Monday, December 9, 2019

குழ்ந்த வலர்ப்பு

வதவதவெனப் பிள்ளைகளைப் போடுவது சாதாரண விஷயமாக இருந்த காலம் ஒன்றிருந்தது.  கல்வியும் வேலை வாய்ப்புகளும் பெருகிய காலத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் முழக்கம் வெற்றியடைந்தது. இப்போது நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றாகிவிட்டது. எண்ணிக்கை குறையக் குறையக் குழந்தைகள் மீதான பெற்றோரின் உரிமையும் அதிகாரமும் பயமும் கட்டுக்கடங்காதவையாகப் போய்விட்டன.

பிள்ளைகள் நிறைய இருந்தபோது தாம் செய்ய வேண்டிய வேலைகளைத்தாமே செய்து அவை தாமாகவே வளர்ந்தன. தாமே அனுமதிக்கப்பட்டதால் அவற்றுக்குப் பொறுப்புகளும் கடமைகளும் கற்பிக்கப்பட்டன.  ஆனால், இன்று பத்து மாத கர்ப்ப காலத்துக்குப் பின்னரும் வயிற்றில் சுமப்பதைப் போலவே அங்கே இங்கே அசையவிடாமல் இறுக்கிப் பிடிக்கிறோம். தலையை ஒருவரும் கால்களை ஒருவருமாகப் பிடித்து இழுத்து வதைப்பதைத் தான் வளர்ச்சி என நினைத்துக்கொள்கிறோம். இதில் கொடுமை என்னவென்றால், அதுதான் பாசம், பற்று, அன்பு என்றும் நம்புகிறோம்.
எனக்குக் குழந்தை பிறந்திருந்த சமயத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.  கவனித்துக்கொள்ளப் பெரியவர்கள் யாரும் இல்லை. குழந்தை தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரமெல்லாம் மாறி மாறித் தூக்கி வைத்துக்கொள்வோம். சில மாதங்கள் கடந்திருந்த போது, இரண்டு நாள்களாக யூரின், மோஷன் போகாமல் குழந்தை அழத்தொடங்கியது. நாங்களும் என்னவெல்லாமோ செய்து பார்த்துவிட்டு மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துப் போனோம். அவர் வயதான ஆண். மகப்பேறு மருத்துவராக ஓர் ஆண் இருப்பதைப் பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

பிரச்னையைச் சொன்னபோது,  அவர் முன் இருந்த மர டேபிளில் குழந்தையைக் கிடத்தச் சொன்னார். எதுவும் பேசாமல் குழந்தையைக் கவனியுங்கள் என்றார். ஒரு சில நிமிடங்கள், அங்கே அமைதி நிலவியது. எங்களுக்கு எதுவும் புரியவில்லை. குழந்தை கைகால்களை ஆட்டி ஆட்டி உதைக்கத் தொடங்கியது. சற்று நேரத்தில் சிறுநீரும் மலமும் வெளியேறி `ஈஈஈ’ எனச் சிரித்தது. நான் நம்ப முடியாமல் அவரைப் பார்த்தேன். ’எப்போ பாரு கையிலயே வச்சிருந்தா குழந்தை எப்படி உடலை அசைக்க முடியும். கை காலை நல்லா உதைக்கிறதுதான் அதுக்கான விளையாட்டு, வாக்கிங், ஜாக்கிங் எல்லாம். இப்ப இருக்கற அப்பா அம்மாக்கள் பிள்ளையைக் கீழே இறக்க யோசிக்கிறாங்க. ஃப்ரீயா விடுங்க. கைக் குழந்தைக்கும் தனிமை, சுதந்திரம் எல்லாம் தேவைப்படும். உங்களுக்குக் கொஞ்சணும்னு தோணுறப்போ மட்டும் கையில எடுத்திட்டுக் கீழ விட்டுடுங்க. நீங்க வேணும்னா...குழந்தை அழுது கூப்பிட்டுக்கும்’ என்றார்.

இந்தியப் பெற்றோர், குழந்தை வளர்ப்பில் பிரதானமாக இரண்டே வழிகளைக் கையாள்கின்றனர். ஒன்று அடக்குமுறை,  மற்றொன்று செல்லங்கொடுத்தல். இரண்டுமே ஒரே விளைவைத் தான் ஏற்படுத்துகின்றன. அது சீரழிவு. அதீதச் செல்லங்கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் தம்முடைய உலகத்திற்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. யாருக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒரு கட்டத்தில் அவை பெற்றோரையும் புறக்கணிக்கின்றன.

அன்பு செலுத்துதல் என்பது வேறு, செல்லங்கொடுத்தல் என்பது வேறு என்பதே நமக்குத் தெரியவில்லை. அரவணைப்பு, கட்டியணைத்தல், தொடர்பில் இருத்தல், தன் வேலையைத் தானே செய்ய ஊக்கப்படுத்துதல், உணர்வுகளை மதித்தல் இவையெல்லாம் அன்பு செலுத்துதலில் அடக்கம். இவை கட்டாயம் குழந்தைக்குத் தரப்பட வேண்டும். செல்லங்கொடுத்தல் என்பது குழந்தையால் செய்ய முடிகிற விஷயங்களையும் பெற்றோரே செய்வது, சதா புகழ்வது, கைகாட்டுகிற எல்லாவற்றையும் வாங்கித் தருவது, அடம்பிடித்தலை ஏற்பது, ஒழுக்கமீறலை ரசிப்பது. பெரும்பாலான பெற்றோர் முன்னதையும் பின்னதையும் குழப்பிக்கொள்கின்றனர்.

