Wednesday, October 30, 2019

Maharishi thought (Oct.28)

*வாழ்க வையகம்*                            *வாழ்க வளமுடன்*      
  
*"ஒரு ஆற்றில் திடீரென வெள்ளம் பெருகி வருகிறது. பல மைல்கள் தொலைவு வரையில் மழையே இல்லை. எப்படி தண்ணீர் வருகிறது? இதன் காரணமறிந்தால் எவ்வாறு ஒரு நாட்டில் திடீரெனப் போர் உண்டாகிறது என்பதை அறியலாம். எங்கோ பல மைல் தொலைவில் நல்ல மழை பெய்திருக்கிறது. இது ஒரு மேடான பூமி. மழைநீர் கடலை நோக்கி ஓடுகிறது. அந்த நீரைத்தான், வறண்ட ஆற்றில் பெரும் வெள்ளமாகக் காண்கிறோம். இதேபோல உலக மக்கள் வாழ்வில் கணக்கிட முடியாத துன்பங்கள் நிலவுகின்றன. எல்லாத் துன்பங்களுக்கும் காரணம், மனிதன் மதிப்பை, மனிதன் அறியாமல் செய்யும் தவறுகள் தான். எப்படி? அறநெறி வழியே வாழ மக்களுக்கு முறையான 'ஆன்மீகக் கல்வி' யும் இல்லை; பயிற்சியும் இல்லை. பெரும்பாலான மக்கள் இதனால் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் நான்கிலே அளவு மீறிய ஆசையைப் பெருக்கிக் கொண்டு வாழ்கிறார்கள்.*

*உண்மையில் மனிதருக்கு பொருளும், புலன் இன்பமும் வாழ்வில் இன்றியமையாதவை. ஆயினும், அவற்றைப் பெறத் தனது நேர்மையான முயற்சியும், உழைப்பும் வேண்டும். உழைப்பின்றியே பொருளும், இன்பமும் பெற வேண்டுமென்ற வேட்பே, அதிகாரத்திலும், புகழிலும் அடங்கியுள்ளது. இதனால் தான், உலகம் முழுவதும் மனித குலம் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் என்ற நான்கில் ஆசையைப் பெருக்கிக் கொண்டு என்றும், எதிலும் நிறைவு பெற முடியாமல், இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்ற முடிவில்லாத, அமைதியில்லாத மனநிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இறையுணர்வாகிய 'பிரம்ம ஞானம்' பெற்றால் தான், மேலே சொல்லப்பட்ட பேராசைகள் நான்கும் மறைந்து 'மனநிறைவு' உண்டாகும்."*

                              *வாழ்க வளமுடன்*

Maharishi thought October-30

*வேதாத்திரிய மெய்விளக்கம்   30-10-2019   உலக அமைதி நாள் 30-10-0034*

*யோகப்பயிற்சிகள் மூலமும் தத்துவ விளக்கங்களைக் கொண்டும்*
*சிந்தித்தால் இறையாற்றலே அறிவு - அறிவேதான் தெய்வம்!*

வேதாத்திரி மகரிசி அவர்கள் ஒருமுறை பெரியார் பிறந்த ஈரோட்டில் “கடவுளைக் காணலாம்” என்ற தலைப்பில் உரையாற்ற இருந்தார்.
அப்போது திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஒரு அன்பர் மகரிசியிடம் வந்தார்.

“ஐயா, இது பெரியார் பிறந்த மண். இங்கு இத்தனை ஆண்டு காலமாக கடவுள் இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று சொல்லி எங்களை எல்லாம் பக்குவப் படுத்தி விட்டுப் போயிருக்கிறார்.

பெரியார் கருத்தைப் போன்றே தங்கள் கருத்தும் இருக்கும் என்று
கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் இதே இடத்தில் வந்து
கடவுளைக் காணலாம் என்று பேசி எங்களைக் குழப்புகிறீர்களே” என்றார்.

அதற்கு மகரிசி அவர்கள், *“அன்பரே, அவர் சொல்லியதைத்தான் நான் சொல்கிறேன்.*

எல்லையற்ற இறைநிலையை எல்லை கட்டி ஒரு இடத்தில்
ஒரு உருவத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை அவர் எதிர்த்தார்.

