Sunday, July 9, 2017

பகவத்கீதைபடிக்கிற ஒவ்வொரு முறையும்

ஒரு பெரியவர் எப்போது
பார்த்தாலும் தன்னுடைய வீட்டு
வாசலில் அமர்ந்தபடி பகவத்கீதையை படித்துக்
கொண்டே இருப்பார். இளைஞன் ஒருவன்
பல நாட்களாக இதனை கவனித்துக்
கொண்டே இருந்தான். ஒரு நாள் அவரிடம்
வந்து கேட்டான் , " தாத்தா! எப்பப்
பாத்தாலும் இந்த புத்தகத்தையே
படிச்சிட்டு இருக்கீங்களே. இதை எத்தனை
நாளா படிக்கிறீங்க?" என்றான்.
பெரியவர் சொன்னார்,
" ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம்
இருக்கும் ".
"அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு
மனப்பாடம் ஆயிருக்குமே! அப்புறம் ஏன்
இன்னும் படிக்கிறிங்க ?" என்றான்.
தாத்தா சிரித்தபடி கூறினார்,
" எனக்கு ஒரு உதவி செய். நீ செஞ்சு
முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்".
இளைஞன் கேட்டான்,
" என்ன உதவி தாத்தா? "
பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில்
இருந்த ஒரு மூங்கில் கூடையை
எடுத்தார். அதில் அடுப்புக் கரி
இருந்தது. அதை ஒரு மூலையில்
கொட்டினார். பல நாட்களாகக் கரியை
சுமந்து சுமந்து அந்தக் கூடையின்
உட்புறம் கருப்பாக மாறி இருந்தது.
பெரியவர் சொன்னார்,
" தம்பி, அதோ இருக்குற பைப்புல
இருந்து இந்தக் கூடையில கொஞ்சம்
தண்ணி பிடியேன்"
இளைஞனுக்கு சிரிப்பு வந்தது.
இருந்தாலும் பெரியவர் சொல்லி
விட்டதால் எடுத்துச் சென்று தண்ணீர்
நிரப்பி எடுத்து வந்தான். அவன் வந்து
சேருவதற்கு முன்பே எல்லா நீரும்
தரையில் ஒழுகிப்போனது. பெரியவர்
சொன்னார்,
" இன்னும் ஒரு முறை " . இளைஞன்
மீண்டும் முயன்றான். ஆனால் மூங்கில்
கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்?
மீண்டும் சிந்திப் போனது. பெரியவர்
கேட்டார்,
" தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு
முறை மட்டும் " . இளைஞன் ஒரு
முடிவுக்கு வந்தான்.
"இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி
செய்து விட்டு திரும்பிப் பார்க்காமல்
ஓடிவிடுவோம். அவர் எந்தப் புத்தகத்தைப்
படித்தால் எனக்கென்ன வந்தது? "
தண்ணீர் பிடித்தான். வழக்கம் போலவே
எல்லாத் தண்ணீரும் தரையில்.
" தாத்தா, இந்தாங்க உங்க கூடை. இதில்
தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத்
தெரியுமா தெரியாதா? எதுக்கு
என்னை இந்தப் பாடு படுத்தினிங்க "
என்றான்.
அவர் புன்னகையோடு சொன்னார்,
" இதுல தண்ணி நிக்காதுன்னு எனக்கும்
தெரியும். நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப்
போகும் போது இதோட உட்புறம் எப்படி
இருந்தது? " என்றார்.
இளைஞன் சொன்னான் ,
" ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா
இருந்தது "
"இப்போ பார் "என்றார்.
தண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின்
உட்புறம் சுத்தமாகி இருந்தது.
பெரியவர் சொன்னார்,
" தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில்
இதுதான். எத்தனை முறை தண்ணீர்
பிடிச்சாலும் மூங்கில் கூடை
நிரம்பவே இல்லை. ஆனாலும் ஒவ்வொரு
முறையும் கூடை சுத்தமாயிடிச்சு.
அது போலத்தான்
எத்தனை முறை படிச்சாலும் முழு
பகவத்கீதையும் மனப்பாடம் ஆயிடும்னு
சொல்ல முடியாது. ஆனா படிக்கிற
ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்ள
இருக்கும் அழுக்கும், கறையும்
சுத்தமாகிக்கிட்டே இருக்கும்" என்றார்.
இளைஞனுக்குள்ளே என்னென்னவோ
செய்தது.

