Tuesday, November 8, 2016

ஆன்மீகதகவல்கள்

🌻_**_🌻

♥ "கந்தர் சஷ்டி கவசம்" படித்தால் கிடைக்கும் நன்மை என்ன.?
.
♥ அறிவோமா வாருங்கள்.?

♥ சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது....
அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு..!
.

♥ தொழிலாள‌ர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள்.
அதில் ஒன்று அதி டென்ஷனாகவே வாழும் நாம் மனதை எப்படி அமைதிப் படுத்திக் கொள்வது என்பதற்க்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுத்தார்.
.
♥ இதை அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லி ஒரு ஆங்கிலேயரின் பெயரைச் கூறினார்.
♥ மனோவியல் ரீதியாக அவர் கொடுக்கும் இந்தப் பயிற்ச்சி நல்ல பலனைக் கொடுத்தது என்றும் கூறி அதை செய்யச்  சொன்னார்.
.
♥ அவர் சொன்னதாவது:

♥ முதலில் கண்களை  மெதுவாக மூடிக்கொள்ளுங்கள்.
.
♥ உங்கள் வாயால் இப்பொழுது மெதுவாகச் சொல்லுங்கள்…
ஆங்கிலத்தில் துவங்கினார்..!
.
♥ மை ஐஸ் ஆர் ரிலாக்ஸ்.!

♥மை நோஸ் ஆர் ரிலாக்ஸ்.!

♥ மை மௌத் இஸ் ரெலாக்ஸ்.!

♥ மை ஹான்ட்ஸ் ஆர் ரிலாக்ஸ்.!

என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் ரிலாக்ஸ் படுத்தினார்.
.
♥ இவற்றை சொல்லி முடித்து விட்டு இப்பொழுது கண்களை மெதுவாக திறங்கள். இப்பொழுது உங்கள் மனதும் உடலும் ரிலாக்ஸாக இருக்கிறதா.? என்று எல்லோரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.
.
பிறகு நிகழ்ச்சி பற்றி எல்லோரிடைய கருதையும் கேட்டார்.
.
♥ என் முறை வந்தது. நான் சொன்னேன்…
”சார் இது என்ன பிரமாதம் இதை நான் குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே.!” என்றேன்.
.
♥ ஆச்சரியத்துடன் பார்த்த அவர் “அது எப்படி.? எனக்குத் தெரிந்த வரை இது புதிய மனோவியல் முறை.!
இதை எப்படி நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்ய முடியும்.?” என்று கேட்டார்.
.
♥ நான் சொன்னேன்
“சார் நீங்க என்னவெல்லாம் சொன்னீர்களோ அது அனைத்தும் நான் சிறு வயது முதலே சொல்லும் "கந்தர் சஷ்டி கவசத்தில்" சொல்லப் பட்டிருக்கிறது.
உடலின் ஒரு அவயவம் விடாமல் தியானிக்கும் பயிற்ச்சியை அது ஆன்மீக ரீதியாக மிக அருமையாக கொடுக்கிறது” என்றேன்.
.
♥ மிகவும் ஆர்வமாக இதைக் கேட்ட அவர் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனைப் பற்றி விளக்கமாக சொல்லச் சொன்னார்.
.
♥ நானும் சொல்லத் துவங்கினேன்.
.
♥ "கந்தர் சஷ்டி கவசம்" சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிராத்திக்கிறோம்.
.
♥ உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.
.
♥ கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க‌!

♥ விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க‌!

♥ நாசிகளிரண்டும் நல்வேல் காக்க‌!

♥ பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க‌!

♥ கன்னமிரண்டும் கருனை வேல் காக்க‌!

♥ என் இளங் கழுத்தை இனிய வேல் காக்க‌! ..