அதனால் பெருகும் ஊழலை, அறியாமையை, வியாபாரத்தை
அவர் எதிர்த்தார். மனிதனை மதி என்றார்.

நானும் அதைத்தான் சொல்கிறேன். இறையாற்றல் (Static state, Unified force, The Source of all the Forces) எங்கும் நிறைந்த பரம்பொருள்.

இறையாற்றல் தான் அணு முதல் அண்டமாகி ஓரறிவு முதல் ஆறறிவாகப் பரிணமித்து மனிதனாகவும் வந்துள்ளது.

அவனுள் இறையாற்றலே அறிவாகவும் இருக்கிறது.

இதை யோகப் பயிற்சியின் (Meditation) மூலமும் தத்துவ விளக்கங்களையும் கொண்டு சிந்தித்து அறியச் சொல்கிறேன்.

கல்லும் முள்ளுமாக உள்ள களர் நிலத்தைப் பண்படுத்துவது போல மக்கள் மனதைப் பண்படுத்தி சீர் செய்யும் வேலையைப் பெரியார் செய்தார்.

அதில் "சிந்தனை என்ற விதையை விதைத்துக் கொண்டு வருகிறேன்.
இதில் வேறுபாடு இல்லை” என்றார்.

*கடவுள் *

கட +  உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தோன்,
   கருத்தறியான் ஊன்றி இதைக் காணவில்லை
கட + உள் என்ற ஆக்கினையின் குறிப்பை மாற்றி
   கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்;
கட + உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்க் கூட்டி
   கடவுள் என்றே சொல்லிச் சொல்லி வழக்கமாச்சு;
கட +  உள் என்று மனிதன் ஓர் குறிப்புத்தந்தான்
   கடவுள் எங்கே? என்று பலர் தேடுகின்றார்!

(ஞானக்களஞ்சியம் கவி: 1121)

*உண்மை நிலையறிய ஒத்தவழி*

கும்பிடுதல் பொருட்கள் பல கொடுத்தல் இவை இரண்டிற்கே
   குரு தெய்வ நாட்டமுடன் கூடி அலையும் உலகீர்!
வம்புகளை வளர்க் கின்றீர்! வாழ்வைப் பாழாக்கு கின்றீர்!
   வாரீர்! அறிவை அறிந்தவ் வழி ஒழுகி உயர்வடைவீர்!

(ஞானக்களஞ்சியம் கவி: 1342)

*கடவுள் தன்மை*

கண்காது மூக்கு வைத்துக் கதைகள் சொல்லிக்
    கருத்துக்குக் கடவுள்தனைச் சிறுமை யாக்கி,
புண்பட்ட நெஞ்சங்கள் மேலும் புண்ணாய்ப்
   போகும் வழியறியாது தவித்து, வாழ்வில்
கண்கலங்கி நிற்போர்க்கும், கடவுள் தன்மை
   கர்மத்தின் விளைவாக எழுந்தியங்கும்
உண்மையினை விளக்குவதே இக்காலத் திற்கு
   ஒத்த உயிர்த் தொண்டாகும், உணர்வோம்! செய்வோம்!

(ஞானக்களஞ்சியம் கவி: 1832)

*சுய சரித்திரம்*

அறிவதனை பக்தி நெறியில் இணைத்து
   ஆழ்ந் தொடுங்கி ஒழுக்கத்தால் உயர்ந்தபோது
அறிவாலே மெய்ப் பொருளை உணரவென்ற
   ஆர்வத்தோ டறிவறிய வேட்பும் ஓங்க
அறிவுதனை அகத்தவத்தால் நிலைக்கச் செய்தேன்
   ஆதிநிலை மெய்ப்பொருளாய் அதன் இயக்கம்
அறிவாக உணர்ந்து விட்டேன். அப்பேரின்ப
   அனுபவத்தை உலகோர்க்குத் தூண்டு கின்றேன்.