RAJAJI JS. {9.7.17}

ஸ்ட்ரோக் என்றழைக்கப்படும் பக்க வாத

நேற்று என் உறவினரான 75 வயதான பாட்டியை அழைத்துக் கொண்டு முகநூல் நண்பர்களின் ஆலோசனைப்படி,ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்,பலம்நேர் வட்டத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள "விருப்பாக்சிபுரம்"என்ற கிராமத்திற்க்கு சென்றேன்,

பாட்டி ஸ்ட்ரோக் என்றழைக்கப்படும் பக்க வாதத்தால் வலது புற கை மற்றும் கால் செயலிழந்து கடந்து 10 நாட்களாக காஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்,சிகிச்சை பலனளிக்காத நிலையில்,நேற்று அதிகாலை 3 மணியளவில் காஞ்சியிலிருந்து காரில் கிளம்பினோம்,

நாங்கள் விருப்பாக்சிபுரம் சென்றடைந்தபொழுது 6 மணி ஆகி விட்டது,எங்களுக்கு முன்னரே சுமார் 50 கார்கள் அணிவகுத்து நின்றன,

பல்வேறு மாநிலங்கள் இருந்தும் நெடுந்தூரம் பயணித்தும் இங்கு அளிக்கப்படும் ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்திருந்தனர்,வந்திருந்த அனைவரும் முகத்திலும் பயணச் சோர்வையும் தாண்டி ஒரு நம்பிக்கை,

சற்று நேரத்தில் "மோகன்ராவ்" என்றழைக்கப்படும் அந்த வைத்தியர் கைகளில் செப்பு டம்ளரில் மருந்து கொண்டு வந்து கார்களில் அமர்ந்திருக்கும் நோயுற்றுவர்களுக்கு கொடுத்தார்,கூடவே சிறிது புழுங்கல் அரிசியும்,

எங்களின் முறை வந்ததும்,மருந்தை கொடுத்து விட்டு,இரண்டு வார்த்தைகள் பாட்டியிடம் நம்பிக்கை சொல்லிவிட்டு மருந்தைக் கொடுத்தார்,3 மணிநேரம் கழித்து மீண்டும் ஒருமுறை மருந்து கொடுக்க வேண்டும் என்று சொன்னவர் அடுத்த காரை நோக்கி நகர்ந்தார்,

ஓய்வெடுக்கும் வேளையில் ஒருசிலரின் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர்,92 வயதான முதியவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இங்கே வந்து மருந்து சாப்பிட்டு குணமடைந்து தற்போது இரண்டாவது முறை வந்துள்ளார்,அவர் நடந்து சென்றே மருந்து வாங்கி உண்டதைப் பார்க்க ஆச்சரியமடைந்தேன்,
பல லட்சங்களை செலவு செய்தும் தனியார் மருத்துவமனைகளில் குணமடையாதவர்கள் கூட இங்கு வந்த பிறகு குணமடைந்து செல்வதைக் கண்கூடாக கண்டபிறகு வியப்படையாமல் இருக்க முடியவில்லை,

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை,ஆனால் பெரும்பாலானவர்கள் குணமடைந்துள்ளனர்,9 மணியளவில் உப்பு இல்லாத பச்சரிசி சாதம் சுடச்சுட வழங்கப்பட்டது,

அதேபோல மூன்று மணிநேர இடைவெளியில் மூன்று முறை மருந்து கொடுத்து விட்டு,குணமாகவில்லை என்றால் மட்டும் பதினைந்து நாள் கழித்து மீண்டும் அழைத்து வர வேண்டும் எனக் கூறினார்,அதற்க்காக அவர் வாங்கும் தொகை ரூ.500/- மட்டுமே,பணமில்லாமல் வரும் ஏழைகளுக்கு இலவசமாகவும் மருந்தளிப்பதாகக் கூறுகின்றனர்,

நாங்களும் நம்பிக்கையுடனும் திருப்தியுடனும் திரும்பினோம்,

2 மாதங்களுக்கு பத்திய உணவுக்கான பட்டியலையும்,இயற்க்கை வலி நிவாரணிகளும் கொடுக்கப்பட்டது,

அதே ஊரில் பல வைத்தியர்கள் இதே மருத்துவத்தை செய்தாலும் இவரிடம் வரும் கூட்டம் மட்டும் குறைவதில்லை,
உங்கள் குடும்பத்தில் அல்லது உறவினர்களில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் தாராளமாக இங்கு சென்று வர பரிந்துரை செய்யலாம்.