..என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.
.
♥ இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது.
.
♥ மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.
.
♥ இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது.
இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.
.
♥ மனோ வைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா.!.
.
♥ இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல் படுத்தியும் வந்திருக்கிறார்கள்.
.
♥ இந்த மனோ வைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
.
♥ கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை "கந்தர் சஷ்டி கவசம்" என்று கூறினார்கள்.
.
♥ இந்த கவசத்தில் வரும் வரிகளில்
"நவ கோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்" என்று ஒரு வரி உண்டு.
♥ வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவ கோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம்.
♥ நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன.?
.
♥ கிரகங்களின் மாற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை.
.
♥ ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் ச‌ரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்ப்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம்.
♥ அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.
.
♥ இப்படி "கந்தர் சஷ்டி கவசம்" தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான‌ நன்மைகள் உள்ளன.
.
♥ இவ்வாறு சொன்னவுடன் பயிற்சியாளர் மிகவும் மகிழ்ந்து என்னைப் பாராட்டினார்.
.
♥ அவரும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதில் உள்ள நன்மைகளை ஏற்றுக் கொண்டார்.
♥ நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாமே.!
.
♥ காக்க காக்க கனகவேல் காக்க!

♥ நோக்க நோக்க நொடியில் நோக்க!
.
♥ இந்து தர்மம் என்பது மனோவியலும், அறிவியலும் ஆகும்...!!!

இந்து மதம் குறிப்பிடும் சாபங்கள்! – வகைகளும்! விளக்க‍ங்களும்! –

ஒரு பார்வை

1) பெண் சாபம் :

இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

2) பிரேத சாபம் :

இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவ ரை இழிவாகப் பேசு வதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்க ளை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டிய வர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

3) பிரம்ம சாபம்:

நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற் படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

4) சர்ப்ப சாபம்:

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டா கும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திரு மணத் தடை ஏற்படும்.

5) பித்ரு சாபம்:

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத் துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலா ரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந் தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன் றவற்றை ஏற்படுத்தும்.

6) கோ சாபம்:

பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக் காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற் படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

7) பூமி சாபம்:

ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட் டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமிசாபம் நரகவேதனை யை க் கொடுக்கும்.

8) கங்கா சாபம்:

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோ ண்டினாலும் நீர் கிடைக்காது.

9) விருட்ச சாபம்:

பச்சை மரத்தைவெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

10) தேவ சாபம்:

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களா ல், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவி னர்கள் பிரிந்துவிடுவர்.

11) ரிஷி சாபம்:

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களை யும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

12) முனி சாபம்:

எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களு க்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

13) குலதெய்வ சாபம் :

இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்கா மல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.

சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்க ளை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்க ள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போ தும் அழிக்கமுடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறி எப்பேற்பட்ட வலிமையா ன மனிதனையும் அழித்துவிடும்.

உயிரும் மனமும்


============

"உலகில் பிறந்த எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன.  மனிதனும் வாழ நினைக்கிறான்.  துன்பமில்லாத இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை அவன் நாடுகிறான்.
.

வாழ்வின் நோக்கத்திற்கு முரண்பாடாக வாழ்வு அமையுமானால் அது துன்பம் தான் தரும்.  இயற்கையாகக் கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது.  வாழ்க்கையையும், வாழ்க்கையின் நோக்கத்தையும், அந்நோக்கத்திற்கேற்ற வாழும் முறை என்ன என்பதையும் அறிந்து கொள்வது தான் ஞானம்.
.

பொதுவாக நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரிவதில்லை.  பெரும்பாலும் பழக்கத்தின் காரணமாகவே தவறுகள் செய்யப்படுகின்றன.  அதிலும் சூழ்நிலை நிர்பந்தத்தால் செய்யப்படும் தவறுகளே மிகுதியாக உள்ளன.  மனம் புலன் கவர்ச்சியிலேயே நிற்கும் போதும், சூழ்நிலைக் கவர்ச்சியிலேயே நிற்கும் போதும் பழக்கத்தின் அழுத்தத்தால் உந்தப்பட்டுச் செயலாற்றும் போதும் பெரும்பாலும் தவறுகள் தெரிவதில்லை.
.

இதனால் வந்த வேலை, பிறவியின் நோக்கம் மறந்து போகிறது.  பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் முதலான ஆறுகுணங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன.  இதன் விளைவாகப் பஞ்ச மகா பாதகங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதைப் பார்க்கிறோம்.
.

தவறிழைப்பது மனம்.  இனி தவறு செய்துவிடக் கூடாது எனத் தீர்மானிப்பதும் அதே மனம்.  தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் அதே மனமே."

