*எந்த பொருளுக்கு எவ்வளவு வரி? 28%ல் இருந்து 18% ஆக குறைப்பு*
* பியூஸ்கள், எலக்ட்ரிகல் இன்சுலேட்டர்கள்
* காப்பிடப்பட்ட கடத்திகள், சாக்கெட்டுகள்
* எலக்ட்ரிகல் போர்டு, பேனல்கள் உள்ளிட்ட மரப்பலகை மற்றும் நார் பலகையில் செய்யப்பட்ட மின் கட்டுப்பாடு மற்றும் மின் விநியோக பொருட்கள்
* ஜன்னல், கதவு உள்ளிட்ட மரச்சாமான்கள், மரச்சட்டங்கள்.
* டிரங்க் பெட்டிகள், சூட்கேஸ், பிரீப்கேஸ், டிராவலிங் பேக் மற்றும் இதர கைப்பைகள்
* தோலை சுத்தப்படுத்தப்படும் திரவ மற்றும் கிரீம் பொருட்கள்
* ஷாம்பூ, தலைமுடி கிரீம், தலைமுடி சாயம், ஹென்னா பவுடர் அல்லது பேஸ்ட்.
* ஷேவிங் கிரீம், ஆப்டர் ஷேவ், வாசனை திரவியங்கள், குளியலறை பொருட்கள், அழகு சாதனங்கள், நறுமணப் பொருட்கள், கழிவறை பொருட்கள், அறை நறுமண பொருள்.
* அழகு மற்றும் மேக்கப் பொருட்கள்
* மின்விசிறி, பம்புகள், கம்பிரஷர்கள்
* விளக்கு மற்றும் விளக்கு பொருத்தும் பொருட்கள்
* செல் மற்றும் பேட்டரிகள்
* துப்புரவு பொருட்கள்
* வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள், ஷிங்குகள், வாஷ்பேஷின்.
* புல் டோசர், சரக்கு லாரி, ரோடு ரோலர்
* எஸ்கலேட்டர்
* கூலிங் டவர்
* பிரசர் குக்கர்
* அணு உலைகள்
* தையல் இயந்திர உதிரி பொருட்கள்
* பேரிங், கியர் பாக்ஸ் பொருட்கள்
* பால்ரஸ், ஸ்குரூ
* கேஸ்கட்
* ரேடியோ, டிவி எலக்ட்ரானிக் சாதனங்கள்
* சவுண்ட் ரெக்கார்டிங் கருவிகள்
* போக்குவரத்து சிக்னல், பாதுகாப்பு, கட்டுப்பாட்டு கருவிகள்
* உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்கான கருவிகள்
* ஜிம்னாஸ்டிக், தடகள கருவிகள்.
* பளிங்கு, சலவைக் கல் பலகைகள்
* டைல்ஸ் போன்ற மார்பிள், கிரானைட்
* அனைத்து வகை செராமிக் டைல்ஸ்கள்
* வேக்குவம் பிளாஸ்க், லைட்டர் போன்ற இதர பொருட்கள்
* கைக் கடிகரம், கடிகாரம், கடிகாரத்தின் மூவ்மென்ட், வாட் கேஸ், ஸ்டிராப், பாகங்கள்
* தோல் ஆடை, ஜவுளி துணைப் பொருட்கள், பர்-ஸ்கின், guts, செயற்கை பர், சேணம் போன்ற இதர பொருட்கள்
* கரண்டி, ஸ்பூன், டேபிள் ஸ்பூன் போன்ற சமையல் அறை பொருட்கள், ஸ்ட்வ், குக்கர்கள், மின்சாரத்தில் இயங்காத வீட்டு உபயோக பொருட்கள்
* ரேசர், ரேசர் பிளேடுகள்
* பல உபயோக பிரிண்டர்கள், கார்ட்ரிட்ஜ்கள்
* ஆபிஸ் அல்லது டெஸ்க் எக்யூப்மென்ட்டுகள்
* அலுமினிய கதவு, ஜன்னல், பிரேம்கள்
* பிளாஸ்டரில் செய்யப்பட்ட போர்டுகள், ஷீட்கள்
* சிமெண்ட், கான்கிரீட் அல்லது கல் அல்லது செயற்கை கற்களாலான பொருட்கள்
* ஆஸ்பால்ட், அல்லது சிலேட் பொருட்கள்
* மைகா பொருட்கள்
* செராமிக் தரை பிளாக்குகள், பைப்புகள், பைப் பிட்டிங்கள் போன்றவை
* வால் பேப்பர், வால் கவரிங்
* அனைத்து வகை கண்ணாடிகள், முகம் பார்க்கும் கண்ணாடி, பாதுகாப்பு கண்ணாடி, கண்ணாடி ஷீட்டுகள், கண்ணாடி பொருட்கள்
* மின்சார, மின்னணு எடை போடும் இயந்திரங்கள்
* தீயணைப்பான்கள், தீயணைப்பு சார்ஜ்
* போர்க் லிப்ட்கள், லிப்டிங் மற்றும் ஹேண்டலிங் சாதனங்கள்
* அனைத்து இசைக் கருவிகள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள்