குழந்தைக்கு உட்காரத் தெரிந்ததும் உணவை ஊட்டிவிடுவதைப் பெற்றோர் நிறுத்திவிட வேண்டும். தட்டில் இருக்கும் சோற்றைச் சிந்திச் சிதறித் தனக்குத் தேவையானதைக் குழந்தையே அள்ளி உண்ணும். ஆனால், பாசக்காரப் பெற்றோர் பள்ளி செல்லும் குழந்தை களுக்கும் ஊட்டியே விடுகின்றனர். நடக்கத் தெரியும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு திரியக் கூடாது. குறிப்பாக அப்பாக்கள், வளர்ந்த பிள்ளைகளையும் கைகளில் தூக்கி வைத்திருப்பதை வீதிகளில், கடைகளில் பார்க்க முடியும். இதன் பெயர் அன்பன்று. குழந்தை தன் வேலையைத் தானே செய்வதைப் பெற்றோர் தடுக்கின்றனர்.

தத்தித் தத்தி நடக்கும்போதே பெருக்குமாற்றை எடுத்து வீட்டைப் பெருக்க எத்தனிப்பதைப் பார்க்க முடியும். பெண் குழந்தை என்றால் இதெல்லாம் இப்பச் செய்ய வேண்டாம் என்கிறோம். ஆண் பிள்ளை என்றால் இதெல்லாம் நீ எப்பவுமே செய்யக் கூடாது என்று தடுக்கிறோம். ஆனால் குழந்தைகள் பால் பேதமில்லாமல் எல்லா வேலைகளையும் செய்ய விருப்பம் காட்டுகின்றன. ஆண் பெண் வித்தியாசமில்லாமல்,  இன்றைய குழந்தைகளுக்கு எந்த வேலையும் செய்யத் தெரியாது என்பதுதான் உண்மை.

துவைப்பது, வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, சமைப்பது போன்ற அடிப்படை வேலைகளுக்கு நாம் அவர்களைப் பழக்கவில்லை. வீட்டு வேலைகளைக் கற்பது பெண் குழந்தைகளின் சுமையாக இருந்த அவலம் தற்போது மாறிவருகிறது.

இன்றைய இளைஞர்கள் பைப் கசிந்தால் சரிசெய்வது, ட்யூப் லைட்டை மாற்றுவது போன்ற சாதாரணப் பணிகளுக்குக்கூட app-ஐத்  திறந்து ஆளைத் தேடுகின்றனர்.  அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வேலைகளைக்கூட அவர்களுக்கு நாம் கற்பிக்கவில்லை. வீட்டில் செய்வதற்கு எந்த வேலையும் இல்லாததால் அவர்கள் பிற்பகல் வரை உறங்குகின்றனர். நள்ளிரவு கடந்தும் செல்ஃபோனில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதனால், சோம்பேறித் தலைமுறையாக இன்றைய இளைஞர்கள் தலையெடுத்ததன் காரணம் நமது செல்லங்கொடுத்தல்தான். 

சில ஆண்டுகளுக்கு முன்னர், என் உறவினர் வீட்டில் சில மாதங்கள் தங்கியிருந்தேன். கல்லூரி படிக்கும் தன் மகனை சார் என்றுதான் என் மாமா அழைப்பார். தபதபவென்று வளர்ந்த அந்த இளைஞன் அவன் அறையில் எப்போதும் தூங்கிக் கொண்டிருப்பான். எழுந்ததும் செல்போனில் ஆராயத் தொடங்கிவிடுவான் அல்லது வெளியே கிளம்பிப் போய்விடுவான். வீட்டிற்கு விருந்தினர் வந்தால்கூடப் பேசுவதில்லை. `அப்பா பைக் வேணும்’ என்றால் உடனே கடைக்குக் கூட்டிப் போய்விடுவார். அவனிடம் ஒரு கிரெடிட் கார்டைக் கொடுத்து வைத்திருந்தார். வீட்டில் என்ன வேலை என்றாலும் அம்மாவோ அப்பாவோதான் செய்ய வேண்டும். ஒரு நாள் மிக்ஸி போடும்போது ஹை வோல்டேஜ் ஆகி ஃப்யூஸ் போய்விட்டது. டம்மென்ற சத்தத்தைக் கேட்டுக்கூட அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை. ஒருமணி நேரம் கழித்து, உள்ளே இருந்து அவனது குரல் மட்டும் வந்தது, `அம்மா, ஏ.சி ஓடல’. நாள் முழுவதும் அந்த ஆன்ட்டிதான் மாறி மாறி போன் செய்து ஆள்களைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த இளைஞன் படுத்தே கிடந்தான். அண்மையில் விசாரித்தபோது தெரிந்தது, அவனுக்கு மணமான சில மாதங்களிலேயே விவாகரத்தாகி அம்மா வீட்டில் இருக்கிறானாம்.