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**********************************************

குருவின் தொடர்பு :

"உய்யும் வகைதேடி உள்ளம் உருகிநின்றேன்
உயர் ஞான தீட்சையினால் உள்ளொடுங்கி
மெய்யுணர்வு என்ற பெரும் பதம் அடைந்தேன்
மேல்நிலையில் மனம்நிலைத்து நிற்க நிற்க
ஐயுணர்வும் ஒன்றாகி அறிவறிந்தேன்
ஆசையென்ற வேகம் ஆராய்ச்சி யாச்சு
செய்தொழில்களில் கடமை உணர்வு பெற்றேன்
சிந்தனையில் ஆழ்ந்து பல விளக்கம் கண்டேன்".
.

குருவின் உதவி :

"தந்தைதாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து,
தழைத்துஒரு உடலாகி உலகில் வந்தேன்;
அந்தஈருயிர்வினைகள் அறமோ மற்றோ
அளித்தபதி வுகள்எல்லாம் என்சொத் தாச்சு.
இந்தஅரும் பிறவியில்முன் வினைய றுத்து,
எல்லையில்லா மெய்ப்பொருளை அடைவ தற்கு,    
வந்தஒரு உதவிகுரு உயிரின் சேர்க்கை,
வணங்கிகுரு திருவடியை வாழ்த்தி வாழ்வேன்".

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி  மகரிஷி.

ஜென் கதை:

ஒரு

தியானம்

ஒரு இளவரசன் ஒரு ஜென் குருவிடம் வந்து தியானம்
கற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினான். ஆனால் அவனுக்கு அவசரம். ஏனெனில் அவனது தந்தைக்கு வயதாகி விட்டது. அவர் இவனை இந்த ஜென்குருவிடம் தியானம் கற்றுக்கொள்ள அனுப்பியிருக்கிறார்.

தந்தை, “என் வாழ்வில் நான் அதிக காலங்களை தேவையின்றி வீணடித்து விட்டேன். பின்புதான் வாழ்வில் ஒரே அர்த்தமுள்ள விஷயம், மதிப்பிற்குரிய
விஷயம் தியானம் என அறிந்தேன். அதனால் உனது காலத்தை வீணடிக்காதே”. என தன் மகனிடம் கூறிவிட்டு, “நீ இந்த குருவிடம் சென்று தியானம் செய்ய கற்றுக்கொண்டு நான் இறப்பதற்குள் திரும்பி வா. நீ தியானம் செய்ய தெரிந்து கொண்டு விட்டால் நான் சந்தோஷமாக இறப்பேன். நான் இதை தவிர வேறு எதையும் கொடுக்கமுடியாது. இந்த ராஜ்ஜியம் சிறிதும் மதிப்பற்றது. இது உனது உண்மையான அரசாங்கம் அல்ல. உனக்கு இந்த ராஜ்ஜியத்தை கொடுப்பதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. நீ தியானம் செய்ய உதவியிருந்தால்தான் நான் உண்மையான மகிழ்ச்சியடைவேன்”. என்றார்.

அதனால் இளவரசன் இந்த ஜென்குருவிடம் வந்து, நான்
அவசரத்திலிருக்கிறேன். எனது தந்தைக்கு வயதாகிவிட்டது. அவர் எந்த விநாடியும் இறந்து விடுவார் எனக் கூறினான்.

குரு, தியானத்திற்கான முதல் அடிப்படையே அவசரப்படக்கூடாது என்பதுதான். பொறுமையில்லாதது வேலைக்காகாது. போ வெளியே, இங்கிருந்து போய்விடு  திரும்பவும் இங்கே வராதே. யாராவது ஒரு போலி குருவை கண்டுபிடிக்க முயன்று பார். அவர் ஜபிக்க ஒரு
மந்திரம் சொல்லித் தருவார், இதை காலை பதினைந்து நிமிடம், மாலை பதினைந்து நிமிடம் அமர்ந்து சொல்லி வா. உனக்கு முக்தி கிடைக்கும் என்று உனக்கு ஆறுதலாகக் கூறிவிடுவார்.