(ஞானக்களஞ்சியம் கவி: 747)

*வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!*

*தத்துவஞானி வேதாத்திரி மகரிசி*

Maharishi thought. Oct 21

*வாழ்க்கை மலர்கள்: அக்டோபர் 30*

*மகா மறைபொருள்*

இருப்பு களம், இயக்கக் களம், வானுலவும் கோள்கள், ஓரறிவு முதல் ஆறறிவு வரை வாழ்ந்து கொண்டிருக்கும் உயிர்வகைகள் அனைத்தையும் பயனாய்க் காண்பவன் மனிதனே. இவ்வளவு பொருட்களுக்கும், இயக்கங்களுக்கும் மனித மனம் அளிக்கும் மதிப்பும், இவற்றால் மனிதன் அடையும் பயனும் தான் பேரியக்க மண்டலத்தில் குறிப்பிடத்தக்க சிறப்புகள்.

இத்தகைய மதிப்பு வாய்ந்த மனதின் சிறப்பு அவன் கருமையத்தின் வளமே அன்றி வேறு எது? மனிதன் உடலுக்கும், மனத்திற்கும், தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே, மனிதனுக்கும் வான் கோள்களுக்கும் இடையே, மனிதன் முன்பிறவிக்கும் பின் பிறவிக்கும் இடையே பாலம்போல அமைந்து இறை, உயிர், மனம் எனும் மூன்று மறை பொருட்களுக்கும் இருப்பிடமான மகா மறைபொருள் தான் கருமையம்.

இத்தகைய மதிப்பு வாய்ந்த பேரியக்க மண்டல இரகசிய மையத்தின் பெருமதிப்பை உணரக்கூடியவன் மனிதனே. இந்தக் கருமையத்தைத் தூய்மையாகவும். வளமாகவும் வைத்துக் கொள்ள அறிந்தவன், அதற்கு ஏற்ற தகுதி பெற்றவன் மனிதனே. வேதங்கள், மதங்கள், இலக்கியங்கள், சமுதாய நல நோக்கமுடையோர் அனைவரும் கூறும் போதனைகள் அனைத்தும் மறைமுகமாகக் கருமையத் தூய்மையே ஆகும்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

Monday, October 7, 2019

வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு

*அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு*

* வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு
போடுவது மட்டுமே*

அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்

பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான்.

முடி வெட்டுவதில் இருந்த, மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன.

வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள்
கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது.

இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு
தெரியுமா? என்பது நமக்கு தெரியாது.

பொதுவாக வெற்றிலை பாக்கு
சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும்
சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும்
சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம்,
பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது, என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும்.

இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில்
அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து
நிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) உடம்பிற்கு வருகிறது.

இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது.

சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை
போக்கவல்லது.

வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை
நீக்கி விடும்.

இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல்
என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால்
இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.

அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.

தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது.

நமது முன்னோர்களின் தாம்பூலத்தில்
புகையிலை கிடையாது.

புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட
தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய
அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும்.

சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.

பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே
மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.

ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது

இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு
குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட
நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது.

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும்
தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

காரணம் மதிய நேரம் வந்து வெப்பம்
அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக
எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம்
தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.

இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை நல்ல செய்திகளை அனைவரும் பகிரலாமே.....!

Note:ஒருத்தருக்குமட்டும் பகிராமல் பலரும் பயன் பெரும் வண்ணம் பகிருங்கள்.டேட்டா இல்லை கமியா டேட்டா இருக்குனுட்டு பகிராமல் இருந்துவிடாதீர்கள்.

            *நன்றி*

Tuesday, October 1, 2019

Be calm. Silence power

*༺♦༻*
*எல்லா சிக்கல்களுக்கும் ஒரே தீர்வு~அமைதியாக இரு (பொறுத்திரு)*
*༺♦༻*

ஒரு முறை புத்தர் தனது சிஷ்யர்கள் சிலருடன் பயணம் செய்துக் கொண்டிருந்தார். வழியில் ஒரு ஏரி இருந்தது. புத்தர் ஒரு சிஷ்யனிடம், *“எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது, ஏரியிலிருந்து பருகக் கொஞ்சம் குடிநீர் கொண்டு வா”* என்று சொன்னார். அந்த சிஷ்யர் தண்ணீர் இருக்கும் இடத்திற்குச் சென்றார்.

