Monday, September 4, 2017

எட்டு' போட்டால்,

***நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த எதற்கு தினமும் நீண்ட  நடைப்பயணம்..???***

எட்டு' போட்டால், வாகனம் ஓட்ட "உரிமம்' கிடைக்கும் என்பது தான் நமக்கு தெரியும். ஆனால், "எட்டு' வடிவத்தில் நடை பயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்பது தெரியுமா உங்களுக்கு.

எட்டு' போட்டு, அதன் மேல் கால்களை எட்டி வைத்து நடப்பது, பார்ப்பதற்கு நகைச்சுவையாகத் தெரியலாம். ஆனால், சித்தர்கள் காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட இயற்கை வைத்திய முறைகளில், இதுவும் ஒன்று.கோயில் சன்னிதானத்தை சுற்றிவருவதும் இந்த எட்டு நடைபயிற்சியின் சூட்சுமம்.நம் முன்னோர்களை பாராட்டியோ ஆக வேண்டும்.

நடைப்பயிற்சியில் சாதாரணமாக நேராக நடந்து செல்வதைவிட “8 வடிவ நடைப்பயிற்சி” மிகவும் சிறந்தது. இதனால் உடலுக்கு சக்தியும் ஆரோக்கியமும் கிடைக்கிறது. யோகிகளும், சித்தர்களும் இந்த நடைப்பயிற்சியை மிகவும் சிறந்ததாக கூறியுள்ளனர்.

எட்டு என்ற டிஜிட்டல் எண்ணில் எல்லா எண்களும் அடங்கும். மேலை நாட்டவர் 13 என்ற எண்ணைக்கண்டு பயப்படுவது போல், நம்மில் பல பேர் 8 என்ற எண்ணைக் கண்டு பயப்படுகின்றனர். 8 சனி கிரகத்திற்குரியது. அது கெடுதல் செய்யும் என்ற மூடநம்பிக்கை தான் காரணம்.
சனி கிரகத்திற்கு நியாயகாரன் என்ற பெயர் உண்டு.

எட்டின் சிறப்புகள் ஏராளம்
1. அஷ்ட லஷ்மிகள்
2. அஷ்ட பாலர்கள்
3. எட்டு திசைகள்
4. யோக நிலையில் அஷ்டாங்க யோகம்
5. அவரவர் கையில் எட்டு சாண் அளவில் எண் சாண் உடம்பு.
6. எட்டுவிதமான அஷ்ட ஐஸ்வர்ய செல்வங்கள்.
7. எட்டு வகையான சித்துக்க்கள் அஷ்டமா சக்திகள்
8. சித்த மருந்து எட்டு, அஷ்ட சூரணம் இப்படி எட்டின் மகிமைகள் ஏராளம்
சித்த மருத்துவத்தில் நம் நோய் அறிய எண்வகை நோய்க்கு "எட்டு"

1.நாடி
2.சரிதம்
3.நா
4.நிறம்
5.மொழி
6.விழி
7.மலம்
8.முத்திரம்

மனிதப் பிறப்பில் எட்டாவது மாதம் ஒரு திருப்புமுனை. தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை அப்போதுதான் முழு வளர்சியைப் பெறுகிறது. கருப்பையில் இடம்போதாமல் நெருக்கத்தில் சிக்கி, இருக்கும் இடத்துக்கு ஏற்ப தன்னுடைய கை-கால்களை மடக்கிக்கொண்டு, உடல் உறுப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முதல் அறிவை அப்போதுதான் அந்தக் குழந்தை பெறுகிறது.

8 எனும் எண்ணை ஞான எண்ணாகக் கூறுவார்கள். மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும், எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும்... என்று கருப்பையில் உள்ள 8 மாத சிசுவின் வடிவை, மிக அற்புதமாக விவரிக்கிறது.

மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல, அந்த நடராஜ பெருமானே தன் கைப்பட எழுதிய பெருமை மிக்க நூலான திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் எந்தத் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது தெரியுமா? 8 - வது திருமுறையாகத்தான் !

எனவே எட்டுவடிவில் தினமும் நடைப்பயிற்சி செய்யும் பொது சகல விதமான நோய்களும் நம்மை விட்டு ஓடிவிடுகிறது என்பது அனுபவ உண்மை. எட்டு நடை காலை , மாலை என்று எதாவது ஒரு வேலையில் எட்டு நடை போடவும் . நமது வாழ்வையே எட்டு எட்டாக பிரித்து ஏடுகளில் பதிவு செய்து இருகின்றார்கள் நமது முன்னோர்கள்.