ஆனால் நீ இங்கிருக்க விரும்பினால் கால நேரத்தை
மறந்து விடு. ஏனெனில் தியானம் அழிவற்றதை தேடுவது. உனது வயதான தந்தையை பற்றி மறந்து
விடு. – எப்போதும் யாரும் இறப்பதில்லை. என்னை நம்பு.
ஒருநாள் நான் கூறுவதை உண்மை என நீ உணர்வாய். யாருக்கும் எப்போதும் வயதாவதுமில்லை, யாரும் இறப்பதுமில்லை. கவலைப்படாதே. எனக்கு உன் தந்தையை தெரியும். ஏனெனில் அவர் என்னிடம்தான் தியானம் கற்றுக்கொண்டார். அவர்  இறக்கப்போவதில்லை – அவரது உடல் அழியலாம். ஆனால் நீ தியானம் கற்றுக்கொள்ள விரும்பினால் நீ உனது தந்தை உனது அரசாங்கம் ஆகிய  எல்லாவற்றையும் மறந்து இருக்க வேண்டும். அதற்கு ஒருமுனைப்பட்ட அர்ப்பணிப்பு வேண்டும். என்றார்.

அந்த குரு அப்படிப் பட்டவர். அவரது இருத்தல்
வலிமையானது. அந்த இளைஞன் தங்க முடிவெடுத்தான்.

மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. குரு தியானத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அந்த இளைஞன் குருவுக்கு எல்லாவழிகளிலும் சேவை செய்து வந்தான். காத்திருந்தான், காத்திருந்தான், அவன் அதைப்பற்றி குறிப்பிடக்கூட அஞ்சினான். ஏனெனில் இங்கிருந்து வெளியே போய்விடு , நீ மிகவும் அவசரப்படுகிறாய் எனக் கூறிவிட்டால். அதனால் அவன் அதைப் பற்றி பேசக் கூட
இல்லை.

ஆனால் மூன்று வருடங்கள் என்பது மிக அதிகம்.
முடிவில் ஒருநாள் காலை குரு மரத்தடியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது, குருவே, மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நீங்கள் இன்னும் எனக்கு தியானம் என்பது என்ன. அதற்கு என்ன செய்ய வேண்டும் எனக்கூட கூறவில்லை. எனக் கேட்டான்.

குரு அவனை திரும்பி பார்த்துவிட்டு, பின்னர், நீ
இன்னும் அந்த அவசரத்திலேயே இருக்கிறாய். சரி, இன்று உனக்கு நான் தியானத்தை சொல்லித் தருகிறேன். என்றார்.

அவர் மிகவும் வேறுபட்ட வித்தியாசமான வழியில்
கற்றுத் தர ஆரம்பித்தார். இளைஞன் கோவிலின் தரையை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, பின்புறமாக வந்து மரக்கத்தியினால் மிக பலமாக அவனை தாக்கினார். மிகவும் பலமாக தாக்கினார். அந்த இளைஞன் புத்தமத சாரங்களை படித்துக்  கொணடிருக்கும்போது வந்து குரு தாக்கினார். அவர் மிகவும் அமைதியான மனிதர். அவருடைய காலடி ஒசையை கூட உன்னால் கேட்க முடியாது. திடீரென, எங்கிருந்தோ அந்த மரக்கத்தி அவன் மீது இறங்கும்.

இளைஞன், என்ன வகையான தியானம் இது என நினைத்தான். ஏழு நாட்களில் அவன் மிகவும் சோர்ந்து போனான். காயங்களும் சிராய்ப்புகளும் அடைந்த
அவன் குருவிடம், என்ன செய்கிறீர்கள் நீங்கள் ஏன் என்னை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனக் கேட்டான்.

குரு இதுதான் நான் கற்றுக்கொடுக்கும் முறை.
கவனமாயிரு, தன்ணுணர்வோடு இரு, அப்போது நான் உன்னை அடிப்பதற்கு முன் நீ நகர்ந்துகொள்ளலாம். அதுதான் ஒரே வழி என்றார்.

தப்பிக்க வேறு வழியில்லை. அந்த இளைஞன் கவனமாக
இருக்க ஆரம்பித்தான். அவன் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாலும் சுதாரிப்பாக கவனமாக இருந்தான். மெதுமெதுவாக இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளாகவே அவன் குருவின் காலடி ஒசையை கேட்க ஆரம்பித்தான். அவர் ஒரு பூனையைப் போல வருவார். பூனை எலியை
பிடிக்க போகும்போது மிகவும் மெதுவாக சப்தமின்றி போகும். குரு உண்மையிலேயே வயதான பூனை போல.