மோகன்ராவ்
ஆயுர்வேத வைத்தியசாலை,
விருப்பாக்சிபுரம்,
பலம்நேர் வட்டம்,
சித்தூர் மாவட்டம்.
RAJAJI JS

திருட்டு விசிடி

திருட்டு விசிடி
திருட்டு விசிடியில் சினிமா பார்க்காதீர்கள் என்று சொல்லுவோருக்கு.. நீங்கள் என்றாவது சினிமாவில் சமூகத்தை கெடுக்கும் சாராயம், புகை, ஆபாசம், காதல், வன்முறை, பெற்றோரை-கிராமத்தவனை-குடும்பங்களை-உறவுகளை கொச்சைப்படுத்தி மேற்குமய வாழ்க்கை முறைக்கு ஜால்ரா தட்டும்-சகஜப்படுத்தும் கருத்துக்களை பரப்பாதீர்கள் என்று சொன்னதுண்டா..?? அதில் நடிக்க மறுத்ததுண்டா? இன்று சாமானியன் குடும்பத்தோடு சினிமாவுக்கு போய்வர ரூ.1,000 செலவு செய்ய வேண்டும். அவனை பற்றி என்றாவது யோசித்ததுண்டா..?? நீங்கள் உங்கள் ஹீரோக்களின் சம்பளத்தை குறைக்கச்சொல்லியோ-சினிமா லாப அடிப்படையில் சம்பளம் என்றோ ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சித்ததுண்டா..?? சமூகத்தை கெடுப்பதை பற்றி அக்கறையே இல்லாமல் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் உங்கள் வருமானத்தை காக்க காலில் கூட விழும் நீங்கள், சாமானியன் சில நூறுகளை மிச்சப்படுத்த விசிடி பார்ப்பதை வேண்டாம் என்று சொல்ல என்ன முகாந்திரம் உள்ளது?? அதர்மத்தை பரப்பும் நீங்கள் மக்களிடம் தர்மத்தை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்..??

என் கருத்து, தற்கால சினிமாக்களை புறக்கணிப்பதே சிறந்தது. தியேட்டர் என்ன, விசிடி என்ன..? விஷம் விஷம் தான்.. மிக மிக சொற்பமான அளவில் உள்ள, மேற்சொன்ன வரிகளுக்கு பொருந்தாதவர்கள் விதிவிலக்கு..

எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!

1, அறிமுகமற்றவர்களின் பார்வையில் நாமெல்லோரும் சாதாரண மனிதர்கள்.

2,பொறாமைக்காரரின் பார்வையில் நாமனைவரும் அகந்தையாளர்கள்.

3,புரிந்து கொண்டோரின் பார்வையில்
நாம் அற்புதமானவர்கள்.

4,நேசிப்போரின் பார்வையில்
நாம் தனிச்சிறப்பானவர்கள்.

5,காழ்ப்புக் கொண்டவர்களின் பார்வையில் நாம் கெட்டவர்கள்.

ஒவ்வொருவருக்கும் என தனியான பார்வை உண்டு.

ஆதலால் -
பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட சிரமப்படாதீர்கள்.

இறைவனின்  திருப்தியே உங்களுக்குப் போதுமானது.

மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு.
இறைவனை திருப்திப்படுத்துதல் என்பது தள்ள முடியாத இலக்கு.

எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!
அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்!👍

Sunday, July 2, 2017

*உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?

..

*உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*

தயவு செய்து

*வேர்க்கடலை,*
*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!

*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை*
*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!

*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!

உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*

தயவு செய்து *மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!

தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!

*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!

உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட *மனைவியா நீங்கள்???*

🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்கள்!*

🍅🥕🥒🍆🌰🥔 *ஃப்ரஷ்ஷான காய்கறிகளை,இறைச்சியை சமைக்கவும்!*

🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!

