Monday, August 22, 2016

கை கூப்பி வணங்குவது ஏன்? 

கை கூப்பி வணங்குவது ஏன்?                                   ==========================                              பாரத நாட்டில் பல்வேறு மொழி, இனம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதுகைகுவித்து வணங்குகின்றனர்.கோயில்களில் ஆண், பெண் வணங்கும் முறையில் வேறுபாடுகள் உண்டு. பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்வர். இல்லையெனில் இரு கைகளையும் குவித்து வணங்குவர். ஆண்கள் தலைமேல் கைகுவித்து வணங்கும் பழக்கம் நம் நாட்டில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள பழக்கம்.உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் பஞ்ச பூதங்களின் கலப்பால் ஆனது. அளவுகள் வேறுபடலாம். அதை பஞ்சகோசங்கள் என்று கூறுவர். 5 விரல்கள் 5 கோசங்களை காட்டுகிறது. மனிதன் உருவாக காரணமாக உள்ள 5 கோசங்களாக அன்னமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்பன.மனித உடல் அன்னத்தால் ஆனது. இதை குறிப்பது அன்னமய கோசம். எனவேதான் "உண்டிதற்றே உணவின் பிண்டம்" என்பார்கள். உண்ணும் உணவு மனிதனின் உடம்பை மட்டுமல்ல நம் சிந்தனையையும் நிச்சயிக்கிறது.காற்றை சுவாசிப்பதால் உடம்பு வளர்கிறது. இது பிராணமய கோசம். அதை எப்படி சுவாசிப்பது அதனால் எந்த வகையான ஆற்றலை பெறுவதுஎன யோக நூல்கள் சொல்கின்றன.மூன்றாவது மனோமய கோசம். மன எண்ணங்களால் உருவாவது. தர்மசாஸ்திரம் 'மனநலனுக்கு' முக்கியத்துவம் தருகிறது. மனிதன் எதுவாக நினைக்கிறானோ அதுவாகிறான் என்கிறது நூல்கள். விஞ்ஞானமும் இதைதான் கூறுகிறது. புத்தியால் அமைவது விஞ்ஞானமயகோசம்.எண்ணில்லாத சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பதே புத்தியாகும்.இந்த கோசங்களால் மனிதன் பெறும் மாறாத மகிழ்ச்சி - நிலைத்த இன்பம் ஆனந்தமயகோசம் ஆகும்.மனிதனுக்கு மனிதன் 5 கோசங்களில் மாறுபடலாம். ஆனால் எல்லோரிடமும் உள்ளது 'ஆத்மா' என்ற ஒன்றுதான் என்பதைதான் கைகுவித்துஉணர்த்துகிறார்கள். ஒரு கை தன் 5 கோசங்கள்; மற்றொரு கை அடுத்தவரது 5 கோசங்கள் இரண்டையும் இணைப்பது ஆத்மா ஒன்றே என்று காட்டுகிறது. இறைவன் முன்னிலையில் இந்த உண்மையை பக்திப்பூர்வமாகஒப்புக்கொண்டு உணர்ந்து செயல்படுவேன் என்று உணர்த்தவே கைகுவித்து வணங்குகிறார்கள். கை குளுக்கிக் கொள்ளும் இந்த காலத்தில், இனி நம்மவருள் எவரையேனும் சந்திக்க நேரிடில்,கைக்குவித்து வணங்குவது நமது பண்பாட்டின் வெளிப்பாடு. தமிழ் கலாச்சரத்தின் பெருமை.

ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள

_*ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன???*_

_*ஆயில் புல்லிங் எனப்படும் 10மில்லி நல்லெண்ணையை வாயில் விட்டு கொப்பளிப்பதால் ஏற்படும் நன்மைகள்*_ ....

_*அதனை 15 நிமிடங்கள் கொப்பளித்த பிறகு உமிழ்ந்து விடலாம்*_ ....

_*அப்போது, உமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது, மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும்*_ .…..

_*மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்துவிட்டு உமிழ்ந்ததும் வாயைக்கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்*_  ....

_*இதனால் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப்படுகின்றன*

_*இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது*_ ...

_*எண்ணெய் கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம்*_ ...

_*இதற்கு எந்தவித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது*_ ...

_*ஏதாவது நோய்க்கான மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை*_ ...