*༺♦༻*
அப்பொழுது ஒரு மாட்டு வண்டி அந்த ஏரியைக் கடந்துச் சென்றது. அதன் காரணமாகத் தண்ணீர் மிகவும் கலங்கி இருந்தது. சிஷ்யன் *“அந்த கலங்கியத் தண்ணீரைக் குருவிற்குப் பருக எவ்வாறுக் கொடுப்பது?”* என்று எண்ணினார். புத்தரிடம் *“அந்தத் தண்ணீர் மிகவும் கலங்கி இருக்கிறது. குடிப்பதற்குச் சரியாகாது”* என்று கூறினார்.

*༺♦༻*
அரை மணி நேரம் கடந்ததும், புத்தர் திரும்பவும் அதே சிஷ்யனை ஏரியிலிருந்துத் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். சிஷ்யன் திரும்பவும் அங்குச் சென்று பார்த்தப் பொழுது, தண்ணீர்க் கலங்கியேக் காணப்பட்டது. மறுபடியும் விஷயத்தைப் புத்தரிடம் கூறினார்.

*༺♦༻*
புத்தர் மற்றொருமுறை அந்தச் சிஷ்யனை அனுப்பி வைத்தார். இம்முறை சிஷ்யன் சென்றப் பொழுது வண்டல் அடியில் தங்கி, தண்ணீர் சுத்தமாகக் கலங்காமல் இருந்தது. ஆதலால், ஒரு குடத்தில் அந்தத் தண்ணீரை ஏந்தி, புத்தரிடம் கொடுத்தார்.

*༺♦༻*
புத்தர் தண்ணீரைப் பார்த்தார். பிறகு, சிஷ்யனை நோக்கி சொல்லலுற்றார், *“நீ அந்தத் தண்ணீரைச் சுத்தமாக ஆக்குவதற்கு என்னச் செய்தாய் பார்த்தியா?”* நீ அமைதியாக இருந்ததும், வண்டல் அடியில் தேங்கித் தெளிவானத் தண்ணீர்க் கிடைத்தது. உன் *மனதும் அதுப் போன்றது தான். ஏதேனும் சிந்தனையில் கலங்கி இருந்தால் அமைதியாக இருக்க வேண்டும். தானாகவேத் தெளிந்து விடும். எந்த முயற்சியும் தேவையில்லை.*

*༺♦༻*
நீதி:

மன நிம்மதி அடைவதுக் கடினமான காரியம் இல்லை. மிக எளிமையானது, ஏனென்றால்……….

*நிம்மதியே நம் ஆத்மாவின் குணம்.*
*༺♦༻༺♦༻*

Saturday, September 14, 2019

Maharishi thought ( 14.9.19)

Maharishi thought ( 14.9.19)

*எண்ணங்கள்*

*எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக மாறி விடுவதில்லை. ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது அது சக்தி பெற ஆரம்பிக்கிறது. அந்த சக்தி அதை செயல்படுத்தத் தூண்டுகிறது.*
*༺♦༻*
*"ஆயிரம் முறை சொன்னால் யானையும் சாகும்" என்பர் பெரியோர். அதனால் தான் ஆலயங்களில் லட்ச்சார்ச்சனை, கோடியர்ச்சனை போன்றவைகள் நிகழ்கின்றன.*
*༺♦༻*
*எண்ணங்களின் சக்தி அதே எண்ணங்கள் கொண்டவர்களை தன் பக்கம் ஈர்க்கிறது. மேலும் வலுப்பெறுகிறது. அது அலைகளாகப் பலரையும் பாதிக்கிறது. பலரையும் செயலுக்குத் தூண்டுகிறது.*
*༺♦༻*
*எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள்.*
*༺♦༻*
*எனவே நம் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எவையோ, அவையே இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை.*
*༺♦༻*
*நம்முடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் நம் எண்ணங்களை மாற்றவேண்டும்.* *எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை.*
*༺♦༻*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை . இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை .மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை ...!*
*༺♦༻*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்...!*
*༺♦༻*
*முகமலர்ச்சியோடும் நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்*

*நலம் பெருக...!!*
*வளம் பெருக...!!*

🌸🌺🌸🌺🌸🌺

 

Monday, September 2, 2019

Discipline. Example. Amitabh Bachchan

அமிதாப் பச்சன்
வாழ்வில் ஓர் நாள்:

எனது வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான் இருந்த போது, விமானம் மூலம் ஒரு முறை பயணம் செய்தேன்.