செல்லங்கொடுத்து வளர்க்கப்படுகிறவர்களோடு வாழ்வது மிகவும் கடினம். சோம்பேறித்தனமும், தான் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற ஆதிக்க உணர்வும் அவர்களிடம் மேலோங்கி இருக்கும். இந்தியக் குடும்பங்களில் ஆண் பிள்ளைகள் செல்லத்தால் சீரழிக்கப்பட்டனர். இப்போது பெண் குழந்தைகளுக்கும் அது பரவிவருகிறது.  நான் முன்பு ஒரு பத்திரிகையில் பணிபுரிந்த போது, கல்லூரி படிக்கும் மகள்களைக் கொண்ட தந்தை ஒருவர் சக ஊழியராக இருந்தார். மூத்த மகளை இன்ஜினீயரிங் சேர்ப்பதற்குப்பட்ட கடனை அவர் அடைத்து முடிக்கும் போது திருமணம் செய்துவைக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. மகள் பேரில் 30 பவுன் நகை சேர்த்து வைத்திருந்தார். ஆனால், அந்தப் பெண், தனக்கு நூறு பவுன் நகை போட வேண்டுமென்று தந்தையிடம் டிமாண்ட் செய்தாள். அதற்காக ஊரில் உள்ள சொத்தை விற்கச் சொல்லி அடம்பிடித்தாள். `அதை உன் தங்கைக்காக வைத்திருக்கிறேன்’ என அவர் சொன்ன போது, `அவளுக்கு இந்த வீடு இருக்குல்ல’ என்றாளாம். `எங்கள பத்தி அவ கொஞ்சம்கூட யோசிக்க மாட்டேங்கிறா’ என்று புலம்பினார். கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்துப் பழக்கப்படுத்தினால், ஒரு கட்டத்தில் பிள்ளைகள் உயிரையும் கேட்பார்கள். கொடுப்பீர்களா?

செல்லங்கொடுக்கும் பெற்றோர் நல்லொழுக்கத்தைவிடக் குழந்தைகளின் திறமைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.  சிறுபிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோருடன் பேசுவதற்கே இப்போதெல்லாம் பயமாக இருக்கிறது. `இப்பவே பாடுகிறது, ஆடுகிறது, என்னமா வரைகிறது, கம்ப்யூட்டரில் அதற்குத் தெரியாத விஷயமே இல்லை, அமேசான்ல அதுவே ஆர்டர் பண்ணிருச்சு, எனக்கே எல்லாத்தையும் சொல்லித் தருது…’ என வாய் ஓயாமல் புகழத் தொடங்கிவிடுகின்றனர். நாம் எதற்காக அவர்களைப் பார்க்க வந்தோம் என்பதே மறந்துபோகும் அளவிற்குப் பிள்ளை புராணம் பாடுகின்றனர். ஏன் இவ்வளவு பெருமிதம்?

சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் பெற்றோர் தம் பிள்ளைகள் குறித்த வீடியோக்களை ஃபேஸ்புக்கிலும் யூ டியூபிலும் பதிவிட்டுப் புகழ்ச்சிக்குப் பழக்குகின்றனர்.

எல்லாக் குழந்தைகளிடமுமே ஏதேனும் திறமை இருக்கிறது எனும் போது ஏன் நம் குழந்தையை மட்டும் `ஸ்பெஷல்’ எனக் கொண்டாடுகிறோம். அதுவொரு சுயநலன். என் பிள்ளை தான் சிறந்தது என்ற பெருமை இன்று எல்லோருக்குமே தேவைப்படுகிறது. அதனால், நீ திறமைசாலி என்று சொல்வதற்குப் பதில் ‘நீ மட்டும்தான் திறமைசாலி’ என்று சொல்கிறோம். முன்னது அங்கீகாரம். பின்னது அகம்பாவம்.

ஒவ்வொரு குழந்தையும் தனிமனிதராக வளர்ந்தாக வேண்டும். எவ்வளவுதான் பொத்திப் பாதுகாத்து வளர்த்தாலும் ஒரு புள்ளியில்  தன் வாழ்க்கையை, தன் தோல்விகளை, தன் பிரச்னைகளைத் தானே சமாளித்தாக வேண்டும். ஆனால், நமது அதீதப் பாதுகாப்பு வளர்ப்பு முறையால் அவை திக்கற்று நிற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

செல்லமாக வளரும் பிள்ளைகளால் வாழ்வின் உண்மைகளை ஏற்க முடியாது.  குழந்தைகளைக் கைக்குள்ளிருந்து விடுதலை செய்யுங்கள். அவர்கள் சிரமப்படட்டும். எப்போதும் ஏ.சி போட்டு வைத்திருந்தால் வெயிலுக்கும் குளிருக்கும் எப்படி அவை பழகும்!  வெளியே கூட்டி வாருங்கள். வெறுங்காலில் நடக்கச் சொல்லுங்கள். பொதுப் போக்குவரத்தில் பயணிக்கட்டும். துணிகளை மடிப்பது, புத்தகங்களை அடுக்குவது, ஷெல்ஃபை க்ளீன் செய்வது போன்ற தம் வேலைகளைத் தாமே செய்யட்டும். பொருள்களைக் கேட்டால் `நோ’  சொல்லுங்கள். அன்பைக் கேட்டால் அள்ளித் தாருங்கள்.