* செயற்கை தயாரிப்பு மலர்கள், பசுமை பொருட்கள் மற்றும் செயற்கை பழங்கள்
* வெடிபொருட்கள், தாக்குதலை தடுக்கும் தயாரிப்பு, பட்டாசுகள்
* கொக்கோ பட்டர், கொழுப்பு, எண்ணை பவுடர்
* சாறு, எசென்ஸ், காப்பி கான்சென்ட்ரேட், இதர உணவு தயாரிப்புகள்
* சாக்கலேட்கள், சுவிங் கம்/ பபுள் கம்
* மால்ட் சாறுகள், மாவு பொருட்கள் தயாரிப்பு, உமி நீக்கப்பட்ட அரிசி, சாப்பாடு, ஸ்டார்ச் அல்லது மால்ட் சாறு
* வேபிள்கள் மற்றும் வேபர் சாக்லேட்கள் அல்லது வேபர் கலந்த சாக்லேட்கள்
* ரப்பர் டியூப்கள் மற்றும் ரப்பர் உதிரி பொருட்கள்
* கண் கண்ணாடிகள், பைனாகுலர், டெலஸ்கோப்
* சினிமா கேமரா, புரொஜக்டர் மற்றும் இமேஜ் புரொஜெக்ட்டர்
* மைக்ராஸ்கோப், ஆய்வுக்கூடத்தில் பயன்படும் குறிப்பிட்ட சில உபகரணங்கள், மெட்ராலஜி, ஹைட்ராலஜி, ஓசனோகிராபி, ஜியாலஜி என குறிப்பிட்ட சில அறிவியல் உபகரணங்கள்
* சால்வெண்ட், தின்னர்கள், ஹைட்ராலிக் திரவங்கள், உறைவதை தவிர்க்கும் தயாரிப்புகள்
*28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக வரி குறைக்கப்பட்ட பொருட்கள்:*
* அரவைக்கல் கொண்ட வெட் கிரைண்டர்
* டாங்க் மற்றும் இதர ஆயுதம் தாங்கிய போர் வாகனங்கள்
*18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக வரி குறைக்கப்பட்ட பொருட்கள்:*
* பதப்படுத்தப்பட்ட பால்
* சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் சர்க்கரை கட்டிகள்
* பாஸ்தா
* குழம்பு பசை, புளிப்பு பொருட்கள், சாலட் அலங்காரம்
* உணவுக்கு சுவை கூட்டும் கலவைகள்
* நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுகள்,
* மருத்துவத்துக்கு பயன்படும் ஆக்சிஜன் சிலிண்டர்
* அச்சிடுவதற்கான மை
* கைப்பைகள், சணல், பருத்தியில் செய்த ஷாப்பிங் பைகள், தொப்பிகள்
* விவசாயம், தோட்டம், வனம், அறுவடை, அரவை இந்தியரங்கள் உதிரி பாகங்கள்
* தையல் மிஷின் குறிப்பிட்ட பாகங்கள்
* மூக்கு கண்ணாடி பிரேம்கள்
* மூங்கில், பிரம்பில் செய்யப்பட்ட பர்னிச்சர்கள்
*5 சதவீத வரி முற்றிலும் நீக்கப்பட்ட பொருட்கள்*
* குருணை தானியங்கள்.
* சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் உலர் காய்கறிகள்.
* தேங்காய் சிரட்டை.
* கருவாடு.
* கற்கண்டு சர்க்கரை
* பொறி பர்பி
* கடலைமிட்டாய், எள்ளு மிட்டாய், சட்னி பவுடர், உருளைக்கிழங்கு மாவு
*28சதவீத வரியில் நீடிக்கும் பொருட்கள்*
*உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய சுமார் 50 பொருட்கள் அதிகபட்சமாக 28 சதவீத வரி விதிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதன்படி, பான் மசாலா, காற்றடைக்கப்பட்ட நீர் மற்றும் பானங்கள், சுருட்டு மற்றும் சிகரெட்டுகள், புகையிலை பொருட்கள், சிமெண்ட், பெயிண்ட், வாசனை பொருட்கள், ஏசி, டிஸ் சலவை எந்திரம், வாஷிங் மெஷின், குளிர்சாதன பெட்டிகள், வாக்யூம் கிளீனர்ஸ், கார்கள், இருசக்கர வாகனங்கள், விமானம் மற்றும் படகு உள்ளிட்ட 50 பொருட்கள் அதிகபட்ச வரி விதிப்பு பொருட்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளன.*