Saturday, June 3, 2017

சளியைப் போக்கும் மிளகு ரசம்

சளி பிடித்திருந்தால், அப்போது மிளகு ரசம் செய்து சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் காணாமல் போய்விடும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். உங்களுக்கு மிளகு ரசம் எப்படி செய்வதென்று தெரியாவிட்டால், தமிழ் போல்ட் ஸ்கை மிளகு ரசத்தின் ஈஸியான செய்முறையைக் கொடுத்துள்ளது.
அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள். அதிலும் இந்த ரசத்தை பேச்சுலர்கள் கூட முயற்சி செய்யலாம். சரி, இப்போது ரெசிபியைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
புளி – 1
எலுமிச்சை அளவு
கொத்தமல்லி – சிறிது உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு…
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 1
வரமிளகாய் – 1 துவரம் பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு…
நெய் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை வரமிளகாய் – 2
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை 1 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கொதிக்க விட வேண்டும்.
அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் தாளித்ததை கொதிக்கும் ரசத்தில் ஊற்றி மீண்டும் ஒரு கொதி விட்டு, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மிளகு ரசம் ரெடி!!!
http://vijaytamil.net/

வீட்டுக்குறிப்புக்கள்

டிப்ஸ்… டிப்ஸ்…!!!

டிப்ஸ்… டிப்ஸ்…

சாம்பார் செய்யும்போது, புளியின் அளவைக் குறைத்து அல்லது புளியை முற்றிலும் தவிர்த்து, தக்காளிப் பழங்களைச் சேர்த்துக் கொதிக்கவிட்டால், சுவை கூடுவதுடன், எல்லாவித டிபன் வகைகளுக்கும் பொருத்தமான சைட் டிஷ்ஷாகவும் அமையும்.
======================================================================

போண்டா, வடை முதலியவற்றுக்கு உளுந்து மாவு அரைக்கும்போது, வேகவைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து அரைக்கவும். இந்த மாவில் போண்டா அல்லது வடை பொரித்தெடுத்தால், மேலே கரகரவென்றும், உள்ளே மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
=======================================================================

ரவை, கோதுமை மாவு, அரிசி மாவு போன்றவற்றை கலந்து கரைத்த தோசை செய்யும்போது சுவையைக் கூட்ட இதோ ஐடியா! மிளகாய், கறிவேப்பிலை (விருப்பப் பட்டால் ஒரு துண்டு வெங்காயம்) ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொண்டு, அதில் கடுகு தாளித்து, மாவு வகைகளை சேர்த்துக் கரைத்து, தோசை வார்த்தால்… அருமையான சுவையுடன் இருக்கும்.

இட்லி, தோசை மாவு புளித்துவிட்டதா…? கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, இத்துடன் மாவையும் கலந்து, கெட்டியான தோசைகளாக வார்த்து, மேலே பொடியாக அரிந்த வெங்காயம் தூவி சுட்டெடுத்தால்… பசுமையான, சுவையான ஊத்தப்பம் தயார்.

மாங்காயைத் துருவி பொரித்த குழம்பு மற்றும் கூட்டு வகைகளில் கடைசியாகப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கினால், சுவை கூடும் (மாங்காய் சீஸனில் மாங்காய்கள் வாங்கி, துருவி, வெயிலில் காயவைத்து, பொடித்து, ஆம்சூர் பொடியாக்கி வைத்துக் கொண்டு இப்படி உபயோகித்துக் கொள்ளலாம்).
=========================================================================
உப்புமா வகைகள், கலந்த சாத வகைகள், வெண் பொங்கல் முதலியவற்றைப் பரிமாறும்போது, மேலே ஓமப்பொடி, காராபூந்தி, மிக்ஸர் போன்ற ஏதாவதொன்றைத் தூவிப் பரிமாறினால், அந்த டிபனில் கரகரப்பு கூடி, ரசித்துச் சாப்பிட வைக்கும்.
I

சமையல் சமாளிப்புகள்

!!!

இட்லி மாவில் உளுந்து போதாமல், மாவு கெட்டியாயிருந்தால் பச்சை அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவில் கலந்து விடுங்கள். இட்லி மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும்.