குழந்தைகள்மீது பெற்றோர் எடுத்துக்கொள்ளும் உரிமைதான் செல்லங்கொடுத்தல். பிரதிபலனாகத் தான் என்ன சொன்னாலும் கேட்டு நடக்க வேண்டுமென மூளையை கண்டிஷன் செய்யும் சுயநலனே அதில் நிறைந்திருக்கிறது.  தானே உலகம் என்று வாழ்ந்தால் போதும் என நினைக்கின்றனர். ஆனால்,  பெற்றோரின் காலத்திற்குப் பின்னரும் இந்தப் பூமியில் குழந்தை ஒரு தனிமனிதராக, சமூக விலங்காக வாழ்ந்தாக வேண்டும். கைகளிலிருந்து வெளியேறிக் கல்வி கற்கவும், பொருளீட்டவும், தனக்கெனத் துணையை அமைத்துக்கொள்ளவும், போகும் இடங்களில் நல்ல மனிதராக அறியப்படவும் வேண்டும். அந்தச் சமூக வாழ்க்கைக்கு வெகுமுன்னரே தயார்படுத்துங்கள். நிறைய மனிதர்களுடன் பழகி, கலந்து, வாழும் வாழ்க்கைதான் ஆரோக்கியமானது. அப்படியான வாழ்க்கைக்கு நல்லொழுக்கமே ஆதாரம். அதைக் கற்பியுங்கள். உங்களின் கண்டிப்புகளும் இல்லைகளும் அதைத் தன் காலில் நிற்கப் பழக்கட்டும்.

- எழுத்தாளர் ஜெயராணி

Thursday, December 5, 2019

Maharishi thought Dec"5

*வாழ்க்கை மலர்கள்: டிசம்பர் 5*

*பிரம்மச்சரியமும் ஞானமும்*

எப்போதும், ஆண் – பெண் உடலிணைப்பே இல்லாமல் வாழ்வது பிரம்மச்சரியம் என்று தவறாகக் கருதப்படுகிறது. இந்த வைராக்யம் கொண்டவர்கள் மிகவும் உயர்வடைய முடியும் என்ற நம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது. இவ்வாறு நீங்கள் கருத வேண்டாம் என்று உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். உலகமீது உருவாகி வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் அனைவரும் இந்த விரதம் கெட்டபோது தான் உற்பத்தியானார்கள் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.

உலக உத்தமர்கள், ஞானிகள், தீர்க்க தரிசிகள், அனைவரும் பிரம்மச்சரியம் கெட்டவிடத்தில் தான் தோன்றினார்கள்; ஆண் – பெண் நட்புடன் ஒழுக்கத்துடன், வாழ்ந்தார்கள், வாழ்ந்து வருகின்றார்கள் என்று உதாரணம் காட்டுகிறேன்.

வயது வரும் வரையில் கட்டுப்பாடாக இருந்து, பின்னர் ஒழுக்கத்துடன் திருமணம் செய்து கொண்டு, அளவு முறையுடன் உடல் கலப்புக் கொண்டு வாழ்வதையே நல்ல கொள்கையாகக் கொள்ள வேண்டும் என்று எடுத்துக் காட்டுகிறேன்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

Wednesday, December 4, 2019

Maharishi thought Dec"3

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!

வாழ்க்கை மலர்கள்....

டிசம்பர்,03....

கருமையப் பதிவுகள் :

ஒரு மயிலைப் பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த மயிலின் உருவம் பார்ப்பவர்களின் கண்களுக்கு வரும்போது அந்தக் கண்களில் மிகச்சிறிய உருவமாக பிரதிபலிக்கிறது. இப்படிச் சுருக்கம் பெற்ற மயிலின் உருவமானது எப்போது மூளை செல்களில் மோதுகிறதோ அப்போது அந்த மூளை செல்கள் அதைப் பதிவு செய்து கொள்கின்றன. எப்படி ஒரு ஒலியானது பதவு நாடாவில் பதிவு செய்யப்படுகிறதோ அதேபோல மயிலின் உருவமானது அந்த மயிலைப் பற்றிய தன்மைகள் எல்லாம் அடங்கிய அழுத்த அலையாகச் சுருங்கி புள்ளி வடிவில் பதிவாகிறது.

மூளை செல்களுக்கு வந்து சேருகிற எந்த அலையானாலும் அது உடனே கருமையத்தால் ஈர்க்கப்பட்டு, உடலில் இருக்கும் சீவகாந்த ஆற்றலின் காரணமாக இருப்பாக வைக்கப்படுகிறது. மயிலைப் பார்த்து உணர்ந்த அனுபவத்திற்கு ஏற்பப் பார்ப்பவருடைய கருமையமானது தன்மை பெறுகிறது. பின்னர் எப்பொழுதேனும் தேவையின் காரணமாகவோ, வேறு தூண்டுதல் காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ மன அலைக்கு அதே அலை வரிசை ஏற்படும் போது, மூளை செல்கள் ஏற்கனவே அந்த அலை வரிசையில் விளைந்த பதிவுகளை விரித்துக் காட்டும், அப்படி விரித்துக் காட்டப்படும் போது பார்ப்பவர் பழைய அனுபவங்களையும், உணர்வுகளையும் எண்ணங்களாக நினைவு கூர்ந்திட முடியும். அதே தன்மையில் உணர்வின்பாற்பட்ட அலைகளும் எண்ண அலைகளும், பரு உடலில் ஏற்படும் அனுபவங்களால் விளையும் அலைகளும் கருமையத்துக்கு ஈர்க்கப்பட்டு இருப்பாக வைக்கப்படுகின்றன.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

"நிறைவுபெறா மல்இருக்கும் ஆசைகளின் கூட்டம்,

நெஞ்சம்மனம் பேச்சுஇடை பிணக்காகும் பொய்கள்,

மறைமுகமாய் நேர்முகமாய்ப் பிறர்உளம்வருத்தல்,

மற்றஉயிர் சுதந்திரமும் வாழ்வின்வளம் பறித்தல்,

நிறைவழிக்கும் பொறாமை, சினம், பகைவஞ்சம் காத்தல்,

நெறிபிறழ்ந்த உணவுழைப்பு உறக்கம்உட லுறவு,

கறைபடுத்தும் எண்ணம் இவை கருமையம் தன்னைக்

களங்கப்ப டுத்திவிடும் கருத்தொடுசீர் செய்வோம்."