_*நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம்*_ ....

_*நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக்கொள்ளலாம்*_ ....

_*இதைச்செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும், பயப்பட வேண்டாம்*_ ....

_*வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது*_ ....

_*விரைவில் நிவாரணம் வேண்டுவோர் நாள் ஒன்றுக்கு மூன்று முறை செய்யலாம்*_ ....

_*ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதை செய்ய வேண்டுமென்பது விதி*_ .....

_*இதன் மூலம், மூட்டு வலி, முழங்கால்வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற நோய்கள் குறைந்து விடும்*_ .....

_*இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும் சிலருக்கு நோயின்தன்மை சற்று அதிகரித்து, பின்னர் குறையும்*_ ...

_*இது நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப்போகிறது என்பதின் அறிகுறி*_ ....

_*இந்த எளிய வைத்திய முறையை பின்பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்*_ ...

_*அன்புடன் அனு*_

உனது உழைப்பை பிறர் வாய் தின்னும்போத

உனது உழைப்பை பிறர் வாய் தின்னும்போதும்,உன் உழைப்பின் பலனை பிறர் அனுபவிக்கும்போதும் வருத்தப்படாதே. அவர்கள் உன் கர்மாக்களை, உனது பாவங்களை உண்டும், அனுபவித்தும் உன்னை விடுதலை செய்கிறார்கள்.நீ இழந்து போனதையும், தொலைத்துவிட்டத்தையும் நான் அறிந்திருக்கிறேன். என் கண்கள் காணாமல் எதுவும் நடக்க முடியுமா? இருந்தும் நான் மவுனமாக இருப்பதற்குக் காரணம், அவை உனக்கு நன்மை விளைவிக்கும். பிற்காலத்தில் பெரும் பலனோடும், வட்டியோடும், ஆசீர்வாதத்தோடும் மீண்டும் உன்னிடமே வந்துசேரும் என்பதை தீர்க்கமாக அறிந்திருப்பதால்தான்!என் குழந்தாய்! உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. நீ எனக்காகப் பொறுமையாக காத்திரு. என் அருள் உன்னை அணுகுவதற்கு மனதை என்னிடம் திறந்துகொடு. ஸ்ரீ சீரடி சாயியின் குரல்.

சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!!

சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!!

1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள்.

2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

3. பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள்.

4. விலை மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காக, வேண்டாத ஒன்றை வாங்காதீர்கள்.

5. பசி, தாகத்தை விட சுயமரியாதை பெரிது என்பதை மறவாதீர்கள்.

6. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் சாப்பிடுங்கள்.

7. விரும்பிச் செய்யும் எதற்காகவும் பின்னால் வருத்தப்படாதீர்கள்.

8. கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள்.

9. மென்மையாக அணுகுங்கள், மேன்மையாக முடிவெடுங்கள்.

10. கோபமாயிருக்கும் போது, பேசுவதற்கு முன்னால் பத்து வரை எண்ணுங்கள். இன்னும் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணுங்கள்.

காலை உணவைத் தவிர்க்காதீர்: மாரடைப்பு வருமாம்

காலை உணவைத் தவிர்க்காதீர்: மாரடைப்பு வருமாம்

காலையில் ஏதேனும் ஒரு உணவை சாப்பிடுபவர்களை விட, காலை உணவை முற்றிலுமாக தவிர்ப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மற்றவர்களை விட, காலை உணவை எப்போதுமே தவிர்த்து விடும் நபருக்கு 27 சதவீதம் அளவுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.

இதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால், சிகரெட் பழக்கம், முழு நேர பணியாற்றும் நபர்கள், திருமணமாகாதவர்கள், உடல் இயக்கம் குறைவாக இருப்போர், அதிகமாக குடிப்பவர்களை விட, காலையில் உணவை தவிர்ப்பவர்களின் உடல்நிலை மிக மோசமாவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

காலை உணவை தவிர்ப்பதால் மாரடைப்பு மட்டும் வருவதில்லை. மேலும், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, நீரிழிவு போன்ற நோய்களும் தாக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை நேரத்தில் பணிக்குக் கிளம்பும் அவசரத்தில், சாப்பிடாமல் செல்வோர், இனி சற்று நேரம் ஒதுக்கி காலை உணவை சாப்பிட்டுவிட்டு செல்வது நலம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.