*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை எப்பொழுது  கைவிட்டோமோ!* அன்றே *நாம் நோய்யின் பிடியில் சிக்கிக்* கொண்டோம். *இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக    மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை  மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்
கையில் பயன்படுத்துவன் மூலம் *சாத்தியமாகும்.*

*இன்றே!மீட்டெடுப்போம்! *வாருங்கள்!*
🙏💪🏾

ஜென் துறவிகள் இருவர்

குருவே சரணம்
ஜென் துறவிகள் இருவர் தொடர்ந்து பெய்த மழையினால்  ஒரு குடிசையின் கீழ் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தனர். மழை நின்றதும் தங்களது இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து செல்லும்போது, வழியில் ஓர் அழகான இளம் பெண் சாலையைக் கடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.

இதைக்கண்ட துறவிகளில் ஒருவர், "என்னாயிற்று பெண்ணே? ஏதேனும் உதவி தேவையா?"என்று கேட்டார்.

பதிலுக்கு அந்தப் பெண், "நான் என் தோழியின் திருமணத்துக்குச் செல்ல உள்ளேன். ஆனால், இந்தச் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. நடந்து சென்றால் நிச்சயம் என் அழகிய பட்டுப் பாவாடை பாழாகிவிடும்" என்று கூறி வருந்தினாள்.

"கவலைப்படாதே, என் தோள்களின் மீது ஏறிக்கொள். நீ சேர வேண்டிய இடத்தில் உன்னைச் சேர்த்துவிடுகின்றேன்" என்று கூறிவிட்டு அவளுக்கு உதவி புரிந்தார்.

திரும்பி வரும் வழியில் தன்னுடன் இருக்கும் மற்றொரு துறவி கோபமாக இருப்பது போல அவருக்குத் தோன்றியது. ''ஏன் என் மீது கோபமாக உள்ளீர்கள்?'' என்று கேட்க, அதற்கு அவர் ''நாம் ஒரு துறவி  என்பதை மறந்துவிட்டு அந்தப் பெண்ணை எப்படித் தொட்டுத் தூக்கலாம்? இது தவறானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?" என்று கேட்டார்.

உதவி செய்த துறவி, "தூக்கிய அந்தப் பெண்ணை அப்போதே நான் இறக்கிவிட்டேன், நீங்கள்தான் அந்தச் சம்பவத்தை இறக்காமல் மனதில் சுமந்துகொண்டு இருக்கிறீர்கள்"என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

நாமும் நமது வாழ்வில் பிறர் ஏற்படுத்திய காயங்களை மனதில் தூக்கிக்கொண்டு செல்கின்றோம். எது முக்கியம் எது தேவையற்றது என்பதைப் பகுத்துப் பார்க்கத் தெரிந்துவிட்டால், வாழ்வு என்றென்றும் ஆனந்தமே.

கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்.

கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள். "உனக்குத் தம்பி வேண்டுமா அல்லது தங்கை வேண்டுமா?"

மகள், "தம்பி வேண்டும்" என்றாள்.

"யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள்.

திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!" என்றாள்.

"அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?

உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே! தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும், அவளை ஒரு போதும் தீண்டவில்லையே!

ஆனால் ராமன், யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக, கர்ப்பவதியாக இருந்த தன் மனைவியை ஒதுக்கி வைத்தானே! அவளை தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்கச் செய்தானே!

உனக்கு வேண்டுமானால் ராமனைப் போல் மகன் பிறக்கட்டும். ஆனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்" என்றாள் மகள்.

தாயால் பதில் கூற முடியவில்லை. அதிர்ந்து போனாள்.

இக்கதை ஒரு விவாதத்தைத் துவக்கலாம். ஆனால் கதையின் உட்பொருளைக் கூர்ந்து நோக்கினால், ஒரு உண்மை புலப்படும்.

இவ்வுலகில் நல்லவர், கெட்டவர் என்பது நாம் நம் தனிப்பட்ட அனுமானங்களால் முடிவு செய்வதே.

கேளிக்கைகளில் திளைப்பவன் என்பதால், ஒருவன் கெட்டவன் என்றில்லை. கோவிலுக்குச் செல்பவன் என்பதால், ஒருவன் நல்லவனும் இல்லை.

கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக்காரனும் சரி - கேட்பதென்னவோ பிச்சை தான்.

நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்.
🎯🎯🎯🎯🎯