ஆனால் இளைஞன் கவனமாகி விட்டான். அவன் அவருடைய காலடி ஒசையை கேட்க ஆரம்பித்தான். மூன்று மாதங்களுக்குள் குருவால் அவனை ஒருமுறை கூட அடிக்க முடியாமல் போய்விட்டது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவர் எப்போது முயற்சி செய்தாலும் அவன் என்ன செய்துகொண்டு இருந்தாலும் குதித்து தப்பித்து விடுவான்.

அப்போது குரு, முதல்பாடம் முடிந்தது. இப்போது
இரண்டாவது பாடம் ஆரம்பிக்கிறது. இப்போது நீ உன்னுடைய தூக்கத்திலும் விழிப்போடு இருக்கவேண்டும். உன்னுடைய கதவுகளை திறந்து வைத்திரு. ஏனெனில் நான் எப்போது  வேண்டுமானாலும் வருவேன் என்றார்.

இது உண்மையிலேயே கடினமானது. ஆரம்பத்தில் அவர்
வந்து அவனை கடினமாக அடித்தார். வயதானவருக்கு இரண்டு மணி நேர தூக்கம் போதுமானது. ஆனால் இவன் இளைஞன். இவனுக்கு எட்டு மணி நேர தூக்கம் தேவை. ஆனால் முழு இரவும் போராட்டமாக இருந்தது. பலமுறை குரு வந்து அவனை அடித்தார். ஆனால் முதல் பாடம் மிகவும் சிறப்பாக அவனை மிகவும் கவனமானவனாகவும் அமைதியானவனாகவும் மாற்றியிருந்ததால் அவன் இந்த முறை அவரை, இது என்ன மடத்தனம், ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என
கேட்கவில்லை.

குருவோ, கவலைப்படாதே. தூக்கத்தில் கூட கவனமாக
இரு. நான் எவ்வளவு கடினமாக உன்னை அடிக்கிறேனோ அவ்வளவு விரைவாக தூக்கத்தில் கூட சுதாரிப்பாவாய். சூழ்நிலை உருவாக்கப் பட வேண்டும், அவ்வளவுதான். என்றார்.

மூன்று மாதங்களுக்குள்ளாகவே அவன் தூக்கத்தில்
கூட கவனமடைந்தான். அவன் உடனடியாக தனது கண்களை திறந்து, இருங்கள். இதற்கு அவசியமில்லை. நான் விழித்திருக்கிறேன். என்பான்.

மூன்று மாதங்களுக்கு பிறகு குரு, நீ இரண்டாவது
பாடத்திலும் தேர்ந்து விட்டாய். இப்போது மூன்றாவதும் கடைசியுமானது. என்றார்.

இளைஞன், இரண்டு நிலைகள் – நடப்பது, தூங்குவது – தானே இருக்கின்றன. மூன்றாவது என்னவாக இருக்கும்
என்றான்.

குரு, இப்போது நான் உன்னை உண்மையான கத்தியினால் அடிக்கப்போகிறேன். – இதுதான் மூன்றாவது. என்றார்.

மரக்கத்தியினால் அடிக்கப்படுவது பரவாயில்லை.
ஏனெனில் அதிகபட்சமாக பலமாக அடிபடும் அவ்வளவே. நீ இறந்து விடமாட்டாய். இப்போது குரு உண்மையிலேயே அசல் கத்தியை கொண்டு வந்தார். அவர் உறையிலிருந்து அசல் கத்தியை எடுத்தவுடன் இளைஞன் முடிந்தது நான் செத்தேன். இது ஒரு  அபாயகரமான விளையாட்டு. அவர் இப்போது உண்மையான கத்தியினால் குத்தப் போகிறார். நான்
கவனமின்றி ஒருமுறை இருந்தால்கூட அவ்வளவுதான் நான் முடிந்தேன் என நினைத்துக் கொண்டான்.