1. ஓரெட்டில் வளர்க்காத பிள்ளை வீண் .
2. ஈரெட்டில்  படிக்காத கல்வி வீண் .
3. மூவெட்டில் முடிக்காத திருமணம் வீண் .
4. நாலெட்டில் பெறாத பிள்ளை வீண்.
5. ஐஎட்டில் சேர்க்காத செல்வம் வீண்.

எட்டு நடைப்பயிற்சி செய்ய ஆரம்பித்த முதல் நாளிலேயே 10 முதல் 15 நிமிடத்தில் கொஞ்சமாக சளி வெளியாகும் அதை உடனே துப்பிவிட்டு தொடர்ந்து நடக்க வேண்டும் இந்த சளிதொல்லை ஒரே மாதத்தில் நல்ல குணம் தெரியும் இதுவே எட்டின் மகிமைக்கு ஒரு பதம்.

மேலும் தேவையற்ற கொழுப்புகள் கரைவதால் மாரடைப்பு உருவாவது தடுக்கப்படும் மூட்டுவலி, மூக்கடைப்பு, தலைவலி உடல் பருமன், மார்பு சளி முதுகெலும்பு , பிரச்சனைகளும் குணமாகும். உடல் கழிவுகள் முறையாக வெளியேற்றி தேவையான பிராண சக்தி கிடைக்கும் . கண்பார்வை தெளிவடையும் மன இறுக்கம்(டென்ஷன்) மறைந்து மன ஒருமைப்பாடு ஏற்ப்படும்.

பாதவலி , கால்வலி குறைந்து தூக்கமின்மை , சர்க்கரை நோய் குணமாகும் , மொத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இரத்தத்தில் உருவாகும்.

வீட்டை விட்டு வெளியே சென்று நடக்க சிரமப்படுபவர்கள் வீட்டில் அல்லது மொட்டைமாடியில் தோட்டத்தில் எட்டு நடை போடலாம்.

எட்டடி நீளம் ஆறடி அகலம் உள்ள இடம் போதும் .இதில் ஒரு எட்டை வரைந்து தினமும் 30 நிமிடம் நடக்கும் போது. பல்வேறு உடல் பிரச்சனைகளிலிருந்து செலவில்லாமல் சிரமமில்லாமல் குணம்பெரமுடியும் ஓடி... ஓடி உழைத்து சேர்த்த காசு பணத்தை மருத்துவரை தேடி தேடி ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை உங்களுக்குள் கேட்டு பாருங்கள் விடை எட்டு நடை போடச்சொல்லும்.

எட்டு நடை போடும்போது பேசாமல் நடக்க வேண்டும் உடல் விரைப்பாக வைக்காமல் , சற்று வேகமாக இயல்பாக நடப்பது நன்மை தரும் . அவசர நடை கூடாது நடக்கும் போது தியானம் செய்யலாம் . எட்டு வடிவ நடைப்பயிற்ச்யை நமது இடத்திலே நடக்கும் பொது வண்டி வாகன தொல்லைகள் இல்லை ,புகை , தூசி இல்லை, நாய் தொல்லை கிடையாது ..நடைக்கு என்ற விசேஷமான உடை, காலனி செலவு மிச்சம் . மேலும் பெண்கள் மற்றும் உடல் பருத்த குண்டானவர்கள் மட்ரவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகாமல் நமது வசதிப்படி நடந்து கொள்ளலாம்.

எட்டு நடை போட்டு எல்லாவற்றையும் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

உழைப்பால் கிடைத்த ஊதியத்தை ஊசி, மருந்து... மாத்திரை... ஆஸ்பத்திரி... ஆட்டோ என்று வெட்டியாக செலவு செயக்கூடாது.

நமக்கு நன்மை செய்யத்தான் நமது உழைப்பு அது தான் ஆரோக்கியத்தின் ஊற்று.

இதை என்னாலும் மறக்காமல் இருக்க எழுதி வைத்து கொண்டு எட்டு நடை போடவும்.
RAJAJI JS  {4-9-17}

No comments:

Post a Comment