சமைக்கும்போது உருளைக்கிழங்குகளை மிக அதிகமாக வேகவிட்டு விடுவது உண்டு. இம்மாதிரி சமயங்களில் உருளைக்கிழங்குகள் மாவுபோல ஆகிவிடாமல் தடுக்க, பால் பவுடர் தூளைக் கொஞ்சம் கிழங்குகள்மேல் தூவி விடுங்கள் – சிறிது நேரத்தில் கிழங்குகள் கெட்டிப்பட்டுவிடும்.

“சொத சொத’வென்று சப்பாத்தி மாவு ஆகிவிட்டதா? கவலையே வேண்டாம். ஃப்ரீசரில் ஓர் அரைமணி நேரம் வைத்த பின் எடுத்து உருட்டி சப்பாத்திகளாக இடுங்கள். மாவு இறுகி விடுவதால் சுலபமாக இட வரும்.

கோதுமை, மைதா போன்ற மாவுகளைப் பயன்படுத்திப் பூரி, சப்பாத்தி செய்யும்போது, மாவு தேவையான அளவு இல்லை என்று தெரிந்தால், உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் அகற்றிப் பிசைந்து அதை கோதுமை அல்லது மைதாவுடன் சேர்த்துப் பிசைந்து பூரி, சப்பாத்தி செய்யலாம்.
சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி சாம்பாரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். அதிகமாக உள்ள உப்பின் சுவை குறைந்துவிடும்.

வத்தக் குழம்பு மற்றும் காரக் குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். சிறிது தேங்காய்ப்பால் விட்டு இறக்குங்கள். காரம் குறைவதுடன் சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.

தக்காளி சூப் நீர்த்து இருந்தால், மாவு கரைத்துவிடுவதற்குப் பதில் அதில் ஒரு வெந்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும். சத்தும், ருசியும் அதிகரிக்கும்.

தோசை வார்க்கும்போது தோசை ரொட்டி போல் வந்தால், சாதம் வடித்த கஞ்சியைச் சிறிதளவு தோசை மாவில் கலந்து தோசை வார்த்துப் பாருங்கள். தோசை பூப்போல் மிருதுவாய் இருக்கும்

சத்து நிறைந்த காய்கறி சூப் !!!

தேவையான பொருட்கள் :
(கேரட், பீன்ஸ், காலிபிளவர், பட்டாணி, சிறு மக்கா சோளம்)
வெட்டியது – 2 கப்
பூண்டு பல் வெட்டியது – 2 டீஸ்பூன்
வெங்காயம் வெட்டியது – கப்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:-
• அனைத்து காய்கறிகளையும் சிறிது எண்ணெயில் வதக்கி 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக வைக்கவும்.
• பின்னர் இவற்றை
மிக்ஸியில் நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வேண்டும்.
• கடைசியாக இதில் சிறிது உப்பு சேர்த்து, கொத்தமல்லி தழை,
மிளகு தூள் தூவி கொடுக்கவும்.
http://vijaytamil.net/

ஸ்ரீரங்கம் வத்த குழம்பு

!!!

தேவையான பொருட்கள்: சுண்டக்காய் – 1 கப் வெந்தயம் – 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் மல்லி – 2 டேபிள் ஸ்பூன் மிளகு – 1 டேபிள் ஸ்பூன் பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 4 புளி – 75 கிராம் (சாறு எடுத்துக் கொள்ளவும்) சின்ன வெங்காயம் – 10 வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன் அரிசி – 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு தாளிப்பதற்கு… கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து, அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு, அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், ஸ்ரீரங்கம் வத்த குழம்பு ரெடி!!!
http://vijaytamil.net/

குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டியது...!!!

குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் நாம் தவிர்த்து நடந்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வார்கள் என்பது நிச்சயம்.

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன?
கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, ''உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே'' என்று நீங்கள் உங்கள் கணவனிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும்போது, ''அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்'' என்று சொல்ல நேரிடலாம்.

தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிறு குழந்தைகளை மிரட்டும் போது, கொன்றிடுவேன், தலையை திருருகுவேன், கையை முறிப்பேன் போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், ''அப்பாகிட்டே சொல்லிடாதே'' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே ''அப்பாகிட்ட சொல்லிடுவேன்'' என்று மிரட்டும்.

குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. ''உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒன்றும் தெரியாது'' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. '' கடைக்கும் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்'' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள்கள் வாங்கும் போது உயர்ந்த எண்ணங்களை உருவாக்கக் கூடியதாக பார்த்து வாங்குங்கள். கத்தி, வாள், துவக்கு போன்றவை சண்டைக்காரனாகும் எண்ணத்தைப் புகுத்திவிடும்.

படிப்பு விஷயத்தில் குழந்தைகளை கண்டிக்கும்போது, ''பாசிடிவ் அப்ரோச்'' இருக்க வேண்டும். ''நீ நன்றாக படித்தால் டாக்டராகலாம்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்'' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். ''நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்'' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக்கூடாது.

குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

எதற்கெடுத்தாலும் குழந்தையை அடிக்காதீர்கள். அன்பாக சொல்லி திருத்துங்கள். எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பிலே என்று, பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். ஆக குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கீடுதான் அதிகமாக இருக்கிறது. அதனால் பெற்றோர்கள் குழந்தைகளை கனிவுடன் வழிநடத்திச் செல்லுங்கள்.

மனைவியை தேர்ந்தெடுப்பது எப்படி? – கவியரசு கண்ணதாசன்

மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. "அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே" என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.

ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.

பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட்டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோட்சத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.

ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.

புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள். எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் மகாலட்சுமியை போலவும், மன்னிப்பதில் பூமாதேவியை போலவும், அன் போடு ஊட்டுவதில் அன்னையை போலவும், மஞ்சத்தில் கணிகையை போலவும் உள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது வடமொழியில் உள்ள ஒரு சுலோகம்.

எந்தவொரு ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், மகாலட்சுமி போன்ற குலப் பெண்கள் அந்த அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை. இடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள் விரட்டி விடுவாள் என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக, அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது. அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய்போல் இருக்க வேண்டும்.

பள்ளியறையில் அவள் கணிகையை போலவே நடந்து கொள்ள வேண்டும். அதாவது, கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்து உள்ளவளாக இருக்க வேண்டும். மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கண்ணதாசன்.

நல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாசன், தவறான பெண்ணை ஒருவன் மனைவி யாக்கிக் கொண்டாள் அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முகத்தில் ஒளி மங்கிவிடுகிறது என்றும்கூறுகிறா ர் கண்ணதாசன்..

ஆத்திரத்தில் காதல், அவசரத்தில் கல்யாணம் என்று முடிந்த திருமணங்கள், 100க்கு 90 தோல்வியே அடைந்திருக்கின்றன.

”தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்
எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது.”

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்பட்டு பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவிதான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவர் தெரிவிக்கின்றனர். குடும்பத்தில் மனைவிமார் கோபம் அடைய, கணவன்களும் சில நேரங்களில் காரணமாகி விடுகின்றனர்.

மனைவியிடம் இருந்து அன்பை பெற இதோ சில டிப்ஸ்:

1.மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். தவறை நிதானமாக எடுத்து கூறுங்கள்.

2.மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். இதனால் கோபமாக இருக்கும் மனைவி கூட சில நேரங்களில் அதனை மறந்துவிட வாய்ப்புள்ளது.

3.மனைவி முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட வாய்ப்பு உண்டு. இதனால் 2 பேரின் "மூடு அவுட்"டாக வாய்ப்பு அதிகம்.

4.வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.

5.மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். அதனை சற்று கொஞ்சலாக கூறினாலும் தவறில்லை. நாம் செய்யும் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.

6.மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேசகூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்டகூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

7.வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்ல மறக்க வேண்டாம்.

8.மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம். இல்லாவி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.

9.கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.

10. மனைவி செய்த சமையல், தோட்ட வேலைகள், வீட்டை அலங்கரிப்பது உள்ளிட்ட பணிகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை பணிவாக தெரிவிக்கலாம்.

11.மற்றவர்களின் முன் மனைவியை கேவலமாக பார்ப்பது, பேசுவது, திட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமை உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடுகின்றது.

12.வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்