Wednesday, August 9, 2017

சக்கரை நோய் உள்ளவர்களுக்க

*சாப்பிட கூடாதவை*

நுங்கு
சர்க்கரை
சாக்லெட்
கரும்பு
ஜஸ் கிரீம்
பால்கட்டி (பன்னீர்)
மாம்பழம்
சீத்தாபழம்
பலாப்பழம்
சப்போட்டா
வாழைப்பழம்
காம்பளான்
திரட்டுபால்
குளுகோஸ்
சேப்பங்கிழங்கு
உருளைகிழங்கு
சக்கரைவள்ளி கிழங்கு
உலர்ந்த திராட்சை
குளிர் பானங்கள்

*அளவோடு சாப்பிடலாம்*

அரிசி
அவல்
ஓட்ஸ்
சோளம்
கேழ்வரகு
கோதுமை
பார்லி அரிசி
வேர்க்கடலை
பாதாம் பருப்பு
முந்திரிபருப்பு
மக்காச்சோளம்

*அளவில்லாமல் சாப்பிடலாம்*

கீரை
தக்காளி
காராமணி
வாழைத்தண்டு
வாழைப்பூ
பாகற்காய்
சுரைக்காய்
பீர்க்கங்காய்
வெங்காயம்
கத்தரிக்காய்
பூசணிக்காய்
அவரைக்காய்
பப்பாளிக்காய்
கோவைக்காய்
வெள்ளரிக்காய்
வெண்டைக்காய்
முருங்கைக்காய்
கொத்தவரங்காய்
சீமைகத்தரிக்காய்
முட்டைகோஸ்
வெள்ளை முள்ளங்கி

RAJAJI JS.    9.8.17

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இவற்றை தெரியுமா

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இவற்றை தெரியுமா?

மீனாட்சி அம்மனின் மற்றொரு பெயர் அங்கயற்கண்ணி,

மீனாட்சி அம்மனின் அப்பா, அம்மா மலயத்துவசன், காஞ்சனமாலை,

மீனாட்சி அம்மனின் சிலை மரகதக்கல்லினால் ஆனது.

மீனாட்சி அம்மன் வலது கையில் கிளி வைத்திருப்பார்,

மீனாட்சி அம்மன் கோயில் குளத்தின் பெயர் பொற்றாமரைக் குளம்,

மீனாட்சி அம்மன் கோயில் விமானத்தின் பெயர் இந்திர விமானம்.

பஞ்ச சபைகளில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள சபையின் பெயர் வெள்ளியம்பல சபை.

மீனாட்சி அம்மன் கோயிலில் கால் மாறி நடனமாடியவர் நடராஜர்.

மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள மிகப்பெரிய விநாயகர் பெயர் முக்குறுணி விநாயகர்.

மதுரையில் சிவபெருமானுக்குத் தொண்டு செய்த நாயன்மார் மூர்த்தி நாயனார்,

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என கூறியவர் நக்கீரர்.

மீனாட்சி அம்மன் கோயிலிலுள்ள கோபுரங்கள் எத்தனை ? 14 கோபுரங்கள். மீனாட்சி அம்மன் கோயிலின் மிக உயரமானது தெற்கு கோபுரம்.

மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள புகழ்பெற்ற மண்டபம் எது?

ஆயிரங்கால் மண்டபம் நவகிரக ஸ்தலங்களில் மீனாட்சி அம்மன் கோயில் புதன் ஸ்தலமாகும்.

மீனாட்சி குங்குமத்தில் காந்தம்:

மதுரை மீனாட்சி குங்குமம் காந்தசக்தி மிக்கது என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர்.

இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கே அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள்.

அடுத்து, சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்ற போது விபூதி தரப்பட்டது. இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல். உடனே, அதை பரிசோதனை செய்தார். அவற்றிலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார். இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம் எனதான் எழுதிய தி இன்னர் லைப் என்ற புத்தகத்தில் எழுதினார். இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார்.

சில ஆண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தார். அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார்.

இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்று அவர் எழுதி வைத்திருக்கிறார்.

நாம், மீனாட்சி குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டி வைத்து பாழாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இனிமேலாவது, அன்னையின்  குங்குமத்தை அளவோடு வாங்கி, பூஜையறையில் பத்திரமாக வைப்போம்.

அன்னையின் அருட்கடாட்சம் என்று நிலைத்திருக்கச் செய்வோம்.

RAJAJI JS 9.8.17

பாரம்பரியத்தை தொலைத்து விட்டோம்.

வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,
அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம், ஆடு போட்ட புலுக்கையை அ ள்ளி காடு வளர்த்தோம், காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியைவிட்டோம்,வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம், நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம், திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம், உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.
பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.
இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிது.

நம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டோம்.
RAJAJI JS  9-8-17

அழகான வரிகள்

*

1, அறிமுகமற்றவர்களின் பார்வையில் நாமெல்லோரும் சாதாரண மனிதர்கள்.

2,பொறாமைக்காரரின் பார்வையில் நாமனைவரும் அகந்தையாளர்கள்.

3,புரிந்து கொண்டோரின் பார்வையில்
நாம் அற்புதமானவர்கள்.