ஆனால் அவன் ஒருமுறை கூட தவற விடவில்லை. விஷயம் மிகவும் அபாயமானதாக இருக்கும்போது நீயும் அந்த அபாயத்தை சந்திக்கும் அளவு சக்தி பெற்று விடுவாய். மூன்று மாதங்களில் குருவால் அவனை ஒருமுறை கூட உண்மையான கத்தியால் அடிக்க முடியவில்லை.

பின் குரு, உன்னுடைய மூன்றாவது பாடமும் முடிந்தது. – நீ தியானிப்பவனாக மாறி விட்டாய். நாளை காலை நீ
புறப்படலாம். நீ போய் உன் தந்தையிடம் எனக்கு உன்னைப் பற்றி முழுத் திருப்தி என்பதை சொல் என்றார்.

நாளை காலை அவன் புறப்படப் போகிறான். அன்று மாலை சூரியன் மறைந்துக் கொண்டிருந்தான். குரு மரத்தடியில் அமர்ந்து புத்தமத சூத்திரத்தை படித்துக் கொண்டிருந்தார். இளைஞன் வேறு எங்கோ  அமர்ந்திருந்தான். அவன் மனதில், நான் போவதற்கு முன் ஒருமுறை இந்த கிழவனை அடிக்க வேண்டும். என்று தோன்றியது. இந்த எண்ணம் பலமுறை அவன் மனதில் ஓடியது. இதுதான் கடைசி சந்தர்ப்பம். இதை விட்டால் இனி முடியாது. நாளை காலை நான் புறப் பட வேண்டும் என எண்ணினான்.

அதனால் அவன் போய் மரக்கத்தியை எடுத்துவந்து ஒரு
மரத்தின் பின் ஒளிந்து கொண்டான். அப்போது குரு, நிறுத்து எனக் கூறினார். அவர் அவனை பார்க்கக் கூட இல்லை.  இங்கே வா. நான் வயதானவன், என்னை அடிக்க வேண்டுமென்ற எண்ணம் நல்லதல்ல – அதிலும் நான் உன் குரு என்றார்.

இளைஞனுக்கு மிகவும் ஆச்சரியமாகி விட்டது. ஆனால்
நான் எதையும் சொல்லவில்லையே எனக் கேட்டான்.

குரு, ஒருநாள் உண்மையிலேயே நீ மிகவும்
விழிப்புணர்வு அடையும்போது சொல்லாததும் கேட்கும். முன்பெல்லாம் என்னுடைய காலடி ஓசையை உன்னால் கேட்க முடியாது. பின் கவனமாக இருந்து அவற்றை கேட்க ஆரம்பித்தாய். முன்பெல்லாம் எனது காலடி சத்தத்தை உனது தூக்கத்தில் உன்னால் கேட்க முடியாமலிருந்தது. ஆனால் இப்போது தூங்கிக் கொண்டிருக்கும்போது கூட எனது காலடி ஓசையை உன்னால் கேட்க முடியும். அதைப்போல ஒருநாள் உனக்கு தெரியும். உனது மனது அமைதியாக மெளனத்தில் இருக்கும்போது உச்சரிக்காத வார்த்தைகளையும் உன்னால் கேட்க முடியும். சொல்லப்படாத எண்ணங்களையும் உன்னால் படிக்க முடியும். உள்ளுணர்வை தெரிந்து கொள்ள முடியும். உணர்வுகளை அறிந்து கொள்ள முடியும். அது உனது
முயற்சியினால் அல்ல – நீ ஒரு கண்ணாடி போல மாறிவிடுவாய். அதனால் பிரதிபலிப்பாய். அவ்வளவே. என்றார்.

பகிர்வு : உள் முகப்பயணம்,

Wednesday, November 2, 2016

கொசுக்கடியிலிருந்து மீள...*

*
கொசுக்கள் உயிர்க் கொல்லியாகவும் உள்ளன
என்ற உண்மை,
சென்னையிலும், பிற ஊர்களிலும் பரவும்
‘டெங்கு’ காய்ச்சல் மூலம் அனைவரும் புரிந்துள்ளனர்!

பரிதாபத்திற்குரிய முறையில்
பல குழந்தைகள் உயிரைக்கூடக்
குடித்துள்ளன!