ஆரோக்கியத்தைத் தொலைத்துவிட்டு நாம் தேடப்போகும் பொருள் தான் என்ன?

Sunday, August 21, 2016

ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி

ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி

ஆப்பிளைவிட சிறந்த பழம் பப்பாளி. இதில் ஆப்பிளில் உள்ளதைவிட அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. விலையும் மிகமலிவு. இதனால் இதை ஏழைகளின் ஆப்பிள் என்றே அழைக்கலாம்.

பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில் தான் உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. ஆப்பிளைக் காட்டிலும் இனிப்பான பழம் பப்பாளி. பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம்.

பப்பாளியை நாம் எந்தக் காலத்திலும் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இது ஒரு திகட்டாத பழம் என்பதால், நாம் அளவுக்கதிகமாக சாப்பிட்டு விடுவோம். அப்பொழுதுதான் பிரச்னை. அளவோடு சாப்பிடும் வரை இது அபூர்வமான பழம்.

முகெலும்பு பிதுக்கம் அல்ல நழுவல் காரணமாக வரும் கடுமயான வலிக்கு பப்பாளியில் உள்ள 'கமோ பாப்பன்' என்ற கெமிக்கல் நல்ல குணமளிப்பதாக அமெரிக்காவில் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.

பொவாகவே பப்பாளி தலைமுடி, சருமம், கண்பார்வை, தொண்டை, வயிறு, சிறுநீரகம் அனைத்துக்கும் மிகவும் ஏற்றது. எக்காரணத்தைக் கொண்டும் பப்பாளியை நாம் தவிர்த்தால், நம் ஆரோக்கியத்தை நாம் தவிர்க்கிறோம் என்றுதான் அர்த்தம்.

வெந்தயக் கீரை:-

வெந்தயக் கீரை:-

இடுப்பு வலி நீங்கும் வெந்தயக் கீரையோடு, நாட்டுக் கோழி முட்டையில் வெள்ளை கரு, தேங்காய் பால், கசகசா, சீரகம், மிளகு, பூண்டு போன்றவற்றை சேர்த்து சிறிதளவு நெய் கலந்து சமைத்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.
வெந்தயக்கீரையில் இலை, தண்டு, விதை முதலியன பயன் தரும் பாகங்கள். வெந்தயம் வயிற்றுப் போக்கைக் குணப்படுத்தும், தாய்ப்பாலை பெருக்கும். தீப்புண்ணை ஆற்றும். மது மேகத்தை குணமாக்கும். உடலில் ஏற்படும் கட்டிகளை பழுத்து உடையச் செய்யும். வலியை போக்கும் சர்க்கரை வியாதியைக் குறைக்கும்.
பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும், உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும். ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேக வைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வர தாய்ப்பால் பெருகும்.
வெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் தணிந்து ஆறும். வெந்தயப் பொடியால் மேகம் குணமாகும். வெந்தயத்துடன் சமன் சீமையத்தியின் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும். இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து அதிகாலை வெறும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீரிழிவு நோய் சிறிது சிறிதாக குறையும்.
. முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடு சேர்த்து அரைத்து சிறிது ஊற வைத்துத் தலை முழுகினால் பலன் கிடைக்கும். முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும், பருவும் குணமடையும்.
உடலில் ஏற்படும் உள்வீக்கம், வெளிவீக்கத்தைப் போக்கும். வெளி வீக்கத்தின் மீது, வெந்தயக்கீரையை அரைத்துக் கிண்டி, வீக்கத்தின் மீது வைத்துக்கட்ட, வீக்கம் குணமாகும். தீப்புண்கள் மீது வைத்துக்கட்ட, காயம் விரைவில் ஆறும். வெந்தயக்கீரையை வேகவைத்துத் தேன் விட்டுக் கலந்து, அளவாகச் சாப்பிட்டுவந்தால், மலம் எளிதாக வெளியேறும்; நெஞ்சு வலி, இருமல், மூலம் மற்றும் செரிமானப் பாதையில் இருக்கும் புண்கள் குணமாகும்.
வெந்தயக்கீரையை ஊறவைத்து, அந்தத் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்துவந்தால் வாய்ப்புண் ஆறும். வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடுவது நல்லது