4,நேசிப்போரின் பார்வையில்
நாம் தனிச்சிறப்பானவர்கள்.

5,காழ்ப்புக் கொண்டவர்களின் பார்வையில் நாம் கெட்டவர்கள்.

ஒவ்வொருவருக்கும் என தனியான பார்வை உண்டு.

ஆதலால் -
பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட சிரமப்படாதீர்கள்.

உங்கள்  திருப்தியே உங்களுக்குப் போதுமானது.

மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு..

எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!
அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்!
RAJAJI JS 9-8-17

தினமும் செய்ய வேண்டியவை..!!

தினமும் செய்ய வேண்டியவை..!!

1)சோகத்தை ~ Delete செய்யுங்க.

2)சந்தோஷத்தை ~ save செய்யுங்க.

3)சொந்தங்களை~ recharge செய்யுங்க.

4)நட்புகளை ~Down load செய்யுங்க.

5)எதிரிகளை ~Erase செய்யுங்க.

6) உண்மையை ~Broad cast செய்யுங்க.

7)துக்கத்தை ~switch off செய்யுங்க.

8)வேதனையை ~Not reachable செய்யுங்க.

9)பாசத்தை ~Incoming செய்யுங்க.

10)வெறுப்பை ~outgoing செய்யுங்க.

11) சிரிப்பை ~Inbox செய்யுங்க.

12)அழுகையை ~outbox செய்யுங்க.

13)கோபத்தை ~Hold செய்யுங்க.

14)இன்முகத்தை ~send செய்யுங்க.

15)உதவியை ~ok செய்யுங்க.

16)இதயத்தை ~vibrate செய்யுங்க.
பிறகு பாருங்க..
RAJAJI JS.  9.8.17

பாரம்பரியத்தை தொலைத்து விட்டோம்.

வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,
அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம், ஆடு போட்ட புலுக்கையை அ ள்ளி காடு வளர்த்தோம், காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியைவிட்டோம்,வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம், நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம், திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம், உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.
பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.
இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிது.

நம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டோம்.
RAJAJI JS  9-8-17

Wednesday, August 2, 2017

பாபாவுக்கென்று விசேஷ பூஜை மற்றும் விரத முறைகள்

மிகவும் எளிமையான வழியையே பாபா போதித்தார். அதுவே நம்பிக்கை, பொறுமை. முதலில் பக்தர்களுக்கு பாபா ஒரு சத்குருவாக தோற்றமளித்தாலும், மிகுந்த நம்பிக்கை உள்ள பக்தர்களுக்கே தான் இறைவனின் அவதாரமாக வெளிப்படுத்திக்கொள்கிறார். மிகவும் வியாபாரமயமாகிவிட்ட இவ்வுலகத்தில் பாபாவின் பெயரில், சாய் ஹோமம், பாபா எந்திரம், பாபா பூஜை என ஏமாற்று வேலைகள் ஏராளம். சத்சரித்திரமே நமது வேதம். அதை நன்கு படித்தீர்களானால் நீங்கள் உணர்வீர்கள், குறிப்பாக

( 1 ) பாபாவிடம் சரணாகதி அடைந்தால் போதும். அதாவது பாபாவே எல்லாம்  என்று உணர்ந்து கொள்வது. அப்படி உணர்ந்த பக்தர்களின் வாழ்வை அவர் பார்த்துக் கொள்வார்.

( 2 ) பாபாவுக்கென்று விசேஷ பூஜை முறைகள் எதுவுமில்லை. தன்னை நம்பும் பக்தனிடம் பாபா எப்போதும் இருக்கிறார். சந்தேகமே இல்லை.

( 3 ) ஜோதிடம் பார்ப்பது, காரியம் நடப்பதற்காக எந்திரம் உபயோகிப்பது, மந்திரம் சொல்வது எல்லாம் பாபா மீது நம்பிக்கை இல்லாமையையே காட்டும்.

( 4 ) விரதம் இருப்பதை பாபா ஒருபோதும் அனுமதித்ததில்லை. பசியோடு இறைவனை துதிப்பதை வேண்டாம் என்றே பாபா சொல்கிறார். இப்போது கடைகளில் கிடைக்கும் சாயி விரத புத்தகங்களில் உண்மையும் இல்லை, பாபாவிற்கு விருப்பமும் இல்லை.

( 5 ) பாபா கூறியதன் அடிப்படையில், பக்தர்கள் நமக்கு அருளிய மந்திரம் "சாயி, சாயி " மட்டுமே. இதை உச்சரிக்கும் இடத்தில் எல்லாம் பாபா வாசம் செய்வார் என்பது அவரது உறுதிமொழி. வேறு மந்திரம் எதுவும் இல்லை.

( 6 ) பாபாவை ஒரு குறிப்பிட்ட கோவிலில் மட்டுமே மிகவும் சக்தி படைத்தவராக சிலர் முயற்சிக்கின்றனர். உண்மை அதுவல்ல..பாபா மூன்றரை அடி உருவமல்ல, எங்கும் நிறைந்துள்ள இறை அவதாரம்.

RAJAJI JS 3-8-17