எனக்கு அருகில் இருந்த பயணி,
ஒரு சாதாரண சட்டை,பேண்ட்
அணிந்து அமர்ந்திருந்தார். 

வயதான மனிதர்,
நடுத்தர வர்க்கம்,
நன்கு படித்தவர் போன்று அவர் தோன்றினார்.

நான் யார் என்பதை மற்ற பயணிகள் கண்டு கொண்டார்கள்.

என் இருக்கையின் அருகில் வந்து ஹலோ சொல்லி கை கொடுத்தனர்.

ஆனால் இந்த மனிதர் மட்டும் என் இருப்பை உணரவும் இல்லை.
என்னை கண்டு கொள்ளவும் இல்லை.

ஒருவேளை, அவர்  நாளிதழை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்ததால்,
என்னை கவனிக்கவில்லையோ என எண்ணினேன்.

தேநீர் வழங்கப்பட்ட போது, ​​அமைதியாக அதை எடுத்து, ரசித்து பருக ஆரம்பித்தார்.

என்னை அவருக்கு யார் என்று தெரியவில்லையா?

அல்லது தெரிந்தும் தவிர்க்கிறாரா?

என்னால் பொருத்து கொள்ள முடியாமல்,
அவருடன் ஒரு உரையாடலைத் துவக்கும் முயற்சியில் நான் அவரை பார்த்து சிரித்தேன்.

அந்த மனிதரும் புன்னகை செய்து, 'ஹலோ' என்று சொன்னார்.

நாங்கள் பேச ஆரம்பித்தோம்.
சமூகம்,
பொருளாதாரம்,
அரசியல்,
என்று பல விஷயங்களை பற்றி பேசினோம்.

அவரின் பேச்சில், ஒரு லயிப்பும் ஈர்ப்பும், தேர்ந்த ஒரு நேர்த்தியும் இருந்ததை நான் உணர்ந்தேன்.

சினிமா மற்றும் திரைப் படங்கள் சம்பந்தமான விஷயங்களை நான் வேண்டுமென்றே கொண்டு வந்தேன்.

நீங்கள் திரைப்படங்கள் பார்ப்பீர்களா என வினவினேன்.

ஓ, மிக சில. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்திருக்கிறேன் என அந்த மனிதர் பதிலளித்தார்.

நான் திரைப்பட துறையில் தான் இருக்கிறேன் என்று குறிப்பிட்டேன்.

அப்படியா? ரொம்ப நல்லது.
நீங்கள் அந்த துறையில் என்ன செய்கிறீர்கள் என கேட்டார்.

நான் ஒரு நடிகர் என பதிலளித்தேன்.

அவரிடமிருந்து எந்த வித சலனமும் இல்லை.

அதன் பின் நாங்கள் இறங்கி வெளியேறும் போது,

உங்களுடன் பயணம் செய்தது மிக்க மகிழ்ச்சி.
நல்லது,
என் பெயர் அமிதாப் பச்சன் என்றேன்.

அந்த மனிதரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே,
உங்களை சந்தித்த இந்த நாள்,
நல்ல நாளாக இருக்கட்டும் என கூறி:

என் பெயர்: JRD டாட்டா.
மோட்டார் தொழில் செய்கிறேன் என்றார் பணிவுடன். 

நான் விக்கித்து நின்று விட்டேன்.

அன்றுதான் நான் கற்றுக் கொண்டேன் பணிவை பற்றி.

பேரையும், புகழையும் வைத்து,
நாம் தான் பெரிய ஆள், என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால், நம்மை விட வசதியிலும்,
அறிவிலும், படிப்பிலும் உயர்ந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.

எப்போதுமே பணிவாய் பேசுங்கள்.

நல்ல நடத்தை, பண்பு என்பது அறிவை விட மேலானது.

வாழ்க்கையில் பல கால கட்டங்களில்,
அறிவு,
பணிவிடம் தோற்றுப் போய் உள்ளது.

பணிவும் நல்ல நடத்தையும்,
எல்லா இடத்திலும் வென்றுள்ளது.

எந்த சூழ்நிலையிலும்,
பணிவுடனும், அடக்கத்துடனும் நடந்து கொள்ளுங்கள்.

அது உங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் கொண்டு போய் வைக்கும்.