"பலஆயி ரம்பிறவி எடுத்துஏற்ற பாவப்

பதிவுகளை ஒருபிறவிக் காலத்தில் மாற்றி,

நலமடைந்து மனிதனாகித் தெய்வமாகி உய்ய,

நல்வாய்ப்பு ஆற்றல்இவை கருணையோடு இயற்கை

நிலஉலகில் மனிதரிடம் அமைத்துளது உண்மை.

நேர்முகமாய்க் கருமையத் தூய்மைஉணர்ந் தாற்றி,

பலனடைய அகத்தவத்தால் பரமுணர்ந்து, அறத்தின்

பாதையிலே ஒத்துதவி வாழும்முறை போதும்!"

"மனத்தூய்மை வினைத்தூய்மை மனிதன் வாழ்வில்

மகிழ்ச்சி, இனிமை, நிறைவு, அமைதி நல்கும்;

மனம்உயர நேர்மைவழி அகத்தவம் ஆம்

மற்றும் தன்வினை உயர அறமே ஆம்."

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Tuesday, December 3, 2019

Poori Jegannath Temple secrets

*🌸பூரி ஜெகன்னாதர் கோவிலின் 8 அதிசயங்கள் தெரியுமா?*
*༺🌷༻*
1. கோவிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.
*༺🌷༻*
2. கோவில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில், எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோவிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.
*༺🌷༻*
3. பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும்.
*༺🌷༻*
4. இக்கோவிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை.
*༺🌷༻*
5. இந்த கோவிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ மறப்பதில்லை.
*༺🌷༻*
6. இந்த கோவிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதும் இல்லை. மீந்து போய் வீணானதும் இல்லை.
*༺🌷༻*
7. இந்த கோவிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும் அதிசயம் நடக்கிறது.
*༺🌷༻*
8. சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது.
ஆனால் … அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோவிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும். இதை மாலை நேரங்களில் தெளிவாக உணரமுடியும்.....🙏🙏

Monday, December 2, 2019

Maharishi thought Dec "2

வாழ்க வையகம்வாழ்க வளமுடன் !!

வாழ்க்கை மலர்கள்....

டிசம்பர்,02....

சேஷ்டையும் நிஷ்டையும் :

உயிருணர்வு பெற்ற பிறகுதான் எல்லா இடத்திலும் நிரம்பி இருகின்றதை நாம் நினைக்கின்றோம்; தெரிந்து கொள்கின்றோம். ஆனால், சில சந்தர்பங்களில், ஆங்காங்கே துன்பப்படுவதையும் பார்க்கின்றோம். அவ்வாறு துன்பப்படுவதைப் பார்த்து எந்த இடத்தில் அதைச் சகிக்க முடியவில்லையோ, பொறுக்க முடியவில்லையோ, அங்கே இறங்கி உதவி செய்ய வேண்டும் என்னும்போது அப்பொழுது தான் அறிவு மேம்பாடு அடைந்து, ஊடுருவி நிறைந்து இயங்கக்கூடிய தன்மை, நிற்கக்கூடிய தன்மை வருகின்றது. அந்தத்தன்மை வந்தபிறகு தான் மேலும் விரிந்து நிறைந்து உள்ள ஒரு பொருளாக இணைந்து உறைந்து அதுவே "தான்" என்று உணர்ந்து கொள்ளக்கூடிய "உண்மை உணர்வு" உண்டாகிறது. ஜீவன்களிடத்தில் ஊடுருவி நின்று இன்ப துன்ப உணர்வுகளைக் கண்டறிந்து துன்பத்தை உண்டு பண்ணாமல் செயலாற்றவும், துன்பப்படும் உயிர்களுக்கு இதம், அதாவது துன்பத்திலிருந்து விடுதலை, பரிகாரம் அளிக்கவும் உதவி செய்யவும் ஏற்ற எண்ணம் உண்டாகிறது. இந்த இரண்டு நினைவுகள் மாத்திரம் எப்பொழுதும் அயரா விழிப்போடு இருந்தால் அங்கே அவனுடைய அறிவு உயர்ந்து கொண்டே தான் இருக்கும். அப்படி உயர்ந்து கொண்டே இருக்கிறபொழுது பரிபூரணப் பொருளோடு கலப்பதற்கு நலவாழ்வாக அமையும்.

உண்மை உணர்வு ஏற்படுவதற்கு முன் ஐம்புலன்களினால் காணக்கூடிய இன்பம் இன்னும் சிறிது தொடர்ந்து போனால், கடந்து போனால், சலிப்புத்தான் ஏற்படும். ஆனால் அறிவை அறிந்த இன்பமோ என்ன ஆகும் என்றால் அது பூரணமாக, எவ்வளவுக்கு எவ்வளவு இருந்தாலும் சலிப்பில்லாத இன்பமாக இருக்கும். இதைத்தான் நிட்டையிலே பெரிய சுகம், அதாவது பேரின்பம் கண்டோம் என ஒரு ஞானி சொல்லியுள்ளார். இந்த நிலை வராதவர்களுக்குக் கட்டையிலே போகும் நாள் வரை கவலை தானே என்றும் கூறுகிறார் !