சென்னை மாநகரில்
மாடி வீடுகளில் உள்ளவர்கள் கூட
கொசுக்கடிக்கு விலக்கானவர்கள் அல்ல என்றால்,

ஏழை - எளிய,
நடுத்தர
மக்களின் நிலைமை பற்றி விளக்கவா ..?

அண்மையில், நமது அருமை
குடும்ப நண்பரும்
ஓய்வு பெற்ற காவல்துறைத் தலைமை அதிகாரியும்
பண்பட்ட
படிப்பறிவுமிக்கதோழருமான திரு.அ.ராச்மோகன்
ஐ.பி.எஸ்.
அவர்கள்
எனக்கு அனுப்பிய கடிதத்தினையும் அதன் கருத்துரையையுமே
இந்தக் கட்டுரை விளக்கும்....
👇�👇�👇�👇�

படித்து,
நீங்களும்
அப்படிச் செய்து பயன்பெறலாம்!

சில மாதங்களுக்கு முன்
இக்கருத்தைப் படித்து
நானே நடைமுறைப் படுத்திப்
பயன் அடைந்துள்ளேன்.

எளிய
அதிக செலவில்லா
தற்காப்பு
சுகாதார முறையை அனைவரும் கடைப்பிடித்தாலே பயன் ஏற்படும்...

கற்பூரம் இயற்கையாகக் கொசுக்களை விரட்டக்கூடிய  தன்மை உள்ளதாகும்.

பக்க விளைவுகள் ஏதுமில்லாமல்,
குறைவான செலவில்
கற்பூரத்தைக் கொண்டு
கொசுக்களை எளிதாக
விரட்டி விடலாம்.

கற்பூரத்தைக் கொளுத்த வேண்டிய  தேவையும்  கிடையாது.

கீழ்க்கண்ட
*3 வழிமுறைகளில் கற்பூரத்தைப் பயன்படுத்திக் கொசுக்கள் நம்மை அண்டவிடாமல் செய்யலாம்.....*

1. கடைகளில் விற்கப்படுகின்ற கற்பூரத்தில் இரண்டு  வில்லை களை வெற்றுத் தரையில் வைத்திருக்க வேண்டும்.
அப்படி வைக்கப்படுகின்ற ஒரு மணி நேரத்தில் கொசுக்கள் இல்லாமல் போவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

இதுபோன்று காலையிலும் மாலையிலும் இரண்டு முறை செய்யும்போது அந்தப் பகுதிகளில் கொசுக்கள் இல்லாமல் போகும்.

2. அறையின்
இரு வேறு மூலைகளில் கொசுக்கள் எங்கெல்லாம் தஞ்சம் அடைகின்றன என்று தெரிகிறதோ அப்பகுதிகளில்
இரண்டு
கற்பூர வில்லைகளை வைக்கும்போது,
அவை  சிறிது சிறிதாக ஆவியாகிக் கொசுக்களை விரட்டுவதுடன் காற்றையும் தூய்மைப்படுத்திவிடுகின்றன.

3. அகலமான சிறிய பாத்திரம் அல்லது தட்டில் தண்ணீரை நிரப்பி
அதில் இரண்டு கற்பூர வில்லைகளைப் போட்டுவைக்க வேண்டும்.
படுக்கை அறையில் அப்பாத்திரத்தைத் தண்ணீருடன் கற்பூரத்தையும் சேர்த்து வைக்கும்போது,

தண்ணீரில் சிறிது சிறிதாகக் கற்பூரம் கரையும்.

சராசரியான
தட்ப வெப்பத்தில் தண்ணீர் ஆவியாகும்போது,
அப்பகுதி முழுவதும் கற்பூரத்தின் மணம் பரவும்.

சிறிது வெதுவெதுப்புடன் உள்ள தண்ணீர் என்றால் இச்செயல் இன்னும் வேகமாக இருக்கும்.

அறையின் அளவுக்கு ஏற்றவாறு தண்ணீர் மற்றும் கற்பூரத்தின் அளவு மாறுபடும்.

ஆக,
கற்பூரத்தின் தன்மையால் கொசுக்கள் எளிதில் விரட்டப்படுவதை
நேரடியாக உணரலாம்.
செய்து பாருங்கள்....

மற்றவர்களுக்கும் கூறுங்கள்.