பெறலாம் என்பது அல்ல. நல்ல உயர் புகழ் உலகத்துக்கு நன்மையான காரியங்களையே செய்து அதனால் மக்கள் மனம் ஒரு நிறைவு பெற்று அவர்கள் வாழ்க்கையிலே துன்பங்கள் நீங்கி, இன்பம் மலரக் காணும் பொழுது அந்த மக்களால் அளிக்கக்கூடிய ஒரு வாழ்த்து, ஒரு மனநிறைவு தான் புகழ். அகவே புகழ் என்பது, தான் விரும்பிப் பெறுவதோ, தானே ஏதேனும் ஒன்றைச் செய்து அதன் மூலமாக வர வேண்டும் என்று நினைப்பதோ அல்ல. தன் செயலின் மூலமாக மக்கள் காட்டும் மனநிலை தான் புகழாக இருக்கும். அதுவே உயர் புகழாகவும் இருக்கும்.
.

நல்ல முறையில் ஆற்றும் கடமையின் மூலமாக எத்தனையோ பேருடைய வாழ்க்கை செழிப்புறும். அவர்களுடைய உள்ளங்கள் மலரும். நிறைவு பெறும். அதுவே அந்த வாழ்த்தே, அந்த நினைவே தான் ஒரு மனிதனுக்குப் புகழ் என்று கூறப்படுகிறது. அத்தகைய புகழ் தான் உயர்புகழ் ஆகும்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"புகழுக்கு விரும்புவாயேல் அந்த வேட்பே
புகழ் அணுகாமல் துறத்தும் சக்தியாகும் ;
புகழ் ஒருவர் கடமை எனும் மலர் மணம் ஆம்
புகழ் மனித சமுதாய நற்சான்றாகும்".
.

"உடலாற்றலையும், அறிவாற்றலையும் அந்தந்த
நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி குறைவில்லாமல்
சமுதாய நலத்திற்காக செலவிடல் தான் கடமை".
.

"புகழ்ந்துரைகள் பேசி பிறர் பொருள் கவரும் வஞ்சகர்க்கு
மகிழ்ந்து பொருள் உதவாதீர் மனம் திறந்த நட்பாகா
நிகழ்ந்த சில உண்மைகளை நேர் மாறாய்த் திரித்து உமை
இகழ்ந்து பேசித் திரிந்து இன்புறுவர் அவர் இயல்பு."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Thursday, February 7, 2019

Computer language. In Tamil

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :

1. WhatsApp      -      புலனம்

2. youtube          -      வலையொளி

3. Instagram      -      படவரி

4. WeChat          -        அளாவி

5.Messanger    -        பற்றியம்

6.Twtter              -        கீச்சகம்

7.Telegram        -        தொலைவரி

8. skype            -          காயலை

9.Bluetooth      -          ஊடலை

10.WiFi            -          அருகலை

11.Hotspot        -          பகிரலை

12.Broadband  -        ஆலலை

13.Online          -        இயங்கலை

14.Offline            -        முடக்கலை

15.Thumbdrive  -        விரலி

16.Hard disk      -        வன்தட்டு

17.GPS                -        தடங்காட்டி

18.cctv                -        மறைகாணி

19.OCR              -        எழுத்துணரி

20 LED              -        ஒளிர்விமுனை

21.3D                  -        முத்திரட்சி

22.2D                -        இருதிரட்சி

23.Projector      -        ஒளிவீச்சி

24.printer          -        அச்சுப்பொறி

25.scanner        -        வருடி

26.smart phone  -      திறன்பேசி

27.Simcard          -      செறிவட்டை

28.Charger          -        மின்னூக்கி

29.Digital            -        எண்மின்

30.Cyber            -          மின்வெளி

31.Router          -        திசைவி

32.Selfie            -        தம் படம் - சுயஉரு - சுயப்பு

33 Thumbnail              சிறுபடம்

34.Meme          -        போன்மி

35.Print Screen -          திரைப் பிடிப்பு

36.Inkjet            -          மைவீச்சு

37.Laser            -          சீரொளி