விரிந்து பல சாகசங்களைச் செய்து கொண்டு இருப்பது சேஷ்டை. அந்த சேஷ்டை நிலையிலிருந்து ஒடுங்கி நிஷ்டை நிலையில் வருவதற்கு உபதேசம் வேண்டும் இல்லையா? உயிரோடு ஒன்றி இருக்கவேண்டும் அல்லவா? அந்தத் தொடக்கம் இப்போது வந்துவிட்டது. புலன் உணர்ச்சிக்காக எடுக்கக்கூடிய ஒரு ஆரம்ப கட்டத்திலேயிருந்து அந்தப் புலன் உணர்ச்சி ஆற்றலே உயிர் ஆற்றலை அழுத்திக் கொண்டு அறிவு அறிய முடியாமல் திளைத்து மயக்கத்திலே மயங்கி இருக்கக் கூடிய காலத்திலே அது முழுமையும் துன்பம் தானே. அது எதுவரைக்கும்? தாலி கட்டையிலேயிருந்து ஒரு கட்டையிலே போகும் மட்டும் கவலை தானே அவர்களுக்கு! உயிர் விடுகிற வரைக்கும் கவலைதான் இருக்கும். ஆனால் பரம்பொருள் நிலையில் மனத்தைக் கொண்டு நிஷ்டை கூடித்தவம் செய்து தவத்திலே இருக்கக்கூடிய காலம், அது தொடங்கிய நாள் முதற்கொண்டு பரம்பொருளை அடைகிற நாள் வரையிலே இன்பம் தான்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

பரம் - உயிர் - அறிவு :

"உணர்ச்சிகளில் அறிவியங்க உயிர்விளக்க மாகாது

உள்ளொடுங்க உயிர் உணர்வாம் உயிர் ஒடுங்க தெய்வநிலை;

உணர்ச்சி உயிர் பரம் மூன்றும் உணரவழி அகத்தவமே,

உண்மை உயிர் உலகு அறிவு உணர்பவனே மூன்றாவான்."

உயிர் நிலையறிய :

"கண்ணாடிப் பார்க்கக் காணலாம் உருவநிலை,

உண்ணாடிப் பார்க்க உணரலாம் உயிர் நிலையை."

சச்சிதானந்தம் :

"உயிரின் இயக்கமே உணர்ச்சிகள் அனைத்துமாம்

உயிரின் உணர்தலே உள்ளமாம் அறிவிதே;

உயிரின் ஒடுக்கமே வெளியெனும் உயர்வீடு

உயிரின் நிலைகளே உயர் சத்-சித்-ஆனந்தம்."

பக்தி - யோகம் - முக்தி - ஞானம்:

"அறிவு அறிவுக்கு அடிமையாவதே பக்தி

அறிவை அறிவால் அறியப்பழகுதல் யோகம்

அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி

அறிவை யறிந்தோர் அன்பின் அறமே ஞானம்."

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Brain death. Remedy. Trivandrum medical college

#கவனமாகக் கேளுங்கள்...

சில நாட்களுக்கு முன் நன்றாக இருந்த ஒருவர் (வயது 51) திடீர் என்று மயக்கம் போட,

கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை,
8ல் இருந்து 10 லட்சம் ஆகும் என அறிவித்தனர்.

மிரண்டுப் போன நண்பனின் மாமா செய்வதறியாமல் திகைத்த நிலையில்...

அங்கேயே இருந்த ஒரு நல்லிதயம் கொண்ட மருத்துவர் ஒரு நல்ல ஆலோசனை வழங்கினார்.

"மிகச்சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை இங்கே மாதம் ஒன்றோ இரண்டோ நடக்கும் நிலையில்,

தினமும் ஐந்து -பத்து சாதாரணமாக நடக்கும் திருவனந்த புரம் அரசு மருத்துவமனைக்கு ( Thirvendram Medical college Hospital) உடனே எடுத்துச்செல்லுங்கள்", எனக்கூறினார்.

உடன், ஒரு கடிதமும் வாங்கிக்கொண்டு ஆம்புலன்ஸில் விரைந்து காலையில் அட்மிட் செய்துள்ளனர்.

உடனே, அட்மிஷன் செய்து நோயாளியின் தன்மைக்கேற்ப பரிசோதனைகள் செய்து,

அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மட்டும் வாங்கித் தரச்சொல்கின்றனர்.( ஒரு 40000 to 60000 ஆகலாம்).

டாக்ட்டர் ஃபீஸ் இல்லை. சரியாகி வீடு திரும்பும்வரை அட்மிஷன் தருகிறார்கள்.

உணவு,மருந்து மாத்திரைகள் நாமே வாங்கிக் கொள்ளவேண்டும்.

நண்பர்களே,
ஏதோ நம் ஊர் அரசு மருத்துவமனையை மனதில் நினைத்துக்கொண்டு அசிரத்தையாக இருக்காதீர்கள்.

உலகத்தரம் வாய்ந்த, இராணுவக் கட்டுப்பாடுடன் கூடிய மருத்துவமனை அது.

இதயம்,நரம்பு, மூளை போன்ற மிகச்செலவுப் பிடிக்கும் வியாதிகளுக்கு

மிக மிகச் சிறப்பான , செலவு மிக மிகக் குறைவாக ஆகும் மருத்துவமனை.

அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ரேஷன் அட்டை,
ஆதார் அட்டை கொண்டு செல்லுங்கள்.

நகை நட்டை விற்று, வீடு தோட்டம் விற்று,
நீண்ட நாள் சேமிப்பை இழக்காமல்

சிறந்தச் சிகிச்சையைப் பெறலாம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Trivandrum Medical College Hospital
Casualty Enquiry Number
0471 - 2528300

Important Telephone Numbers...
Superintendent 2442234
RMO 2528246
Casualty 2528300
Blood Bank 2528230
Cath Lab (ICCU) 2528499
CT Scan 2528232
Nursing Superintendent 2528231
Mortuary 2528236
Security officer 2528398
Paying counter 2528461
Anasthaesiaology 2528233
Anatomy 2528371
Applied Nutririon 2528391
Biochemistry 2528399
Cardiology 2528267
Cardiothoracic surgery 2528293
Community Medicine 2528379
Dematology and Venerology 2528213
Forensic Medicine 2528373
Gasroentrology 2528241
Gastro Entrology Surgical 2528295
General Medicine 2528234
General Surgery 2528325
Infectious diseases 2528296
Micro Biology 2528372
Nephrology 2528268
Neurology 2528260
Neuro Surgery 2528224
Gynaecology 2528365
Orthopaedics 2528242
ENT 2528277
Paediatrics 2528331
Paediatric surgery 2528312
Pathology 2528376
Peed Cell 2528369
Pharmacology 2528379
Physical Medicine and Rehabilitation 2528237
Physiology 2528377
Plastic and Reconstructive surgery 2528299
Psychatry 2528222
Radio diagnosis 2528211
Radio therapy 2528232
Respiratory medicine 2448484
Urology 2528282

பிடித்திருந்தால் அதிகம் பகிருங்கள்...

#உடல்நலக்குறைவால்_அவதிப்படுவோருக்கு உதவக்கூடும்...

#Address:
Trivandrum Medical College, Medical College PO, Thiruvananthapuram,
Kerala State. India PIN - 695 011

நன்றி
முகநூல் நண்பர்கள் குழு

Sunday, December 1, 2019

Pranayama technology

ஆயுளை நீடிக்கும் அற்புத தந்திர யோகம் -விஞ்ஞான பைரவ தந்திரம் 🧘🧘🧘

யோகத்தின் -காரண சாதனங்கள்  இரண்டாக, சித்தர்கள் தங்கள் நூல்களில் ,வழி மொழிகிறார்கள் .

ஒன்று மந்திரப் பிரயோகத்தின்  மூலம் தூண்டுதல்,மற்றொன்று  தந்திர பிரயோகத்தின் மூலம் தூண்டுதல் .அப்படி ஆயுளை நீடிக்கும் ஒரு எளிமையான தந்திர பயிற்சி இது .    
                                                                                                                   திரு மூலரின் ,இந்த பாடலை கவனியுங்கள் ,  
                                                                                                         "ஏற்றி இறக்கி இரு காலும்பூரிக்கும் -                                                               காற்றை பிடிக்கும்  கணக்கு அறிவாரில்லை  ..........                                             காற்றை பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்கு -                                                          கூற்றை  உதைக்கும் குறி அதுவாமே!                                    -இங்கே                  .................................................திரு மூலர் ,
அட்ட மா  யோகத்தின் ,
நான்காவது  படி நிலையான ,
பிராண யாமம் என்னும் ,மூச்சு பயிற்சியின் நுட்பத்தை சொல்கிறார்.இதை பயிற்சி செய்வதகு ,முறையான  உரை நடை இல்லை .இதற்கான எளிமையான பயிற்சி ,அதே    சித்தர்களால் ,விஞ்ஞான பைரவ தந்திரம் என்ற நூலில் ,சிவன் -சக்திக்கு  உபதேச  உரையாக ,காணப் படுகிறது .      
                       
சித்தர்களின் உயிர் விளையாட்டு நுட்பம் ,அதை கையாண்ட விதம் ,அறிவியல் பூர்வமானது ,என்பதை இதன் மூலம் அறியலாம் .                                                                                             ...................................................................................தந்திரம் பயிற்சி -                                                                               ............................மிக முக்கியமான ,குருப்பிடத்தக்க   விஷயம் ,இந்த பயிற்சிக்கு ,ஆசனம் ,இடம் ,கருவி  எதுவும்  தேவையில்லை .     

1.உயிர் வாழும் எல்லா உயிர்களுக்கும் ,பிராணன்  என்னும்  மூச்சு காற்று நாசியின் வழியாக -உள் இழுக்க பட்டும் , வெளியேற்ற பட்டும் கொண்டு இருக்கிறது .                                                                     ......................................................................................................................................2.தந்திரம்  சொல்வது என்னவென்றால் , உள் இழுத்தல் ,வெளியேற்றல்  என்ற  இரண்டு செயல்களுக்கு நடுவே ,உள் செல்லும் காற்று ,சில நொடிகள் (காலம்  ) ,உள் நின்று வெளி செல்வது ,நாம் கவனிக்காத ஒரு விஷயம் .                                              ......................................................................................................................................3.உள் நிற்கும் -அந்த இடத்தில், மனதை ஒரு முக படுத்தி ,தியானிக்க முயற்சி  செய்ய சொல்கிறார்கள் .இங்கே ஒரு விஷத்தை ,நினைவு கூற விரும்புகிறேன் . தியானம் செய்வது எப்படி ? என்ற வினா  எழலாம்.                                                                       ......................................................................................................................................4.அட்ட மா யோகத்தின்  படி நிலைகளில் ,முதல் ஐந்து பிரிவுகளான ,இயமம் ,நியமம் ,ஆசனம் ,பிராணயாமம் ,பிரத்தி ஆகாரம்   ஆகியவை ,புற யோகம்  என்று  அழைக்க படுகிறது ......................................................................................................................................5.தாரணை ,தியானம் ,சமாதி -இது மூன்றும்  அக யோகம் என்றும் ,புற யோகமும் ,அக யோகமும் -தங்களுக்குள் ஒன்றுக்கொன்று  தொடர் புடையது ,என்று யோகா நூல்கள் கூறுகின்றன.                 ..
.......6.மேலும் ,   12 அல்லது 16  தாரணை (ஒன்றையே  நினைப்பது  என்று பொருள் )-ஒரு தியானம்  என்றும் ,16 தியானம் -ஒரு சமாதி ,எனவும் கூற படுகிறது .     
                               தந்திர பயிற்சியின் விளைவுகள் : 
                                                                                     1.தியானம் பயிலும் போது ,நினைவுகள் அலைகழிக்க படுவது இயற்கை .உதரணமாக  பயிற்சியில் ஈடு படும் போது ,நமது மனம் ,இறந்த கால நினைவுகளான ,சில விசயங்களை  அசை போடும் .அவற்றை நீக்கும் ,வழி முறையே -16  முறை  தாரணை என்றும் , ஒன்றை பற்றிய ,தொடர் நினைவே  தியானம் என்று ,கூற படுகிறது .ஒரு முறை தவறினாலும் ,தொடர்பு அற்று போகிறது .இப்பொழுது  நிகழும் தியான விளைவுகளை ,சித்தர்கள்  கீழ் கண்டவாறு,வரிசை படுத்துகிறார்கள் .   
..
...........................2.தியானம் -கண்களை மூடிக்கொண்டோ ,திறந்து கொண்டோ ,செய்யலாம் .நீண்ட பயிற்சியில் ,கண்களை மூடாமல் செய்யலாம் .                                                                                                           .........................................3.தியானிக்கும்  இடத்தில் முதலில் சில ஒளி சிதறல்கள் தோன்றுமாம் .  நேரம் கடக்க ,கடக்க ஒளி  சிதறல்கள்  விரிவடைய தொடங்குமாம் ,அதன் பிறகு நடக்குமாம் சூட்சுமம் ...

........4.உங்களின்  மூச்சு காற்று ,ஒளி விரிய ,விரிய -   ஒரே  சீராக ஆழமாக இழுக்க படுவதை ,உணர்வீர்கள் .அவ்வாறு  இழுக்க படும் ,காற்றை  கவனித்தீர்கள்  என்றால்,அது ஒவ்வொரு  ஆதாரமாக  கடந்து  மூலாதாரத்தை ,அதாவது ,அடி வயிறு  வரை  இழுக்க படுவதை ,கவனிக்கலாம்  என்று சித்தர்கள் கூறுகிறார்கள் .இதோடு முடிந்து விட்டதா !என்று நினைதொமானால் ,அடுத்த அதி சூட்சும  நிலையை  விளக்குகிறார்கள் .                                                                                          ........................................5. மிக முக்கியமான  பயிற்சி நிலை இதுதான் !   ஒரு பயிற்சியின் மிக நுட்பமான முடிவு நிலை-உங்களின் மூச்சு காற்று,உண்மையிலயே மூலாதாரத்தை  தொடும் போது ,ஒரு அற்புதம் நிகழும் !-உங்களுடைய  எந்த ஒரு தூண்டுதலோ ,சுய முயற்சி இல்லாமலே ,உங்கள்  மல துவாரம்(anal oriface)  தானாக  உள் நோக்கி சுருங்கி ,மூச்சு காற்றை முத்தமிடுவதை  உணர்வீர்கள் !. பிராண,அபானன்  ஒன்றுகொன்று  கலப்பதை  காண்பீர்கள் !                                                                                                                        .......இந்த பயிற்சியின் போது, வெறும் வயிற்றில் செய்வது நல்லது ,அஸ்வினி  முத்திரை பயன் படுத்தினால் ,நீங்கள் செய்கின்ற யோகம் ,சரிதானா !என்று சரி பார்க்கலாம் . எப்படி?                                       .........................................நாக்கை உள் நோக்கி மடித்து கொண்டு ,இந்த தந்திர யோகம் பயிலுங்கள் ,யோகம் சித்தியானால் ,பயிற்சியின் போது ,நாக்கானது தொண்டையை நோக்கி ,உள் இழுக்க படும் .கண்கள் தானாகவே  மேல்  நோக்கி இழுக்க பட்டு ,புருவ மத்தியை நோக்கி செல்லும் ..................................................................................................................................... !சித்தர்களின் ஒரு அறிவியல் கால கணக்கு   உங்களுக்காக

-------மனிதர்களுக்கு சுவாச  செலவு  ஒரு நாளைக்கு -21600  சுவாசமாம் .இயற்கையின் படி ,உங்கள் ஆயுள் 80  வருடம் எனில் ,யோகா பயிற்சியின் மூலம்,உங்கள்  சுவாசத்தை ,ஒரு நாளைக்கு ,பாதியாக  குறைத்து ,அதாவது 10800      சுவாசமாகினால் ,உங்கள்  ஆயுள்  நாற்பது  வருடம் இயல்பாகவே  கூடி ,120  வருடம் என்று ஆகி விடும் .என்னே! நம் சித்த அறிவியல் !

வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் எல்லா வளங்களும் பெற்று சிவ அருளுடன் ✋🤚✋🤚👐👐👐🙏🙏🙏